மொழியின் இலக்கணம் நீயடா - 51

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,634
6,876
113

அத்தியாயம் - 51

இரவு தாமதமாக வந்ததால் காலையில் வழக்கம் போல எழ முடியாமல் சற்று அசந்து உறங்கிக் கொண்டிருந்த அகரன் "குட் மார்னிங் டாக்டர்.அகரன்! உங்களுக்கு இன்னமும் பொழுது விடியலையா?" என்ற கேள்வியில் விருட்டென்று எழுந்து அமர்ந்தான்.

கண்களை கசக்கிக் கொண்டே, "ரூம்க்குள்ள வரும் போது கதவைத் தட்டிட்டு வரனும்னு மேனர்ஸ் இல்லயா?" சற்று எரிச்சலுடன் கேட்டவனின் கேள்வியை கண்டு கொள்ளாமல் காற்றில் பறக்க விட்டவள்,

"ரெண்டு நாளா ஆளு வீட்லேயே தங்கலையாம். ஏதோ நோட் மாதிரி தருண் வீட்டுக்கு போறேன்னு சொன்னதோட சரியாம். ரெண்டு நாளா ஒரு ஃபோன் கால் கூட இல்லையாம்."

'அப்படி என்ன நான் கேட்டுட்டேன் எல்லா அம்மாவும் நினைக்கிறது போல என் பையனுக்கும் கல்யாணம் பண்ணனும்னு சொன்னது தப்பா?'னு என் காதுல ரத்தம் வர்ற அளவுக்கு, உங்க குடியிருந்த கோயில் புலம்பி தள்ளுனாங்க. அதான் என்ன சங்கதி?'னு கேட்க வந்தேன்."

"ஒருவேளை இன்னிக்கும் நீங்க அப்ஸ்காண்ட் ஆகிட்டா? அதான் காலங்காத்தால வந்துட்டேன். அப்றம் நான் ஈஎன்டி டாக்டர்ட்ட போற மாதிரி ஆகிடுமே! " நீளமாக விளக்கியவாறு அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவன் குளியலறையில் சென்று மறைந்தான்.

"கொழுப்பைப் பாரேன்! ஒருத்தி மூச்சைக் கொடுத்து இத்தனை பேசிட்டு இருக்கேன். ஏதோ எஃப்எம்ல பாட்டு கேட்கற ரேன்ஜில போயிட்டே இருக்கான். மவனே! வெளியே வா நீ! அப்புறமிருக்கு உனக்கு," அவனுக்கு கேட்காது என்று நினைத்து அவனை ஒருமையில் திட்டிக் கொண்டிருந்தாள் அமிர்தா.

ஆனால், அவளிடம் எரிந்து விழுந்தாலும் காலையிலேயே அவளது முகத்தில் கண் விழித்ததால் மனதில் ஒருவித இதம் பரவ, ஒரு புன்சிரிப்புடன் காதைத் தீட்டி வைத்திருந்தவனுக்கு அது தெளிவாகவே கேட்டது.

வெகு நாட்களுக்குப் பிறகு அவளது உரிமையான பேச்சில் சற்று உருகிப் போனவன் தன் காலைக்கடன்களை சட்டென முடித்துவிட்டு வெளியே வர, அப்போதும் அவள் அங்கேயே இருந்தாள் ஆனால் கையில் தேநீருடன்.

"இந்தாங்க மகாராஜா! நீங்க எழுந்தது தெரிஞ்சதும் ராஜமாதா உங்களுக்கு கொடுக்கச் சொல்லி என் கையில திணிச்சு விட்டுட்டாங்க." டேபிளில் வைத்தவளது துடுக்குத்தனமான பேச்சை ரசித்துக் கொண்டிருந்தவன் அவளிடம் பேசவே இல்லை.

"என்ன விசயமா வந்தீங்க அம்மு?" கேள்வி என்னவோ எந்த உணர்வும் இல்லாமல் இருந்தாலும் மனதிற்குள் அவளது சீண்டலை எதிர்பார்த்து காத்திருக்க அதை பொய்யாக்காமல் "ம்ம்ம்.. கால்கிலோ கத்திரிக்கா வாங்க வந்தேன்." முறைப்புடன் நக்கலாகக் கூறினாள்.

"ஸாரி அம்மு. நீங்க தப்பான ஆளு கிட்ட கேட்கறீங்க. என் அம்மாட்ட போய் கேளுங்க. ஃப்ரிட்ஜில் வைச்சு இருப்பாங்க, கேட்டா தருவாங்க." வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு பதில் தந்தவன் அங்கிருந்து நகர முனைந்தான்.

அவனது பதில் அவளை மேலும் கோபமேற செய்ய மூச்சை இழுத்து விட்டு நிதானப்படுத்திக் கொண்டு, "சீரியஸா கேட்கறேன். பொண்ணு பார்த்துட்டதா அம்மா தான் அவ்ளோ தூரம் சொல்றாங்கள்ல, கல்யாணம் செய்ய என்ன கஷ்டம் உங்களுக்கு டாக்டர். அகரன்?" தீவிரமாக பார்த்தபடி கேட்டாள்.

"எனக்கு இஷ்டமில்லைனு அர்த்தம்." அவ்வளவு தான் என்பது போல அவன் கிளம்ப எத்தனிக்க, "கல்யாணத்துல இஷ்டமில்லையா? இல்ல அந்த.. பொண்ணை செய்துக்க இஷ்டமில்லயா?" இழுத்தபடி கூர்மையான பார்வையோடு கேட்டு அவனை தேக்கினாள்.

கண்களை சுழற்றி அவளை நோக்கி திரும்பி, "உங்களுக்கு தான் நவீனோட மேரேஜ் ஃபிக்ஸ் ஆகிடுச்சுல, போய் உங்க வுட்பியோட கல்யாணகனவுல மூழ்கறத விட்டுட்டு, என்னோட விசயத்தை ஏன் உங்க மண்டையில டென்சன் ஏத்திட்டு இருக்கீங்க?" என்றவனை எதுவும் பேசாமல் முறைத்தாள் அவள்.

"உங்களுக்கு இப்ப என்ன பிரச்சினை அம்மு? நான் ஏன் கல்யாணத்துக்கு ஒத்துக்கலை'னு தெரியனும் அவ்வளவு தானே? அந்தப் பொண்ணு இல்ல எனக்கு வேற எந்தப் பொண்ணையும் பிடிக்கல போதுமா?" அழுத்தமாக சொன்னவனை ஆழமாக பார்த்தாள் அவள்.

"எனக்கு அந்த நவீனோட கல்யாணம் ஃபிக்ஸ் ஆகிடுச்சுனு உங்களுக்கு யாரு சொன்னா டாக்டர். அகரன்?" அமிர்தாவின் கேள்வியில் புருவங்கள் சுருங்க குழம்பியவன் அவளை புரியாமல் பார்த்தவன்,

பிறகு," நீங்க தானே அன்னைக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆக போகுதுன்னு சொன்னீங்க. அப்படினா!?.." அவள் சொல்வது புரியாமல் குழம்பியவன் கேள்வியாக நிறுத்த, அவனறியாமல் நமட்டுச் சிரிப்பை உதிர்த்தாள்.

"யெஸ்! ஆக போகுது தான். ஆனா அது நவீனோட இல்ல, நான் லவ் பண்ற ஆளோட.." என்றவள் அவன் முகத்தை ஆராய்ச்சியாகப் பார்க்க "ஓஓ!!"என்று இறங்கிய குரலில் கூறினான் அவன்.

வேறொருவனை காதலிப்பதாக அவள் சொன்னதை ஜீரணிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் இருந்த அகரன்,

தனது ஏமாற்றத்தை முகத்தில் காட்டாதவாறு திரும்பி நின்றுவிட, "சரி அதை விடுங்க. நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க." மீண்டும் பழைய கேள்விக்கு வந்தாள் அவள்.

சில நொடிகள் என்னவென்று யோசித்தவன் தன்னை சமாளித்துக் கொண்டு, "அதுக்கான பதிலை நான் ஏற்கனவே சொல்லிட்டேன்." சற்று இறுக்கமான குரலில் அவளை பார்க்காமலே கூறினான்.

அவனது நிலையை உணர்ந்தவள், "எந்த பொண்ணையுமே.. கல்யாணம் பண்ண விருப்பம் இல்லையா?" ஒரு மாதிரி ஆழமான குரலில் கேட்க, அதை உணராதவன், "ஆமா!!" என்று அழுத்தமாகக் கூறி தன் ஏமாற்றத்தை கோபமாக வெளிப்படுத்தினான்.

"அந்த பொண்ணு அமிர்தவல்லியா இருந்தாலும் கூட உங்களுக்கு வேண்டாமா!?" அவள் நிறுத்தி நிதானமாக கேட்க, தனது கோபத்தில் இருந்தவன்" யாரா இருந்தாலும் வேண்.." வேண்டாம் என்று சொல்ல வந்தவன் நிதானித்து,

பட்டென திரும்பி அவளைப் பார்க்க , "வாட் டிட் யூ சே?! கம் அகைன்!!.." என்றிட, புன்சிரிப்புடன் நின்ற அமிர்தா தான் சொன்னதை மீண்டும் அழுத்திச் சொல்ல நம்ப முடியாத வியப்புடன் கண்களை அகல விரித்தான் அகரன்.

"அப்ப.. நீ விரும்பறது.." என்னையா? எனும் விதமாக கண்களால் அவன் வினவ, ஆமோதித்து கண்களை மூடி தலையசைத்த அமிர்தா கண்கள் கலங்க, "ஆமாடா! முட்டாள் டாக்டரே!" சிறு சிரிப்புடன் பதிலளித்தாள்.

அவன் பட்டென அவளை இழுத்து அணைக்க, அதை எதிர்பாராதவள் அவனது முதல் ஸ்பரிசத்தில் உறைந்து போய் நிற்க, தன் தோள்பட்டையில் ஈரம் உணர்ந்த பிறகு சுயஉணர்விற்கு வந்து அவன் அழுகிறான் என்றதும் வேகமாக அவனை விலக்க முயன்றாள்.

"உள்ளுக்குள்ளேயே செத்துட்டேன் அம்மு. ப்ளீஸ்டி! டூ மினிட்ஸ் இப்படியே இரேன். இது கனவில்லை தானே!?" அவனோ விட்டால் அவள் காணாமல் போய் விடுவாள் என்பது போல அவளை இறுக்கிப் பிடித்து இன்னமும் நம்ப முடியாமல் கேட்டான்.
 

Author: Vishakini
Article Title: மொழியின் இலக்கணம் நீயடா - 51
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
Aww cute அகரன் நீனு 🤩
ஒரு அப்பாவி பிள்ளையை என்னடா பண்ணி வெச்சி இருக்கீங்க🤭🤭🤭🤭🤭🤭