மழை - 9
இங்கே வரும்வரை கூட அவருக்கு இவர்கள் உதவுவார்கள் என்று சற்றும் நம்பிக்கை இல்லை. அதிலும், காமாட்சியின் குணம் அறிந்தவர், நிச்சயம் இவர்கள் தனக்கு உதவ மாட்டேன் என்று தான் கூறுவார்கள் என்று தோன்றினாலும், ஏதோ ஒரு நப்பாசையில் இங்கே வந்துவிட்டார்.
ஆனால், தேவராஜ் சரி என்று ஒப்புக்கொண்டதும், அவருக்குள் அப்படி ஒரு மகிழ்ச்சி. தங்களைப் போல் தன் பேத்தியின் வாழ்க்கையும் சீரழிந்து போகாது என்ற நம்பிக்கை ஒளி அவரின் கண்களில் ஒருவித மின்னலை ஏற்படுத்தியது.
நிறைவான மனதோடு அங்கிருந்து புறப்பட்டிருந்தார்.
அவர் புறப்பட்டுச் சென்றதும் யோசனையோடு அமர்ந்திருந்த தேவராஜன் சிந்தனையை கலைத்தது பொற்செல்வனின் குரல், "என்னப்பா என்ன யோசனை?".
"சின்ன வயசா இருக்கும்போது எங்க அப்பாவுக்கு ரெண்டாவது சம்சாரம் இருக்காங்கன்னு தெரிய வந்துச்சு. அப்போ எனக்கும் காமராஜ்க்கும் அந்த அளவுக்கு விவரம் கிடையாது. அம்மா தான் ரொம்ப அழுது ஆர்ப்பாட்டம் செஞ்சிட்டு இருந்தாங்க. அதுக்கு அப்புறம் இவங்க வீட்டுக்கே போக விடாம தடுத்துட்டாங்க. அவரும் அதிகமா போறது கிடையாது. அவங்களுக்குன்னு எந்த ஒரு செலவும் எடுத்து செஞ்சது கிடையாது. அவங்க பொண்ணு கல்யாணத்துக்கு கூட அப்பா பெருசா எதுவும் செஞ்ச போல தெரியல. அம்மாவுக்கு தெரியாம ஏதோ கொஞ்சமா செஞ்சிருக்காரு போல. அதே போல அவங்களுக்குன்னு எந்த ஒரு சொத்தும் பிரிச்சு கொடுக்கல. அவங்க இருக்க வீடு மட்டும் தான் அவங்களுக்குன்னு அப்பா கொடுத்தது. அவங்களும் அப்பாகிட்டருந்து பெருசா எதுவும் எதிர்பார்க்கல. அப்பாவுக்கு ஏற்கனவே கல்யாணமானது தெரியாம தான் இவங்க ரெண்டாவது கல்யாணம் செஞ்சிருக்காங்க. அதனால அவங்களுமே அப்பா மேல வெறுப்போட தான் இருந்திருக்காங்க. அதனாலேயே அப்பாவோட வாழ்க்கையிலிருந்து அவங்க விலகி போயிட்டாங்க. இத்தனை வருஷம் ஆயிடுச்சு" என்று பெருமூச்சை வெளியேற்றியவர்.
"ஆனா, இன்னமும் உன் பாட்டிக்கு இவங்க மேல இருக்க கோபம் தணிஞ்ச பாடில்ல. பார்க்கிற இடமெல்லாம் கரிச்சு கொட்டிக்கிட்டே தான் இருக்காங்க. இவங்களே விலகிப் போனாலும் பாட்டி விடுறதா இல்ல. நமக்கும் இவங்களால எந்த ஒரு தொல்லையும் கிடையாது. இப்போ அவங்க பேத்தி வாழ்க்கைக்குனு வந்து நிற்கும்போது பார்க்கவே பாவமா இருக்கு. எப்படி பார்த்தாலும் இவங்க வாழ்க்கை இப்படி ஆனதுக்கு என் அப்பாவும் ஒரு காரணம் தானேன்னு மனசுக்குள்ள ஒரு உறுத்தல் இருந்துகிட்டே தான் இருக்கு. அந்த உறுத்தலை சரி பண்ண ஒரு சந்தர்ப்பமா நினைச்சு அந்த பொண்ணுக்கு நல்லபடியா கல்யாணத்தை நடத்தி வைக்கணும்னு நினைக்கிறேன். ஆனா, உன் பாட்டிக்கு இந்த விஷயம் தெரிஞ்சா என்ன செய்வாங்களோனு யோசனையா இருக்கு".
தேவராஜ் நீதி, நேர்மை, நியாயம் என்று கண்ணியமாக வாழ்க்கையை நடத்துபவர். அதனாலேயே அனைத்தையும் நேர் பார்வையோடு தான் பார்ப்பார்.
தனக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்று எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் தான் அனைவரையும் மரியாதையோடு நடத்துவார்.
அவரின் இந்த குணத்தினாலேயே காமாட்சிக்கு தேவராஜை விட காமராஜும், உமாவும் தான் பிடித்த மகனாகவும், மகளாகவும் ஆகிப்போயினர்.
ஆம், வீட்டில் செங்கேணியைப் பற்றிய பேச்சு எழும்போது சில முறை தேவராஜ், 'அவர்தான் தங்களின் வாழ்க்கைக்குள் வருவதில்லையே, அவரின் பேச்சை ஏன் எடுக்கிறீர்கள்' என தன் அன்னையிடம் கூறி இருக்கிறார். ஆனால், காமாட்சி அவ்வளவு எளிதில் விடுபவரா என்ன..
செங்கேணிக்கு சார்பாக பேசும் கோபம் அவருக்கு தேவராஜன் மேல் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
அது மட்டுமல்லாமல், தன் ஆசை மகளின் குடும்பத்திற்கு எந்த ஒரு உதவியும் செய்ய மாட்டேன் என்கிறானே என்ற கோபமும் தேவராஜன் மேல் இருக்கிறது.
தன் தம்பி காமராஜிற்கு உதவும் தேவராஜ், தங்கை குடும்பத்தை மட்டும் கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டு விடுகிறார் என்ற கோபம் அவரின் மேல் நிறையவே இருக்கிறது.
அதன் வெளிப்பாடு தேவராஜன் மேல் நாளடைவில் பாசம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிட்டது.
என்னதான் தேவராஜ் உதவ முன் வரவில்லை என்றாலும், தன்னால் முடிந்த மட்டும் சிறுக சிறுக சேமித்து தன் மகளின் குடும்பத்திற்கு காமாட்சி பண உதவி செய்து கொண்டு தான் இருக்கிறார். ஆனால், அதையும் கட்டிக்காக்க உமாவிற்கு தெரியாது.
அவர்களுக்கு என இப்பொழுது இருப்பது அவர்கள் குடியிருக்கும் வீடு மட்டும் தான். மற்றைய சொத்துக்கள் அனைத்துமே அவரின் கணவரின் தீய பழக்கங்களுக்கு இறையாகி விட்டிருந்தது.
சற்று நேரம் அமைதியாக மீண்டும் எதைப் பற்றியோ சிந்தித்த தேவராஜ் தன் குரலை செருமிக்கொண்டு, "செல்வா காமராஜ்க்கு போன் போட்டு வர சொல்லு".
தன் தந்தையின் சொல்படி பொற்செல்வன் காமராஜ்க்கு அழைப்பு விடுத்து உடனே இங்கு வரும்படி கூறிவிட்டான். அதன் விளைவு அடுத்த அரை மணி நேரத்தில் இவர்களின் முன்னே நின்றிருந்தார் காமராஜ்.
"ராஜா அவங்க பேத்திக்கு உடனே நல்ல மாப்பிள்ளையா பார்க்கணும்".
"என்ன சொல்றீங்கண்ணா, யார் பேத்திக்கு?" என்று புரியாமல் கேட்டவரிடம், "அவங்க தான் செங்கேணி".
அவர் கூறியதைக் கேட்டுப் புரியாமல் விழித்த காமராஜ், "அண்ணா நீங்க சொல்றது..".
"உண்மைதான் ராஜா, பெரியவங்க பண்ண தப்புக்கு சின்ன புள்ள எதுக்காக தண்டனைய அனுபவிக்கணும். அந்த அசோக் அவங்க அம்மா கூட வந்து பிரச்சனை பண்றானாம். அந்த பொண்ணு பெரிய மனுஷியான அப்பவே அவ்வளவு பிரச்சனை பண்ணவங்க. இப்போ வயசு பொண்ணும் வயசானவங்களும் தனியா வீட்ல இருக்கும்போது கட்டி கொடுக்க சொல்லி தேவையில்லாம பிரச்சனை பண்றாங்களாம். பாவம், அவங்க பயந்து போய் இங்க வந்து பேசுனாங்க" என்று அவர் கூறிய அனைத்தையும் இவரிடம் கூறினார்.
"அண்ணா நீங்க சொல்றதெல்லாம் சரிதான். ஆனா, அம்மாவுக்கு தெரிஞ்சா.." என்று தயங்கினார்.
"அம்மாவுக்கு தெரிய வேண்டாம் ராஜா. நாம இந்த விஷயத்துல தலையிட்டு இருக்கோம்னு தெரிஞ்சா அந்த அசோக் குடும்பம் எந்த பிரச்சனையும் பண்ண மாட்டாங்கன்னு அவங்க நம்புறாங்க. இது மூலமா அந்த பொண்ணுக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சா சந்தோஷம் தானே".
"சரிங்கண்ணா. நான் வரன் பாக்க ஏற்பாடு பண்றேன்" என்றவாறு அவர் எழவும்.
"அப்புறம் ராஜா மாப்பிள்ளை ரொம்ப நல்ல பையனா இருக்கணும். நல்லா படிச்சு நல்ல உத்தியோகத்தில் இருக்கிற மாதிரி பாரு. அப்புறம் இவங்க குடும்பத்தை பத்தியும் எல்லா விஷயத்தையும் விவரமா சொல்லிடு. நாளை பின்ன எந்த பிரச்சனையும் வந்துடக்கூடாது. நான் என்ன சொல்றேன்னு உனக்கு புரியுதுல".
"ம்ம் புரியுதுண்ணா. எல்லா விஷயத்தையும் நான் விளக்கமா சொல்லிடுறேன்" என்று விட்டு கிளம்பிவிட்டார்.
இவர்கள் இருவரும் தனிமையில் பேசுவதற்காக நாசுக்காக மில்லை பார்வையிட வெளியே சென்றுவிட்டிருந்த பொற்செல்வன் அப்பொழுதுதான் அறைக்குள் நுழைந்தான்.
அவனைக் கண்ட தேவராஜ், "செல்வா வீட்ல யாருக்கும் இத பத்தி தெரிய வேண்டாம்".
அவனும் 'சரி' என்று சம்மதமாக தலையசைத்தான்.
ஒருபுறம் தன் தாய்க்கு இதைப் பற்றி தெரிந்தால் என்ன நடக்கும் என்ற எண்ணம் எழுந்தாலும், தன் தந்தை செய்த தவறை சரி செய்ய தன்னால் முடிந்த சிறிய முயற்சியில் ஈடுபட்டார் தேவராஜ்.
காலமும் நேரமும் கைகூடி வந்துவிட்டால் யாருக்காகவும் கார்த்திடாது என்பார்கள். அது போல் செந்நிலாவின் வாழ்க்கையிலும் புதிய வெளிச்சம் பிறக்குமா..
******
"அதான பார்த்தேன் சோலிய குடுமி சும்மாவா ஆடும். இங்க கூட பிறந்தவ குடும்பத்தோட கஷ்டப்பட்டுக்கிட்டு கெடக்கா. அது அந்த அண்ணங்காரன் கண்ணுல விழல. எவளோ ஒருத்தி பெத்தவளுக்கு மாப்பிள்ளை பாக்குறாங்கலாமா.. மாப்பிள்ளை.. அவளுக்கும் இந்த குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம்னு கேக்கேன். யாரு வீட்டு பணத்த யாருக்கு எறக்கிறது. நெல்லுக்கு பாயாத தண்ணி புல்லுக்கு பாயுதோ" என்று தொடங்கியவர் தான், விஷயத்தை கேள்விப்பட்டதும் கொதித்தெழுந்து விட்டார். அவரிடம் சிக்கி சின்னாபின்னமாகியது என்னவோ வள்ளி தான்.
அவருக்கு உணவைக் கொண்டு வந்து வைத்த வள்ளியை முறைத்துப் பார்த்தவர், "என்ன இது கத்தி கத்தி செத்துட போறேன்னு சோறு போடுதியோ".
"ஐயோ அத்த! ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க".
"எல்லாம் நீ கொடுக்கிற சாவி தானடி அங்கன அவன் ஆடுதான். சொந்த தங்கச்சிக்கு செய்யாதவேன். போறவ வரவளுக்கெல்லாம் வாரி எறக்கிறானே.. இதெல்லாம் உனக்கு தெரியாமலா இருக்கும்" என்று வள்ளியையும் பொரிந்து தள்ள தொடங்கி விட்டார்.
"சத்தியமா எனக்கு எதுவும் தெரியாதுத்த" என்று அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு பாவமாக கூறினார் வள்ளி.
"இந்த பவுசையெல்லாம் என்கிட்ட காட்டாதடி. போயி உம்புருசன் கிட்ட காட்டு. ஊமக்குசும்பு ஊர கெடுக்கும்னு சும்மாவா சொன்னாய்ங்க.. சொந்த நாத்தனாருக்கு செய்யுங்கன்னு ஒரு நாளும் சொல்லாதவ, யாரோ ஒருத்திக்கு எம்பையன செய்ய வைக்கிறியோ.. அதுவும் அவளோட பேத்திக்கு.. என் வாழ்க்கைய பங்கு போட்டவளுடைய பேத்திக்கு வாழ்க்கையில விளக்கேத்தி வக்கீகளோ" என்று தாம் தூம் என எதிரி குதிக்க துவங்கிவிட்டார்.
தன் எதிரே இருந்த சாப்பாட்டு தட்டை ஒரே தள்ளு வேகமாக தள்ளியவர், "இந்தா இதையெல்லாம் கொண்டு போ. யாரு கேட்டா இந்த சோத்த.. என்ன நடந்துச்சுன்னு உண்மை தெரியுற வரைக்கும் எந்தொண்டையில பச்ச தண்ணி கூட இறங்காது அம்புட்டுதேன். எம்புருசன மயக்கினது பத்தாதுன்னு என் பிள்ளைகளையும் மயக்கி வச்சிருக்கா.. சரியான கைகாரி. அப்படி என்னத்த செஞ்சு மயக்குறாளோ, அந்த வித்ததேன் எனக்கு தெரியலையே.. அப்போலருந்து இப்ப வரைக்கும் ஏமாளி இந்த வீட்ல நான் மட்டுந்தேன்" என்று தன் முந்தானையால் மூக்கை துடைத்து துடைத்து அவர் புலம்பலோடு அழுதுக் கொண்டிருந்தார்.
அவர் விசிறி அடித்த தட்டு அப்பொழுது தான் வீட்டிற்குள் அடி எடுத்து வைத்த தேவராஜன் பாதத்தை சென்றடைந்தது.
மேலும், தன் தாயின் புலம்பலும் அவரின் செவியை எட்ட. எப்படியோ செந்நிலாவிற்கு மாப்பிள்ளை பார்க்கவிருக்கும் விஷயம் இவருக்கு தெரிந்து விட்டது போலும் என்ற எண்ணத்தோடு உள்ளே நுழைந்தார் தேவராஜ்.
"வாங்கய்யா.. வாங்க.. என் குடிய கெடுத்தவ வாழ்க்கையில விளக்கேத்தி வச்ச தெய்வம். நான் பெத்த பொண்ணு அங்க ஊதாரி தனமான குடிகாரன கட்டிக்கிட்டு தினமும் அழுது கரையுறா, அது உம்ம கண்ணுக்கு தெரியல. அவளோட பேத்திக்கு மாப்பிள்ளை பாக்குறீயளோ.. நான் இந்த கொடுமைய எங்கன போய் சொல்லுவேன். ஆத்தா மகமாயி இதையெல்லாம் பாக்கத்தேன் என்னை இன்னும் கொண்டு போகாம உசுரோட வச்சிருக்கியா.. அவளுங்க நல்லா இருப்பாளுங்களா.. அவளுக்கு நல்ல வாழ்க்கை அமையுமா..".
புலம்பலோடும், சாபத்தோடும் அவளின் வாழ்க்கை அத்தியாயத்தை மாற்றும் முனைப்பில் காமாட்சி, அவரின் சாபம் பலிக்குமா..