வரம் 4
வந்த வேகத்திற்கு அங்கு நின்று கொண்டிருந்த அனைவரையும் தாண்டி நவநீதன் சட்டையைப் பிடித்து இழுத்து அவன் இடது கன்னத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டான் மாயவன்.
தன் பொருட்டு கொல்லப்பட்ட ஒரு வாயில்லா ஜீவனின் மரணத்திற்கான தண்டனையாக, உலகத்தின் கேடுகெட்ட பொறுக்கிகளுள் ஒருவன் என பட்டம் பெறத் தகுதியானவன் கரத்தால் வாங்கிய இந்த அடியை ஏற்றுக்கொண்ட நவநீதன், அடுத்த அடி அடிக்க ஓங்கியவனின் கரத்தைப் பிடித்துக்கொண்டு அவனைத் தரையில் தள்ளிவிட்டான்.
போதை இன்னும் கொஞ்சம் மிச்சம் இருக்க எழுந்திரிக்க முடியாமல் தடுமாறியவன், “எங்க அந்த ஒழுக்கங்கெட்டவ?” என்கிற கேள்வியுடன் வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
அவன் பாதையின் குறுக்கே நின்று, தன் நீண்ட கரத்தால் அவன் நடையை நிறுத்திய நவநீதன், மாயவன் பின்னங்கழுத்தில் அழுத்திப் பிடித்து அவனைத் தன் தோளோடு அணைத்து காதிற்குள் மெல்லமாக எதையோ சொல்லத் துவங்க சில நொடிகளில் மிரண்டு விழிக்க ஆரம்பித்தான் மாயவன். அவன் உடம்பை ஆக்கிரமித்து இருந்த போதை எல்லாம் போன இடம் தெரியவில்லை.
இந்தக் காட்சியை வைத்து ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்த கண்ணப்பன் அவர்கள் அருகே செல்லப் பார்க்க, “ஒழுங்கா துவாரகாவுக்கும் உனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைன்னு ஊர்ப் பஞ்சாயத்தில் ஒத்துக்கிட்டு, விவாகரத்துப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுட்டு உன் வீட்டைப் பார்த்து போற. இல்ல என்னை வேற மாதிரி பார்ப்ப. எனக்கு இருக்கிற மண்டை சூட்டுக்கு இப்பவரை உன்னைக் கொல்லாம விட்டு இருக்கிறது அதிசயம் தான். புரிஞ்சு நடந்துக்கோ.” என்ற மகனின் வார்த்தைகள் மட்டும் அவர் காதில் விழுந்தது.
மாயவன் அதிர்ந்து நிற்பதை திருப்தியாகப் பார்த்துவிட்டு, “துவாரகாவை விட்டுப் பிரியுறதில் மாயவனுக்கும் முழு விருப்பம் தான் ஐயா. நீங்க அவர்கிட்ட ஒருவார்த்தை கேட்டுட்டு பஞ்சாயத்தில் ஊர் முறைப்படி உறவை முறிச்சு விட்டுடுங்க.” என நாட்டாமையிடம் சொன்னான் நவநீதன்.
“என்ன தம்பி சொல்றீங்க?” நாட்டாமை ஆச்சர்யமாக, “ஒரே நாளில் எத்தனை முறை தான் ஆச்சர்யப்படுவீங்க. சட்டுபுட்டுன்னு நார்மல் மோடுக்கு வந்து எனக்கும், துவாரகாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிற வழியைப் பாருங்க.” சாதாரணமாகச் சொன்னான்.
“இதுக்கு நான் ஒரு போதும் சம்மதிக்க மாட்டேன்.” காத்தவராயன் கோபமாகச் சொல்ல, “கல்யாணம் பண்ணிக்கப்போறது நானும் துவாரகாவும். அதுக்கு நீங்க சம்மதிக்க வேண்டிய அவசியம் என்ன வந்திருக்கு.” உறுதியான பார்வையோடு கேட்டான் நவநீதன்.
“என் குலத்தை காப்பாத்த வந்த சாமின்னு நினைச்சு இப்ப வரை உன்னை சாமின்னு தானே கூப்பிட்டுக்கிட்டு இருக்கேன். நேத்து வரை உன்னோட சொந்த சந்தோஷத்தை விட தாத்தாவோட மரியாதை தான் முக்கியம் னு தானே சொல்லுவ. இன்னைக்கு என்னடா ஆச்சு உனக்கு.
என் முதுகுக்கு பின்னாடி கண்ட வேலையும் செஞ்சு, என்னை அவமானப்படுத்தினதுக்குப் பதிலா என் நெஞ்சுக்கு நேரா நின்னு என்னைக் குத்திப் போட்டுட்டு என்னவும் செஞ்சிருக்கலாமே. இனி இந்த ஊருக்குள்ள எப்படி தலை நிமிர்ந்து நடப்பேன். என் குலத்துக்கு தீராத களங்கத்தைக் கொண்டு வந்துட்டியே.” என்று பேரனின் நெஞ்சிலும் தோளிலும் மாற்றி மாற்றி அடித்தார் காத்தவராயன்.
“எனக்கு துவாரகாவைத் தான் பிடிச்சிருக்கு. அவ கூட தான் வாழ ஆசைப்படுறேன். என்னோட ஆசைக்குத் தடையா யாரும் வருவதை நான் விரும்பல.” தாத்தாவின் அடிகள் அனைத்தையும் வாங்கிக்கொண்டே இலகுவான குரலில் உறுதியாகச் சொன்னான்.
“போதும் சாமி. நிறைய பேசிட்ட. என்ன தான் இருந்தாலும் அவ இன்னொருத்தன் பொண்டாட்டி. உனக்குள்ள இப்படியொரு நினைப்பு எப்ப வந்தது, எப்படி வந்தது, இதுவரைக்கும் உங்களுக்குள்ள என்ன நடந்ததுன்னு நான் கேட்க மாட்டேன். ஆனா இது நமக்கு வேண்டாம் சாமி. இது வெறுமென நீயும், துவாரகாவும் சம்பந்தப்பட்டது இல்ல. இரண்டு குடும்பம் சம்பந்தப்பட்டது.
நம்ம குடும்பத்தைக் கூட விடு. மாயவனும் அவரோட குடும்பமும் எதுக்காக தம்பி கஷ்டப்படணும். அவங்க பாவம். நம்மளோட செயல்களால் பலரை அழவைச்சுட்டு நாம நல்லபடியா வாழ்ந்திட முடியாது சாமி. நம்ம குலத்தையே இது அறுத்திடும்.” அஞ்சனை அழாத குறையாகச் சொன்னார்.
மாயவன் பாவம் என்கிற வார்த்தைகளைக் கேட்டதும் பல்லைக் கடித்தான் நவநீதன். அதைக் கவனமாகக் கவனித்த கண்ணப்பன், “துவாரகாவுக்கு புகுந்த வீட்டில் ஏதோ பிரச்சனை. அவளை அதில் இருந்து காப்பாத்த தான் இத்தனை நாடகம் னா கல்யாணம் எல்லாம் தேவையில்லை தம்பி. இப்ப நான் சொல்றேன். துவாரகாகிட்ட நான் பொறுமையா பேசுறேன். நிஜமாவே அவ அங்க சந்தோஷமா இல்லன்னா அவளுக்கும், மாயவனுக்கும் விவாகரத்து வாங்கிக்கொடுக்கிறது என்னோட பொறுப்பு.
நம்ம வீட்டுப் பொண்ணோட சந்தோஷமும், நிம்மதியும் நமக்கு முக்கியம் தான். ஆனா அதை அடைய உன்னோட எதிர்காலத்தை பணயம் வைக்கணும் னு எந்தக் கட்டாயமும் இல்லை. அப்பா சொல்றதைக் கேளு.” வாஞ்சையாய் பேசினார். தானே வாய் திறந்து சொன்ன பின்னாலும் தான் தவறு செய்ததாய் நம்ப மாட்டேன் என்று பிடிவாதமாய் நிற்கும் தந்தையை பெருமையாய் பார்த்தான் நவநீதன்.
அடுத்த நொடி, “துவாரகாவை மறுபடி அந்த நரகத்துக்குள்ள அனுப்பிடாத நவநீ. உன்னை நம்பி தான் நான் போறேன். என் பொண்ணை எப்படியாச்சும் வாழ வைச்சிடு. நான் வாழ்ந்த வாழ்க்கை என் பொண்ணுக்கு வரக்கூடாது.” என்கிற மாதங்கியின் பலவீனமான குரல் காதிற்குள் ஒலிக்க, “எனக்கும் துவாரகாவுக்கும் நீங்களே கல்யாணம் பண்ணி வைக்கிறீங்களா? இல்ல நாங்களே பண்ணிக்கனுமா? முடிவு உங்க கையில்.” விடாக்கொண்டனாக நின்றான்.
“மாயவா, உன் பொண்டாட்டி துவாரகா நாட்டாமை வீட்டில் தான் இருக்கா. அவளைக் கூப்பிட்டுக்கிட்டு நீ உன்னோட வீட்டுக்கு கிளம்பு. எங்க பையனை கட்டுப்படுத்தி வைக்கிறது எங்க பொறுப்பு. அதே மாதிரி உன் பொண்டாட்டியை கண்டிச்சு வைக்கிறது உன்னோட பொறுப்பு. இழுத்துட்டுப் போ அந்தக் கழுதையை.” என மாயவனை ஏற்றிவிடப் பார்த்தார் காத்தவராயன்.
ஆனால் மாயவனோ நவநீதன் கடைசியாகச் சொன்ன சில விஷயங்களில் உறைந்து போய் நின்றவன் இன்னும் சுயநினைவுக்கு வந்திருக்கவில்லை.
நவநீதன் அருகே வந்த நாட்டாமை, “உங்க வயசு என்னோட அனுபவம் தம்பி. தப்பு பண்ணவன் யாரு, உத்தமன் யாருன்னு என்னால் ஒருத்தர் முகத்தைப் பார்த்தே கண்டுபிடிக்க முடியும். உங்க முகத்தில் எனக்கு அளவுக்கு அதிகமான குற்றவுணர்ச்சி தான் தெரியுது.
துவாரகாவைக் காப்பாத்த தான் நீங்க இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கீங்கன்னா வேண்டாம் தம்பி. நாம ஒன்னும் மேலை நாட்டில் வாழல. வளரும் நாடான இந்தியாவில், உயிரை விட மானமும், மரியாதையும் தான் மேல் னு நம்பும் தமிழ்நாட்டில் வாழுறோம்.
இந்த கம்ப்யூட்டர் காலத்தில் கூட ஒரு பொண்ணோட ஒழுக்கத்து மேல சந்தேக விதை விழுந்துட்டா அவ சாகுற வரைக்கும் அவளால் தன்னை உத்தமின்னு நிரூபிக்க முடியாது. துவாரகாவைக் காப்பாத்துறேன்னு காலத்துக்கும் நீங்காத பழியை வாங்கிக்கொடுத்திடாதீங்க. அப்பா, அம்மா சொல்றதைக் கேளுங்க.” அறிவுரை சொன்னார்.
“என்னைத் தாண்டி அவளை யாரும் எதுவும் பேசிட முடியாது. அப்படியே பேசினால் கூட அதை எப்படி கடந்து போறதுன்னு அவளுக்கு நான் கத்துக்கொடுத்திடுவேன். என்னால் அது முடியும்.” எனத் தான் பிடித்த பிடியில் உறுதியாய் நின்றான் நவநீதன்.
காத்தவராயன் அருகே வந்த நாட்டாமை, “இதுக்கு மேல என்னால் எதுவும் பண்ண முடியாது காத்தவராயன். இப்ப மணி நாலு. ஆறு மணிக்கு வழக்கமான இடத்தில் பஞ்சாயத்து கூடும். அதுக்குள்ள உங்களால் முடிஞ்சா தம்பி மனசை மாத்துங்க. இல்லையா பஞ்சாயத்துக்கு வந்து சேருங்க.” என்றுவிட்டு சென்றார் அவர்.
அடுத்த அரை மணி நேரம் அந்த வீட்டில் தாத்தா, பேரன் இருவருக்கும் இடையே பலத்த வாக்குவாதம் நடந்தது. காத்தவராயன் ஒன்று சொல்ல நவநீதன் அதற்குப் பதில் சொல்ல என சத்தம் ஏற, அக்கம் பக்கத்தினர் கூட எட்டிப்பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.
அஞ்சனை தலையில் கை வைத்தபடி ஒருபக்கம் அமர்ந்துவிட, கண்ணப்பன் தந்தை மகன் இருவரில் யார் பக்கம் நிற்க என செய்வது அறியாது திகைத்து நின்றார். மாயவன் நவநீதன் சொன்ன விஷயத்தைப் பற்றி தன் வீட்டினருக்கு தெரியப்படுத்தி என்ன செய்வது என்று கேட்க, அவர்கள் தங்கள் பங்கிற்கு கூட்டு விவாதம் நடத்தி கடைசியில் துவாரகாவிற்கும் அவனுக்குமான உறவை அறுத்துவிட்டு தனியாக ஊர் வந்து சேரும்படி தகவல் தெரிவித்தனர்.
அழகுப் பெட்டகம் மற்றும் பொறுமையின் மறுஉருவமான துவாரகாவை இழக்க மனதே இல்லை மாயவனுக்கு. ஆனால் தான் இப்போது ஏதாவது செய்தால் நவநீதன் தனக்கும் தன் குடும்பத்திற்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடுவான் என்று புரிய பல்லைக் கடித்து பெற்றோர்களின் முடிவை ஏற்றுக்கொண்டான். ஆனால் சமயம் பார்த்து தன்னிடம் இருந்து தப்பிக்க திட்டம் போட்டு ஜெயித்த மனைவியைப் பழிவாங்க முடிவு செய்து பஞ்சாயத்திற்காக காத்திருந்தான்.
பேசிப்பேசி கடைசி வரை எந்த முடிவும் எட்டப்படாமல் போய் கடைசியாக பஞ்சாயத்து ஆரம்பிக்கும் நேரமும் வந்தது. அனைவரையும் பொதுவாக ஒரு பார்வை பார்த்துவிட்டு வீட்டை விட்டு வெளியே நடந்தான் நவநீதன்.
“தம்பி.” என்கிற அழைப்போடு வாசல் வரை அவன் பின்னால் சென்றார் அஞ்சனை. ஆனால் தாயை அவன் திரும்பியும் பார்க்கவில்லை.
பல ஆண்டுகளாக தான் கட்டிக்காத்த குடும்ப கௌரவம் இன்னும் சற்று நேரத்தில் காற்றோடு போகப்போகிறது என்பதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை காத்தவராயனால். அதனால் கண்ணப்பன் அசந்த நேரம் பார்த்து அருகில் இருந்த அறைக்குள் சென்று கதவடைத்துக்கொண்டார்.
மயிர் நீங்கின் உயிர் நீக்கும் கவரிமானாய் அவர் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொள்ள நினைக்க, அது புரிந்தது போல் கண்ணப்பன், அஞ்சனை இருவரும் தங்களால் முடிந்த மட்டும் பலமாக கதவைத் தட்டினர்.
சத்தம் கேட்டு மீண்டும் வீட்டினுள் வந்த நவநீதன், சில நொடிகள் மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு நின்று, நடப்பதை வேடிக்கை பார்த்துவிட்டு, தாத்தாவின் அறையின் பின்பக்கம் வந்து ஜன்னலைத் திறந்தான்.
அறைக்குள் காத்தவராயன் வெகு தீவிரமாக தன் வேஷ்டியில் தூக்கு கயிறு தயார் செய்துகொண்டிருந்தார். அதைப் பார்த்தவன் எதுவும் பேசாமல் அவன் கரத்திற்கு எட்டும் அளவில் மாட்டி வைக்கப்பட்டிருந்த அத்தை மாதங்கியின் மாலையிட்ட புகைப்படத்தை தள்ளிவிட்டான். எந்த நேரத்தில் எதைச் செய்தால் தன் வீட்டில் என்ன நடக்கும் என்பது அவனுக்கு அத்துப்படியாக இருந்தது.
அவன் எதிர்பார்த்தது போலவே சத்தம் கேட்ட திசையில் திரும்பிப் பார்த்த காத்தவராயனுக்கு மகள் முகத்தைப் பார்த்ததும் அதுவரை இருந்த கோபம், வீம்பு எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போக, நாற்காலியில் இருந்து இறங்கி கண்ணாடி ப்ரேம் நொருங்கிக்கிடந்த மகளின் புகைப்படத்தை எடுத்து மடியில் வைத்தார். மகளோடு மகிழ்ச்சியாய் வாழ்ந்த காலங்கள் கண் முன் வந்து போனது அவருக்கு.

Author: துவாரகா
Article Title: Episode 4
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.