நெஞ்சில் நிறைந்தவள் - 1

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,634
6,876
113
அத்தியாயம் 1


நேரம் காலை 8:30 மணி.......


" தேவா......, தேவா.... " என்று தனது மனைவி தேவயானியை அழைத்து கொண்டே வீட்டிற்குள் வந்தான் சிவகுமரன்.

" என்ன பாதர்....,
உங்க பொண்டாட்டிய உங்க கூட தான கூட்டிட்டு போனீங்க, இப்போ இங்க வந்து தேடிட்டு இருக்கீங்க? " என்று கேட்டு கொண்டே தனது அறையிலிருந்து வெளியே வந்தான் சிவகுமரன் தேவயானி தம்பதியின் ஒற்றை மகன் அதிவீரன்.

" அய்யயோ ஆமா டா அதி உங்க அம்மாவை சிவன் கோவில்ல விட்டுட்டு பாலை வாங்கிட்டு வந்துடுறேன் டி ரெண்டு பேரும் சேர்ந்து வீட்டுக்கு போவோம்ன்னு சொல்லிட்டு மறந்துட்டேன் டா " தலையில் கை வைத்து சொன்னார் குமரன்,

அவரை நம்பாத பார்வை பார்த்து கொண்டே நின்றான் அதிவீரன்,

" என்ன டா அப்படி பாக்க,
இந்தா இத பிடி இந்த பால் பாக்கெட்ட பிரிட்ஜ்ல வை நா போய் தேவாவை கூட்டிட்டு வந்துடுறேன் " குரலில் லேசான அவசரம் காட்டிட,

" பாதர் உங்க நடிப்பு பச்சையா தெரியுது ஏன் இப்படி? "

" நடிப்பா???? என்ன டா உளறுற? "

" பாதர் நீங்க அம்மாவை மறந்து விட்டுட்டு வந்துட்டேன்னு சொல்லுறது எவ்ளோ பெரிய பொய்ன்னு புரிஞ்சிக்க முடியாமலா இருக்கேன் "
தனது ராஜதந்திரம் வீணாகி போனதை புரிந்து கொண்டு மகனை சமாளிக்க நினைக்க,

" ஏதோ பிளான் பண்ணிருக்கீங்கன்னு தெரியுது ஆனா என்னன்னு தான் தெரியல, சரி இந்தாங்க கார் கீ போய் அம்மாவை கூட்டிட்டு வாங்க.
நா அப்படியே பைக் எடுத்துட்டு போய் என் ஆளை கூட்டிட்டு வந்துடுறேன்.... "

" உன் ஆளை கூட்டிட்டு வர நீ கார்ல போடா என்கிட்ட எதுக்கு கார் கீய கொடுக்க, என்கிட்ட தான் பைக் கீ இருக்கே "

" ஓகோ கத அப்படி போகுதோ, சரிங்க பாதர் நடத்துங்க, ஆனா லேட் பண்ணாம டைம்க்கு வந்து சேருங்க " என்று சொல்லிவிட்டு கார் சாவியை கையில் சுற்றி கொண்டே கிளம்பிவிட,

மீண்டும் தனது பைக்கை நோக்கி ஓடினார் அந்த ஐம்பது வயது இளைஞர்.

காசி விஸ்வநாதர் சமேத விசாலாட்சி அம்மன் கோவில், என்று சுவரில் எழுதி இருந்த அந்த பிரம்மாண்ட கோவில் பிரகார சுவரின் அருகில் வண்டியை நிறுத்தி விட்டு, அருகில் இருந்த பூ கடையில் மூன்று முழம் மல்லிகை பூவையும், அப்போது தான் பூத்திருந்தது போல, மல்லிக்கு மத்தியில் அழகாய் மலர்ந்து இருந்த சிவப்பு ரோஜா ஒன்று அவரை பார்த்து சிரிக்க அதையும் சேர்த்து வாங்கி கொண்டு கோவில் உள்ளே நுழைந்தார், பக்கவாட்டில் இருந்த தெப்பக்குளத்தின் அருகில் அமர்ந்து இருந்த தேவயானியின் முன்னால் சென்று கையில் நிறைந்த மல்லிகையையும் அதற்கு மத்தியில் அந்த ஒற்றை ரோஜாவையும் வைத்து,

" இனிய காதலர் தின வாழ்த்துக்கள் என் காதலே " என்று நீட்ட

கணவனின் செயல் கண்டு 48 வயதிலும் வெட்கம் வந்தது தேவயானிக்கு,

" அச்சோ குமரா என்ன இதெல்லாம், கோவில்ல வச்சி அதுவும் எவ்ளோ பேர் இருகாங்க, அச்சச்சோ " பெரிதாய் வெட்கம் ஆக்கிரமிப்பு செய்ய....

" எத்தன பேர் இருந்தா என்ன டி பொண்டாட்டி, என் பொண்டாட்டிக்கு நா கொடுக்கேன் பாக்குறவங்களுக்கு ஆசை இருந்தா அவங்களும் அப்படியே செய்யட்டுமே...... "

" உனக்கு ரொம்ப தான் டா குசும்பு, " கணவனின் செயலை ரசித்து கொண்டே வாய்மொழி மொழிந்தவள், கண்களில் கணவனை நிறைத்து கைகளில் பற்றி தலையில் சூடிக் கொண்டாள் காதலாய் பூத்த மலர்களை.....

அப்போது அவர்களை பார்த்து சிரித்து கொண்டே நகர்ந்தது ஒரு இளம் ஜோடி அதை பார்த்த குமரன், நினைவு வந்தவராக

" தேவா " என்று மனைவியை அழைத்தார்.

" ம்ம்ம் சொல்லு குமரா "

" நம்ம அதி லவ் பண்ணுற பொண்ண இன்னைக்கு பாக்க போகணும்ன்னு சொல்லி இருந்தானே... " என்று குமரன் சொல்ல தேவயானியின் முகம் மாறியது.

" நாம போய் பாக்கணுமா குமரா? "

" என்ன தேவா இப்படி கேட்குற, நம்ம பையன் காதலிக்குற பொண்ண நாம பாக்காம..... "

" நாம ஏன் பாக்கணும் குமரா? "

" இப்படி கேட்டா எப்படி தேவா "

" வேற எப்படி கேட்க குமரா? "

" தேவா, நாம போய் பாத்து தான் ஆகணும் வா போவோம் " படியிலிருந்து எழுந்து மனைவியின் கை பிடித்து மேலே தூக்கினான்.

" நா வரல குமரா, நேரா வீட்டுக்கு போவோம் வா " உறுதியான குரலில் தேவயானி சொல்ல, அதே நேரம் அவரது அலைபேசி அழைப்பு மணியை கக்கியது,

அதிவீரன் தான் அழைத்து இருந்தான், அழைப்பை ஏற்று காதில் வைத்து மகனின் மறுமொழி வர காத்திருந்து அவன் பேச போகும் விஷயத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்பதை காட்டினாள்.

" எம்மா என்னை பெத்தவளே,
கொஞ்சம் வாய தான் திறந்து பேசேன்... "

" வர வர உன் அப்பாவை மாதிரி உனக்கும் நக்கல் கூடி போச்சு டா, வீட்டுக்கு வா உன்ன கவனிச்சுக்குறேன். "

" வீட்டுக்கு வரவா, ம்மா நீ கிளம்பி வா ம்மா "

" என்னை எங்க டா வர சொல்லுற நா எங்கையும் வர மாட்டேன், என்னை கூப்டாத.
உன் இஷ்டம் என்னவோ அத செய் " என்று சொல்லிவிட்டு இம்முறை மகனின் மறுமொழி வேண்டாம் என்று முடிவு செய்து விட்டது போல அழைப்பை துண்டித்து விட்டார்.

மறுமுனையில் இன்று உன்னை பார்க்க எனது தாயும் தந்தையும் வருகிறார்கள் என்று சொல்லியிருந்த தனது காதலியோடு உட்கார்ந்து இருந்த அதிவீரன் அவளிடம் என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் அமைதியாக அவள் முகத்தை பார்த்தான்....

இங்கோ மகனை வறுத்து கொண்டிருந்தாள் தாய் அவள்.....


நெஞ்சில் நிறைவாள்.......
 

Author: Vishakini
Article Title: நெஞ்சில் நிறைந்தவள் - 1
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
இப்பவும் இவளோ காதலா இருக்க தேவா... தன் மகன் காதலை எதிர்க்கிறார்களா ஏன்????
Interesting start ❤️