நெஞ்சில் நிறைந்தவள் - 2

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,634
6,876
113
அத்தியாயம் 2

" ஏய் நந்து என்ன அதிசயம் டி இவ்ளோ சீக்கிரம் எழுந்துட்ட? " கேட்டு கொண்டே எழுந்தாள் நந்தினியின் தோழி ஷாலினி.

" எழுந்துட்டேன் இல்ல டி கிளம்பிட்டேன் "

" அதான் என்ன அதிசயம்ன்னு கேட்டேன் டி? "

" அதிசயம் இல்ல டி ஆனந்தம் "

" ஹையோ அப்படி என்ன டி ஆனந்தம்? "

" அதுவா அது.... "

" சுத்தம், சும்மாவே நீ இழுவையை போடுவ இதுல ஆனந்தமா ஆறு ஆறரை மணிக்கு எல்லாம் கிளம்பிருக்க சொல்லவா வேணும்.... " அலுத்து கொண்டாள் ஷாலினி.

" ஏய் ச்சீ போடி அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல, அது இன்னைக்கு அதி அவனோட அம்மா அப்பாவை பாக்க கூட்டிட்டு வாரேன்னு சொல்லிருக்கான் டி, அநேகமா இன்னைக்கு அவங்க சம்மதம் சொல்லிருவாங்கன்னு நினைக்கேன் " ஆனந்தமாய் அவள் வார்த்தைகள்,

" ஹேய் என்ன டி சொல்லுற " ஆனந்தம் அவளுக்கும் தொற்றி கொண்டதற்கு அறிகுறியாய் படுக்கையிலிருந்து எழுந்து நந்தினியின் அருகில் வந்தாள்.

" ஆமா ஷாலு, சந்தோசமாவும் இருக்கு அதே நேரம் ஒருமாதிரி பதட்டமாவும் இருக்கு டி "

" உனக்கு கூட பதட்டம் வருது இல்ல நந்து "

நந்தினி தோழி முகம் பார்த்து சிரிக்க,

" வாழ்த்துக்கள் நந்துமா, உன் நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும் டி சந்தோசமா போய்ட்டு பாத்துட்டு வா, "

" சரி டி, அப்போ நா போய்ட்டு வரேன் இப்போ அதி வந்துருவான் " அவளுக்கு கையை காட்டி விட்டு அந்த தனியார் விடுதியிலிருந்து வெளியே வந்தாள் நந்தினி.

வந்தவளை வெகு நேரம் காக்க வைக்காமல் வந்து சேர்ந்தான் அதிவீரன்.

" என்ன அதி கார்ல நீ மட்டும் வந்துருக்க? "

" அம்மா அப்பா கோவிலுக்கு போயிருக்காங்க நந்தி, அவங்க பைக்ல வருவாங்க "

" டேய் என்ன டா நீயி வயசானவங்களை பைக்ல வர சொல்லிட்டு நீ கார எடுத்துட்டு வந்துருக்க? "

" அது சரி அவங்க வரவும் பாத்துட்டு சொல்லு நந்தி வயசு ஆகிட்டா இல்லையான்னு "

" என்ன சொல்லுற டா " புரியாமல் பார்க்க,

" காருல ஏறு டி அவங்கள பாக்கும் போது உனக்கே தெரியும் " என்று சொல்லி அழைத்து வந்து அமர வைத்திருக்கும் காதலியிடம் இப்போது என்ன பதில் சொல்வான் அதிவீரன்?

அவனும் அதை அறியாமல் தான் மௌனமாக அவளை பார்த்து கொண்டிருந்தான், ஆனால் அவனது பார்வையின் அர்த்தம் அவளுக்கு ஓரளவு விளங்கியே இருந்தது போல மௌனம் உடைத்து அவளே கேட்டாள்,

" என்ன அதி அத்தை என்ன சொல்றாங்க? அவங்க வர மாட்டாங்களா? " என்று கேட்கும் போதே நந்தினியின் குரல் உடைந்திருந்தது.

" ஏய் நந்தி என்னடி சின்ன பிள்ளை மாதிரி,
ஒன்னும் இல்ல. இப்போ அவங்க வரலைன்னா என்ன நாம அவங்களை தேடி போய் பாப்போம். நாம அப்படி போறத அவங்க தடை பண்ண முடியாதுல "

" அது எப்படி முடியும் அதி "

" ஏன் முடியாது நந்தி?
நாம போய் பார்த்தா ஏன் வந்தீங்கன்னு கேட்கவா போறாங்க? "

" ஒருவேளை கேட்டுட்டாங்கன்னா? "

" கண்டிப்பா கேக்க மாட்டாங்க டி எனக்கு தெரியும் வா.
நாம நம்ம வீட்டுக்கு நேரா போகலாம். "

" வேண்டாம் அதி எனக்கு பயமா இருக்கு "

" நந்தி நீ நினைக்கிற அளவுக்கு எல்லாம் ஒண்ணுமே இல்ல டி வா போவோம் "

" ப்ளீஸ் அதி வேண்டாம். என்ன தப்பா நினைச்சுக்காத நான் வரல டா நான் நேரா ஹாஸ்டல் போறேன் " என்று சொல்லும் போது அவளது கண்ணில் இருந்து மெல்லமாய் ஒரு துளி முத்து உதிர்ந்தது.

" நந்தி...
என்ன டி,
ஏன் இப்படி... "

" நா கிளம்புறேன் அதி, நா அங்க வந்து அவங்க எதாவது பேசி, வேண்டாம் டா நா இப்போ போறேன் " என்று சொல்லிவிட்டு அவனது பதிலை எதிர்பாராமல் வழியும் விழி நீரை விரல் கொண்டு தட்டி விட்டு நடந்தாள்.

நடந்து செல்லும் தனது காதலியை நிறுத்தி வைக்கும் விடை அறியாது பார்த்துக் கொண்டே அமைதியாக நின்று இருந்தான் வலி நிறைந்த விழியோடு.....

அந்நேரம் சரியாக குமரன் அழைக்க, அனல் கக்கும் பார்வையோடு அலைபேசியை பார்த்தான் அதிவீரன்....



நெஞ்சில் நிறைவாள்......
 

Author: Vishakini
Article Title: நெஞ்சில் நிறைந்தவள் - 2
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.