மழை - 8
"கண்ணு, கோபப்படாத கண்ணு" என்று பதட்டத்தோடு பரிதவிப்பாக கூறிய பாட்டியை முறைத்துப் பார்த்தவள்.
"என்ன பாட்டி இவங்க என்னென்னவோ பேசிட்டு இருக்காங்க. நீ என்னை அடக்க பார்க்குற.. எனக்கு கடைசி வரைக்கும் கல்யாணமே ஆகாம போனாலும் பரவாயில்ல. இவன மட்டும் நான் கட்டிக்கவே மாட்டேன்" என்று முகத்தில் அத்தனை அருவருப்பை தேக்கியவாறு கூறினாள் செந்நிலா.
அவளின் வார்த்தை அசோக்கிற்கு கோபத்தை தலைக்கேற்ற.
"என்னடி போனா போகுதுன்னு பார்த்தா ரொம்ப தான் பெரிய உத்தமி மாதிரி பேசுற.. என்ன என் கேரக்டர எல்லார் முன்னாடியும் தப்பா காட்டலாம்னு பாக்குறியா?".
"ஆமா, உன் கேரக்டர பத்தி யாருக்கும் தெரியாது பாரு. நான் தான் தப்பா பேசுறதுக்கு.. ஊருக்கே தெரியும் உன் லட்சணம் என்னன்னு".
"ஆமாடி, நான் கேடு கெட்டவன் தான். பொறுக்கி தான். நீ பெரிய உத்தமியாவே இருந்துட்டு போ, என்ன தான் பல பொண்ணுங்களோட நான் பொறுக்கித் தனமா சுத்துனாலும், கல்யாணம்னு வரும்போது உன்ன மாதிரி ஒரு உத்தமி தான் எனக்கு வேணும்".
"அத நீ மட்டும் சொன்னா ஆச்சா, எனக்கு முதல்ல விருப்பம் இருக்கணும். மரியாதையா வெளியில போங்க".
அவளின் முகத்திலோ எள்ளும் கொள்ளும் வெடித்தது.
"அப்படி போடு! சொந்த அத்த மவனுக்கு பொண்ணு கேட்டு வந்திருக்கேன். கொஞ்சம் கூட மட்டு மரியாத இல்லாம, வயசு வித்தியாசம் பாக்காம வீட்ட விட்டு பத்திவிட பாக்குத.. அப்பா அம்மா இருந்து வளத்தியிருந்தா ஒழுங்கா வளர்ந்திருப்ப. உம்பாட்டி உனக்கு என்னத்த சொல்லிக் கொடுத்து வளத்துனாங்களோ, அப்பிடி என்னத்தா உம்ம தகுதிக்கு நாங்க கொறவா போயிட்டோம். நான் என்ன உன் தாத்தா உன் பாட்டிய ரெண்டாம் தாரமா வச்சுக்கிட்ட மாதிரியா எம்மகனுக்கு உன்ன ரெண்டாம் தாரமா கேட்கேன்" என்று வார்த்தையை அமிலமென கரைத்து ஊற்றினார்.
"வாய மூடுங்க! இன்னொரு வார்த்த என் பாட்டிய பத்தி தப்பா பேசுனீங்க, அப்புறம் நான் மனுஷியாவே இருக்க மாட்டேன். மரியாதையா எங்க வீட்டை விட்டு வெளிய போங்க".
விஷயம் விபரீதம் ஆகுவதை உணர்ந்த பாட்டி, "யத்தா லலிதா, தயவு செஞ்சு இங்கிருந்து போயிடுங்கம்மா. எம்பேத்திக்கு நல்ல வாழ்க்கைய அமச்சுக் கொடுக்கணும்னு ஆசைப்படுதேன். தாய் தகப்பன் இல்லாத பிள்ள, தயவு செஞ்சு இங்கிருந்து போயிடுங்க".
"அப்போ நாங்க என்ன உம்மபேத்தி வாழ்க்கைய அழிக்க வந்திருக்கோம்னு குத்தி காட்டுறீயளா.. இந்த நிலைமையில இருக்கும் போதே இவ இம்புட்டு பேச்சு பேசுதா.. இன்னும் இவ எல்லாம் நல்லவிதமா பிறந்திருந்தா கையில காணாது. எப்பிடி இந்த கல்யாணம் நடக்காம போவுதுன்னு நாங்களும் பாக்குதோம். எப்பிடி பார்த்தாலும் உன்ன கட்டிக்கிற மொற என் மகனுக்குதேன் இருக்கு. அவன விட்டா ரெண்டாந்தாரத்தோட பேத்திய எந்த சீமயிலயும் எவனும் சீண்ட கூட மாட்டான். போனா போகுது அண்ணன் மகளாச்சேன்னு வாழ்க்க கொடுக்க வந்தா, எங்களயே இப்பிடி எடுத்தெறிச்சு பேசுதியா.. அடுத்த முகூர்த்தத்துலயே எம்பையன உம்ம கழுத்துல தாலிய கட்ட வச்சு காட்டுதேன் டி" என்று சபதம் போடுவது போல் பேசிவிட்டு, "வாடா அசோக்!" என்று தன் மகனையும் அழைத்துக் கொண்டு வெளியேறினார்.
கோபத்தில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கண்கள் சிவந்து போய் அவர்களையே முறைத்துக் கொண்டு நின்றிருந்த செந்நிலாவை நோக்கி விரைந்த பாட்டி, "கண்ணு, என்ன கண்ணு இப்படியெல்லாம் பேசிபுட்ட?".
"பின்ன, இவங்ககிட்ட வேற எப்படி என்ன பேச சொல்ற.. பாத்தல்ல மனுஷங்களா இவங்கெல்லாம், இந்த பேச்சு பேசுறாங்க. ச்ச.. நான் வேலைக்கு கிளம்புறேன் பாட்டி மணி ஆயிடுச்சு. திரும்ப இவங்க வந்து ஏதாவது பிரச்சனை பண்ணாங்கன்னா உடனே எனக்கு போன் பண்ணு" என்று விட்டு கோபத்தோடு வெளியேறியவளிடம், "கண்ணு சாப்பிடாம போறியே?".
"நான் கேண்டின்ல சாப்பிட்டுக்குறேன்".
ஏதோ புயல் அடித்து ஓய்ந்தது போல் ஆயாசமாக இருந்தது செங்கேணிக்கு. லலிதாவின் பேச்சும், அசோக்கின் பார்வையும் அவருக்குள் சொல்லல்லா பயத்தைக் கிளப்ப, பதட்டத்தோடு தன் நெஞ்சின் மீது கையை வைத்தவர் சற்று நேரம் அப்படியே அமர்ந்து விட்டார்.
இதற்கெல்லாம் ஒரே தீர்வு, செந்நிலாவிற்கு விரைவில் திருமணம் முடித்துக் கொடுத்து அனுப்புவது மட்டும் தான் என்று எண்ணியவர். உடனே, அதற்கான வேலையைப் பார்த்தாக வேண்டும் என்று முடிவு செய்தார்.
"அவளுக்கு எம்புட்டு தைரியமிருந்தா எடுபட்டவ, என்னைய கட்டிக்க முடியாதுன்னு சொல்லி இருப்பா.. திமிரு புடிச்சவ" என்று தன் பற்களை நரநரவென கடித்துக்கொண்டு பேசிய அசோக்கை முறைத்துப் பார்த்தார் லலிதா.
"இதுக்குதேன் அப்பவே சொன்னேன். ஒழுங்கா வால சுருட்டிகிட்டு இருன்னுட்டு, பாக்குற பொண்ணுங்க பின்னாடி எல்லாம் போனல்ல, இப்ப பாரு, அவ உன்னய பத்தி என்ன பேச்சு பேசிட்டான்னு".
"எப்படியும் இவள தான நான் கட்டிக்க போறேன். என்ன விட்டா அவளுக்கும் வேற நாதி கிடையாது. அதான் நான் எப்படி இருந்தாலும் அவ என்ன கட்டி தானே ஆகணும்னு நானும் கொஞ்சம் சந்தோஷமா இருந்துட்டேன். அதுக்காக அவ எப்படி எல்லார் முன்னாடியும் பேசலாம்".
"அவ இம்புட்டு பேச்சு பேசுவானு நானே கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. எப்படியும் நாம போய் கேட்டதும் சரின்னு சொல்லிடுவாங்கன்னு நினைச்சேன். இப்படி முரண்டு பிடிக்கிறாளே.. கல்யாணத்துக்கு ஒத்துப்பாளான்னு வேற தெரியல" என்று சிடுசிடுத்தார்.
"ஓ! முடியாதுன்னு வேற மேடம் சொல்லுவாய்ங்களா.. அவ தலைகீழ நின்னாலும் என்னையதேன் கட்டியாகணும். இந்த ஊர்ல வேற எவன் அவள கட்டுவான்?".
"அது என்னவோ வாஸ்தவம்தேன். அவள நம்மள விட்டா வேற எவனும் கட்ட மாட்டியான். எல்லா இடத்துலயும் மாப்பிள்ளைப் பார்த்து அலைஞ்சிட்டு, கடைசியில அவங்க ரெண்டு பேரும் நம்ம கால்லதேன் வந்து விழுகுங்க பாரு" என்று தன் மகனைப் பார்த்து நயவஞ்சகத்தோடு புன்னகைத்தார்.
சற்று நேரம் எதையோ சிந்தித்த செங்கேணி பாட்டி நேராக சென்று நின்றது என்னவோ தேவராஜன் முன்னாள் தான்.
வீட்டிற்கு அவரைத் தேடிச் சென்றால் நிச்சயம் காமாட்சிக்கு பிடிக்காது என்று எண்ணியவர். அவர்களின் காட்டன் மில்லிற்கே சென்று விட்டார்.
தயங்கி தயங்கி வாசலில் நின்றவரை அப்பொழுதுதான் மில்லிற்கு வந்த பொற்செல்வன் கண்டு கொண்டான்.
"இங்க என்ன பண்றீங்க?".
"தம்பி அப்பாவ பாக்கணும்".
"உள்ள வாங்க" என்று விட்டு அவன் உள்ளே நுழையவும்.
இவரும் அவனின் பின்னோடு தயக்கமாக உள்ளே சென்றார்.
நேராக அவரைத் தங்கள் அலுவலக அறைக்குள் அழைத்துச் சென்றான் பொற்செல்வன்.
தன் மகனோடு நடந்து வரும் செங்கேணியை புருவம் சுருக்கிப் பார்த்த தேவராஜன் பார்வை மீண்டும் தன் மகனை தழுவவும்.
"உங்ககிட்ட தான் ஏதோ பேசணும்னு சொன்னாங்கப்பா" என்றவன், கையில் ஒரு பைலுடன் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்துக் கொண்டான்.
நாற்காலியில் நன்கு சாய்ந்து அமர்ந்திருந்த தேவராஜ் தன் உடலை முன்னே கொண்டு வந்தவாறு கைகள் இரண்டையும் கோர்த்துக்கொண்டு மேஜையின் மீது வைத்தவர்.
எதிரே இருந்த நாற்காலியை கண்களால் காண்பித்து, "உட்காருங்க".
எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்துக் கொண்டார் செங்கேணி.
"என்ன விஷயமா என்னைய பாக்க வந்தீங்க?".
"எம்பேத்திக்கு மாப்பிள்ளை பார்க்கணும்ங்க. எங்களுக்குன்னு நாதி இல்ல" என்றவர் காலையில் வீட்டில் நடந்த விஷயத்தை அப்படியே தேவராஜனிடம் கூறினார்.
அவர் கூறியதைக் கேட்ட தேவராஜன் விழிகள் யோசனையில் இடுங்க.
கையில் பைலை வைத்து புரட்டிக் கொண்டிருந்த பொற்செல்வனின் கவனம் முழுவதும் செங்கேணி கூறிய விஷயத்தில் தான் இருந்தது.
தேவராஜனை நோக்கி கரம் கூப்பிய செங்கேணி, "எனக்குன்னு இருக்கிறது எம்பேத்தி மட்டும்தேன். அவ வாழ்க நல்லபடியா சந்தோஷமா அமையனும். என் கண்ணு முன்னாடியே அவ வாழ்க்கை அழிஞ்சு போறத என்னால பாக்க முடியாதுங்க. எங்க அந்த லலிதா சொன்ன மாதிரி ஏதாவது பிரச்சன பண்ணுவாங்களோனு எனக்கு ரொம்ப பயந்து வருது. எம்பேத்திக்கு நீங்க முன்னிருந்து கண்ணாலத்த நடத்தி கொடுத்தா அப்படி எந்த பிரச்சனையும் வராது. தயவு செஞ்சு எம்மேல இருக்க கோவத்த எல்லாம் மறந்துட்டு தாய் தகப்பன் இல்லாத பொண்ணோட வாழ்க்கைக்காக கொஞ்சம் உதவி பண்ணுங்க".
தேவராஜனிற்கு செங்கேணியின் மேல் ஆரம்பத்தில் இருந்த கோபம் காலப்போக்கில் நன்றாகவே குறைந்திருந்தது. அவரால் இவர்களின் குடும்பத்திற்குள் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லையே. அவர் எந்த ஒரு உரிமை போராட்டமும் நடத்தவில்லை. அதனால் என்னவோ அவரின் மேல் கொஞ்சமே கொஞ்சம் நல்ல அபிப்ராயமும் இருந்தது.
"சரி, இப்போ நாங்க என்ன பண்ணனும்?".
"எம்பேத்திக்கு நல்ல மாப்பிள்ளையா பார்த்து கட்டி கொடுத்துட்டா போதும். நீங்க முன்ன இருந்து இந்த அத நடத்தி கொடுத்தீங்கன்னா அந்த லலிதா குடும்பத்து ஆளுங்க ஆரும் எம்பேத்தியோட விஷயத்துல தலையிட யோசிப்பாங்க. எங்களுக்கு யாரும் இல்லன்னு தான் அவங்க இவ்வளவு தைரியமா பேசுறாய்ங்க. எம்பேத்தி கண்ணாலத்த மட்டும் நீங்க முன்ன இருந்து நடத்திக் கொடுத்தா போதும்ங்க".
அவர் கூறியதைக் கேட்டு சற்று நேரம் சிந்தித்த தேவராஜன், "சரி, மாப்பிள்ளை பாத்தாச்சா?".
"மாப்பிள்ளை இனிமேதான் பார்க்க ஆரம்பிக்கலாம்னு இருந்தோம். மத்தபடி, நகநட்டெல்லாம் கொஞ்சம் இருக்கு. அதுக்கு தகுந்த மாதிரி நீங்களே ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்த்து கொடுத்தீங்கன்னா உங்களுக்கு புண்ணியமா போகும் சாமி. கடைசி காலத்துல எங்க எம்பேத்திய அனாதையா விட்டுட்டு போயிடுவேனோனுதேன் ரொம்ப பயந்து வருது" என்று கூறி முடிக்கும் பொழுதே அவரின் குரல் தழுதழுத்து கண்களில் இருந்து கண்ணீர் கீழிறங்கிவிட்டது.
அவரை இப்படிப் பார்க்கவே தேவராஜனிற்கு ஒரு மாதிரியாகிவிட்டது.
பொற்செல்வன் எதுவும் கூறவில்லை அமைதியாக அமர்ந்திருந்தான்.
"சரி, நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க. உங்க பேத்திக்கு நல்ல மாப்பிள்ளையா பார்த்து இந்த கல்யாணத்தை நானே முன்னாலருந்து நடத்தி வைக்கிறேன்".
தன் சுருங்கிய நரம்போடிய கரம் கொண்டு கண்களை அழுந்த துடைத்துக் கொண்டவர், "ரொம்ப நன்றிங்க. இந்த உதவிய காலத்துக்கும் நான் மறக்க மாட்டேன்" என்றார் நெகிழ்ந்து போய்.
"நீங்க கவலைப்படாம போய்ட்டு வாங்க. உங்க பேத்தி கல்யாணத்தை நல்லபடியா நடத்திக் கொடுக்கிறது என்னோட பொறுப்பு".