நெஞ்சில் நிறைந்தவள் - 22

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,634
6,876
113
அத்தியாயம் 22


குமரனின் முந்தைய அனுபவங்களைக் கேட்டு அமைதியாக இருந்த தேவயானியை அதே அமைதியோடு திரும்பி பார்த்தான் குமரன். அவளின் முகத்தில் இருந்து அவனால் எவ்வித உணர்வையும் கண்டுகொள்ள முடியாது போக,

" எதுக்காக இந்த நிஜங்களை கேட்டீங்கன்னு தெரியல தேவா.
நீங்க கேட்டீங்க நான் சொல்லிட்டேன் இப்பவும் நீங்க ஏன் என்னோட கடந்த காலத்தை பத்தி கேட்டீங்கன்னு நான் உங்ககிட்ட கேட்க போறது இல்ல ஏன்னா, உங்க கிட்ட அதற்கான காரணங்கள் நிறைய இருக்கலாம்.
ஆனா நா ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன் " என்று சிறிது இடைவெளி விட,

என்ன என்பது போல பார்வையில் கேட்டவள் வாய் திறந்து எதுவும் பேசவில்லை ஆதலால் மீண்டும் குமரன் தொடர்ந்தான்,

" நம்ம நிறுவனத்தில் மதிப்புமிக்க ஒரு பொறுப்ப எனக்கு கொடுத்து இருக்கீங்க. இந்தப் பொறுப்போட மகத்துவம் என்னன்னு எனக்கு தெரியும். பொறுப்போட மகத்துவம் மட்டும் இல்ல நம்ம நிறுவனத்தோட மதிப்பும் எனக்கு நல்லா தெரியும்.
இந்த நிறுவனம் சாதாரண நிறுவனம் கிடையாது இந்த நிறுவனம் பல குடும்பங்களோட வாழ்வாதாரமா இருக்கக்கூடியது. ஒருவேளை இந்த நிறுவனத்திற்கு என்னால ஒரு இழப்பு ஏற்பட்டா அந்த இழப்பு இந்த நிறுவனத்தை நம்பி இருக்கக்கூடிய அத்தனை குடும்பத்துக்கும் தாங்கறது எனக்கு நல்லா தெரியும் அதனால அப்படி ஒரு இழப்பு ஏற்படுவதுக்கு நான் எந்த ஒரு காலத்திலையும் அனுமதிக்க மாட்டேன் இது நான் உங்களுக்கு கொடுக்கக்கூடிய உறுதி. " என்று உறுதியான குரலில் குமரன் சொல்ல தேவயானி முகத்தில் ஒரு மலர்ச்சி தெரிந்தது. அந்த மலர்ச்சியை கண்ட குமரன் ஓரளவு அவள் பேச வந்த காரணத்தை யூகித்து கொண்டவனாக,

" இந்த விஷயம் பத்தி பேசத்தான் நீங்க என்ன கூப்டீங்களான்னு தெரியல, ஆனா இத தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கிறதுனால அதை நான் தெளிவுபடுத்துறேன். " என்று சொல்லி மீண்டும் பேசினான்.

அப்புறம் இனொரு எண்ணம் கூட உங்களுக்கு வரலாம் "

" என்ன எண்ணம்? " இப்போது தேவயானியின் வாய் திறந்திருந்தது,

" என்னோட மிக பெரிய ஆசையே நான் விழுந்த இடம் தெரியாத அளவுக்கு எழுந்து நிக்கணும்ங்குறது தான். எப்பவுமே மனுஷங்களோட சாதாரண இயல்பு அது தான் நாம இருந்த நிலையை விட உயர்ந்த நிலைக்கு வந்துட்டோம்னா நாம இருந்த நிலையை எல்லாருமே மறந்துடுவாங்க நம்மள மதிக்காதவங்க கூட தலையில் தூக்கி வச்சி கொண்டாடுவாங்க அது நெசமான அன்பாலையும் இருக்கலாம், இல்ல அவங்களோட ஆதாயத்திற்காகவும் இருக்கலாம். அது அவங்களோட சூழல் பொறுத்தது அது எப்படி இருந்தாலும் எனக்கு அது முக்கியம் இல்ல, அவங்களோட எண்ணம் எப்படியும் இருந்துட்டு போகுது ஆனா நான் கொண்டாடப்பட வேண்டிய இடத்துல இருக்கணும். அதுக்கு என்னோட பொருளாதாரம் மேலோங்கி இருக்கனும்.

ஏன்னா இன்னைக்கு சமூகத்தில ஒருத்தங்க மதிப்பை கணக்கீடு செய்யுறதுல முக்கிய பங்கு பணம்ன்னு சொல்லுற பொருளாதாரத்துக்கு தான் இருக்கு அப்படிங்கிற விஷயத்துல நான் ரொம்ப தெளிவா இருக்கேன்.

இத அம்மா கிட்ட சொல்லும் போது அவங்க ஏத்துக்கல, அவங்க எண்ணம் முழுக்க என்னோட எழுச்சியா நினைச்சது அந்த நிறுவனத்தை தான். ஆனா உண்மை அது இல்ல என்னோட எழுச்சிங்குறது அந்த நிறுவனம் கிடையாது,
எப்படி என்னோட எழுச்சி அந்த நிறுவனம் இல்லையோ அதே போல தான் என்னோட இழப்பாவும் அந்த நிறுவனத்தை நான் நினைக்கல. அதனால மறுபடியும் அந்த நிறுவனத்தை தொடங்கணும்ங்கிற எண்ணம் என்கிட்ட துளி கூட இல்லம்ம்ன்னு சொன்னப்போ அவங்களோட அடுத்த முடிவு அப்போ இந்த வேலையே உனக்கு வேண்டாம் வெளிநாட்டுக்கு எங்கையாவது போய் என்னாவது செய், முதலாளியா இருந்த நீ வேலைகாரனா போகவே கூடாதுன்னு எவ்வளவு சொன்னாங்க,

ஆனா இத சொன்ன அவங்களுக்கு தெரியாது,
இந்த துறை நா உயர்வா நினைக்குற, ரொம்ப ரொம்ப விரும்பின ஒரு துறைன்னு.

இவ்ளோ புடிச்ச ஒரு வேலைய விட்டுட்டு என்னால எப்படி வெளிய போக முடியும்? " தேவயானியை பார்த்து கேள்வி கேட்டு நிறுத்திய குமரனிடம் லேசான உணர்ச்சி பெருக்கு.

அப்படி பேசும் குமரனை தான் விழி அகலாது பார்த்து கொண்டிருந்தாள் தேவயானி.

" அதனால இந்த துறையை விட்டு என்னால நிச்சயம் வெளியாக முடியாது தேவா. எனக்கு பிடிச்ச துறையில எனக்கு பிடிச்ச மாதிரி இடத்தை நா அடையனும்னா அதுக்கு நம்ம நிறுவனம் மாதிரி பெரிய நிறுவன உதவி எனக்கு தேவைன்னு நினைச்சேன். என்னோட நல்ல நேரமோ என்னவோ தெரியல அந்நேரம் நம்ம நிறுவனத்தில ஆள் சேர்ப்பு நடக்குதுங்குற விளம்பரம் என் கண்ணுல பட்டச்சு ,
கொலைப்பசில இருந்த எனக்கு கொக்கு கறி கிடைச்ச மாதிரி இருந்துச்சு அந்த விளம்பரம் " என்று குமரன் உதாரணம் சொல்ல சிரித்தே விட்டாள் தேவயானி......

" என்ன கொலை பசிக்கு கொக்கு கறியா? என்ன குமரன் இது புதுசா இருக்கு " சிரித்து கொண்டே கேட்க,

அதுவரைக்கும் இருந்த இறுக்க நிலை கொஞ்சமாய் மாறி இருவரிடமும் சிரிப்பு.

" அது பசங்க மத்தியில எதாவது சிரிப்பா பேசும் போது இது மாதிரி புது மொழி உருவாகும் " இன்னும் அடங்கிடாத சிரிப்போடு சொல்ல,

" அவளும் சிரித்து கொண்டே அப்போ பழமொழி புதுமொழி எல்லாம் இப்படி தான் பொறக்கும் போல இல்ல குமரன் "

" இருக்கலாம் தேவா நானும் கூட இப்போ தான் அத யோசிக்கேன். அதுவும் நீங்க சொல்லி. அநேகமா உங்க கூட இருக்கும் போது நா இன்னும் கொஞ்சம் அறிவா ஆகுறேன் போல "

" எப்படி? "

" எப்படினா எப்படி சொல்ல....... ம்ம்ம் சூரிய வெளிச்சத்தை பிரதிபலிப்பு செய்யுற நிலவு மாதிரி "

" அடடா பிச்சு உதருறீங்களே குமரன், ஆனா கொஞ்சம் அதீத உவமையா இருக்கு "

" அதீதமான்னு தெரியல தேவா ஆனா என்னை பொறுத்தவரை ரொம்ப சரியா இருக்கு " அவளுக்கு ஈடாக இல்லை இல்லை அவளே சற்று வித்தியாசமாக உணரும் வண்ணம் இருந்தது குமரனின் பேச்சு.

அந்த பேச்சு அவளை அவனை கொஞ்சமாக ரசிக்கவும் செய்தது. அந்த ரசனையோடு அவன் பேசிய விஷயத்தின் தொடர்ச்சியை கேட்டாள்,

" ம்ம்ம் குமரன் நீங்க சொல்லிட்டு இருந்த விஷயம் பாதியிலயே நிக்குது "

" இது தான் உங்க கிட்ட ஒரு சிறப்பு தேவா, இடை செருகல் இருந்தா கூட இடைவெளி முடிஞ்சது மறுபடியும் தொடங்குவோம்ன்னு சொல்லுறீங்க பாருங்க "

" ஆமா குமரன் இடை செருகல ரசிச்சு நாம பேசுன பேசுற விஷயத்தை இடைவெளில விட்டுட்டு அந்த விஷயம் ஒருநாள் நமக்குள்ள இடைவெளியாவே வந்து நிக்கும் அதனால இடை நிற்றல் இல்லாம எதையும் செஞ்சு முடிச்சிரனும் " என்று அவள் சொல்ல அவன் அர்த்தமாக தலையை ஆட்டி விட்டு தொடர்ந்தான்.


" அந்த விளம்பரத்தை பாத்ததுமே முடிவு செஞ்சேன் எப்படியாவது நம்ம நிறுவனத்தில வேலைக்கு சேரணும்னு, நான் நினைச்ச மாதிரியே காலம் கை கூடுச்சு நம்ம நிறுவனத்தில வேலையும் கிடைச்சுடுச்சு, அந்த வேலை என்னோட எண்ணத்தை நிறைவேத்தும் மதிப்பு மிக்க பொறுப்பாவும் கிடைச்சுட்டு, இந்த நிலையை பயன்படுத்தி நம்ம நிறுவனத்தில அசைக்க முடியாத ஒரு சக்தியா வளர்ந்து நிக்கணும்,
இந்த துறையில நான் ஒரு அடையாளமா மாறனும்ங்குறது மட்டும் தான் என்னோட கனவு. அதற்கான பயணத்தை நம்ம நிறுவனத்தில நா தொடங்கிட்டேன் " என்று சொன்ன குமரனிடம்,

" ஏன் குமரன் நீங்க ஒரு முதலாளியா இருந்தவரு, எப்பவுமே முதலாளின்னு சொல்லுறது ஒரு தனி கௌரவம் தான "

" கௌரவம் தான் தேவா நா இல்லனு சொல்ல.
ஆனா நிதர்சனம்ன்னு ஒன்னு இருக்குல.
எனக்கு நிதர்சனம் புரியும் தேவா, என்னோட நிறுவனத்துக்கு முதலாளியா இருக்கிறத விட இந்த நிறுவனத்தில் மதிப்புமிக்க ஒரு பொறுப்பாளியா இருக்கிறதுல இந்த சமூகத்தின் மீதான பார்வை மாறுபடும்.
ஏன்னா இந்த துறையில நம்ம மாநில அளவுல பெயர் வாங்குன நிறுவனம் நம்ம நிறுவனம் அந்த நிறுவன மேலாளர் வாராருன்னு சொன்னா எப்படி இருக்கும் யோசிச்சு பாருங்க? அவ்ளோ தான் விஷயம் தேவா " வெகு சாதாரணமாக தோளை குலுக்கி சொன்னான் குமரன்.

" உங்க எண்ணம் சரி தான் குமரன். உங்களோட எண்ணத்திற்கு என்னோட வாழ்த்துக்கள், நீங்க பெரிய இடத்துக்கு போக நானும் சிவா கிட்ட வேண்டிக்குறேன் " சிரித்து கொண்டே சொன்னாள்.

" இதுக்கு மேலையும் நா புது நிறுவனம் ஆரம்பிப்பேன், நம்ம நிறுவனத்தில் கழகம் பண்ணுவேன்னு தோணுதா தேவா? "

" ஆரம்பத்தில இருந்தே அந்த எண்ணம் என்கிட்ட கிடையாது குமரன், அப்புறம் ஏன் உங்கள தனியா பேச கூப்பிட்டேன்னு நினைக்குறீங்களா? நீங்க புரிஞ்சிகிட்ட விஷயம் எல்லாமே நம்ம அலுவலகத்தில பேச்சா ஓடுது அத நீங்க கவனிசீங்களா இல்லையான்னு தெரியல அதனால உங்க கிட்ட ஒருவார்த்தை சொல்லி வைப்போம்ன்னு நினைச்சேன் அவ்ளோ தான். இத அங்க வச்சே சொல்லிருக்கலாம் ஆனா இது மத்தவங்களுக்கு தெரிய வந்தா நா உங்களுக்கு சாதகமா இருக்குற போல ஒரு தோற்றம் உருவாகும், அப்படி உருவாகுறது அலுவலக நலனுக்கு நல்லது இல்லாம போயிரும் இல்லையா அதனால தான் உங்கள இங்க வர செஞ்சேன். நீங்க வந்தது ஒரு விதத்தில உபயோகம் ஆகும்ன்னு நினைச்சேன் ஆனா அது ரெண்டு விதமா உபயோகம் ஆகிட்டு.

அவனை போலவே அவளும் தோலை குலுக்கி கொண்டாள்.


நெஞ்சில் நிறைவாள்......
 

Author: Vishakini
Article Title: நெஞ்சில் நிறைந்தவள் - 22
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.