நெஞ்சில் நிறைந்தவள் - 15

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,634
6,876
113
அத்தியாயம் 15


நேர்காணலுக்கு வந்திருந்தவர்களை பார்த்து,
" நேரமிண்மையால் உங்களைப் பற்றிய விபரங்களை முன்னரே பார்க்க முடியவில்லை ஆதலால் நேரடியாகவே கேட்டு தெரிந்து கொள்கிறேன் " என்று சொன்ன தேவயானியை பார்த்து எழுந்து நின்றான் குமரன்.

" ஏன் எழுந்துருக்கிறீங்க? உட்காருங்களேன் ஒவ்வொருத்தரயா பேசும் போது விபரங்கள கேட்டு தெரிஞ்சுக்கிறேன். " தேவயானியின் அந்த குரலில் மரியாதையோடு பணிவும் கலந்து இருந்தது.

" அத நீங்க கேட்டு தெரிஞ்சுக்கோங்க மேடம், ஆனா நா உங்க கிட்ட சொல்ல வந்தது வேற விஷயம் "

" ஓ அப்படியா சரி சொல்லுங்களேன் "

" தலைமை பொறுப்பில் இருக்கக்கூடிய நீங்களே உங்க வேலைய சரியா செய்யாம அந்த செயலுக்கு ஒரு காரணம் சொல்றது சரியாவா இருக்கு? " கேள்வியாய் கேட்டவன் சிறிது இடைவெளி விட்டு,

" உங்களுக்கு எத்தனை வேலை இருந்தாலும், இது எவ்வளவு முக்கியமானதுன்னு உங்களுக்கே தெரியும் தானே அப்படி இருக்கும்போது அந்த வேலையை நீங்க முடிச்சிட்டு தானே இந்த நேர்காணலுக்கு எங்கள கூப்பிட்டிருக்கணும், அத விட்டுட்டு இப்போ இங்க பன்னிரண்டு பேர் இருக்கோம் ஒவொருத்தரும் தனி தனியா அறிமுகம் கொடுத்தா அது கால விரையம் தானே?
அது மட்டும் இல்லாமல் நேர்காணல்ங்குறது நா பார்த்த வரையிலும் தனித்தனியா ஒவ்வொருத்தர் கிட்டயும் கேள்விகள் கேட்டு அவங்களோட பதில வச்சு அவங்கள மதிப்பீடு செய்யுறது தான? அப்படி செய்யாம இப்படி கூட்டமா இருக்க வச்சா சிலரோட மதிப்புகள தான கணக்கிட முடியும்? உங்களோட இந்த அணுகுமுறை சரியா? " குமரன் கேள்வியை அடுக்க,

சிரித்து கொண்டே பேச ஆரம்பித்தாள் தேவயானி,

" முதல்ல நீங்க இப்படி கேள்வி கேட்டதுக்கு நா உங்களை பாராட்டுறேன் குமரன் " என்று தேவயானி சொன்ன போது குமரன் முகத்தில் லேசான ஆச்சர்யம். தன்னோட பெயர் எப்படி அவளுக்கு தெரியும் என்ற ஆச்சர்யம். அதை அவளும் புரிந்து கொண்டு சொன்னாள்,

" என்ன குமரன் உங்க முகம் கேள்வி குறியில இருந்து இப்போ ஆச்சர்ய குறிக்கு மாறுது போல " கேட்டவளிடம் ஒரு சிரிப்பு.
குமரன் மறுபடியும் பேச நினைத்த போது கை அமர்த்தி விட்டு,

" உங்க எல்லாரோட தனி தகவல்களையும் நா முன்னாடியே ஒரு முறை படிச்சு பாத்துட்டேன், ஏன்னா குமரன் சொன்ன மாதிரி தலைமை பொறுப்புல இருக்க கூடிய நானே பொறுப்பு இல்லாம காரணம் சொன்னா என்னைய பார்த்து தான நீங்களும் அப்படி ஒரு விஷயத்தை செய்வீங்க, அது நடக்காம இருக்கனும்னா நா சரியா இருக்கனும், நா சரியா இருந்தா என்னோட குழுவும் சரியா இருக்கும். என் குழுவும் சரியா இருந்துட்டா என்னோட வேலையும் ரொம்ப சரியா இருக்கும்.
என்ன குமரன் நா சொல்லுறது சரி தான " மீண்டும் குமரனை கேட்க,

அவன் ஆமாம் என்பதற்கு ஆதரமாய் தலை அசைத்து பதிலும் சொன்னான்.

" அப்புறம் உங்க எல்லாரையும் நா ஏன் இப்படி குழுவா வர வச்சேன் தெரியுமா? "
கூட்டத்தில் அமைதி தெரியவில்லை என்பதற்கு ஆதாரமாக ஒரு சிலரின் தலை மட்டும் ஆடியது

" ஒன்னு என்னோட தவிர்க்க முடியாத வேலை காரணமா உங்களோட விலைமதிப்பு இல்லாத நேரத்தை நா வீணடிச்சுட்டேன் அதனால அந்த நேரத்த இப்படி ஈடு செய்ய நினைக்குறேன். இப்படி ஈடு செய்யும் போது உங்க எல்லாரையும் நேர்காணல் செஞ்சு முடிவு சொல்ல கூடிய அதே நேரத்தில இப்போ என்னால சொல்ல முடியும் அதனால இதுக்கு மேலான உங்களோட நேரம் என்னால விரையம் ஆகாது.
இரண்டாவது உங்களோட வேலை ஒரு குழுவோட இணைந்து செயல்பட கூடிய வேலை, அதனால நீங்க குழுவோட இணைந்து தான் ஆகணும், இப்போ இங்க நா கேட்குற சில விஷயங்கள் குழுவா எடுக்க கூடிய முடிவா இருக்கலாம் அப்படி பட்ட கேள்விக்கு நீங்க எப்படி ஒரு குழுவோட ஒன்றி போறீங்கன்னு நா கணிக்க தோதுவா இருக்கும்.
மூன்றாவது ஒரு குழுவுக்கு தலைமை தாங்குற பண்பு உங்க கிட்ட எப்படி இருக்குன்னு சோதனை செய்யுறது, எனக்கு தெரிஞ்சு அந்த சோதனையில குமரன் முன்னிலையில இருக்குறாரு. ஏன்னா அவர் தான் கொஞ்சம் கூட தயக்கம் இல்லாம தன்னோட மனதில இருந்த கேள்வியை தைரியமா ரொம்ப வெளிப்படையா கேட்டுருக்கார்.
இது மாதிரி கேள்வி பதில்களை நா எப்பவும் விரும்புவேன் " என்று தேவயானி பேசி கொண்டிருக்க அனைவரும் அமைதியாக கேட்டு கொண்டிருந்தனர்.

தேவயானி குமரனை குறிப்பிட்டு பேசியதை கேட்டு தாங்களும் எதாவது பேசினால் தான் அவனை போன்ற அங்கீகாரம் தமக்கும் கிடைக்கும் என்ற எண்ணத்தில்,
ஒருவன் எழுந்து,

" மேம் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நம்ம அலுவலகத்தில ஒருத்தர் பிரச்சனை பண்ணிட்டு இருந்தாருல்ல அத நீங்க ரொம்ப அழகா கையாண்டீங்க "

" ஆமா மேம் அத நீங்க கையாண்ட விதம் நிஜமாவே ரொம்ப அருமை " இது இன்னொருவன் வாக்குமூலம்

" பெண்கள் இப்படி தான் தைரியமா எதையும் சமாளிக்கணும்ன்னு புரிஞ்சிகிட்டேன் மேம் " இது இன்னொரு பெண் ஆமாம் ஆமாம் என்று இன்னும் சிலரும் அதை ஆமோதித்து பேச குமரன் மட்டும் அதற்கு கருத்து சொல்லவில்லை.

" என்ன குமரன் எல்லாரும் பேசிட்டாங்க இத பத்தி உங்க கருத்து என்ன? "

" இதுல அவங்கள போல நானும் கருத்து சொல்லி நேரத்தை விரயம் பண்ண விரும்பல. ஏன்னா அங்க நடந்த நிகழ்வு நம்ம நிறுவனத்திற்கு சம்பந்தமில்லாத ஒரு நிகழ்வு அப்படி சம்பந்தமில்லாத நிகழ்வுகளை பற்றி பேசுவதனால அது நமக்கு எந்த விதமான பலனையும் கொடுக்க போறது இல்ல அலுவலகத்தில் இது போன்ற பேச்சுகளை தவிர்க்கணும்னு நான் நினைக்கிறேன் அடுத்தவங்களோட நேரத்தை விரயம் பண்ண கூடாதுன்னு நினைக்கிற நீங்க இத்தனை நேரம் அவங்களோட கருத்துக்களை கேட்டது என் வரையில தவறுன்னு தான் நான் நினைக்கிறேன் " இந்த முறையும் நேரடியாகவே வந்தது குமரனின் பதில்.

" எல்லா நேரத்திலும் இது மாதிரி நேரடியான பதில்களும் பேச்சுகளும் சரியா இருக்கும்னு நினைக்கிறீங்களா குமரன்? "

" நேரடியா பேச வேண்டிய விஷயங்களை நேரடியாக பேசித்தான் ஆகணும்ங்குறது என்னோட வழக்கம். சில தவிர்க்க முடியாத நேரம் தவிர்த்து மற்ற நேரங்கள்ல நாம வெளிப்படையா பேசுறது தான் சிறப்பா இருக்கும் "

" அப்படி இல்ல குமரன் நேரடி பேச்சுகள் எப்பவும் சரி கிடையாது அனுசரணையான அணுகுமுறை தான் எப்பவும் சரி " முன்பு பேசிய பெண் அதே பெண் தனது கருத்தை பதிவு செய்ய

" ஆதரவற்ற நிலையில தான் அனுசரணை தேவை சந்தியா, எல்லா நேரமும் அனுசரணையா இருந்தா தேவை இல்லாத சமரசங்கள் செய்ய வேண்டியது வரும் அப்படி சமரசத்திற்கு வந்தா அந்த சமரசமே அடுத்தடுத்த சமரசத்திற்கு வழிவகுத்து கிட்டே போகும் " குமரன் தனது பார்வையில் தெளிந்து நின்றான்

இப்படியாக அந்த நேர்காணல் நிகழ்வை ஒரு கருத்து கேட்க்கும் கூட்டமாக மாற்றி இருந்தால் தேவயானி. தேவயானியின் அணுகுமுறை தாங்கள் நேர்காணலுக்கு வந்திருக்கிறோம் என்பதை மறக்க செய்து அந்த நிறுவனத்தில் தாங்கள் ஒரு அங்கம்.
அங்கு நிகழும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் அவரவர் சொந்தக் கருத்தை பரிமாறி எப்படி சரி செய்ய வேண்டும் என்ற விவாதமாக மாற்றி தான் என்ன நினைத்தோமோ அதை அவர்களை அவர்கள் அறியாமலே செய்ய வைத்து அதில் சிறப்பாக செயல்பட்டவர்களை வேலைக்கு தேர்வும் செய்து கொண்டாள்....


நெஞ்சில் நிறைவாள்..........
 

Author: Vishakini
Article Title: நெஞ்சில் நிறைந்தவள் - 15
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.