புனர்ஜென்மம் 15
அவன் ஒன்றும் கோபமான குணம் உடையவன் இல்லை; எப்பொழுதும் மலர்ந்த முகத்துடன் இருப்பவன் தான். தன் வசீகரிக்கும் சிரிப்பினால் அனைவரையும் சுண்டி இழுத்துவிடுவான். அதனாலேயே பள்ளி, கல்லூரி என்று எல்லா இடங்களிலும் அவனுக்குத் தோழமைகள் அதிகம்.
ஆனால் இன்று, ஒரு பெண்ணால் தன் இயல்பைத் தொலைத்துவிட்டு நிற்கிறான். சாதாரணமாக வந்து பேசும் சிறு பெண்ணிடம் கூடக் கோபம் கொள்கிறான். பெண் என்றாலே அத்தனை அழுத்தம் அவனுக்கு உருவானது. அவன் தாயும் ஒரு பெண்தான்; அவர்களும் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள் தான். தமக்கையும் பெண்தான்; தான் காதலித்தவனை ஏமாற்றாமல் திருமணம் செய்துகொண்டவள்.
‘ஆனால், ஏன் மற்ற பெண்களின் மீது தனக்குக் கோபம் வருகிறது? தமக்கை சொல்வது போல உண்மையில் அவள் நல்லவளாகக் கூட இருக்கலாம். ஆனால், தன்னிடம் ஏன் வந்து பேசுகிறாள்? அதனால்தானே தேவையில்லாத கோபத்தை அவள்மீது காட்ட வேண்டியிருக்கிறது?’ என்று அவன் மனது வாதம் புரிந்துகொண்டிருந்தது.
‘அப்ப அந்தச் சின்னப் பொண்ணுகிட்ட எதுக்குடா கோபப்பட்ட?’ என்று மூளை கேள்வி கேட்டது.
‘அவள் மாமான்னு சொன்னாளே?’ என்று மனது எடுத்துக் கூற,
“ஏதோ அக்கா சொன்னதை அப்படியே நம்பிப் பேசியிருக்கு. அதுக்காகக் கோபப்படுவியா? சினேகமா சிரிக்கும்போது நீ எதுக்குடா முறைச்சு வைக்கிற? அப்படி என்ன தப்பு பண்ணிடுச்சு அந்தப் பொண்ணு?” என்று மூளை மீண்டும் கேள்வி கேட்டது.
‘உன்னை ஏமாத்தின ஒரு பொண்ணுக்காக நீ உன் இயல்பைத் தொலைச்சிட்டு, இப்படிச் சுட்ட மூஞ்சியா இருக்கப்போறியா? அடுத்தவாட்டி அந்தப் பொண்ணைப் பார்த்தா சினேகமா சிரிச்சு வை’ என்று மனது எடுத்துக்கூறிக்கொண்டிருக்க, தலையை உலுக்கிக்கொண்டவன், பால்கனியில் இருளை வெறித்தபடி நின்றிருந்தான்.
அவன் நின்ற கோலத்தை எதிர் வீட்டு ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்தனர் அந்த இரு பெண்களும்.
“நீ சொல்றதெல்லாம் உண்மையாடி? லவ் ஃபெயிலியரா? அதனாலதான் நம்மள பார்த்தாலே நாய் மாதிரி வல்லு வல்லுன்னு குரைக்கிறாரா?” என்று கேட்டாள் நிரோஷா.
“அப்படித்தான் அவங்க ரெண்டு பேரும் பேசிட்டிருந்தாங்க. ஹான்... அந்தப் பொண்ணு பேரு நிஷான்னு நினைக்கிறேன். ஏன்னா அவங்க அக்கா அந்தப் பேரைத்தான் சொன்னாங்க. நிஷா, நிரோஷான்னு பேசிட்டு இருந்தது என் காதுல விழுந்துச்சு” நடந்ததை ஒன்றுவிடாமல் தன் தமக்கையிடம் கூறியிருந்தாள் இளையவள்.
“பாவம்தான் இல்ல?” என்று உச்சி கொட்டினாள் நிரோஷா.
“ரொம்ப பாவம்க்கா” என்றாள் சிறியவள்.
“ஸோ, சொன்னது பிரச்சினை இல்லை; சொன்ன டைமிங்தான் சரியில்லை போல” என்று நிரோஷா கூற,
“எனக்கென்னமோ உங்க பேரும் அவருக்குப் பிரச்சினைன்னு தோணுது” என்றாள் இளையவள்.
‘அப்படியும் இருக்குமோ?’ என்று சிந்திக்க ஆரம்பித்துவிட்டாள் நிரோஷா.
---
அடுத்த நாளும் கோயிலுக்குச் சென்றார்கள். அவனுக்குக் கோயிலுக்குச் செல்வது சலிப்பாகத்தான் இருந்தது. ஆனால், அவர்கள் வந்திருப்பது திருவிழாவுக்குத்தானே? அதை எப்படிப் புறக்கணிக்க முடியும்? வீட்டிலிருந்தும் என்ன செய்துவிட முடியும் அவனால்? அதனால் தமக்கையின் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அவனும் கோயிலை ஒரு சுற்று சுற்றி வந்தான்.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியாத முகங்கள்தான். கடவுளைத் தரிசித்துவிட்டுப் பிரகாரத்தைச் சுற்றி வந்தனர்; பிறகு ஓர் இடத்தில் அமர்ந்தனர். சிறிது நேரத்தில் எதிர் வீட்டு நிரோஷாவின் குடும்பமும் அவர்கள் அருகில் வந்து அமர்ந்து நட்புடன் பேச ஆரம்பித்துவிட்டது.
அவன் அமைதியாகக் குழந்தையோடு விளையாட ஆரம்பித்துவிட்டான். இந்தச் சொற்ப நாட்களில் அந்த வீட்டுப் பிள்ளைகள் கூட அவனிடம் பேசிப் பழக ஆரம்பித்துவிட்டனர். பிள்ளைகளைப் பிடிக்காதவர்கள் யார் இருப்பார்கள்? அவனும் அதற்கு விதிவிலக்கு இல்லையே! கொஞ்சமேனும் பழையவற்றை மறக்க அவனுக்குத் துணையாய் இருந்ததே அந்தக் குழந்தைகள்தான்; முக்கியமாகத் தானியதா.
அவனின் மலர்ந்த முகம் அந்தக் குழந்தைகளிடம் மட்டும்தான் வெளிப்படும். அதை நிரோஷா ரசிக்க ஆரம்பித்தாள்.
“அக்கா! யாராவது பார்த்திடப் போறாங்க” என்று தங்கை கண்டித்தாள். ஆனால், பதின்ம வயதில் இருக்கும் அவளுக்கு அதெல்லாம் புரியவில்லை; காதல் கண்களை மறைத்துவிட்டது.
“பாருடி, பிள்ளைங்ககிட்ட மட்டும் அவர் எப்படி முகம் மலர்ந்து சிரிக்கிறாரு? இதே போல என்கிட்ட எப்ப சிரிச்சுப் பேசுவாருன்னு நான் காத்துட்டு இருக்கேன்” பேச்சு அனன்யாவிடம் இருந்தாலும், பார்வை அவன் மீதுதான் இருந்தது. ஆனால், அவன் அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை.
“அப்புறம் தம்பி, இந்த ஊரெல்லாம் பிடிச்சிருக்கா?” நிரோஷாவின் தந்தை கோவிந்தராஜன்தான் கேட்டார்.
அவன் அமைதியாக இருக்க, ஆராதனா அவன் கைகளில் கிள்ளினாள். சற்றே துணுக்குற்றவன், “என்ன சார் கேட்டீங்க?” என்று கேட்டான். யாரோ யாரிடமோ பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்துவிட்டான்.
“இந்த ஊரெல்லாம் உங்களுக்குப் பிடிச்சிருக்கான்னு கேட்டேன்?” என்றார்.
“ரொம்ப அழகான ஊரு சார்” அவரைப் பார்த்துக் கூறினான். அவருக்குப் பின்னால் நின்றிருந்த நிரோஷா அவனை ஆர்வமாகப் பார்ப்பது தெரிந்து அவன் பற்களை நறநறத்தான். அவன் முகம் சற்றென்று மாறவும், அவர் அவனை ஆராய்ச்சியாகப் பார்த்தார். மீண்டும் ஆராதனா அவனை இடித்து வைக்க, அவன் தன் உணர்வுக்கு வந்தான்.
“ஊரு ரொம்ப நல்லா இருந்து என்ன சார் பண்றது? எப்படியும் நான் என்னுடைய இடத்துக்குத்தானே போய் ஆகணும்? பறவைகள் எங்கே பறந்தாலும், அது அதோட கூட்டை போய்ச் சென்றடைந்திடும் இல்லையா?” வியாக்கியானம் பேசினான் அர்ஜுன்.
'இது என்ன சம்பந்தமில்லாத பேச்சு?' என்று அவருக்குத் தோன்றினாலும், 'அது உண்மைதானே?' என்றும் நினைத்தார். ஆனால், சம்பந்தப்பட்டவர்களுக்கு அது புரியத்தான் செய்தது; நிரோஷாவின் மனம் வாடியது. ராகேஷ் அவர்கள் இருவருக்கும் இடையே புகுந்து பேச்சைத் திசை திருப்பினான்.
வீட்டை நோக்கி நடந்து செல்லும்போதும் அவன் பின்னாலேயே வந்தாள் நிரோஷா.
‘கோபப்படாதடா... ரிலாக்ஸ் ரிலாக்ஸ்... டென்ஷன் ஆகாத’ என்று தனக்குள்ளாகச் சொன்னபடி நெஞ்சைத் தடவிக்கொண்டே நடந்தான்.
“மாமா, அந்தப் பெரிய அக்கா நமக்குப்பின்னாடியே வராங்க. அவங்க வர்றது உங்களுக்குப் பிடிக்கலதானே?” என்று தானியதா கேட்க, அவளைப் பார்த்துச் சிரித்தவன், “இது ரோடுமா, யார் வேணா வரலாம். மாமா எக்ஸாம் எழுதியிருக்கேன் இல்லையா? அதோட ரிசல்ட்டை நினைச்சு கொஞ்சம் பயம்” என்று திசை மாற்றினான்.
“நீங்கதான் தானி குட்டி மாதிரி நல்லா படிப்பீங்களே மாமா?”
அவள் நன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காக அவன் அளந்துவிட்ட வார்த்தைகள், இப்பொழுது அவனுக்கே திரும்பி வந்தன. உண்மையில் அவன் நன்றாகப் படிக்கக்கூடியவன்தான். ஆனால் கல்லூரி, காதல், நட்பு, ஊர் சுற்றல் என்று கவனம் சற்று மாறுபட்டிருந்தது. இளையவளின் பேச்சில் தன்னை மறந்து புன்னகைத்தான்; அது இன்னும் வசீகரிக்கும் விதமாகத்தான் இருந்தது.
சிறியவர்களிடம் பேசி ஜெயிக்க முடியாது; நாம் பேசும் வார்த்தைகளை நமக்கே திரும்பிக் கொடுப்பார்கள். நம்மைவிட அதிகத் திறன் படைத்தவர்கள்; எல்லாவற்றையும் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள்.
திருவிழா நாட்கள் எல்லாம் இப்படியேதான் சென்றன. வீட்டில் இருந்தால் அவன் தன் அறையிலோ அல்லது மொட்டை மாடியிலோ இருப்பான். அப்பொழுதெல்லாம் அவனைத் தூரத்திலிருந்து மட்டும்தான் ரசிக்க முடிந்தது. ஆனால், திருவிழா என்று வரும்போது அவன் வெளியில் சுற்றிக்கொண்டுதான் இருந்தான். குடும்பத்தோடு நேரில் பார்க்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்தாலும் பேச முடியவில்லை; ஆனால் அருகருகே பார்க்க முடிந்தது. ஏனோ அவளுக்கு அவனைப் பார்த்ததும் பிடித்துவிட்டது; அவன் கதைகளைக் கேட்ட பிறகு இன்னும் இன்னும் பிடித்துவிட்டது. பிடித்தங்கள் வருவதற்கு காரணங்கள் தேவையில்லையே! நிரோஷாவுக்கு அதற்கான காரண காரியங்கள் தெரியவில்லை; பிடித்திருக்கிறது, அவ்வளவுதான்.
ஒரு ஆணுக்குத்தான் பெண்ணின் மீது முதல் காதல் வர வேண்டும் என்று இல்லையே, பெண்ணிற்கும் ஆணின் மீது வரலாம் தானே? அவனின் செய்கைகளே அந்தப் பிடித்தங்களைக் காதலாக மாற்றிவிட்டன, அவளையும் அறியாமல். ஆனால், அவன் இன்னும் முறைத்துக்கொண்டே இருக்கிறான். இப்பொழுது அவன் மனநிலையையும் அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. இன்னொரு காதலையும், அதைத் தொடரும் ஏமாற்றத்தையும் அனுபவிக்க அவன் தயாராக இல்லை; முக்கியமாகப் பெண்களை நம்பத் தயாராக இல்லை.
மூளை வேண்டாம் என்று எச்சரித்தாலும் மனம் கேட்க வேண்டுமல்லவா? அதுதான் அவள் பேச்சைக் கேட்காமல் தாறுமாறாகத் துடித்துக்கொண்டிருந்தது.
நாட்கள் இப்படியே செல்ல, அவர்கள் ஊருக்குச் செல்லப்போகிறார்கள் என்ற செய்தி நிரோஷாவின் காதுக்கு எட்டியது; அதுவும் அனன்யா மூலமாக. அவளுமே படிப்பதற்குச் செல்ல வேண்டும். விடுமுறை முடிந்துவிட்ட போதிலும், இப்போது உடல் உபாதையைக் காரணம் காட்டி விடுப்பை இன்னும் நீட்டித்திருந்தாள்.
அவன் செல்வதற்குள் எப்படியாவது தன் மனதை இன்னொரு முறை திறந்து காட்டிவிட வேண்டும் என்று அவள் தவித்தாள். ஆனால், அதற்கான சந்தர்ப்பத்திற்கு அவன் வழிவகுத்துக் கொடுக்கவே இல்லை. திருவிழா முடிந்த பிறகு அவன் வீட்டை விட்டு வெளியில் வருவதையே நிறுத்திக்கொண்டான். இப்பொழுது அந்த வீட்டுப் பிள்ளைகளும் சேர்ந்து அவனுடன் விளையாட ஆரம்பித்துவிட, எல்லோரையும் வைத்துக்கொண்டு மொட்டை மாடியில் விளையாட அமர்ந்துவிடுவான்.
ஏதேதோ விளையாட்டுகள்... அத்தனை பிள்ளைகளை வைத்துக்கொண்டு விளையாடுவது அவனுக்குமே மனநிம்மதியைக் கொடுத்திருந்தது. பிள்ளைகள் எல்லாம் பாதுகாப்பாகத் தங்கள் வீட்டு மொட்டை மாடியிலேயே விளையாடிக்கொண்டிருக்க, பெரியவர்களும் நிம்மதியாகவே உணர்ந்தார்கள்.
“வேண்டாம் அக்கா, பயங்கரமா திட்டுவாரு” என்றாள் அனன்யா (நிரோஷாவின் தங்கை).
“அதுக்காக அப்படியே இருக்க சொல்றியா? திட்டினாலும் பரவாயில்லை, ஒருவாட்டி முயற்சி பண்ணிப் பார்த்திடணும். இங்கிருந்து போனதுக்கப்புறம் என்னை மறக்கக் கூடாது; அதுக்காகவாவது அவரைச் சந்தித்துப் பேசியே ஆகணும்” என்றாள் நிரோஷா.
“முதல்ல நீங்க அவரை மறக்காமல் இருப்பீங்களா?” என்று கேட்டாள் இளையவள்.
“ஏன் இருக்க மாட்டேன்? கண்டிப்பா இருப்பேன்” என்று வாக்குறுதி போலக் கூறினாள் நிரோஷா.
அவள் படிப்பது பெண்கள் மட்டுமே படிக்கும் கல்லூரி; அங்கு ஆண்களுக்கு இடமே இல்லை. ஆண்கள் இல்லாததனால் அந்த வயதில் ஏற்படும் சலனமும் அவளுக்கு இதுவரை ஏற்படவில்லை. முதல் முறையாக அவன் மீதுதான் ஏற்பட்டது; ஆனால் அவனோ பிடிகொடுக்க மறுக்கிறான்.
அவள் அர்ஜுனை மட்டுமே பார்த்தாள். அவனுடைய குடும்பப் பின்னணி, தன் வீட்டில் ஒத்துக்கொள்வார்களா இல்லையா, அதற்குத் தன்னால் போராட முடியுமா இல்லையா என்று எதையும் அவள் யோசிக்கவில்லை. ஆனால், ஏற்கனவே காதலில் அடிபட்டவனோ எல்லாவற்றையும் ஆராய்ந்தான். அவனுக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை. 'இந்தப் பெண் புரியாமல் எதையோ செய்ய விளைகிறாள்; நாம் ஒதுங்கிச் சென்றால் அவளாகப் புரிந்துகொள்வாள் அல்லது தன்னை மாற்றிக்கொள்வாள்' என்று நினைத்தான். ஆனால், காலம்தான் அவளுக்கு அதை உணர்த்த வேண்டும்; ஏனென்றால் அவளாக உணரும் நிலையில் இல்லை.
தங்கை சொன்னதைக் கேட்காமல், அவன் மொட்டை மாடியில் விளையாடுவதைப் பார்த்து அவனிடம் பேசலாம் என்று நிரோஷா மேலே சென்றாள். கீழே இருப்பவர்களிடம், "பிள்ளைகளுடன் சற்று நேரம் விளையாடிவிட்டு வருகிறோம்" என்று கூறிவிட்டுச் சென்றாள். யாரும் தவறாக நினைக்கவில்லை; ஆனால், ஆராதனாவுக்கு மட்டும் மனது திக் திக் என்று இருந்தது.
'மேலே என்ன நடக்கிறது என்று தெரியவில்லையே' என அடுத்த அரை மணி நேரத்திற்கும் அதையே நினைத்துக்கொண்டிருந்தவளுக்கு, மேலே சென்று பார்க்கும் எண்ணம் வரவில்லை. மேலே சென்றவள், சிறிது நேரத்தில் முகம் வாடி கீழே இறங்கி வந்தாள்; யாரிடமும் சொல்லிக்கொள்ளக் கூட இல்லை. தங்கையின் கையைப் பிடித்துக்கொண்டு தன் வீட்டிற்குச் சென்றுவிட்டாள். அதுவே ஆராதனாவுக்கு மேலே என்ன நடந்திருக்கும் என்பதை உணர்த்தியது.