அத்தியாயம் 7
நந்தினி அதிவீரனை அழைத்து விஷயத்தை சொல்ல அவன் தேவயானியிடம் சொல்லி விட்டு உடனே கிளம்ப அவனை தடுத்து நிறுத்தியவர்,
" அதி கொஞ்சம் இரு டா நானும் உன்கூட வாரேன் "
" அம்மா இந்த இருட்டு நேரத்தில அதுவும் பனி விழுற நேரம் நீங்க எதுக்கு ம்மா? "
" காரணம் இருக்கு அதி, நீ தேடி போறது உனக்கு சம்பந்தம் இல்லாத ஒரு பொம்பள பிள்ளைய அதனால நீ தனியா போறத விட அம்மாவும் உன்கூட வராது தான் சரியா இருக்கும் " என்று சொன்னதும் அவர் கூறும் காரணம் அவனுக்கு புரியவில்லை ஆனால் அம்மா கூறினால் நிச்சயம் எதாவது காரணம் இருக்கும் என்பதை உணர்ந்து உடனே அவரை அழைத்து கொண்டு கிளம்பினான், இவர்கள் செல்லும் தகவலை கடைத் தெருவிற்கு சென்ற குமரனிடம் சொல்ல அழைப்பு விடுத்த போது அவர் அழைப்பை எடுக்கவில்லை, சரி அவரே அழைப்பு விடுக்கும் போது சொல்லிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இருவரும் கிளம்பினார்கள்.
வண்டியில் செல்லும் போது வலது பக்கம் அதிக்கும் இடது பக்கம் தேவயானிக்கும் என்று கூறி தேடலை பங்கிட்டு கொடுத்தாள் தேவயானி, அவளிடம் தனது அலைபேசியில் இருந்த ஷாலினியின் புகைப்படத்தை காட்டினான் அதிவீரன்
இருள் மங்கிய இரவையும் இன்றைய கால மின் விளக்குகள் எளிதாய் வெளிச்சமாக்கி இருப்பதால் அவர்களது தேடல் பங்கீடு திட்டத்திற்கு அது உபயோகமாக இருந்தது. மிதமான வேகத்தில் நிதானமாக இருவரும் ஷாலினியை தேடிக்கொண்டே சென்றனர்.
சிறிது தூரம் சென்றிருக்க தேவயானியின் அலைபேசி அழைப்பை கக்கியது, குமரன் தான் அழைப்பில் வந்தார்,
" குமரா, வீட்டுக்கு வந்துட்டியா? "
" இல்ல தேவா கடை தெருவில தான் நிக்கேன் இங்க ஒரு பிரச்சனை "
" பிரச்சனையா? யாருக்கு என்ன ஆச்சு குமரா? "
" நா பொருள் வாங்கிட்டு வரும் போது வண்டிக்கு இடையில வந்து ஒரு பொண்ணு விழுந்துட்டா "
" அச்சச்சோ, ஒன்னும் அடிபடலையே டா "
அம்மாவின் குரல் கேட்டு வாகனத்தை ஓரம் கட்டி நிறுத்தினான்,
" இல்ல இல்ல தேவா, அந்த பொண்ணு தான் பயந்து போய் இருக்கு அதான் நீ கொஞ்சம் வந்தா நல்லா இருக்கும்ன்னு தோணுது "
" இப்போ நீ எங்க இருக்க குமரா? "
" தமிழ்நாடு கிராம வங்கி பக்கத்துல "
" சரி குமரா இரு இதோ வந்துட்டேன் நானும் பக்கத்துல தான் இருக்கேன் "
" பக்கத்துலயா? "
" ஆமா குமரா, நேர்ல வந்து சொல்லுறேன், அதி தமிழ்நாடு கிராம வங்கி கிட்ட போ அப்பா அங்க தான் இருக்காங்களாம் "
" அங்க என்ன ஆச்சு ம்மா, தெரியல அதி ஏதோ ஒரு பொண்ணு வண்டிக்கு இடையில வந்து விழுந்துட்டாம், அடி ஒன்னும் இல்லையாம் அந்த பொண்ணு தான் கொஞ்சம் பதட்டமா இருக்கும் போல பாத்துட்டு போயிருவோம் "
சரி என்று சொல்லி வண்டியை செலுத்திய இரண்டாவது நிமிடம் குமரனிடம் போய் நிற்க்க அங்கு ஷாலினி தான் மிரண்ட விழியோடு அமர்ந்து இருந்தாள்,
" குமரா என்ன ஆச்சு டா, உனக்கு ஒன்னும் அடி படலையே " தேவயானி கேட்ட நேரம்,
" ஷாலினி " என்று குரல் கொடுத்தான் அதி.
" அதி இது தான் நாம தேடி வந்த பொண்ணா? "
" ஆமா ம்மா, இவ தான். இவளுக்கு என்ன ஆச்சு பாதர்? "
" எனக்குமே தெரியல அதி, அவ குறுக்க வரத பாத்து நா வண்டிய நிறுத்திட்டேன் அவ ஏதோ பயந்து இருக்கா வேற ஏதோ பிரச்சனை போல அதான் அம்மாவை வர சொன்னேன் "
ஷாலினியின் அருகில் சென்ற தேவயானி அவளை அமைதி படுத்தும் நோக்கோடு குமரன் ஏற்கனவே வாங்கி தந்திருந்த தண்ணீரை கொஞ்சமாக கொடுத்து முகத்தை கழுவி விட்டு முந்தானையால் துடைத்து ஆசுவாசப்படுத்தினாள், அந்த இடைவெளியில் அதிவீரன் நந்தினிக்கு அழைத்து விஷயத்தை சொன்னான், அவள் உடனே கிளம்புவதாக கூற தானே அழைக்க வருவதாக சொல்லி அழைப்பை துண்டித்தான்.
அதற்குள் ஷாலினியிடம் லேசான விசாரணையை தொடுக்க, அவள் காதலன் அஜித் ஏதோ ஆபத்தில் இருப்பதாக அவள் வந்த திசையை நோக்கி கை காட்ட வண்டியை உதைத்து அதன் விளக்கை அந்த பாதையில் செலுத்தி பார்க்க அறக்க பறக்க மிரண்ட விழியோடு ஓடி வந்தான் அஜித்.
" டேய் அஜித்து என்ன டா இது காயம் என்ன டா ஆச்சு? "
" நானும் ஷாலினியும் அந்த பூங்கால " சற்றே எச்சில் முழுங்கி அவன் சொல்ல வர அவனை தடை செய்து,
" அதி இவங்க ரெண்டு பேரும் உன் நண்பரகள் தானா? "
" ம்ம் ஆமா ம்மா "
" சரி நீ போய் நந்தினிய கூட்டிட்டு வீட்டுக்கு வா, எந்த விஷயமா இருந்தாலும் நம்ம வீட்ல போய் பேசிக்கலாம், குமரா நீ ஒரு ஆட்டோ கூட்டிட்டு வரியா? "
தேவயானியின் சொல் கேட்டு கணவனும் மகனும் துரிதமாக செயல்பட்டார்கள்.
தேவயானி, ஷாலினி, அஜித் மூவரும் ஆட்டோவில் வீட்டுக்கு செல்ல, குமரன் தனது வாகனத்தில் அவர்களை தொடர அதிவீரன் நந்தினியை அழைத்து வர சென்று விட்டான். இப்படியாக ஒருவர் பின் ஒருவர் வீட்டிற்கு வந்து சேர, அவர்கள் அனைவருக்கும் தேவயானி தேனீர் தயாரித்து கொடுத்தார்.
இப்போது ஓரளவு ஷாலினி நிதானத்திற்கு வந்திருக்க மெதுவாக நந்தினி அவளிடம் பேச்சுக் கொடுத்தாள்,
" ஷாலினி என்னடி ஆச்சு?
என்ன நடந்தது? "
" நானும் அஜித்தும் பக்கத்துல இருக்க பூங்காவுல உட்கார்ந்து பேசிக்கிட்டு இருந்தோம், அப்போ அங்குட்டு வந்த நாலு காலி பசங்க, நாங்க பக்கத்துல உட்கார்ந்து பேசுனத வீடியோவா எடுத்து வச்சுட்டு, அத காட்டி பேசி வம்பு இழுத்தாங்க, அசிங்கமா பேசுனாங்க, அப்போ அஜித் கோபமாகி அவங்க கூட சண்டைக்கு போய்ட்டான், சண்டை அதிகமாக அவங்க அஜித்த தாக்கிட்டு என் துப்பட்டா பிடிச்சு இழுத்து, ச்சே... "
கண்ணீர் விட்டு அழுக நந்தினி அவளை தேற்றி கொண்டிருக்க, அதுவரைக்கும் கேட்டு கொண்டிருந்த தேவயானி அங்கிருந்து எழுந்து தனது அறைக்கு சென்று விட்டார்....
நெஞ்சில் நிறைவாள்......

Author: Vishakini
Article Title: நெஞ்சில் நிறைந்தவள் - 7
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.