• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பூவிழி வாசம் - 12

Vishakini

Moderator
Staff member
பாகம் 12.


எதிர் முனையில் அம்மாதான்.....
'அம்மா.....' என்றான்.
'என்னடா ....காலையில இருந்து ஒரு போன்கூட பண்ணல...இப்ப எத்தினை தரம் எடுத்திட்டன்....ஆறாவது தரம்தான் எடுக்கிறாய்.....அம்மாவிலை கோபமோ?' என்றார்.
அம்மாவின் குரல் அவனுக்கு.....மனதில் இனிமையைக் கொடுத்தது.
'இல்லையம்மா..அண்ணாவோட அவரின்ரை சினேகிதன் வீட்டுக்கு விருந்துக்கு வந்தன்....சத்தத்தில விளங்கேல்ல' என்றான்.
'சரி ..சரி... அதை இதைக் குடிச்சிடாதை, சாப்பிட்டியே' என்றவரிடம்
'போம்மா........சும்மா பொழுது போகட்டும் எண்டு வந்திருக்கிறன்.....அதோடை இஞ்சை சாப்பாடு மட்டும்தான்..வேற ஒண்டும் இல்லை...இன்னும் சாப்பிடேல்ல....' என்றான்.
'அண்ணா என்ன செய்யிறான்....' தாய் கேட்க,
'அம்மா..அவர் கன நாளைக்குப் பிறகு பழைய நட்புக்களைச் சந்திச்சிருக்கிறார், ஒரே கொண்டாட்டமா நிக்கிறார்,' என்றான் இவன்.
'சரி கவனம்.....| என்றவரிடம்,
'ஓமம்மா ...சரி....இஞ்ச ஒரே சத்தமா கிடக்கு, வீட்டபோனதும் எடுக்கிறன்,' என்று சொல்லிவிட்டு போனை அழுத்தி நிறுத்தினான்.
அந்த தோட்டத்தின் பாதை வழியே சற்று நடக்கலாம் என நினைத்தபடி, நடந்தவனின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தது.
வெள்ளைநிற சுடிதாரில், அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தவள்,...அவள்...அவள்.....; அவனது கனவில் வந்த அவளேதான்.
இது என்ன விந்தை, கனவில் கண்டவளை நேரில் காண்பது சாத்தியமா, கண்களை நன்றாகத் துடைத்துவிட்டு மறுபடியும் பார்த்தான்,
'ஆம்...அவளேதான்.....அதே வெள்ளைநிற சல்வார்......அவளெப்படி இங்கே,?'
குறுட்டுத்தனமாய் யோசித்தது மனம்.
மீண்டும் மீண்டும் அந்தக் கனவை நினைவில் கொண்டுவரமுயற்சித்தான்......ஆம்...அவளேதான்....சற்றும் வித்தியாசம் இல்லை.
பஞ்சுபோன்ற வெண்மையில் அவள் ஆடை அணிந்திருந்தாள், அவளது புருவங்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்று முட்டிக்கொண்டிருந்தது. புருவமத்தியில் சின்னதாய் ஸ்ரிக்கர் பொட்டு வைத்திருந்தாள். உச்சி எடுக்காது வாரி இழுத்த தலைமுடியை உயரத்தூக்கி வெள்ளை நிற கெயார் பான்டில் அடக்கியிருந்தாள்.
முழுக்கை வைத்த சல்வாரில் அவள் ஒரு தேவதைபோல இருந்தாள்.
கனவின் காட்சியிலிருந்து மீண்டு சற்று தூரத்தில் தெரிந்தவளை உற்றுப்பார்த்தான் வானகன். ஆம்...அதே சாயல் ...சற்றும் மாறுபாடில்லாமல்.
சின்னதாய் இருந்த பூங்கன்றுகளின் பின்னால் அவன் மறைந்துகொண்டான்....
அவர்கள் எதோ கதைத்துவிட்டு பெண்கள் சேர்ந்து கண்கட்டி விளையாட ஆரம்பித்தனர். அவளுக்குத்தான் கண் கட்டப்பட்டது. அவள் அங்கும் இங்கும் கையை ஆட்டி ஆட்டி தேடியபோது, ஒரு குழந்தையின் சாயல்தான் அவளிடம் வெளிப்பட்டது.
"ஏய்...வண்ணமதி...அந்தப்பக்கம் இல்ல.....இங்க.....இங்கடி...."
தோழிகள் அழைத்ததும் அவள் மறுபுறம் திரும்பி நடக்கத்தொடங்கினாள்.
வண்ணமதி...வண்ணமதியா அவள் பெயர்.....
வானகன்.....வண்ணமதி ....சொல்லிப்பார்த்தான் .....உதடுகள் தேன் சிந்தியது.....ஏழேழு ஜென்மத்திற்கும் தனக்கானவள் அவள்தான் என்ற எண்ணம் அவன் மனதில் பதிந்தது.
மனதில் ஒரு அழகான கனவோடு அந்த இடத்தைவிட்டு நகரத்தொடங்கினான் வானகன்.
உணவு வேளை வர, அவரவர் தாங்களே உணவை எடுத்து உண்ண ஆரம்பித்தனர். தானும் ஒரு தட்டை எடுத்துக்கொண்டு, நடந்த வானகன், தோழிகள் ஒன்றாக வந்து, இடிபட்டு இவன் மோதிவிட, அருகில் வந்து மோதிய பெண்ணை நிமிர்ந்து பார்த்தான்.
வண்ணமதிதான்....
புன்னகைத்தான்...
சங்கடத்துடன், புன்னகைத்தபடி, அவனைப் பார்க்கமுயன்ற வண்ணமதியிடம், "பரவாயில்ல, விடுங்க, இதென்ன யாராவது வேணுமெண்டு வந்து விழுவாங்களா, தெரியாமத்தானே, விடுங்கோ..."என்றவன்,
~இன்னும் விளையாட்டு முடியேல்லைப்போல...| என்றான்.
அப்போது, சிரிப்போடு, பூவிழியைப் பார்த்த வண்ணமதியை, செல்லமாய் முறைத்த பூவிழி, இதமாய் ஒரு புன்னகையால் அரவணைத்ததும்
சலுகையாய்....சாய்ந்தபடி....
".பூவிழியம்மா...." என்றாள் சின்னக்குழந்தை போல.
புன்னகையோடு அவளை அணைத்துக்கொண்ட அந்த பூவிழியம்மாவை தானும் ஆவலுடன் பார்த்தான் வானகன்.
அவனைப் பார்த்து இதமான புன்னகை ஒன்றை உதிர்த்தவள், "போய்ச் சாப்பிடுங்கோ..."என்றாள்.

--------------------------------------------------------------------------------------------------------
தூரத்தில் நின்றாலும் பொற்செழியனின் பார்வை தன் மீதே இருப்பதை பூவிழி காணாமல் இல்லை, அவள் செல்லும் இடமெங்கும் அவனது பார்வையும் வந்தவண்ணமே இருந்தது. அவனது வித்தியாசமான பார்வையும் அது தந்த ஏக்கமுமாய் தவித்துக்கொண்டிருந்தாள் அவள். மற்றவர்கள் முன் சிரிப்பதும் கதைப்பதுமாய் இருந்தாலும் உள்ளுக்குள் தான் சுக்குநூறாய் உடைந்துகொண்டிருக்கிறேன் என்பது அவளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.
அவனை ஏறெடுத்துப் பார்க்கவும் முடியாமல், பாராதது போல விலகவும் முடியாமல் அவள் தவியாய் தவித்தாள். 'எல்லாவற்றையும் நின்று பாரம்மா, நான் அறைக்குப் போறன்' என்று அந்த வீட்டின் பெரியவர் சொல்லிவிட்டதால் சட்டென்று அவளால் விட்டுவிட்டு போகவும் முடியவில்லை. அந்த இடத்து துன்பத்தை தாங்கவும் முடியவில்லை.
சோகத்தை விழிகளுக்குள் குத்தகைக்கு எடுத்துவிட்டது போல .....அவனது தோற்றம் அவளுக்கும் வலிக்கவே செய்தது. அவனிருக்கும் இடத்தைவிட்டு முடிந்தவரை தள்ளியே நின்றாள் பூவிழி.
ஓடிவந்து அவளது கைபற்றி, "வாங்கோ...பூவிழியம்மா....சாப்பிடுவம்" என்ற வண்ணமதியை கனிவோடு பார்த்தவள், "இல்லடா...எனக்கு பசி இல்லை, நீ போய் உன்ர தோழிகளோட சாப்பிடு, நான் பிறகு சாப்பிடுறன்" என்றாள்.
ஒருவாறு தலையசைத்துக்கொண்டே, நகர்ந்துவிட்ட வண்ணமதியை அனுப்பிவிட்டு, திரும்பினால் எதிரே, பொற்செழியன்.
"என்ன...இவ்வளவு நேரம் சாப்பிடாமல்....ஏன்.....போய் சாப்பிட்டு வாங்கோ" என்றான்.
"இல்ல.....எனக்கு பசி இல்லை" என்றாள்.
"வலிகளுக்கெல்லாம் பட்டினிதான் தீர்வு எண்டா காலம் பூரா பட்டினிதான் இருக்கவேணும் ரெண்டுபேரும்....." என்றான்.
சட்டென்று நிமிர்ந்து பார்த்தவள், துடித்துப் போனாள்...அவன் விழிகள் இரண்டிலும் நீர்முத்துக்கள் கோர்த்திருந்தது. அவனது வலியை அவளால் உணரமுடிந்தது. ஆனால்.....
பேச்சை வளர்க்க விரும்பாமல், அவ்விடம்விட்டு நகர்ந்துவிட்டாள். அவளுக்கு கோபம் என்பதும் அதை மிஞ்சிய பாசம் தன்மீது உள்ளதென்பதும் பொற்செழியனுக்கு தெரியாமல் இல்லை. அந்த விருந்து நேரம் முழுவதும் ககலப்பாக இருப்பதுபோல நடித்துக்கொண்டிருந்தான் பொற்செழியன்.
அவர்களின் அந்த நிலையையும் கதைத்த வார்த்தைகளையும் அந்த வீட்டின் இன்னொரு ஜீவனும் பார்த்துவிட்டதையோ, கேட்டு விட்டதையோ இவர்கள் இருவரும் கவனிக்கவில்லை.





 
Top Bottom