அத்தியாயம் 19
குமரன் நகர்ந்து விட மாதுரி தேவயானியிடம் பேச ஆரம்பித்தாள்,
" யானி அவரு மறுபடியும் அவர் நினைச்ச மாதிரி அவர் வேலையை பாக்க போறாரு "
" ம்ம்ம் பாத்துட்டும் கேட்டுட்டும் தான் இருந்தேன் மாதுரி, நீ போ இனிமேல் நா பாத்துக்குறேன் " என்று சொல்லி அந்த அழைப்பை துண்டித்து விட்டு தனது மடிக்கணினி முன்பு அமர்ந்து அதன் பொத்தான்களை தட்ட ஆரம்பித்தாள்.
நேரம் மெல்ல கடந்து மாலையை அடைந்தது.
அந்த மாலை நேர தேனீர் இடைவேளையை பயன்படுத்தி கொள்ள நினைத்த தேவயானி குமரனுக்கு அழைப்பை கொடுத்தாள்,
" குமரன் கொஞ்சம் என்னோட அறைக்கு வர முடியுமா? "
" ம்ம்ம் வரேன் தேவா ஒரு ரெண்டு நிமிஷம் கொடுக்க முடியுமா தேனீர் குடிச்சுட்டு வந்துடுறேன்... "
" ம்ம்ம் வாங்களேன் இங்க வச்சே குடிக்கலாம் நானே கொண்டு வர சொல்லிடுறேன் "
" அப்படியா அப்போ சரி தங்கள் விருப்பம் இதோ உடனே வரேன் " என்று சொல்லி அழைப்பை துண்டித்து விட்டு தனது கணினியின் இயக்கத்தை நிறுத்தி வைத்து விட்டு வந்தவன், அவளின் அனுமதி கேட்டு அவளின் அறையில் நுழைந்தான்.
அவள் வரவேற்கும் முன்பே அவனுக்காக அவள் தயார் நிலையில் வைத்திருந்த தேனீரின் வாசம் அவனை வரவேற்றது,
" வாங்க குமரன் உங்க தேனீர் தயாரா இருக்கு அத எடுத்து குடிச்சிட்டே பேசலாம் "
" நன்றி தேவா, ஆனா நீங்க எதுக்காக என்னை வர சொன்னீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா? "
" அழகா தெரிஞ்சுக்கலாம் குமரன், நீங்க என்னை தேவான்னு கூப்டுறது எனக்கு ரொம்ப புடிச்சு இருக்கு. ஏன்னா எல்லாரும் என்னை யானின்னு கூப்டு தான் பழக்கம், நீங்க தான் வித்தியாசமா கூப்டுறீங்க அது நிஜமாவே எனக்கு ரொம்ப புடிச்சு இருக்கு " அவள் சிரித்து கொண்டே சொல்ல,
" அட இத சொல்ல தான் இவ்வளவு அவசரமா கூப்பிட்டிங்களா தேவா? " அவனும் சிரித்து கொண்டே கேட்டான்
" இல்ல இல்ல குமரன், ஒரு உண்மைய சொல்ல தான் கூப்பிட்டேன் " அவள் புதிர் போட,
குமரன் புரியாமல் பார்க்க,
" உங்களை சோதிக்க தான் மாதுரிய உங்க கிட்ட அப்படி நடந்துக்க சொன்னேன் "
" சோதிக்கவா? "
" ஆமா "
" என்ன சோதனை தேவா? ஏற்கனவே உங்க சோதனையை கடந்து தான இந்த அலுவலக பணியாளனா உள்ள வந்துருக்கேன்? "
" சரி தான் குமரன், அப்போ உங்க கிட்ட வேலைய வாங்கியே ஆகணும்ன்னு ஒரு குறிக்கோள் இருந்து இருக்கும் அதனால நீங்க எச்சரிக்கையா இருந்து சோதனைகளை கடந்து வந்துருப்பீங்க, ஆனா வேலை கிடைச்ச பின்னாடி அந்த எச்சரிக்கை உணர்வு இல்லாம போயிருக்கும் அதனால இந்த மாதிரி நேரத்தில சோதனை செஞ்சா தான உங்களோட பொறுப்பு எப்படி இருக்குன்னு என்னால கண்டுக்க முடியும் " என்று தேவயானி சொல்லவும் அதுவரைக்கும் கேள்வி கேட்டு கொண்டிருந்தவன் அமைதியாகினான். அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை என்பது தான் அவனது அமைதிக்கான காரணம்.
" உங்கள சோதிக்க நினைச்சது நானு என்னோட கருவி தான் மாதுரி. அவளோட செயல் அவ மேல உங்களுக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் இல்லாம செஞ்சுருக்கும், அதனால அடுத்த அடுத்த முறை அவளை பாக்கும் போது உங்களுக்கு கோபமோ எரிச்சலோ தான் வரும் அவ மீதான நன்மதிப்பு இல்லாம போயிரும் அதனால தான் உங்கள கூப்டு உண்மையை சொல்லிரலாம்ன்னு கூப்பிட்டேன் " என்று அவள் விளக்கம் சொல்ல,
" எல்லாம் சரி தான் தேவா என்னை வேலைக்கு தேர்வு செஞ்சது நீங்க தான் அப்படி இருக்கும் போது ஏன் உங்க தேர்வு மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லாம போச்சு? "
" நம்பிக்கை இல்லாம போகல குமரன், நா எழுதின தேர்வு தான் நீங்க, ஆனா அந்த தேர்வுக்கு என்ன மதிப்பெண் வருதுன்னு தெரியணும்ல, மதிப்பெண் இல்லாத தேர்வுக்கு மதிப்பு ஏது? " வழக்கமான அவளது பாணியில் கேள்வியாய் கேட்டு விடையை அவன் கையிலேயே விட்டு விட்டாள்.
அவள் செய்தது தவறு என்று வாதம் பண்ண நினைத்தவனுக்கு அந்த வாய்ப்பை வழங்காமல் அணை போட்டுவிட்டதால் வேறு வழியின்றி அவனும் அவளது செய்கையை ஆமாம் என்று அமோதித்து விட்டான், அதே நேரம் தனக்காக வேலை செய்தவள் எக்காரணம் கொண்டும் அடுத்தவர் மத்தியில் கெட்ட பெயர் எடுத்து விட கூடாது என்பதற்க்காக சம்பந்தப்பட்டவர்களை நேராக அழைத்து அதை விவரிக்கும் குணத்தை அவனால் பாரட்டாமல் இருக்க முடியவில்லை. ஆதலால் அதையும் அவளிடம் கூறி பாராட்டி விட்டு அங்கிருந்து கிளம்பினான்.
அன்றைய வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வந்தவன் மீண்டும் அந்த மாடியில் அமர்ந்து இருள் நிறைந்த வானத்தை பார்த்து கொண்டே அன்றைய நிகழ்வுகளை அசைப்போட்டவனின் எண்ணம் முழுவதும் நிறைந்து இருந்தாள் தேவயானி,
எண்ணத்தை எழுத்தாக்க நினைப்பவனின் எண்ணம் மீண்டும் எழுத்தானது,
" இது என்ன விந்தை?
இன்னுமொரு பதிவு இவளைப் பற்றி எழுத வைக்கிறாளே...!
நினைக்கையில் எனக்கே கொஞ்சம் ஆச்சர்யமாகத் தான் இருக்கிறது.
ஆனாலும்,
எழுதித்தான் ஆக வேண்டி இருக்கிறது அவளைப் பற்றி,
அப்படியா?
அப்படி என்ன சிறப்பு அவளிடம்?
அசாதாரண விஷயங்களையும் வெகு சாதாரணமாக அணுகத் துடிக்கிறாளே... என்று நினைக்கும் போதே ம்ஹும் இல்லை இல்லை நிச்சயமாய் வெகு சாதாரணமாய் தான் அணுகுகிறாள் என்று ஆணித்தரமாக சொல்ல வைத்து விடுகிறாள்.
அது தான் அவளது அந்த அணுகுமுறையில் அவளுக்கு கிடைத்தது மகா வெற்றி.
ஏனென்றால்,
இதுவரை அப்படி ஒரு நிலை சாத்தியமில்லை என்று நினைத்த என்னையும் யோசிக்க வைக்கிறாள் அதைப்பற்றி எழுதவும் வைக்கிறாள் அத்தோடு நில்லாமல் அதன்படி நடக்கவும் வைத்திருக்கிறாள்.....
அவள் வித்தியாசமானவளா இல்லை விசித்திரமானவளா என்று யோசிக்கும் போதே புதுமையானவள் என்று சொல்லவும் வைத்திருக்கிறாள்.... "
என்று எழுதி முடிக்கும் போதே அவனது இதழ்கள் மெல்ல விரிந்தது, அந்த விரிதல் அவனிடம் புதிது ஆனால் அதை அவன் இப்போது அறிந்து இருக்கவில்லை.....
நெஞ்சில் நிறைவாள்......

Author: Vishakini
Article Title: நெஞ்சில் நிறைந்தவள் - 19
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.