பாகம் 7.
மாலையில் பூவிழி வருவாள், என்ற எதிர்பார்ப்போடு தகப்பனாரும் பிள்ளைகள் மூவரும் கூடியிருந்தனர். மறுநாளே வந்துவிடுவதாகச் சொன்ன அவனது மனைவி,; இன்னும் வரவேயில்லை. அப்பாவின் பார்வைகள் கேள்வியாக நோக்கினாலும் ஏதும் சொல்லவும் முடியாது மௌனமாகிவிட்டான் பொற்செழியன்.
திருமணம் என்கிற பெயரில் அவனுக்கு நடந்த கேலிக்கூத்து பற்றி, வீட்டினருக்கு தெரியவே வேண்டாம் என்பதே அவனுடைய நோக்கமாக இருந்தது. அதுவும் அப்பா, உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் இந்த நிலையில் எதையும் அவன் சொல்ல விரும்பவில்லை.
மனைவி என்கிற பெயரில் அவனோடு பயணப்பட்டவளிடம் அவன் கேட்ட ஒரே உதவி, எந்தக்காலத்திலும் அவனுடைய வீட்டினருக்கு இந்த விடயம் தெரியவேகூடாது என்பதுதான்...அவளும் அதனைச் செவ்வனே செய்துகொண்டிருந்தாள்.
எட்டு ஆண்டுகளை எப்படியோ ஓட்டிவிட்டான்....இனிமேல்...
வண்ணமதிதான், அண்ணியைப்பற்றி அடிக்கடி கேட்டுக்கொண்டிருந்தாள், பொற்செழியனும் பொதுப்படையாக பேசுவதோடு, பேச்சை மாற்றியும் விடுவான். பல்கலைக்கழக மாணவியான அவளுக்கு புரியாமலும் இருக்காது, ஆனால் அண்ணனிடம் எதையும் தூண்டித்துருவி கேட்கவும் இல்லை.
மாலையில் மெல்ல இருள் கவிந்த நேரத்தில், பூவிழியின் அலைபேசியில் இருந்து அழைப்பு வந்தது வண்ணமதிக்கு.
~என்ன பூவிழியம்மா?| மகிழ்வுடன் கேட்டாள்.
பல நேரங்களில் வண்ணமதி அப்படித்தான் கதைப்பதுண்டு.
~இல்ல, என்னுடைய தோழி; ஒருத்திக்கு சரியான காய்ச்சல், பாவம் தனியத்தான் இங்க விடுதியில இருக்கிறா. அதனால இரவுக்கு அவளோட தங்கிக்கொள்ளலாம் எண்டு நினைக்கிறன், எழுந்திருக்கவேமுடியாம சிரமப்படுறா, வீசிங் வேற, அதான் அப்பாட்ட சொல்லிடுடா...| என்றதும்
~ம்ம் ...நான் சொல்லுறன், ஆனா இங்க நாங்கள் எல்லாரும் உங்களை ரொம்ப எதிர்பார்த்து காத்திட்டுருக்கிறம், நீங்கள் என்னடான்னா......|
~எல்லாருமா ....?| அவசரமாய் கேட்டாள் பூவிழி.
~ஓமோம்..நாங்கள் எல்லாரும் தான்.....| என்றதும்
~உங்கள் அண்ணாவுமா?| கேட்கத் துடித்த நாவை அடக்கிக்கொண்டாள். அவன் ஏன் அவளை எதிர்பார்க்கப்போகிறான், அவனுக்கு அவள் யார், அவனுடைய வாழ்க்கையில் அவளுக்கென்று ஒரு இடம் இருந்தது, ஆனால் அதுதான் போயிற்றே......
பெருமூச்சோடு ~சரிடாம்மா.... நான் காலையில, இல்லை...இல்லை...நாளைக்கு மாலையே வர்றன், பதிமினியம்மாட்ட போனைக்குடுத்தா அப்பாவின்ர சாப்பாட்டு விபரங்களைச் சொல்லிவிடுவன்| என்றாள்.
வண்ணமதியும் எழுந்து சென்று போனைக் குடுக்க,
~என்னடாம்மா ... பூவிழி, நீ இன்னும் வரேல்லையே?| என்ற பத்மினியம்மாவின் குரல் தெளிவாகவே பொற்செழியனின் செவிகளில் விழுந்தது. எல்லோரும் அன்பாக இருக்கிறார்கள் என்றால் அவளும் எல்லோரிடமும் அன்பு காட்டுபவளாகத்தானே இருக்கவேண்டும், அந்தக் கணத்தில் அவளைப் பார்க்கவேண்டும் என்ற உந்துதல் பொற்செழியனுக்கே அதிகமாக இருந்தது.
மறுநாள், அதிகாலையிலேயே வந்து பரமானந்தத்தாரைப் பார்த்து, சாப்பிடவேண்டிய சாப்பாட்டை குறித்துக் கொடுத்து, எடுக்கவேண்டிய மருந்துகளையும் கொடுத்துவிட்டு உடனடியாகவே சென்றுவிட்டிருந்தாள் பூவிழி.
இதை எல்லோரிடமும் அவர் சொல்ல, பொற்செழியனுக்கோ ஆச்சரியம் தாங்கவில்லை, இன்று எப்படியாவது அவளைப் பார்த்தே ஆகவேண்டும் என எண்ணிக்கொண்டான்.
~அப்பா....அந்தப் பெண்....அவதான்..... பூவிழி.....எந்த ஊர்?| என்றான்.
~அவ படிச்சதெல்லாம், யாழ்ப்பாணத்தில தான்., விடுதியிலதான் தங்கிப் படிச்சதா சொன்னா, சொந்த ஊர்..... செம்மலை என்றுதான் சொன்னா.....| என்றார்.
~செம்மலையா?" அவன் ஆச்சரியமாய் கேட்டான். சட்டென்று ஏதேதோ நினைவுகள் அவனுடைய உள்ளத்தில் ஊர்ந்தது.
ஒரு மின்னல் வெட்டியது அவனுக்குள், செம்மலை என்ற பெயர் அவன் உடம்பின் ஒவ்வொரு அணுக்களிலும் பதிந்து உறைந்துபோன பெயராயிற்றே. அவன் நேசித்தவள் , வாழ்ந்ததாலேயே அந்தப் பெயரை அவன் அதிகம் நேசித்தவன், காலம் அவனுக்குள் எத்தனையோ விடயங்களை தந்தும் மறக்கவும் செய்துவிட்ட பின்னரும் இவன் மனதில் என்றுமே அழியாமல் இருப்பது அந்தக் கிராமமும் அதன் நினைவுகளும் தான்.
இந்தப் பெண் செம்மலையைச் சேர்ந்தவள் என்பதாலேயே அவளைப் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் பொற்செழியனை அதிகமாய் ஆட்டிப்படைத்தது.
மாலை நான்கு மணியளவில் தங்கை வண்ணமதியையும் அழைத்துக்கொண்டு, ~கடைக்குப்போயிட்டு வர்றம் அப்பா| என்றுவிட்டுப் புறப்பட்டுவிட்டான்.
பூவிழி பணி செய்யும் வைத்தியசாலையை நெருங்கவும் மனதில் ஒருவித படபடப்பு இருக்வே செய்தது பொற்செழியனுக்கு. அதைப்பற்றி எதுவும் எண்ணாமல், தங்கையோடு உள்ளே நுழைந்தான். வரவேற்பில்,
~மிஸ். பூவிழி?| என்ற வண்ணமதியிடம், ~ஓ... பூவிழி மேடமா?| என்ற வரவேற்பு பெண், நேரத்தைப் பார்த்துவிட்டு,
~அறையில ஓய்வில இருப்பா, போய்ப் பாக்கிறீங்களா? இப்பிடியே போய் வலது பக்கம் திரும்பினா, மின்தூக்கி இருக்கு, மூன்றாவது மாடியில முதல்லயே இருக்கிற அறை தான்,| என்றதும் நன்றி கூறிவிட்டு அண்ணனும் தங்கையும் நடந்தனர்.
மாடிக்குச் சென்று, அறைக்கதவில் கைவைக்கவும், 'ஏய் ......வண்ணமதி....' என்ற குரல்கேட்டு திரும்பிய வண்ணமதி, கூடப்படித்த தோழி ஒருத்தியைக் கண்டதும், ~உள்ள போங்கோ அண்ணா, இதோ வர்றன்,| என்றாள்.
உள்ளே காத்திருக்கும் பேரதிர்ச்சி புரியாமல், அவனும் கதவைத் தட்டிவிட்டுத் திறந்து உள்ளே நுழைந்துவிட்டான்.
~ஓமோம்.....யாரது...?| என்படி நிமிர்ந்தவள், ஒரு நிமிடம் சிலையாய் நின்றுவிட்டாள். யாரைக்காணக்கூடாதென கண்ணாம்பூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தாளோ அவனே எதிரில் நிற்கவும் அவளால் எதுவும் பேசமுடியவில்லை.
பொற்செழியனுக்கோ, சொல்லவே வேண்டாம்,
எந்த உருவத்தை அவன் இன்று வரை மனதில் ஆராதித்துக் கொண்டிருக்கிறானோ, எந்த உருவம் அவனது உயிரோடு கலந்து உறைந்துபோனதோ, அந்த உருவமே கண்முன்னால் நிற்கவும் அவனால் கனவா, நனவா என்று புரிந்துகொள்ளவே முடியவில்லை.
ஒரே ஒரு முறையேனும் அவளைப் பார்த்துவிட மாட்டோமா என அவன் தவித்த தவிப்பென்ன, ஒருநாள், இரண்டு நாள் அல்ல, மூன்று ஆண்டுகளாக அவனது வீட்டிலேயே அவனது உறவுகளோடேயே வாழ்ந்திருக்கிறாள், அவனைத் தவிர்த்துவிட்டு, தெரிந்தே செய்தாளா, தெரியாமல் செய்தாளா, ........
கண்ணில் நீர் நிறைந்துபோனது பொற்செழியனுக்கு, இதயத்தில் இரும்புக்குண்டொன்று சட்டமாய் அமர்ந்துகொண்டது. மறக்கவும் முடியாமல், நினைக்கவும் முடியாமல் அவனை அவதிப்படவைத்தவள், அவனுடைய எண்ணத்தில் வந்துவந்து சுகராகம் மீட்டும் அவனுடைய காதலி...
~சுரபி.......| என்றான்......அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக...
சட்டென்று மறுபுறம் திரும்பிக் கொண்டவளின் முதுகு குலுங்குவது கண்டு இவனுக்கு இதயம் விண்விண்ணென்று தெறித்தது.
பருவ வயதில் அவளுடைய மனதில் அவன்தானே ஆசையை ஏற்படுத்தினான், அவன்தானே காதலிக்கிறேன் என்று அவளுக்கு முன்னால் நின்றான், பாவம்...ஏன் எதற்கென்று தெரியாமல், எங்கே என்று பரியாமல் எப்படி தவித்திருப்பாள்...
~சுரபி....நான்......என்னை....| அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அது வைத்தியசாலை என்பதையும் யாராவது வந்தால் தப்பாகிவிடும், என்பதையும் அவனது குடும்ப வாழ்க்கையையும் எண்ணிக் கொண்டவள், அவசரமாய் கண்களைத் துடைத்துவிட்டு எதிரே இருந்த கதிரைகளைக் காட்டினாள்.
அவனுக்கு காதோர முடி சற்றே, நரை கண்டிருந்தது, கண்களுக்குள் ஏதோ ஒரு தவிப்பு இருக்க, கன்னத்து தசைகள் ஒட்டிப்போய், முன்னைய செழிப்பற்று இருந்தவனைப் பார்த்தபோது அவளையறியாது மனம் கனத்தது.
"சுரபி......எப்பிடி இருக்கிறாய், பாட்டி...எப்படி? படிப்பெல்லாம் முடிச்சிட்டியா,?" என்றான்.
"ம்ம்......அநாவசிய கேள்விகள், அநாவசிய பதில்கள், எதற்கு? நான் எப்பிடி இருந்தாலும் உங்களுக்கு ஏன்?, தேவையற்ற விசயங்களை விட்டிட்டு தேவையானதைப் பேசலாமே?" என்றாள் மிடுக்கோடு.
"உன் மீதான என் அக்கறை தேவையற்ற விசயமா,?" என்றான் அவன்.
"மாறிப்போன காலத்தில அது தேவையற்ற விசயம் தான்" என்றாள் அவள் சற்று கடினமாகவே.
"என்னில் கோபமா சுரபி?" "எனக்குத் தெரியும், உனக்கு என்னில கோபம் இருக்கும்," என்றபடி
கதிரை ஒன்றில் அமர்ந்துகொண்ட பொற்செழியன், அவளையே உற்றுப் பார்த்தான். இன்னதென்று பொருள் விளங்காத பார்வை ஒன்று அவனிடம் இருந்து வெளிப்பட்டது, குனிந்து பார்த்த பூவிழிக்கு அந்தப் பார்வையின் பொருள் புரிந்துபோயிற்று.
கழுத்தில் கிடந்த கறுத்த கயிற்றை உற்றுப் பார்த்தவன்,
~அப்படி என்றால், நீ...நீங்கள் ...இன்னும் கல்யாணம்.....?| அவன் கேள்விக்கு, என்ன பதில் சொல்வதென அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே,
~பூவிழியம்மா....| என்றபடி, உள்ளே வந்தாள் வண்ணமதி.
~எங்கட அண்ணா...பாத்தீங்களா, செம ஸ்மாட் இல்ல?|என்றாள்.
ஆம்...என்பதாக தலையை மட்டும் ஆட்டினாள் பூவிழி.
~நீங்கள் என்ன, காலையில வீட்டுக்கு வந்திட்டு, அப்பாவை மட்டும் பாத்திட்டு எங்கள் யாரையும் பாக்காமலே வந்திட்டீங்கள், இது நல்லாவே இல்ல,| என்றாள் உதட்டைச் சுழித்தபடி..
~அதெல்லாம் இல்லை, மதியம்மா, காலையில நிறைய வேலை இருந்தது, அதனாலதான், அவசரமா வந்திட்டன்| என்றாள் இவள் புன்னகையோடு.
அவளை ஆழமாய் பார்த்தான் பொற்செழியன், ~ஓ...அவனால்தான் இந்த விளையாட்டை விளையாடினாளா? என்னைப் பார்க்கவே வேண்டாம் என முடிவு செய்துவிட்டாளே,| துயரம் நெஞ்சை நிறைக்க அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். எட்டு வருடங்கள் ஆகியும் அவளிடம் பெரிய வித்தியாசம் ஒன்றும் தெரியவில்லை. அதே மென்மை, அதே கனிவு, அதே சுரபியாய்த்தான் இருந்தாள்.
மௌனமாக இருந்த அண்ணனிடம், ~என்ன அண்ணா நீங்கள், நீங்கள் தானே பூவிழியைப் பாத்திட்டு வருவம் என்று கூட்டிவந்தீங்கள், இப்ப என்னடா என்றால் பேசாமலே இருக்கிறீங்கள், ஏதாவது கதையுங்களேன்,| என்ற தங்கைக்கு பதிலாக தலையை மட்டுமே ஆட்டினான்.
அவளிடம் பேச எத்தனை விடயங்கள் இருக்கிறது அவனுக்கு, ஆனால் அதையெல்லாம் பேசமுடியாத சூழல் இது என தனக்குள் நினைத்தவன்,
~சரி ...சரி......பாத்தாச்சுத்தானே, வா...கடைக்குப் போகலாம்,| என்றுவிட்டு ~அவங்களையும் ..... பூவிழியையும் கூட்டிக்கொண்டு வாம்மா...பக்கத்தில ஏதாவது சாப்பிட்டு வரலாம்| என்றான்.
பூவிழி மறுப்பதற்குள், ~ஓ...வாங்கோ..வாங்கோ... பூவிழியம்மா| என்றாள் வண்ணமதி.
~இல்லை..நான்..வேலை...|
~உங்களுக்கு இப்ப ஓய்வுநேரம் எண்டு வெளியிலை சொன்னவை..வாங்கோ...எனக்காக வாங்கோ..| என்றபடி, கையைப்பிடித்து கெஞ்சத்தொடங்கிய வண்ணமதியின் அந்த அழைப்பைத் தட்டமுடியாது எழுந்துகொண்டாள் பூவிழி.
கடையில் பூவிழிக்கு எதிரில் அமர்ந்துகொண்டான் பொற்செழியன். அவனுடைய பார்வை தன் மீதே படிந்திருக்க, சங்கடமாய் உணர்ந்த பூவிழி, நிமிர்ந்து பார்க்கவேயில்லை.
அந்நேரம் பார்த்து,
~இருங்கோ வாறன்| என்றுவிட்டு வண்ணமதி எழுந்து செல்ல, செய்வதறியாது, தவித்தபடி இருந்தாள் பூவிழி.
~சுரபி எப்பிடி இருக்கிறாய், ஆக....நான் போட்ட கறுத்த மாலையை, திருமண அடையாளமாகவே நினைச்சு வாழ்ந்துகொண்டிருக்கிறீங்கள், அப்பிடித்தானே| என்றான்.
அவள் பதில் சொல்லவில்லை.
~நான்தான் தாலிகட்டினவளை விட்டிட்டு, இன்னொருத்தியைக் கட்டிட்டன் இல்லையா?| என்றான் துயரத்தோடு.
அவனிடம் கோபமாய் ஏதேதோ சொல்லவேண்டும் என மனம் பரபரத்தாலும், அடிமனம் அவனுக்காய் இரங்கியது. அவன் வேதனைப்பட்டுவிடக்கூடாதே என உருகியது,
~அர்த்தமற்ற கேள்விகளும், அர்த்தமற்ற பதில்களும் இப்ப எதுக்கு, நான் எப்பிடி ஆனாலும், அதெல்லாம கேட்டு இனி ஆகப்போறது என்ன, பேசாமல் சாப்பிடுங்கோ, வீட்டில இதைப்பற்றி யாருக்கும் தெரியாது, நான் சொல்லவும் இல்லை, நீங்களும் அப்பிடியே விட்டிடுங்கோ, அதனாலதான் நீங்கள் நிக்கிறவரைக்கும் உங்களைச் சந்திக்காமல் தள்ளியிருப்பம் எண்டு நினைச்சன்,.... முடியேல்ல| என்றாள்.
எங்கோ பார்த்தபடி மௌனமாக இருந்தான் பொற்செழியன்,
'உண்மைதான், உனக்கும் எனக்கும் இப்பிடி ஒரு சந்திப்பு வந்திருக்கவேகூடாது, ஆனா உன்னை மாதிரி ஒருத்தி என் மனைவியா வர நான் குடுத்து வைக்கவேயில்லை, நான் பாவம் பண்ணினவன், அதனாலதான் நீ என்ர கையைவிட்டுப் போய்விட்டாய், நான் சுயநலமா இருந்திட்டன், நீ எனக்காக, என் நினைவுகளோட வாழ்ந்திட்டு, எனர் குடும்பத்தை தாங்கிக்கொண்டு,...... உனக்காக நான் என்ன செய்யப்போறன்' மனதோடு சொல்லிக்கொண்டவன்,
~ஆனா, சுரபி நான் எந்தச் சந்தர்ப்பத்தில அந்தக் கல்யாணத்தைச் செய்தேன் என்று..| அவன் இழுக்க,
மேற்கொண்டு எதையும் கேட்கவிரும்பாதவளாய், "எனக்கு எதையும் தெரிஞ்சுகொள்ள அவசியம் இல்லை, நான் எதைப்பற்றியும் கேட்கவிரும்பவும் இல்லை, அப்பா சில விடயங்கள் சொன்னார், எனக்கு உங்கட நிலை புரிஞ்சுது, விடுங்கோ...| என்றாள்.
வண்ணமதியும் வந்துவிட அதன்பிறகு அவனும் எதுவும் சொல்லவில்லை, மேசைக்கு வந்த உணவைச் சாப்பிட ஆரம்பித்தனர். அவனுக்கானவைகளைப் பார்த்துப் பார்த்து எடுத்துவைத்த பூவிழியை, புன்னகையோடு பார்த்த வண்ணமதி,
~அண்ணா, நான் சொன்னன் தானே, இப்ப பாத்தீங்களா, அப்பாவுக்கு, இளா அண்ணாவுக்கு பாத்துப் பாத்து செய்யிறமாதிரியே எப்பவுமே பார்த்திராத உங்களுக்காகவும் செய்யிறா, பூவிழியம்மாவைப்பற்றி நான் சொன்னது சரிதானே| என்றாள்.
~சரிதான்| என்றான் பொற்செழியன் பூவிழியையே பார்த்தபடி.

Author: Vishakini
Article Title: பூவிழி வாசம் - 7
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.