STN-116
Member
MTN 9
முன்மாலை நேரம். கட்டுநாயக்க-கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் சரவணன் மகிழூந்தை லாவகமாக ஓட்டிக் கொண்டிருந்தான். பின்னிருக்கையில் அமர்ந்திருந்த இருவரும் இருவேறு மனநிலைகளில் மூழ்கியிருந்தனர்.
சுபா நகத்தைக் கடித்தவாறு, ஓரக்கண்ணால் சரவணனை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். சற்றுமுன் அவன் நடந்த விதம், அவளுக்குள் எதையோ சந்தேகமாகக் கிளறியது.
மாறாக, மேகலாவோ கோபமா… எரிச்சலா… என்று பிரித்தறிய முடியாத ஒரு கலந்த உணர்வில் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
வண்டி முன்னோக்கி பாய்ந்தாலும், அவர்களது சிந்தனைகள் மட்டும் பின்னோக்கி திரும்பிக் கொண்டிருந்தன.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மின் அஞ்சல் வரும் என்று அறிவித்திருந்ததனால், மருத்துவப் பரிசோதனைகளை முடித்துவிட்டு, சரவணனுக்கு அழைத்து தகவல் கூறிவிட்டு, வரவேற்பில் காத்துக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது,
"எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்..."
என்ற அந்த குரலில் திரும்பிப் பார்த்தார்கள் இருவரும். அங்கே கையில் ஒரு காகிதத்துடன் நின்றிருந்தான் தரிந்து.
'இவனா' என்ற சலிப்புடன்,
"என்ன..?" என்று வினவினாள் மேகலா.
"ஐ திங்க் யூ ட்ரொப்ட் திஸ்..." (இதை விட்டுடீங்க என்று நினைக்கிறேன்)
என்று கையில் உள்ள மேகலாவின் பிறப்பத்தாட்சி சான்றிதழை நீட்டினான்.
அவசரமாக தனது கோப்பை சரிபார்த்துவிட்டு, அவள் கையை நீட்டி அதைப் வாங்க முயன்றபோது, அவனது விரல்கள் அதனை விடவில்லை. முகம் சுருங்க அவனைப் பார்க்க,
"மன்னிப்பு வேண்டுறது மட்டுமில்ல... நன்றி சொல்றதும் தமிழர் பண்பாடு தான்..." என்று தன் புருவங்களை உயர்த்தி, கண்களில் சிரிப்புடன் கூறினான்.
அதில் சற்றே அவள் முகம் கருக்க,
"தேங்க்ஸ்.."
என்று ஒற்றை வார்த்தையில் கூறி, காகிதத்தை பறிக்காத குறையாய் வாங்கினாள்.
"முக்கியமான சந்தர்ப்பத்தில இப்படி எதையாவது மிஸ் பண்ணிட்டு பிறகு கைசேதப் படாதீங்க மிஸ் மேகலா அரவிந்தன்..."
என்று ஒரு சிறிய, மர்மமான புன்னகையை உதிர்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
மேகலா ஒருநொடி அப்படியே சிலையாக நின்றாள். சுபாவின் உலுக்கலில் தன்னிலை பெற்று, கண்களால் சுற்றும் முற்றும் பார்வையை ஓட்ட, அங்கே நின்றிருந்த பல பெண்களின் பார்வைகள் நடந்து செல்லும் அவன் மீதே ஒருவித மயக்கத்துடன் மொய்த்திருந்தன.
அவனது கம்பீரமான நடையும், அந்த அதிகாரத் தோரணையும் அவளுக்குள் ஒரு மெல்லிய எரிச்சலையும், அதே சமயம் இனம் புரியாத ஒரு தவிப்பையும் விதைத்தது.
"இது... உன்ன முட்டினவன் தானே... என்ன இப்படி கதைச்சிட்டுப் போறான்... ஆனாலும் ஆள் கெத்தா இருக்கானடி.." என்று சுபாஷினி வாயைப் பிளந்தாள்.
"கெத்தோ... அடி வாங்க போறாய் என்னட்ட நீ... என்னவோ எனக்கு அவன் தான் பெயர் வெச்சவன் கணக்கா மேகலா அரவிந்தனாமே..."என்று முறைத்தாள்.
"சும்மா மேகலா இல்ல... மிஸ் மேகலா.." என்று நகைத்தாள் சுபா.
"இவனை மட்டும் திரும்பவும் எங்கயாவது பார்த்தன்... மவனே... இருக்கு... " என்று மேகலா கறுவினாள் அவன் சென்ற திசையையே பார்த்தபடி.
அவளுக்கும் அவனுக்குமான அந்தத் தற்செயல் சந்திப்பு, ஒரு நீண்ட பயணத்தின் முதல் புள்ளியாக அமையும் என்று அவள் அப்போது அறிந்திருக்கவில்லை.
அதேசமயம், சுபாவின் தொலைபேசி ஒலியெழுப்ப, பார்த்துவிட்டு தெரியாத எண்ணென்று துண்டித்தாள். மீண்டும் மீண்டும் அதே எண்ணிலிருந்து அழைப்பு வர, யோசனையுடன் அழைப்பை ஏற்றாள்.
"ஹலோ..." என்று கடினமாகக் கேட்க,
"ஒருக்கா கோல் எடுத்தா ஆன்சர் பண்ண தெரியாதா உனக்கு..." என்று சரவணனின் குரல் அழுத்தமாகக் கேட்டது.
"ஆஹ்... சரண் அண்ணாவா... சொரியண்ணா... நான் நம்பர் வந்தால் ஆன்சர் பண்றேல்ல.." என்று மன்னிப்பு வேண்டினாள்.
"சரண் நல்லா இருக்கு... அப்படியே கூப்பிடு... அந்த அண்ணாவை கட் பண்ணிப் போடு... அது நல்லாயில்ல... இது தான் என்ர நம்பர்... சேவ் பண்ணி வை..." என்று அது தான் முக்கியம் என்பது போல கூறிவிட்டு,
"மன்னிப்பு எல்லாம் தேவேல்ல... நான் என்ட்ரன்ஸ் கிட்ட வந்துட்டன்... வெளியே வாங்கோ ரெண்டு பேரும்..."
என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
அவன் கூறியவற்றை கிரகித்து ஒரு நொடி அதிர்ந்தாள் சுபா. பின் சுதாரித்து மேகலாவையும் கூட்டுக்கொண்டு வெளியே வரவும் சரணவன் வரவும் சரியாக இருந்தது.
இருவரும் ஏறி அமர, மகிழூந்து கொழும்பை நோக்கி எதிர்திசையில் பயணித்தது. சுபா குனிந்த தலை நிமிராமல் அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.
மேகலாவோ ஒருவித யோசனையில் ஆழ்ந்திருந்ததால், சுபாவின் மாற்றத்தை கவனிக்கவில்லை.
"என்ன கப்பல் கவுந்த மாதிரி இருக்கிறீங்க ரெண்டுபேரும்... இன்டர்வீவ் கஸ்டமா...??"
என்ற சரவணனின் குரலில் இருவரும் நனவுலகிற்கு வந்தனர்.
"இல்லையண்ணா... ஈஸி தான்..."
என்று முறுவலித்துவிட்டு, சுற்றும் முற்றும் பார்த்தாள்.
"என்ன அண்ணா 'எக்ஸ்பிரஸ் வே' ல போறம்... அண்ணாட்ட போறமா..." என்று சந்தோசத்துடன் கேட்டாள்.
"ஓம்... கெதியா முடிஞ்சிட்டு தானே... அதுதான் கொழும்பையும் ஒருக்கா சுத்திப் போட்டு போவம் எண்டு நினைச்சன்... இருவது நிமிசத்துல போய் சேர்ந்துறேலும்..." என்றுவிட்டு,
"என்ன அமைதியின் சிகரம் வாயே திறக்காம இருக்கிறீங்க..."
என்று முன் கண்ணாடியில் சுபாவைப் பார்த்து குறும்பாய்க் கேட்டான்.
ஒருநொடி விழியுயர்த்தி அவனைப் பார்த்துவிட்டு தலை குனிந்தாள் சுபா.
அவளைத் திரும்பிப் பார்த்த மேகலாவோ,
"பசிக்குதா டி... கொழும்புக்குப் போய் ஏதாவது வாங்கிச் சாப்பிடுவம்.."
என்று கூற,
"நீ ஒருத்தியே காணும் டி... என்ர மானத்தை வாங்க..."
என்று கிள்ளி வைத்தாள் சுபா.
இவையனைத்தையும் கேட்ட சரவணன் வாய்விட்டு சிரித்தான்.
இப்படியே அவர்கள் கொழும்பை வந்தடைந்து, முரளியையும் ஏற்றிக் கொண்டு காலிமுகத்திடலுக்குச் சென்றனர்.
"அப்ப இன்னும் இரண்டு நாள் அங்க தங்கணுமா மேகி.."
என்று மேகலாவைச் சுரண்டினாள் சுபா.
"என்னவாம்.. மேடம்... சாப்பாடு காணாதாமோ..."
என்று முரளி சீண்ட, அவனைக் கையெடுத்து கும்பிட்டாள்.
நடைபாதை வியாபாரிகளிடம் வடையும் கிழங்கும் வாங்கி சாப்பிட்டு விட்டு, மாலைநேர கடற்காற்றில் கடலலைகளை ரசித்தவாறே காலாற நடந்துக் கொண்டிருந்தனர் நால்வரும்.
"எப்ப யாழ்ப்பாணம் போறது எண்டு கேட்கிறாள் அண்ணா.." என்று மேகலா போட்டுக் கொடுக்க, திருதிருவென விழித்தாள் சுபா.
"நானும் வெள்ளிக்கிழமை வெளிக்கிடுவன். இடையில ஒரு நாள் தானே இருக்கு... அது தான் சேர்ந்தே போவம் எண்டு உங்களை நிக்க சொன்னன்... எப்படியும் தனிய தானே போகவேணும் நீங்க... ஒரு நாள் இஞ்ச நிக்கிறதுல ஒண்டும் ஆகிடாது..."
என்று கூறினான் முரளி.
மூவரும் ஒன்றாகவே யாழ்ப்பாணம் போகலாம் என்று அடுத்தநாளும் சரவணன் வீட்டிலேயே தங்க சொல்லியிருந்தான் முரளி.
"ஏன்... எங்கட வீட்டில தங்க உனக்கென்ன அத்தனை கஷ்டம்... "
என்று கேட்டான் சரவணன்.
அந்த நேரடிக் கேள்வியில் திகைத்த சுபா,
"இல்லையே... ஒரு கஷ்டமும் இல்ல... பிளவர் அன்ட்ரி எங்களை நல்லா பார்த்துக்கொள்ளுறா..." என்று கூற,
"பிளவர் அன்ட்ரியா..."
என்று மற்ற மூவரும் யோசித்து, தெளிந்து சிரித்தனர்.
அவளது விகடமான பேச்சுக்கள் தான் சரவணனை இன்னும் இன்னும் கவர்ந்தது.
அங்கிருந்து கிளம்பி, 'வன் கோல் பேஸ்' வணிக வளாகத்தில் இரவுணவையும் முடித்து, முரளியையும் அவனது குடியிருப்பில் விட்டுவிட்டு வீடு வந்து சேர நள்ளிரவாகி இருந்தது.
அடுத்தநாள் முழுவதும் உதயமலருடன் பொழுதைப் போக்கிய இருவரும், மாலையில் சரவணன் வீடு வந்ததும், அவனுடன் ஊரைச் சுற்றக் கிளம்பினர்.
உதயமலருக்கு சுபாவின் கள்ளம் கபடமில்லாத பேச்சு பிடித்துப் போனது. சரவணனும் அவளைப் பார்வையால் தொடர்ந்தானே தவிர தொல்லை செய்யவில்லை. சுபாவும் தங்குதடையின்றி தனது சேட்டைகளைச் செய்துக் கொண்டிருந்தாள்.
வெள்ளிகிழமை மாலை நீர்கொழும்பிலிருந்து புறப்பட்ட மூவரும், வெறிச்சோடிய நெடுஞ்சாலைகளைக் கடந்து வடக்கு நோக்கி பயணித்து, இடையில் குருநாகலில் இரவுணவை முடித்துவிட்டு, நடுநிசி வேளையில் யாழ்ப்பாணத்தை அடைந்தனர்.
மறுநாள் சனிக்கிழமை நண்பகலில் போல சுபா மேகலாவைத் தேடிக்கொண்டு வரவும்,
"அதுதானே பார்த்தனான்... எங்கட வீட்டில இண்டைக்கு கோழிக்கறி... எங்கடா சுபா தரிசனம் தரேல்லயே எண்டு நினைச்சி முடியேல்ல... வந்துட்டாய்... நேத்து வந்த பயண அலுப்பு எனக்கே இன்னும் தீரேல்ல... ரெஸ்ட் எடுக்காம இஞ்ச ஓடி வந்துட்டாய் என..."
என்று நக்கல் குரலில் முரளி சீண்ட,
"ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து டயர்ட் ஆகிட்டன் அண்ணா... அதுதான் என்ர செல்லத்தை ஒருக்கா பார்த்துப் போட்டு போவம் எண்டு வந்தனான்..." என்று பதில் கொடுத்தாள்.
"அங்க வீட்டு வேலை செய்ய களவுப் பட்டுக் கொண்டு இஞ்ச வந்துட்டாய் எண்டு சொல்லு... நான் ஒண்டும் சொல்ல மாட்டன்..." மேலும் கிண்டல் செய்ய,
"நீங்க என்னை எவ்வளவு கலாய்ச்சாலும் பரவாயில்ல அண்ணா... எனக்கு நோ சூடு... நோ சொரணை... ஈசுமாவின்ர கறிக்கு பின்னுக்கு தான் எனக்கு எல்லாம்... அலுப்பா இருக்க நானா கார் ஓட்டினவள்... நான் பின்னுக்கு இருந்து நல்லா நித்திர கொண்டு எல்லா எழும்பினன்..." என்று மல்லுக்கு நின்றாள்.
"மகேஸ்வரி எண்ட அழகான பேரை அப்பா, 'ஈஸ்வரி' எண்டு சுருக்கிட்டார்... நீ அதையும் சுருக்கி 'ஈசு' எண்டு சொல்லுறாய்... எல்லாருக்கும் பேர் வெச்சிருக்கிறனீ என..."
என்று சிரித்த முரளிக்கு கொழும்பில் வைத்து உதயமலருக்கு வைத்த பெயரும் நினைவு வந்தது, கூடவே சரவணன் கூறிய செய்தியும்.
சரவணன் முரளியிடம் தன் மனதை வெளிப்படுத்தி இருந்தான். முரளிக்கும் பிடித்தமே. அவன் மனதில் வேறு ஒன்று இருந்தது. ஆனால் சுபாவும் அவன் தங்கை போலவே என்று எண்ணி அவனும் பெரியவர்களிடம் பேசுவதாகக் கூறி சரவணனின் பெற்றோரின் விருப்பத்தையும் முதலில் வாங்கிக் கொண்டான். சரவணனை மறுக்க இவர்களிடம் காரணம் இல்லையே.
அந்த நினைப்பில்,
"சரி... மலர் அன்ட்ரிக்கு பேர் வெச்ச நீ... கூடவே சுத்தின சரவணனுக்கும் பேர் வெச்சிருப்பியே..."
என்று நூல் விட்டுப் பார்க்க, சுபா திருத்திருந்தாள். அதுவே அவள் ஏடாகூடமாக ஏதோ வைத்திருக்கிறாள் என்று சொல்லிற்று.
"என்ன எண்டு சொல்லு..." என்று மிரட்ட,
"பொடிகார்ட்..." என்று கண்களைச் சுருக்கி மெதுவாக முணுமுணுத்தாள்.
"பாவமே எண்டு, அவன் களைப்பையும் புறம்தள்ளி, உங்களை ஊர் சுற்றி காட்டினால்... பொடிகார்ட் எண்டு வைப்பியோ நீ...??? அவன் யாரு அவன் உயரம் என்ன..." என்று வினவ,
"அச்சோ... நீங்க நினைக்கிற போல இல்லையண்ணா... அவரின்ர பேருக்கு அதுதானே பொருள்... சரவணன் எண்டால் முருகன்... முருகன் காக்கும் கடவுள் தானே... அது தான் ஒரு நல்ல எண்ணத்திலதான் அந்த பேரை வெச்சனான்... சத்தியமா..." என்று செல்லமாய்க் கெஞ்சினாள்.
"சரி பிழைச்சுப் போ... மேகி ரூமுக்க இருக்கிறா..." என்று கூறிவிட்டு நகர்ந்தான் முரளி.
அங்கே அறையில் முகத்தில் ஒரு இறுக்கத்ததுடன் இருந்த மேகலாவைப் பார்த்த சுபா என்னவென்று கேட்க, அவள் தனது அலைப் பேசியை எடுத்துக் காட்டினாள். அதை ஆராய்ந்த சுபா கண்களை விரித்தாள்.
"என்னடி இவன்... இப்படி ஸ்பீடா இருக்கிறான்... அவன் மிஸ்... மிஸ்... எண்டு அழுத்திச் சொல்லும் போதே நினைச்சன்... உனக்கு ரூட் விடுறான் எண்டு..."
"ஹ்ஹ்ம்... பார்த்த முதல் சந்திப்பிலேயே ஒரு பெட்டைக்கு பேஸ் புக்கில ரிக்வஸ்ட் குடுக்குற இவனெல்லாம் நாட்டைக் காக்கிறவனாம்... அது சரி... இவேயள் எப்ப எங்களைக் காத்திருக்கிறாங்க..."
என்று மேகலா எரிச்சல் பட்டாள்.
"அது எப்படி டி உன்ன சரியா கண்டு பிடிச்சான்... உன்ர ப்ரொபைல் லொக் போட்டு எல்லா இருக்கு...???" என்று சந்தேகம் கேட்க,
"அதுதான் 'மேகலா அரவிந்தன்', யாழ்ப்பாணம் எண்டு என்ர பேரும் ஊரும் இருக்கே... என்ர போட்டோ தானே ப்ரொபைல் பிக்ச்சராவும் கவர் பிக்ச்சராவும் போட்டிருக்கிறன்... அண்டைக்கு என்ர பேர்த் சேர்டிபிகேட்ட தரும்போதே எல்லாத்தையும் பார்த்திருப்பான்..." என்று கோபத்தில் சிவந்தாள்.
"சரி விடு... இதையெல்லாம் வீட்டுல சொல்லிட்டு இருக்காத... ஆர் ஆரோ எல்லாம் ரிக்வஸ்ட் அனுப்பினம்... அது மாதிரி நினையன்... நீ எப்படியும் எக்சப்ட் பண்ணப் போறது இல்ல தான... சும்மா விட்டு விடு... ரிஜெக்ட்டும் பண்ணாத... பண்ணினா நீ கண்டுகொண்டதா அவனுக்கு தெரிஞ்சிடும்... சும்மா விட்டா அவனே மண்டை குழம்பிடுவான்... பார்த்தாளா இல்லையா எண்டு விளங்காம... அவன் என்ன உன்ர வீடு தேடி வரவா போறான்... அவனை இனிமே நாங்க பார்க்கவா போறம்..." என்று கூறிச் சிரித்தாள்.
ஆனால் இனிமேல் தான், தினம் அவர்கள் சந்திப்பு நடக்கும் என்றும், அவள் வீடு தேடி அவன் வரும் காலமும் வரும் என்றும் அப்போது அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.