மொழியின் இலக்கணம் நீயடா - 37

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,634
6,876
113

அத்தியாயம் - 37

ஆசிரியை தேவிகா மாணவ, மாணவிகளிடம் பேசியபிறகு அவர்களின் கொண்டாட்டத்திற்கு இடையூறாக இல்லாமல் சற்று விலகி சென்று விட்டார்.

மாணவிகள் ஒருபுறமும் மாணவர்கள் ஒருபுறமும் பாடலுக்கு ஏற்ப ஆட்டம் ஆடிக் கொண்டிருக்க, புடவை கட்டியே பழக்கம் இல்லாத அமிர்தாவிற்கு திடீரென தனது புடவை கழண்டு வருவது போலிருந்தது.

தன்னருகே இருந்த அதுல்யாவிடம், "அதுலு! என் ஸேரி அவிழ்த்து போச்சுனு நினைக்கறேன். எனக்கு ஸேரி கட்டத் தெரியாது. உனக்கு தெரியுமா? இல்ல வேற யாராவது இருந்தா அவங்கள்ட்ட சொல்லி கட்டி விட சொல்லேன்." கெஞ்சல் குரலில் கேட்டாள்.

"இதுக்கேன்டி கெஞ்சிட்டு இருக்க? எனக்கே கட்டிவிட தெரியும். இங்க பசங்களும் சுத்தி இருக்காங்க. நம்ம க்ளாஸ்க்கு போய்க்கலாம் வா. அங்க யாரும் வர மாட்டாங்க." என்றவள் அமிர்தாவை அழைத்துச் செல்ல, முத்ராவின் பார்வையிலிருந்து இது தப்பவில்லை.

அமிர்தாவை அழைத்துச் சென்ற அதுல்யா," என்னடி இத்தனை பின் குத்தி வச்சிருக்க? எதாவது கழண்டு போனா உடம்புல குத்தி வைக்காதா?" கழண்டு விடுமோ என்ற அவளது பயத்திற்காக பொம்மைக்கு சுற்றியது போல ஏகப்பட்ட பின்களை குத்தி விட்டு இருந்தார் ரூபா.

அமிர்தாவின் புடவையை மொத்தமாக அவிழ்த்து விலக்கி அதிலிருந்த பின்கள் அனைத்தையும் எடுத்து சரி செய்தாள். அவள் ஆடிய ஆட்டத்தில் பல பின்கள் தெறித்து போயிருக்க, சேலையை இழுத்து கட்ட ஸேஃப்டி பின்கள் பற்றாக்குறையாகி போனது.

வெறும் ப்ளவுஸ் மற்றும் உள் பாவாடையுடன் மார்புக்கு குறுக்காக கைகளை வைத்துக் கொண்டு அமிர்தா நின்றிருக்க,

"பின் பத்தாது போலடி. நான் போய் வேற யார்கிட்டயாவது எக்ஸ்ட்ரா இருக்கானு கேட்டு வாங்கிட்டு சீக்கிரமே வர்றேன், சரியா? நீ பயந்துக்காத வேற யாரும் இங்க வர மாட்டாங்க." என்றபடி ஓட்டமும் நடையுமாக விரைந்து சென்றாள்.

அவள் சென்றபின் நிசப்தமான அந்த அறையை ஒரு திகிலோடு அமிர்தா சுற்றி பார்த்திருக்க, திடுமென கதவு திறக்கும் சத்தத்தில் அதுல்யா வந்து விட்டதாக எண்ணி அவள் ஆசுவாச பெருமூச்சு விட, உள்ளே வந்தது முத்ரா.

அவளை அங்கே எதிர்பாராத அமிர்தாவிற்கு உள்ளுக்குள் பயபந்து உருண்டாலும் சற்று தைரியமாக காட்டிக் கொண்டு, "அதுல்யா எங்கனு கொஞ்சம் பார்க்கறியா முத்ரா?" கைகளை குறுக்காக கட்டிக் கொண்டு உதவியை நாடினாள்.

கோணல் சிரிப்புடன் அவளருகே வந்த முத்ரா அங்கிருந்த பென்ச்சில் ஏறி அமர்ந்து அவளை ஏற இறங்க பார்க்க, அவளது அந்தப் பார்வையில் அமிர்தா எச்சில் கூட்டி விழுங்கினாள்.

"நான் அவ்ளோ தூரம் சொல்லியும் அந்த அகரனை விட மாட்டே இல்ல, உனக்கு என்ன ஒரு நெஞ்சழுத்தம் இருக்கனும்?" கண்களில் பழிவெறி மின்னக் கேட்க அமிர்தா திகைத்துப் போனாள்.

அவள் ஏதோ திட்டத்துடன் வந்திருப்பதாக அமிர்தாவின் உள்ளுணர்வு உந்த உதவிக்கு யாரையாவது அழைக்க வேண்டி கத்தப் போக, ஒரு கையால் சட்டென அவளது வாயை அடைத்து விட்டாள்.

மறுகையால் அமிர்தாவின் சேலையை எடுத்து அவளது கைகளை கட்டியவள், "கத்துன.. இப்படியே உன் சேலையாலேயே உன் கழுத்தை நெரிச்சு கொன்னுடுவேன்." கண்களை உருட்டி மிரட்ட, அரண்டே போனாள் அமிர்தா.

கண்களில் டன்கணக்கில் பயத்துடன் முத்ரா சொன்னபடி அமர்ந்த அமிர்தாவின் கைகளை புடவையால் இறுகக் கட்டி, அவளது வாய்க்குள் அதே சேலையின் மீதியை வைத்து அடைத்து மூலையில் அமர வைத்தாள்.

அமிர்தா எதிர்பாராத சமயம் சட்டென அவளது ப்ளவுஸை முத்ரா அவிழ்த்து விட அதிர்ந்தவள் சுதாரிக்கும் முன்பு அமிர்தாவை உள்ளாடையுடன் நிறுத்தி இருந்தாள்.

கைகள் கட்டப்பட்ட நிலையில் அமிர்தா துடித்துக் கொண்டு அமர்ந்திருக்க, முத்ரா தன் கையிலிருந்த அலைபேசியில் அவளை அந்த கோலத்தில் புகைப்படம் எடுத்தவள்,

"நான் வந்ததையோ இங்க நடந்ததையோ யார்ட்டயாவது மூச்சு விட்ட, அகரன் கிஸ் பண்ணுன மாதிரி எப்படி க்ரியேட் பண்ணுனேன், அதைப்போல இதையும் என்ன.. வேணும்னா செய்வேன். ஜாக்ரதை!" மிரட்டி விட்டு சற்று தள்ளி ஒரு பென்ச்சில் மற்றொரு அலைபேசியை வைத்துவிட்டு சென்றாள்.

கைகளையும் வாயிலிருந்த துணியையும் எடுக்க முயற்சித்து தோற்ற அமிர்தாவிற்கு ஒரு கட்டத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட மூச்சுக்கு போராடி அப்படியே மயங்கிச் சரிந்தாள்.

அமிர்தாவை இங்கே விட்டுச் சென்ற அதுல்யாவை, 'பேஷன் ஷோ போல ஒரு கான்செப்ட் இருக்கிறது நீ தான் அதன் ஆங்கர்!' என்று அவளிடம் ஒரு பேப்பரைக் கொடுத்து படிக்கச் சொல்லி திசை திருப்ப, அவள் அமிர்தா அறையில் இருப்பதை கூறினாள்.

அதற்கு வேறு ஆளை அனுப்பி விடுவதாகச் சொல்லி முத்ரா வேறொரு பெண்ணின் மூலம் ஏற்கனவே அதுல்யாவை தேக்கி இருக்க, மாணவர்கள் ஆடிய ஆட்டத்தில் தவறி விழுந்த அகரனின் அலைபேசியை கச்சிதமாக அவனறியாமல் எடுத்திருந்தாள்.

அமிர்தாவை அங்கே அரைகுறை ஆடையுடன் விட்டுவிட்டு அகரனின் அலைபேசியையும் பென்ச்சின் அடியில் வைத்து விட்டு வந்திருக்க, அவள் திட்டப்படி அனைத்தும் சரியாக நடந்தது.

அகரன் வகுப்பை நோக்கி செல்லும் போதே தேவிகாவிடம் சென்று அமிர்தாவை காணவில்லை என்று முத்ரா நாடகமாட, அப்போது தான் அதுல்யாவிற்கு அவளை வகுப்பில் விட்டது நினைவு வந்து தேவிகாவிடம் உரைத்தாள்.

தேவிகாவுடன் முத்ரா, அதுல்யா மற்றும் ஒரு சில மாணவிகள் வகுப்பறையை நோக்கி வர, சரியாக அதேசமயம் அகரன் அமிர்தாவிற்கு தன் மூச்சுக்காற்றை வாய் வழியே செலுத்திக் கொண்டிருந்தான்.

அமிர்தா மூர்ச்சையாகி கிடப்பதைக் கண்ட முத்ராவிற்கு உள்ளுக்குள் அதிர்வு தான். ஆனால் வெளியே காட்டிக் கொள்ளாமல் மற்றவர்களை போல அப்போது தான் அவளைப் பார்ப்பது போல சிறப்பாக நடித்தாள்.
 

Author: Vishakini
Article Title: மொழியின் இலக்கணம் நீயடா - 37
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

ஷமீம்

Well-known member
Nov 24, 2025
706
581
93
Pondicherry
முத்ராவுக்கு கண்டிப்பாக அதிகபட்ச தண்டனை தரவேண்டும்
 

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
பெண்ணா இது எல்லாம்????
ச்சை கருமம்....எத்தனை வாட்டி தான் கேட்கிறது🤮🤮🤮🤮🤮