பூவிழி வாசம் - 25

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,634
6,876
113
பாகம் 25
மாலை வேளையில் வந்து சேர்ந்தார் பத்மினியம்மா.
~அம்மா...உங்கட தம்பி வீட்டிலை எல்லாரும் சுகமா இருக்கினமே?| கதையைத் தொடக்கினாள் பூவிழி.
~ஓமடா..எல்லாரும் சுகம், கடைக்குட்டிக்குத்தான் கொஞ்சம் ஏலாது, மருந்துக்கு கொண்டுபோகச்சொல்லி, இசையும் நானும் காசு குடுத்திட்டுத்தான் வந்தம்,| என்றார்.
தலையை ஆட்டிய பூவிழியிடம் தான் நினைத்ததைக் கேட்டுவிட வேண்டும் போல மனம் உந்தியது அவருக்கு.
பரமானந்தத்தாரைத் தவிர அருகில் யாரும் இல்லை, வண்ணமதி நல்ல உறக்கத்தில் இருந்ததால், இதுதான் சமயம் என நினைத்தவர், நல்ல விசயங்களை ஏன் தள்ளிப்போவேண்டும் எனவும் எண்ணினார்.
~அம்மா...பூவிழி...நான் பிள்ளையிட்ட ஒரு விசயம் கேக்கப்போறன்...| என்ற பத்மினியம்மாவை வியப்பாகப் பார்த்த பூவிழி, சற்றுத்தள்ளியிருந்த பரமானந்தத்தாரையும் பார்த்தாள.;
அவரும் இவர்களின் உரையாடலைச் செவிமடுத்துக்கொண்டிருப்பதன் என்பதன் அடையாளமாக, கையிலிருந்த நாளிதழை அருகில் இருந்த சிறு வாங்கிலி;ல் வைத்துவிட்டு, நிமிர்ந்து அமர்ந்தார்.
பத்மினியம்மா பேசத்தொடங்கினார்,
~பூவிழி, பூரணனுக்கு இப்ப முப்பத்திரண்டு வயசாகுது, அவனுக்கு ஒரு வாழ்க்கையை அமைச்சுக் குடுத்தால்தானே என்ர மனம் நிம்மதி அடையும், அந்த விசயமா தம்பியிட்டைக் கதைக்கத்தான் அவசரமாக ஊருக்குப் போனனான்,
இசையை, பூரணனுக்குச் செய்து வைப்பம் எண்டு, தம்பியும் சம்மதம் சொல்லிப்போட்;டான், ஆனால் பூரணன் தான் மறுத்திட்டான்,| என்றுவிட்டு பூவிழியை நிமிர்ந்து பார்த்தார்.
குறுக்கே எதுவும் பேசாமல் கேட்டக்கொண்டிருந்த பூவிழி, காரணத்தை அறியும் ஆவலில் பத்மினியம்மாவையே பார்த்தாள்.
~இசை, சின்னப்பிள்ளையாம், தான் பார்க்க வளர்ந்த பிள்ளை அம்மா அவள், அவளை என்னாலை அப்பிடி எல்லாம் நினைக்கமுடியாது என்று மறுத்திட்டான்..|
பெருமூச்சொன்றை வெளிவிட்டவாறு சொன்னவர், நிமிர்ந்து பரமானந்தத்தாரைப் பார்த்தார்.
அவரது முகத்தில் சிறுபுன்னகை அரும்பியது.
~என்ர பிள்ளை...அப்பிடித்தான் இருப்பான்..| என்கிற துளி கர்வம் அவரது பாவனையில் இருந்தது.
அதை, பூவிழியும் கவனிக்கவே செய்தாள்.
~அம்மா..பூவிழி, உனக்கு...உனக்கு..என்ரை பிள்ளையைக் கலியாணம் செய்யச் சம்மதமே, அவன்ரை நிலைமை உனக்குத் தெரியும்தானே...அவனை நல்லாப் புரிஞ்சுகொண்ட ஒரு பிள்ளைதான் அவனுக்கு மனைவியா வரவேணும், அதனாலைதானம்மா உன்னட்டைக் கேக்கிறன்...என்ரை ஆசையை நிறைவேற்றுவியே அம்மா...| என்றவரை பரிதாபமாகப் பார்த்தாள் பூவிழி.
உடனே, ~அம்மா..பூவிழி, நானே இதை உன்னட்டைக் கேட்கவேணும் எண்டு நினைச்சனான்...அம்மாச்சி...எனக்காக நீ எவ்வளவோ செய்துபோட்டாய், என்ரை பிள்ளைக்கும் ஒரு நல்ல மனைவியா இரம்மா..| என்ற பரமானந்தம் ஐயாவிடம் அவளால் மறுத்து ஏதும் சொல்ல முடியவில்லை.
~அம்மா...அது...| இவள் தொடங்க முன்னரே,
~நீ வேற யாரையாவது விரும்பிறியேம்மா...?| என்று பத்மினியம்மா கேட்க, இவள் தலையை அங்கும் இங்குமாக ஆட்டினாள்.
~பிறகென்னம்மா...என்ரை பிள்ளை மோசமானவன் இல்லை...ஏதோ இந்தக் கெட்ட பழக்கம் வந்திட்டுது, இப்ப முழுக்க முழுக்க மாறிப்போனான்...உனக்கே தெரியும்தானே கண்ணம்மா...என்னடா..நான் சொல்லுறது பிழையே...| என உயிரைத் தேக்கிவைத்திருக்கும் பார்வையோடு கேட்ட பத்மினியம்மாவிடம் அவளால் மறுப்புச் சொல்லமுடியவில்லை.
அதே பார்வையும், தன் மகனுக்கு ஒரு நல்லது நடந்துவிடவேண்டும் என்கிற பரிதவிப்புமாக பார்த்துக்கொண்டிருந்த பரமானந்தத்தாரிடமும் அவளால் மறுக்கமுடியவில்லை.
காலம்..அவளுக்குத் தந்திருக்கிற சோதனையை எண்ணி, நெஞ்சு பதைத்தது பூவிழிக்கு.
அவளுடைய மனதில் பொற்செழியனுக்காக இருந்த இடத்தை வேறு யாருக்கும் கொடுத்துவிட முடியாதே....
அவனுக்கென்று ஒரு வாழ்க்கை அமைந்துவிட்டது என்றாலும் அவளால் அப்படி இன்னொரு வாழ்க்கையை நினைக்வோ ஏற்கவோ முடியாதே..
மனம் அலையில் விழுந்த துரும்பு போல அலைக்கழிந்தது,
~நான் கொஞ்சம் யோசிக்கிறன்..அம்மா...எப்பிடி இருந்தாலும் உங்கட பிள்ளைக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையும்...யோசிக்காதேங்கோ...| என்றுவிட்டு, பரமானந்தத்தாரிடமும் ஒரு தலையசைப்பில் விடைபெற்று தன்னுடைய அறைக்கு வந்து அமர்ந்தாள்.
அவளால் அப்போதும் ஆசுவாசமாக மூச்சுவிடமுடியவில்லை.
தங்கள் மகனின் எதிர்காலத்திற்காக ஏங்கி நிற்கும் அந்த முதியவர்களின் முகங்கள் தான் நினைவில் நின்றது, பத்மினியம்மாவிடம் சொல்லிச் சமாளித்தாலும் பரமானந்தத்தாரிடம் அவளால் மறுக்கவேமுடியாது, அவர், நிச்சயமாக காரணம் கேட்பார்.
என்ன பதில் சொல்வாள், உங்கள் இரண்டாவது மகனை ஏற்கனவே காதலித்துவிட்டேன் என்றா,
அவர் திருமண அடையாளமாக ஒரு கறுப்புக்கயிற்றை ஏற்கனவே கட்டிவிட்டார் என்றா,
அவருக்காக இதயத்தில் ஒதுக்கிய இடத்தை இனி யாருக்கும் கொடுக்கமுடியாது என்றா,
அவர், என் வாழ்க்கையில் இல்லை என்றாலும் நான், இன்னொரு ஆணை ஏற்கிற மனநிலையில் இல்லை என்றா,
எதைச்சொல்லுவாள்,
அப்படிச்சொன்னால் இவர்கள் எல்லோரும் என்ன நினைப்பார்கள், பொற்செழியனைத் தவறாக நினைத்துவிடுவார்களோ,
அல்லது,
தங்களுக்காக அவன், தன் வாழ்க்கையை, தன் ஆசைகளை, தன் இன்பங்களைத் தொலைத்துவிட்டானே என்று மனம் கருகிப்போவார்களா,
இதில் எதுவுமே நடக்கக்கூடாது, இவர்கள் யாரும் துயரப்படக்கூடாது..
எண்ணமிட்டபடி, அந்தச் சாய்வு இருக்கையில் சரிந்து அமர்ந்தாள் பூவிழி.
 

Author: Vishakini
Article Title: பூவிழி வாசம் - 25
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.