STN-116
Member
MTN 10
அன்று வீடே அல்லோலக்கல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. மறுநாள் மேகலா இரண்டு மாத காலப் பயிற்சி நெறிக்காக கொழும்புக்குக் கிளம்புகிறாள்.
நேர்முகத் தேர்வு கடிதம் வந்தது போல இந்த முறை காலம் அவளைச் சோதிக்கவில்லை. தேர்வு முடிந்த இரண்டு நாள்களுக்குள் மின்னஞ்சல் மூலம் அவள் தெரிவு செய்யப்பட்ட செய்தியும், பயிற்சிக்கான விரிவான விபரங்களும் வந்து சேர்ந்தன. அந்தச் செய்தி வந்த கணத்திலிருந்து மேகலாவையும் சுபாஷினியையும் கையில் பிடிக்கவே முடியவில்லை.
முதல்நாள் மதியமே இருவரும் குடும்பங்கள் சகிதம் வேனில் புறப்பட்டுச் சென்றனர். சரவணன் வீட்டில் தங்கி மறுநாள் இருவரையும் பயிற்சி நிலையத்தில் விட்டுவிட்டு, சரவணன் சுபாஷினி சம்பந்தத்தையும் பேசி விட்டு, பெற்றவர்கள் வீடு திரும்புவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விடயம் கேள்விப் படத்திலிருந்து மேகலா சுபாவை ஒருவழி பண்ணிவிட்டாள்.
"நீங்க ரெண்டு பேரும் சைலெண்டா அங்க கேம் ஆடியிருக்கிறீங்க என... நான் தான் இளிச்ச வாய் போல இருந்திருக்கன்..."
"அடியேய்... எனக்கு ஒண்டும் தெரியாதடி... அண்டைக்கு அவர் தான் அண்ணா எண்டு கூப்பிடாத... சரண் எண்டு மட்டும் கூப்பிடு எண்டு சொன்னவர்... வேற எதுவுமே அவர் சொல்லேல்ல டி..."
என்று சுபா மூக்கை உறிஞ்சினாள்.
"சரி சரி... இனிமே லவ்வுங்க... அதுதான் பச்சை கொடி காட்டியாச்சே..." என்று மேகலா சீண்ட,
"இப்பதான் இருவத்தொரு வயசு எனக்கு... கலியாணம் எல்லாம் இப்ப இல்லடி..." என்று சுபா நாணத்துடன் முணுமுணுத்தாள்.
"நீ நினைச்சாலும் இப்ப நடக்காது... ஓவரா கனவு காணாத..." என்று சிரித்தாள் மேகலா.
இப்படியே சீண்டலும் சிணுங்கலுமாக நீர்கொழும்பை வந்தடைந்தனர். நீண்ட பயணத்தால் களைத்திருந்த அவர்களுக்கு, சரவணன் குடும்பத்தின் அன்பான வரவேற்பும், அரவணைப்பான சூழலும், பயணக் களைப்பை மறக்கச் செய்தது. அந்தச் சிறிய தருணமே, அங்கிருந்த அனைவருக்கும் ஒரு இனிய நெருக்கத்தை உருவாக்கியது.
மறுநாள் காலையிலேயே பயிற்சி நிலையத்தில் அவர்களை விட்டுவிட்டு ஊர் திரும்பினர்.
அவர்கள் விடைபெற்றுச் சென்ற பின், மேகலாவும் சுபாவும் தங்களது பெட்டிகளுடன் விடுதி அறைக்குள் நுழைந்தனர்.
புதிய சூழல்… புதிய மனிதர்கள்… எங்கு பார்த்தாலும் சிங்கள மொழி… மேகலாவுக்கும் சுபாவுக்கும் உள்ளுக்குள் ஒரு சிறிய கலக்கம் தோன்றியது. சுற்றியிருந்தவர்களின் சிங்களப் பேச்சும், பழகியிராத நடையுடை பாவனையும் அவர்களை ஒரு நொடி தயக்கத்தில் ஆழ்த்தின. தமிழ் தெரிந்த யாராவது இருக்கிறார்களா என்று கண்களால் நோட்டம் விட்டார்கள்.
ஆனால் அந்தத் தயக்கம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. தங்கும் அறையில் இருந்த சில பெண்கள் புன்னகையுடன் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
"ஹாய்… நான் நிமேஷா... ஷோர்ட்டா நிம்மி... கொழும்பிலிருந்து வாற… கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும்… "
என்று ஒரு துறுதுறுப்பான பெண் தன்னை அறிமுகம் செய்துகொண்டாள்.
"நான் பாத்திமா... கண்டியில இருந்து வாறன்…நான் மலாய் கேர்ள்…ஆனாலும் தமிழ் பேசுவன்… "
என இன்னொருத்தி புன்னகைக்க, மேகலாவும் சுபாவும் சிறு நிம்மதியுடன் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
பல்வேறு கலாச்சாரம், பல்வேறு மொழிகள் பேசும் அந்தப் பெண்கள் அனைவரும் ஒரே கனவிற்காக அங்கே கூடியிருந்தது மேகலாவிற்கு ஒரு புதிய அனுபவத்தைத் தந்தது.
மெதுவாக உரையாடல்கள் தொடங்கின. வெவ்வேறு இடங்களில் இருந்து வந்திருந்தாலும், அந்தப் பெண்கள் விரைவில் நட்புக் கரம் நீட்டினர்.
பயிற்சியின் முதல் நாள் தொடக்க விழாவிற்கான அறிவிப்பு வந்தது. அனைவரும் நேர்த்தியான உடையில் மண்டபத்தை நோக்கிச் சென்றனர்.
பயிற்சி மையத்தின் பிரம்மாண்டமான மண்டபத்தில் ஆண்களும் பெண்களுமாக சுமார் ஐம்பது பயிற்சிப் பணியாளர்கள் அமர்ந்திருந்தனர். மேடையில் விமான சேவையின் உயர் அதிகாரிகள் வரிசையாக அமர்ந்திருந்தனர்.
நிகழ்ச்சி தொடங்கியது. ஒவ்வொரு அதிகாரியாக வந்து விமானத் துறையின் ஒழுக்கம், பாதுகாப்பு மற்றும் பணிப் பொறுப்புகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்.
“அடுத்ததாக உங்கள் பயிற்சியின் மிக முக்கியமான பகுதியான பாதுகாப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகள் பற்றி விளக்க, இலங்கை வான்படையின் 'பிளையிங் ஒபிஸர்' ஒருவரை அழைத்துள்ளோம். ஏனெனில், இந்தப் பயிற்சியின் ஒரு பகுதி வான்படைத் தளத்தில்தான் நடைபெறப் போகிறது. அவர் அதனை வழிநடத்துவார்."
என்று அறிவிப்பாளர் கூறினார்.
மேகலாவுக்கு அந்த ‘வான்படை’ என்ற வார்த்தையே ஒருவித ஒவ்வாமையை ஏற்படுத்தியது.
அப்போது மேடையின் பக்கவாட்டிலிருந்து, வான்படைச் சீருடையில் கம்பீரமாக நடந்து வந்தது வேறு யாருமல்ல... சாட்சாத் தரிந்து சேனநாயக்கவே தான்.
மேடையில் இருந்த அதிகாரிகளுக்கு ஒரு சிறிய தலையசைப்பைக் கொடுத்துவிட்டு, மைக் முன்னால் வந்து நின்றான்.
அவன் வரிசையாக அமர்ந்திருந்த பெண்களைப் பார்த்தபடி விழிகளை நகர்த்தினான். மூன்றாவது வரிசையில் அமர்ந்திருந்த மேகலாவின் மீது அவன் பார்வை நிலைத்தது. மேகலாவின் இதயம் ஒரு நொடி தடுக்கியது.
அந்த நொடி…
ஒரு மென்மையான புன்னகை அவன் இதழோரத்தில் மின்னியது.
"குட் மோர்னிங் லேடீஸ் அன்ட் ஜெண்ட்ல்மென்... ஐ ஏம் தரிந்து சேனநாயக்க... பிளையிங் ஒபிஸர் ஒப் எயார் டிபென்ஸ்..."
அவனது கணீரென்ற குரல் அரங்கம் முழுவதும் எதிரொலித்தது. மேகலாவுக்கு எரிச்சல் உச்சிக்கு ஏறியது.
'இவன் இஞ்சயும் வந்துட்டானா...? ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்சில் பயிற்சி குடுக்க வான்படை அதிகாரிதான் வர வேணுமா..?' என்று அவள் மனதிற்குள் கறுவினாள்.
சுபா மேகலாவையும் தரிந்துவையும் மாறி மாறி கேலியாகப் பார்த்தாள்.
தரிந்து தொடர்ந்து பேசினான்.
“விமானம் என்பது ஒரு சொகுசு வாகனம் மட்டுமல்ல… அது ஒரு ஆபத்தான இயந்திரம். வானத்தில் உங்கள் புன்னகை முக்கியம்… ஆனால், அதைவிட உங்கள் சமயோசித புத்தியும் பாதுகாப்பும் முக்கியம். என்னுடைய வகுப்புகளில் நீங்கள் எயார்ஹொஸ்டஸ்சாக இருக்க முடியாது... ஒரு வீராங்கனையாக இருக்க வேண்டும். அங்கே இரக்கம் கிடையாது... ஒழுக்கம் மட்டுமே இருக்கும்!"
அவனது பேச்சில் இருந்த அதிகாரம் பல பெண்களை வியப்பில் ஆழ்த்தி ஈர்த்தாலும், மேகலாவிற்கு அது வெறும் திமிராகவே தெரிந்தது.
நிகழ்வு முடிந்து அனைவரும் வெளியே வந்தபோது, நடைபாதையில் சில அதிகாரிகளுடன் பேசிக் கொண்டிருந்த தரிந்து, இவர்களைக் கண்டதும் விடைபெற்று நகர்ந்தான். மேகலாவும் சுபாவும் அமைதியாக அவனைக் கடந்து செல்ல முயன்றனர்.
"மிஸ் மேகலா அரவிந்தன்..." தரிந்துவின் குரல் அவளை நிறுத்தியது.
மேகலா நடையை நிறுத்தி, "சொல்லுங்கோ சேர்..."
என்று முகத்தில் ஒட்டவைத்த ஒரு சம்பிரதாயமான மரியாதையுடன் கேட்டாள்.
அவனது பார்வையில் ஒரு மறைமுகக் குறும்பு மின்னியது.
“முதல் நாளே இவ்வளவு யோசனையில இருக்குறீங்க போல… புதிய இடம், புதிய முகங்கள்… இல்லையெண்டா… வேற ஏதாவது புதிய அறிமுகமா...?” என்று மெதுவாகக் கேட்டான்.
“புதிய இடம் தானே சேர்… அதனால தான் கொஞ்சம் யோசனை…” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் பதில் கொடுத்தாள்.
அவனுடைய உயரமோ, இல்லை அவள் இருக்கும் இடமோ அவளை எதுவும் ஏடாகூடமாக பேசவிடவில்லை.
“எஹமத…??? (அப்படியா) நல்லம்… புதிய இடத்தில் புதிய விஷயங்களும் வந்து சேரும்… புதிய நட்புக்களை ஏற்பதில் தப்பில்லையே..."என்று இருபொருள் படக் கூறினான்.
அவனது முகநூல் வேண்டுகோளைப் பற்றிச் சொல்கிறான் என்று அவளுக்குப் புரிந்தது.
சுபாஷினி அருகில் நின்று, கண்களையும் வாயையும் விரித்து, 'என்னடா நடக்குது இங்கே... நான் ஒருத்தி இங்கே இருக்கன் டா...' என்று வடிவேலு பாணியில் பார்த்துக் கொண்டிருக்க, மேகலா ஒரு நொடி அவனை நேராகப் பார்த்தாள்.
"நிச்சயமா... ஏற்கனவே நட்புக்கரம் நீட்டிட்டன்.... ஐ மீன்... இஞ்ச.. என் சக பெட்டைகளிட்ட... அதோட, எல்லா அழைப்புகளுக்கும் பதில் சொல்லவேணும் எண்டுற அவசியமும் தேவையும் எனக்கு இல்லையே... சிலதை கேன்ஸல் பண்ணவும் வேணும்..." என்று அவன் பாணியிலேயே கூறிவிட்டு நகர முயல, குறுகிய நடைபாதை என்பதால் அவனைத் தாண்டி செல்லமுடியவில்லை.
"எக்ஸ்க்யூஸ் மீ சேர்... இப்படி இடையில நந்தி மாதிரி மறிச்சுக் கொண்டு நிக்காம, எனக்கு கொஞ்சம் வழி விட்டீங்க எண்டால் நான் என்ர பாதையில போவன்…உங்கட பாதை அங்க இருக்கு… ரெண்டும் எப்பவும் ஒண்டாகாது…" என்று கூறினாள் அவன் போக வழி விடவில்லை என்ற கோபத்தில்.
“பாதை வேறா இருந்தா என்ன… யூ டேர்ன் எண்ட ஒண்டு அப்ப எதுக்கு இருக்கு…” என்று இடக்காகக் கேட்டான்.
அதற்குப் பதிலளிக்காமல் ஒரு தீப்பார்வை பார்த்துவிட்டு, அவனைக் கடந்து விறுவிறுவென நடந்தாள்.
கண்களில் சிரிப்பு மின்ன தரிந்துவின் பார்வை, அவள் மறையும் வரை அவளைத் தொடர்ந்து சென்றது.
"அடி மேகி என்னடி இது... விடாது கருப்பா இவன்... யூடியூபில வர்ற அஞ்சு வினாடி விளம்பரம் மாதிரி... எங்களையே சுத்தி வந்துட்டு இருக்கிறான்... பேஸ்புக்கில் உன்னோட பிரென்ட் ஆகாம விட மாட்டான் போல..." என்று சுபா சீண்டினாள்.
"ஆகிட்டு தான் மறுவேல எனக்கு... ரெண்டு மாசம் இவன்ர மூஞ்சை பார்க்கோணும் எண்டு நினைச்சாலே பித்தம் ஏறுது... அவன் பார்வையே சரியில்ல... ஆளும் மூஞ்சும்..." என்று மேகலா கோபமாகச் சொன்னாலும், அவளறியாமலே அவளது ஆழ்மனது அதை ரசித்தது. ஒவ்வொரு முறை அவளது பெயரை அவன் குரலில் கேட்கும் போதும் அவளது இதயம் தாளம் தப்பியது.
"ரெண்டு மாசமும் அவனா ட்ரெயினிங் தரப் போறவன்... ஒரு செஷன் மட்டும் தானே அவன்ர... அவனை இன்னொருக்கா பார்த்தால் இருக்கு எண்டு பெருசா டயலோக் எல்லாம் விட்டியே டி நீ... ஒண்டையும் காணோம்..." என்று சிரித்தாள் சுபா.
அவனை ஒன்றும் செய்யமுடியவில்லையே என்ற கடுப்பில் நறநறத்தாள் மேகலா.
"ஆனாலும் அவனைப் பார்த்தா லேசில விடுறவன் போல தெரியேல்ல... அப்ப நீ சிங்கள மருமகளா..." என்று கேலியரும்பக் கேட்டாள் சுபா.
"வாயை மூடடி... எரிச்சலா இருக்கு... இருக்கிற கோவத்துக்கு அவன் மேல இருக்கிற காண்டை எல்லாம் உன்மேல காட்டிடுவன்... சிங்கள மருமகளாம்... எண்டைக்குமே கோடரிக் காம்பு ஆக மாட்டனான்..." என்று மேகலா முகம் சிவக்கக் கூறினாள்.
பேசியபடியே அவர்கள் உணவறையை வந்தடைந்தனர். பகலுணவிற்குப் பிறகு அடுத்த பயிற்சி தொடங்கவிருந்தது.
அங்கே ஏற்கனவே நிம்மி, பாத்திமா, காஞ்சனா உள்ளிட்ட சிலர் அமர்ந்திருந்தனர். மேகலாவும் சுபாவும் அருகில் அமர்ந்தவுடன், நிம்மி குறும்பாகச் சிரித்தாள்.
“என்ன… இனோக்ரேஷன் முடிஞ்சதும் எயார் ஒபிஸரோட தனியா பிரீபிங்கா... ?” என்று கண் சிமிட்டினாள்.
“ஓ… நாங்க இங்க லைன்ல நிண்டு சாப்பாடு எடுத்துட்டு இருந்தம்… நீங்க ரெண்டு பேரும் வி ஐ பி டாக்…” என்று பாத்திமாவும் சேர்ந்துக் கொண்டாள்.
“என்ன கதைச்சார்...? ஸ்பெஷல் இன்ஸ்ட்ரக்ஷனா...?” என்று காஞ்சனா லேசான பொறாமையுடன் கேட்டாள்.
ஆளாளுக்கு நக்கலடிக்க, மேகலா சற்றுக் கடுப்புடன்,
“ஒண்டும் இல்ல… ஜஸ்ட் ஒபிஷியல் விஷயம்…” என்று சுருக்கமாகக் கூறினாள்.
"ஓபிஷியலா...? அது என்ன உங்க ரெண்டுபேருக்கு மட்டும்... அதுவும் இவ்வளவு நேரம்..?” என்று நிம்மி மீண்டும் சீண்டினாள்.
சுபா சிரிப்பை அடக்கிக் கொண்டு,
“ஒண்டும் இல்ல தங்கங்களா... நாங்க தூரம் இருந்து வந்ததால... எல்லாம் ஓகேயா எண்டு கேட்டவர்..." என்று சமாளித்தாள்.
அப்பொழுதும்,
"ஏன்... நானும் தான் அம்பாந்தோட்டையிலிருந்து வாறன்.. அதுவும் தூரம் தான்... என்னட்ட ஒண்டும் கேக்கலையே... நீர் யாழ்ப்பாணம் இருந்து வாறீர் எண்டு அவருக்கு எப்படி தெரிஞ்சது..." என்று காஞ்சனா இடையிட்டாள்.
மேகலா இது எதிலும் தலையிடாது அமைதியாக சாப்பாட்டில் கவனம் செலுத்தினாள்.
"அதை அவரிட்ட தான் கேக்கோணும் காஞ்சு... அடுத்த தடவை அவரைப் பார்க்கேக்க சொல்லிடுறன்... இவவையும் ஒருக்கா கேளுங்க சேர் எண்டு..." என்று சுபா கூறினாள்.
"அடுத்த தடவை என்ன... இப்பவே கேக்கலாம்... ஆயுசு நூறு அவருக்கு... அக்கட சூடு..."
என்று பாத்திமா கைகாட்டினாள்.
அங்கே, உணவறையின் மறுபுறம் பிரத்தியேகமாக போடப்பட்டிருந்த இருக்கையில், உயரதிகாரிகளுடன் தரிந்து அமர்ந்திருந்தான். அவர்களுடன் உரையாடலில் ஈடுபட்டிருந்தாலும், அவன் பார்வை அவ்வப்போது மேகலா அமர்ந்திருந்த மேசையை நோக்கித் திரும்பியது.
அதை கவனித்திருந்த அவன் நண்பன் இசுரு மெதுவாகச் சீண்டினான்.
“மச்சான்… வடக்கு புயல் செலக்ட் ஆகிட்டா போலவே... அதுக்கு தான் வொலண்டியரா இந்த ட்ரெயினிங் எடுத்தியா..?”
"நான் இருக்கட்டும்... நீ எதுக்கு எனக்கு எசிஸ்டன்ட்டா போறன் எண்டு எனக்கு பின்னுக்கு வந்த...???"
தரிந்து மெதுவாக் கண்ணடித்தான்.
“ஹாங்... நீ மட்டும் சைட் அடிச்சா காணுமா... நானும் கொஞ்சம் கலர் கலரா குருவிகளை பார்க்க வேணாமா... எயார் போர்ஸ்ல இருக்கிற கெல்லோ (பெண்கள்) எல்லாம் பார்த்து பார்த்து சலிச்சிட்டு... இதெல்லாம் பிரெஷ் பீஸ்..." என்று நண்பனும் கண்ணடிக்க,
"டேய்... இது அந்தப் பெட்டைகள் காதுல கேட்டுது... உன்னை பொளந்துடுவாங்க... குருவியாம்... பிரெஷ் பீஸ்சாம்... மரியாதையா கதைச்சு பழகடா... இதையே ஒருத்தன் உண்ட தங்கச்சிக்கு சொன்னா கேட்டுட்டு இருப்பியா..." என்று அவன் தலையில் இலேசாகக் கொட்டினான் தரிந்து.
"அனே... காந்தாவன்கே ரெகவலா... மட சமாவென்ன..." (அட பெண்களின் காவலனே... என்னை மன்னியுங்கள்)
என்று கைகூப்பினான்.
"ஏத்... (ஆனால்) அவள் உன்னப் பார்க்கவே இல்லயேடா…” என்று இசுரு மீண்டும் சீண்ட,
“பார்க்காம இருந்தா கவனிக்கல எண்டு அர்த்தமா என்ன…” என்று அமைதியாகப் பதிலளித்தான் தரிந்து.
இவர்கள் பேசுவது கேட்கவில்லையெனினும், அடித்த கொட்டத்தை பெண்கள் கூட்டம் மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.
"அனே... தரிந்து கெப் இல்லாம இன்னும் ஸ்மார்ட்டா இருக்கிறார்... எயாவ பலன்ன எஸ் தெக்க மதி... (அவரைப் பார்க்க இரண்டு கண்கள் போதாது) இன்னும் ரெண்டு மாசத்துக்கு இவர் தான் என் சைட்... யாரும் பங்குக்கு வரக்கூடாது..." என்று காஞ்சனா மையல் பார்வையுடன் தரிந்துவை நோக்கினாள்.
அந்த நேரம் மேகலா தன் கழுத்தில் இருந்த மாலையை சரிசெய்வது போல பாசாங்கு செய்து, மெதுவாக அவனை ஓரக்கண்ணால் பார்த்தாள்.
அதுவரையில் தொப்பியுடன் மட்டுமே பார்த்த அவனது தோற்றம், கருத்த அடர்ந்த அலையலையான கேசத்தில் இன்னும் கவர்ச்சியாக இருந்தது. அவனது மாநிறத்திற்கு அது கூடுதல் சோபையைக் கொடுத்தது என்றால் மிகையில்லை. அதனை அவன் கோதும் விதம், எத்தகைய கன்னியருக்கும் அவன் சிகையில் ஊஞ்சல் கட்டி ஆடத் தோன்றும்.
அவளது பார்வை தன்னையே நோக்கி இருப்பதை கண்டுவிட்ட, தரிந்து பட்டென்று கண்ணடித்தான். அதில் திடுக்கிட்ட மேகலாவோ, இத்தனை தூரம் மெய்மறந்து அவனைப் பார்வையிட்டதை எண்ணி வெட்கி, அவனை முறைத்துப் பார்த்துவிட்டு மீண்டும் தலையைத் தாழ்த்திக் கொண்டாள்.
இதைக் கவனித்த பெண்கள் கூட்டம் 'ஓஹோ...' என்று கூச்சலிட்டனர்.
இசுரு ஒருபடி மேலே போய், மேசையில் தாளமிட்டு சத்தமாக பாடவே ஆரம்பித்து விட்டான்.
எப்படி சுகம் நல்ல புள்ள...
அய்யா சொல்ல வேள இல்ல…
(எப்படி இருக்கிறாய் நல்ல பிள்ளை... சேருக்கு கதைக்க நேரமில்லை)
மே கெல்ல நேனெ மெல்ல...
ஹொலவய் பெலிகடு மல்ல...
(இந்தப் பெண் மென்மையாக கழுத்திலுள்ள சங்கு மாலையை ஆட்டுகிறாள்....)
மட தியன்னெப்பா பொல்ல...
காதல் சொல்லுங்க...
(என்னை ஏமாற்றாதீர்கள்... காதலைச் சொல்லுங்கள்)
மட கொஞ்சங் கொஞ்சங் தமில... தங்கே இங்கே வாருங்க..."
(எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும்... தங்கை இங்கே வாருங்கள்)
அவன் பாடி முடிய, சாப்பாட்டறையில் எஞ்சியிருந்த அனைவரும் ஏன் எதுக்கென்று தெரியாமலே அவனது பாட்டிற்காக கரகோஷமிட்டனர்.
மேகலாவுக்கு தலையை எங்காவது கொண்டு போய் புதைப்போமா என்றிருந்தது. அவளை இடைவெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த தரிந்துவோ, பற்களால் தன் கீழ் உதடுகளை கடித்து சிரிப்பை அடக்கினான்.
"எனக்கென்னவோ எயார் டிபென்ஸ் உதுரு பெத்த (வடக்கு பக்கம்) நோக்கி பறக்கிற போல இருக்கே..." என்று நிம்மி கண்ணடித்து சொன்னாள்.
“நானும் அதைத்தான் நினைக்கிறன்…”
என்று பாத்திமாவும் தன் பங்குக்கு கண்ணடிக்க, இருவரும் கையடித்தனர்.
காஞ்சனா அவர்களின் இந்த உரையாடலை ரசிக்கவில்லை. ஒருவித வன்மத்துடன் மேகலாவைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
இன்னும் கருவே தரிக்காத மேகலாவின் காதலை, பிரசவத்தில் உயிரோடு சமாதியாக்க, அன்றே காஞ்சனாவால் அடிக்கல் நாட்டப்பட்டது.
நட்பு என்ற வேடத்தில் வரும் நஞ்சை நங்கை இன்னும் உணரவில்லை...