பாகம்19.
விருந்தினர் அறையில் அமர்ந்திருந்த பொற்செழியன், பூவிழியை சங்கடமாய் பார்த்தான்.....அவள் நிமிரவே இல்லை,
~சுரபி......|
~நான் வந்தது உனக்கு..... உங்களுக்கு சங்கடமா இருக்கா..மன்னிச்சுக்கொள்ளுங்கோ?"
அவன் சொன்ன மன்னிப்பு வலித்தது. ~ஒவ்வொரு மன்னிப்பிற்கு பின்னாலும் ஆழமான வேதனை பொதிந்து கிடக்கிறது| என யாரோ சொன்னதாய் நினைவு.
"இல்லையே....ஏன்?"
"இல்லை...எதுவுமே கதைக்காமல் இருக்கிறாய், அதனால்தான் கேட்டேன்....." பழையபடி ஒருமைக்கு வந்தது பேச்சு.
"நான் ஒண்டு சொல்லட்டுமா,"
"என்ன ...சொல்"
"தயவுசெய்து இனி சுரபி எண்டு கூப்பிடாதேங்கோ....எல்லாரையும் மாதிரி பூவிழி எண்டே கூப்பிடுங்கோ...."
"ம்கூம்....என்னால முடியாது....நீ எனக்கு சுரபிதான்......அதை மட்டும் என்னால மாத்த முடியாது."
"அதுக்கில்லை......"
"வேண்டாம்......இன்னும் ஒரு கிழமைதான் இங்க நிக்கப்போறன்,....அதுவரைக்கும்தான் கூப்பிடுவன், பிறகு .....இல்லைத்தானே....."
அவசரமாய் நிமிர்ந்தாள் பூவிழி, விழிக்குளம் நீரால் நிறைந்தது, 'ஆமாம்....அவன் சொல்வது உண்மைதானே.....இன்னும் சில நாளில் அவன் போகப்போகிறான், அதன் பிறகு ......'
"சுரபி......என்னை மன்னிச்சிடு...."
"வேண்டாம்...எத்தனை தரம்தான் இப்பிடி கேட்பீங்கள்....நான்தான் சொன்னனே.... எனக்கு ஒரு கோவமும் இல்லை எண்டு."
"அது உன்னுடைய பெருந்தன்மை, ஆனா...தவறு செய்த என்னால அதை மறக்க முடியேல்ல...."
"இத்தனை வருசம் மறந்திட்டு தானே வாழ்ந்தீங்கள், இப்ப என்ன....." குற்றம் சாட்டிய அவளது குரலில் அடிபட்டவன் போல துடித்து நிமிர்ந்தான் பொற்செழியன்.
அவனது பார்வையில் தெரிந்த தவிப்பில் தன் மீதே கோபமாய் வந்தது பூவிழிக்கு.
"இல்லை....நான் ...ஏதோ......வாயில .....தடுமாறி....."
"நீ கோபப்படு சுரபி..என்னை கண்டபடி திட்டிவிடு, அப்பிடியாவது உனக்குள்ள இருக்கிற வைராக்கியம் தணியட்டும், பழைய குறும்பு கொஞ்சமாவது வரட்டும்.....உன்னுடைய இந்த அமைதியைப் பாத்தா எனக்கு பயமா கிடக்கு, உன்னுடைய உள்ளம் என்னால வறண்டு போச்செண்டதை என்னால தாங்கமுடியேல்ல, உண்மையைச் சொல்லவேணும் எண்டால், நீ வேற ஒரு வாழ்க்கையில உன்னை பொருத்தி வாழ ஆரம்பிச்சிருப்பாய் எண்டுதான் நான் நினைச்சன், அதனாலதான் உன்னை ஆழமா தேடவும் இல்லை....."
"புரியுது......பரவாயில்லை, நடந்தது நடந்திட்டுது, இனி அதைப்பற்றி கதைக்கிறதால எந்த நன்மையும் இல்லை, கதைக்காமல் விடுவம், நீங்கள் செய்தது தியாகம்"
~சுரபி, எல்லா தியாகங்களுக்குப் பின்னாலயும் ஒரு துரோகம் இருக்கும், அது இதிகாசங்கள் முதல் இன்றைய காலவாழ்க்கை வரைக்கும் நாங்கள் அறிஞ்ச விடயம் தானே"
"நீங்கள் சொன்னது சரிதான்.....போனது போகட்டும்.....நான் கதைக்க நினைச்ச விசயமே வேற....உங்கட மனைவி இப்பிடி உங்கட குடும்பத்தை விட்டு ஒதுங்கி இருக்கிறது நல்லது இல்லை, அப்பாவுக்கு ஒரே யோசனை, அப்பா, இளா, வண்ணமதியோட கொஞ்சம் நெருங்கிப் பழகச் சொல்லுங்கோ......அவையள் வேற ஏதாவது யோசிச்சிடுவினம்......"
'அவையள் யோசிக்கிற விசயம் தான் என்ர வாழ்க்கையில உண்மை சுரபி......' ஓங்கி கத்தவேணும் போல இருந்தது அவனுக்கு, ஆனாலும் மௌனமாக இருந்தான்.....
"ம்..ம் " தலையை மட்டும் ஆட்டியவன், அவளது ஆழந்த பார்வையின் பொருளை உணராமல் இல்லை, அந்தக் கணத்தில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்துவிட்ட அத்தனையையும் அவளிடம் கொட்டித் தீர்த்துவிடவேண்டும் போன்ற ஆவல் உந்திய போதிலும், இப்போது சொல்வதால் அவளை அடைவதற்காக சொல்வதாக எண்ணிவிட்டாள் என்றால், அவளுக்கு தன்னிடம் இருக்கும் கொஞ்சநஞ்ச மதிப்பும் பறந்துவிடும் என நினைத்து பேசாமல் இருந்தான்.
அவனது மனநிலை புரிந்து கொண்ட பூவிழியும் அதன் பின்னர் வேறு விடயங்களுக்கு பேச்சை மாற்றினாள். நாட்டு நிலைவரம் தொடங்கி இலக்கியத்தில் கரைந்து, மென்பந்துப்போட்டி வரை வந்து நின்றது பேச்சு.
அப்போது வெளியே வந்த இசைநிலா, இவர்கள் இருவரையும் கண்டதும், இதமாய் புன்னகைத்து, இளஞ்செழியனை காணவில்லை என்பதை விழிளால் உணர்த்தினாள்.
அவளுக்கு பதில் தேட பூவிழி முனையும் போதே அருகில் வந்து நின்றான் இளஞ்செழியன். நால்வரும் வெளியே வந்து, காரில் ஏற, "இளா இப்பிடியே நல்ல கடையாகப் பாத்துச் சாப்பிட்டுப்போகலாம்" என்றான் பொற்செழியன்.
தான் சொல்ல நினைத்ததை அண்ணன் சொல்லிவிட்டதில் அதீத சந்தோசம் அவனிற்கு. இதைவிட, வேறென்ன வேண்டும், அவளோடு அருகில் அமர்ந்திருந்து சாப்பிட்டுவிட்டால் போதுமே என்றிருந்தது அவனுக்கு.
அவசரமாய் தலையை ஆட்டி மறுத்தாள் இசைநிலா, தன்னை வீட்டிற்கு அனுப்பிவிட்டு போகுமாறு அவள் சைகையில் சொன்னதை புரிந்துகொண்ட பூவிழி, அவளது இந்த மறுப்பை எதிர்பார்த்தே இருந்ததனால், தானும் சைகையில் ஏதேதோ சொல்லி ஒருவாறு சம்மதிக்கவைத்தாள்.
'அப்பாடா ' என்றிருந்தது இளஞ்செழியனுக்கு.
இளஞ்செழியனும் அண்ணனிடம் பேசிக்கொண்டே இசைநிலாவைப் பார்த்தான், வார்த்துவைத்த அவள் முகத்தில் மெல்லிய வலியின் சாயல் ஒன்று தெரிந்தது,
'ஏன் இப்படி இருக்கிறாள், எந்த குறை இவள் மனதை அலைக்கழிக்கிறது,' அவளது அத்தனை துயரத்தையும் ஒட்ட துடைத்துவிட வேண்டும் என்ற வெறி அந்த கணத்தில் தான் அவனுக்குள் உருவானது.....
அதே நேரம் பூவிழியும்; இசைநிலாவிடம் புன்னகையோடு பேசத்தொடங்க, அவளுடைய முகமும் இயல்புக்கு மீண்டது.
பக்கத்தில், 'ஒருமுறையேனும் தன்னைப் பார்ப்பாளா' என இளஞ்செழியன் ஏங்கிக்கொண்டிருக்க இசைநிலாவோ அவனைப்பற்றிய எண்ணமே இல்லாமல் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்,
சாப்பிட்டபடியே வானகனும், அண்ணன் தம்பியுமாய் அலைபேசி இலக்கங்களைப் பரிமாறிக்கொண்டனர், தேன்மொழி வண்ணமதியின் கையில் கிள்ள, அவளோ முறைப்பாய் பார்த்துவிட்டு, ~பேசாதே| என்று கண்ணாலேயே சைகை செய்தாள்.
பொற்செழியன் காசு கொடுக்கச் சென்றதும் கடைக்காரர், 'பில் தந்தாச்சு' என்று கூற, அவசரமாய், 'யார்,?' என்றான்.
தூரத்தில் இசைநிலாவுடன் கைபற்றி நடந்து சென்றுகொண்டிருந்த பூவிழியைக் காண்பித்தார் அவர்.
~என்ன ஒரு அழுத்தம்.....நான் வாங்கிக்கொடுத்து சாப்பிடக் கூடாதாம்....|
மெல்லிய கோபம் தலைதூக்கியது அவனிடம். அந்த உணவகத்தோடு சிறிய அளவில் பூங்காவும் இருந்ததால், சற்று நடந்துவிட்டு வருவதாக கூறி இசைநிலா சென்றுவிட தனியே நின்றவளிடம் வந்தான் பொற்செழியன்.
சட்டென்று நிமிர்ந்தவள், அவன் முகத்திலிருந்து என்ன கண்டாளோ, 'அது.....இசைநிலா மனசுக்குள்ள ஒரு மாதிரி நினைப்பா...அதனாலதான் பில் நானே.....அவளுடைய நிலை உங்களுக்கு புரியும்தானே.....வறுமையை அனுபவிக்கிறது கூட வலியில்லை, மற்றவர்களுக்கு முன்னால அதைகாட்ட வேண்டிய சந்தர்ப்பங்கள்தான் ரொம்ப கொடியது......அதனால தான்.....வேணுமெண்ணடா அந்த காசை நீங்கள் எனக்கு தாங்கோ...' சிரிக்காமல் கை நீட்டினாள்,
குபீர் என்று சிரித்துவிட்டான் பொற்செழியன்.
'யப்பா......மீண்டும் அவள்....உயரத்திற்குச் சென்றுவிட்டாளே......பொற்செழியனின் கோபம் பறந்துவிட்டிருந்தது, எல்லாருக்காகவும் யோசிக்க எப்படித்தான் இவளால் முடிகிறதோ.......'
சிரித்தபடி ஒவ்வொருவராய் வந்து சேர்ந்தனர், தேன்மொழியை ஆட்டோ ஒன்றில் அனுப்பிவிட்டு, வானகனும் பைக்கில் கிளம்பிவிட இவர்கள் புறப்பட்டனர்,
இசைநிலாவிற்கு இது புது அனுபவமாக இருந்தது, இப்படி எல்லாம் அவள் எதையும் பார்த்தோ அனுபவித்தோ அறியாதவள், புதுமையான இந்த அனுபவத்துடன் கண்மூடி கதவோரம் சாய்ந்திருந்தாள்,
திடீரென ஏதோ உறுத்த கண்களைத் திறந்து பார்த்தாள், இளஞ்செழியன் கண்ணாடியை சற்றே அசைத்துவைத்துவிட்டு தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டவளுக்கு தூக்கிவாரிப்போட்டது,
அவசரமாய் அருகிலிருந்த இருவரையும் பார்த்தாள், நல்ல வேளையாக யாரும் கவனிக்கவில்லை, இருக்கையில் நன்றாகச் சாய்ந்தபடி கண்களை மூடியிருந்த பூவிழயோ,இசைநிலா பார்ப்பதைக் கண்டதும் சட்டென்று பாதையில் பார்வையை ஓடவிட்ட இளஞ்செழியனை ஏனோ அந்தக் கணமே அவளுக்குப் பிடிக்கவில்லை. பார்வையை இறுக்கிக் கொண்டாள், முகம் கடினமானது, வெளியில் பார்ப்பது போல திரும்பியே அமர்ந்துகொண்டாள்.
அன்றைய இரவு பசியில்லை எனக்கூறி சாப்பிட மறுத்துவிட்ட இசைநிலாவை வற்புறுத்த விரும்பாமல் பாலும் பேரீச்சம்பழமும் அறையிலேயே கொண்டு சென்று கொடுத்துவிட்டு அப்படியே விட்டுவிட்டாள் பூவிழி, பத்மினியம்மா கேட்டபோது அவள் சாப்பிட்டுவிட்டு வந்ததை கூறி அனுப்பினாள், இசைநிலா சாப்பிடவரவில்லை என்றதும் இளஞ்செழியனுக்கு சாப்பாடு இறங்க மறுத்தது.
சாப்பிடுவதாகச் சொல்லி சாப்பாட்டை அளைந்து கொண்டிருந்தவனின் எண்ணத்தில் இசைநிலாவின் அந்த கடினமான தோற்றமே வந்தநின்று அலைக்கழித்தது.
ஏன்...என்ன நடந்தது? என்னைக் காணும்போது மட்டும் அவளிடம் ஏன் இந்த முகமாறுதல்? ஆரம்பத்திலேயே அவளுக்குப் பிடிக்காதவன் ஆகிவிட்டேனா,
நான் பரிதாபத்தோடு பார்ப்பதாக நினைக்கிறாளோ?
மற்றவர்களிடம் இயல்போடு இருக்கிறாள்..அதிலும் பொற்செழியன் அண்ணாவிடம் கூட...புன்னகையோடு தலை அசைத்தாளே...
~என்ன இளா? சாப்பிடாமல் அளைஞ்சுகொண்டிருக்கிறாய், என்னடா யோசனை?| அண்ணன் கேட்டதும் தான் தன்னுடைய மன ஓட்டத்தை முகத்திலும் காட்டிவிட்ட மடத்தனம் புரிந்தது.
~இல்லை அண்ணா...சும்மாதான்...வேலைக்கு ஆட்களை எடுத்தாச்சு, இனி எல்லாத்தையும் ஒழுங்குபடுத்தி நடத்தவேணும், நாங்கள் நாலுபெரும் வேலையோடைதான் இதையும் செய்யப்போறம்...நீதனின் அப்பாதான்..மேலாளர்...| மென்று விழுங்கி எதைஎதையோ சொல்லிவைத்தான்.
~சரி..சரி..ஒண்டும் யோசிக்காதை, நானும் கொஞ்சம் காசுதாறன்...பெரிய அளவிலேயே தொடங்கு, நிறையப் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கலாம்தானே...| என்றதும்
தொழில் சுவாரசியம் வந்துவிட,
~ஓம் அண்ணா..அதுதான் நானும் நினைக்கிறன்,|
~ஆடைத்தொழிற்சாலை என்பதால் நிறைய பெண்களுக்கு இந்த நிறுவனம் தெம்பு, கொடுக்கப்போகுது இளா, தொழில் என்பது அவர்களுடைய வாழ்க்கைக்கு ஒரு பலமாக இருக்கும் | என்றாள் பூவிழி.
~என்னுடைய நோக்கமும் அதுதான்..| என்றான் எல்லோருக்கும் பொதுவாக.
~இளா அண்ணா, எனக்கும் ஏதாவது வேலை போட்டுத்தாவன் அங்க,| என்றாள் வண்ணமதி.
நீ எங்கட வீட்டு இளவரசி, நீ ஏன் வேலைக்கு வரப்போறாய்? என்று கேட்ட இளஞ்செழியனிடம்,
|இளா, அதுவும் நல்ல விசயம்தான், வண்ணமதிக்கும் பகுதி நேமா ஏதாவது வேலை கொடு, உழைக்கிறது என்றது, அவரவருக்கான தன்னம்பிக்கை, மதியம்மா வேலை செய்யட்டும், வெளிநாடுகளிலை எல்லாம் அப்பிடித்தானே....| என்ற பொற்செழியனை வியப்புடன் பார்த்தாள் பூவிழி.
அப்பவும் சரி, இப்பவும் சரி, பெண்களை மதிப்பதிலும் அவர்களுக்கான கௌரவத்தை அளிப்பதிலும் அவன் ஒரே மாதிரித்தான் இருக்கிறான்,
அவளது வியந்த பார்வையைக் கண்டவன், விழிகளால் வினா தொடுத்தான்.
அவள் கவனிக்காத மாதிரி சாப்பிடத்தொடங்கினாள்.
~அண்ணா, பெரியண்ணா சொன்னதைக் கேட்டாய்தானே, எனக்கும் வேலையை ஒழுங்கு செய், மாலை மூன்று மணியிலிருந்து ஆறு மணி வரைக்கும் வேலை செய்திட்டு வீட்ட வரச்சரியா இருக்கும|; என்ற வண்ணமதிக்கு,
~தங்களுடைய கட்டளை நிறைவேற்றப்பட்டது இளவரசியாரே| என்றான் இளஞ்செழியன் விளையாட்டாக..
அங்கு ஒரு சிரிப்பலை பரவி ஓய்ந்தது.
பூவிழிக்கு அப்போதுதான் தனக்கு இப்படி ஒரு குடும்பம் இல்லையே என்ற ஏக்கம் மனதில் பெரிதாக உருண்டு எழுந்தது.
அவளுடைய மனநிலையைப் புரிந்துகொண்டவன் போல,விழிகளைத் தட்டி விழித்தான் பொற்செழியன். அவளது உதடுகளிலும் புன்னகை.

Author: Vishakini
Article Title: பூவிழி வாசம் - 19
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.