அத்தியாயம் 14
அந்த காலை நேரத்திலேயே அந்நிறுவனத்தின் ஏற்றுமதி பகுதி பரபரத்து கொண்டிருந்தது, அதற்கு காரணம் அந்த நிறுவனத்தின் முக்கியமான வாடிக்கையாளர்களில் ஒருவர் தாமதமாக அதேநேரம் அவசர தேவையாக கேட்டுக்கொண்ட உற்பத்தி பொருளின் தேவையே ஆகும். அதனை சரியான நேரத்திற்கு அங்கிருந்து கடத்தி கொச்சினுக்கு சரக்குகளை ஏற்றுமதி செய்யும் கடைசி நேர பதட்டத்தில் இருந்தாள் தேவயானி. ஒரு 10 நிமிடம் தாமதமானாலும் சரக்கு ரயில் கிளம்பி விடும். அப்படி கிளம்பிவிட்டால் அவர்கள் அத்தனை பேரோட உழைப்பும் கெட்டுப்போவதோடு அந்த முக்கிய மதிப்பு மிக்க வடிக்கையாளர் தங்கள் மீது வருத்தப்படவும் வாய்ப்பு இருந்தது. அந்த காரணத்தினால் வேலைகாரர்களை வேலை வாங்குவதோடு நில்லாமல் அவர்களோடு அவளும் பம்பரமாக சுழன்று அந்த சரக்குளை அனுப்பி விட்டு வெளியே வரும் போது அந்த குடிகாரனின் சலம்பல் சத்தம் அவளுக்கு கேட்டது. அவனது தடித்த வார்த்தைகள் ஏற்கனவே சூடாகி இருந்து தேவயானியின் மூளையை இன்னும் சூடாக்க வந்த மாத்திரத்தில் அந்த குடிகாரனின் கன்னத்தில் தனது கை விரல்களை பதித்து இருந்தாள்.
அவளது அந்த அதிரடி செயல் அங்கு அத்தனை நேரம் குடி கொண்டிருந்த கூச்சல் குழப்பத்தை விரட்டி அடித்து இருந்தது.
வாங்கிய அடியில் அவன் பொரி கலங்கி போய் நிற்க, சொடக்கிட்டு அவனை மிரட்டும் தோரணையில் பேசினாள் தேவயானி,
" ஏய் இங்க பாரு இது ஆபீஸ், உன் வீடில்லை. மரியாதையா வெளிய போ அத விட்டுட்டு இன்னும் சலம்பல் பண்ண நினைச்ச அவ்ளோ தான் பாத்துக்கோ. " சிறிது இடைவெளி விட்டவள்,
" ஏன் டா அவ உழைப்புல வர்ற காச மட்டும் வாங்கி உள்ள வைக்க தெரியுது, அத வச்சிட்டு நல்லா குடிக்க தெரியுது, இதெல்லாம் செய்ய தெரியுற உனக்கு அதெல்லாம் உனக்கு கிடைக்க காரணமா இருக்குறவளுக்கு மரியாதை மட்டும் கொடுக்கத் தெரியலயோ? வீட்டுக்கு உள்ள தான் பொண்ணுங்கள கொஞ்சம் கூட மதிக்க மாட்டேங்குறீங்க வெளியவாவது கொஞ்சம் மதிங்களேன் டா பொண்ணுனா எப்பவுமே உன் காலடியிலேயே உழுந்து கிடக்கணும்னு எண்ணமாடா உனக்கு? " என்று சத்தம் போட்டு செக்யூரிட்டியை அழைத்தாள்,
" பரமன் அண்ணா நீங்களுமா இவனை பேச விட்டு வேடிக்கை பாத்துட்டு இருந்தீங்க, இவன் உள்ள வரும் போதே இவனை விரட்டி விட்டுருக்க வேண்டாமா? " என்று கேட்டவள் அவரை வைத்தே அவனை வெளியேற்றி விட்டு அதே வேகத்தோடு தனது கேபினுக்கு வந்து அமர்ந்தாள்,
சில்லெனே வீசிய குளிர்சாதன பெட்டியின் குளிர் காற்று வெளி வெப்பத்தை குறைப்பது போல அவளுள் இருந்த வெப்பத்தையும் கொஞ்சமாக குறைத்து இருக்க இரண்டு நிமிடம் எடுத்து கொண்டு அந்த சூழலுக்கு தன்னை பொருத்தி கொண்டு அவளது உதவியாளரை அழைத்தாள்,
" மாதுரி... "
" ஹான் யானி இதோ வந்துட்டேன் "
" இன்னைக்கு நேர்காணல்க்கு எத்தனை பேர் வந்துருக்காங்க? "
" மொத்தம் 12 பேர், அதுல "
" பரவா இல்ல நீ எனக்கு விபரம் எல்லாம் சொல்ல வேண்டாம் எல்லாரையும் ஒன்னு போல உள்ள வர சொல்லு ஒரே நேரத்தில எல்லாரையும் ஒன்னா வச்சி பாப்போம் "
" ஒன்னாவா? "
" ம்ம்ம் எல்லாரும் ஒன்னா தான வேலை பாக்க போறோம் அப்புறம் என்ன? "
தேவயானியின் திட்டம் என்ன என்பது மாதுரிக்கு புரியவில்லை ஆனாலும் அவளது உத்தரவை ஏற்று நடப்பது தானே அவளது வேலை அதை சரியாக செய்தாள், அங்கு நேர்காணல்க்கு வந்திருந்த அனைவரையும் உள்ளே வர சொல்லி அவர்கள் அமர நாற்காலியும் தயார் செய்து கொடுத்தாள்.
உள்ளே வந்த அனைவரும் அவர் அவர் இருக்கையில் அமர்ந்தனர் தேவயானி மட்டும் எழுந்து நின்று கொண்டாள். அந்த கூட்டத்தில் குமரனும் ஒருவனாக வந்து அமர்ந்தான். வெளியில் நடந்த நிகழ்வை கண்டதால் தேவயானியின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்ற ஆர்வம் அங்கிருந்த அனைவருக்கும் அதிகமாக இருந்தது நேரம் கிடைத்தவுடன் அதை வெளிப்படுத்தும் எண்ணத்தில் துள்ளி கொண்டிருந்தனர். ஆனால் குமரனிடம் மட்டும் அப்படிப்பட்ட ஆர்வம் எதுவும் தெரியவில்லை, இதை எல்லாம் கவனித்து கொண்டே தேவயானி பேச ஆரம்பித்தாள்,
" எல்லாருக்கும் வணக்கம், உங்க எல்லாரோட தனிப்பட்ட தகவலும் ஒரு பேப்பர்ல கொடுத்து இருக்கீங்க, ஆனா அத நா இன்னும் பாக்கல அதுக்காக உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன், ஏன்னா இன்னைக்கு நம்ம நிறுவனத்தோட முக்கிய வாடிக்கையாளர் ஒருத்தர்க்கு அனுப்ப வேண்டிய சரக்க கடைசி நேரத்தில சொன்னதுனால அத தயார் செஞ்சு அனுப்ப கொஞ்சம் கால தாமதம் ஆகிட்டு, " என்று சொன்னவள்,
" சரி உங்களை பத்தின தகவலை உங்க கிட்டவே நேரடியா கேட்டு தெரிஞ்சுக்குறேன் " என்று தேவயானி சொல்ல தனது இருக்கையில் இருந்து எழுந்தான் குமரன்.
நெஞ்சில் நிறைவாள்......

Author: Vishakini
Article Title: நெஞ்சில் நிறைந்தவள் - 14
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.