வரம் 9
கண்கள் நிற்காமல் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்க, கொஞ்சம் கொஞ்சமாக வலி ஏறிக்கொண்டிருக்கும் மார்பில் கரம் வைத்தபடி, “ஏன் மச்சான் இப்படிப் பண்ணீங்க? உங்களை மலை மாதிரி நம்பினேனே. எந்தப் பேரை வாங்கிடக் கூடாதுன்னு பொண்ணாப் பிறந்தவ பண்ணக் கூடாத பாவத்தைப் பண்ணேனோ அந்தப் பட்டத்தை ஊர் அறிய எனக்கு வாங்கிக்கொடுத்துட்டீங்களே.” பரிதாபமான குரலில் கேட்டாள்.
எப்படி ஆரம்பிப்பது, என்ன ஆறுதல் சொல்வது என்று புரியாமல் அமைதியாக நின்றுகொண்டிருப்பவனைக் காண காண ஆத்திரம் வர, வெட்டவெளியில் நான்கு பேர் பார்ப்பார்கள் என்கிற எண்ணம் எதுவும் இல்லாமல் அவன் மார்பில் வேகவேகமாக அடித்தவள் ஒரு கட்டத்தில் சோர்வாகி மடங்கி தரையில் அமர்ந்து, தலையில் அடித்து அழ ஆரம்பித்துவிட்டாள்.
அவள் வேதனை புரிந்தது தான். ஆனாலும் இந்த நேரம் அவள் கணவன் என்னும் கொடூரனிடத்தில் இருந்து மொத்தமாக பிரிந்து வந்ததற்காக ஆனந்தம் தானே பட வேண்டும். அதை விடுத்து எதற்காக இந்த அழுகை என ஆத்திரம் கொண்டவன், “அடுத்தவன் ஆயிரம் பேசுவான். உன்னைப் பத்தி என்னைப் பத்தி பேசுறவன் அத்தனை பேரும் யோக்கியமானவனா என்ன? தன் முதுகில் ஒரு லோடு அழுக்கை வைச்சுக்கிட்டு அடுத்தவன் முகத்தில் இருக்கும் சின்ன மச்சத்தை கேலி பேசுறவங்க தான் இந்த உலகத்தில் அதிகம். யாரைப் பத்தியும் யோசிக்காத துவாரகா.
தாலிங்கிற பெயரில் ஒன்னை உன் கழுத்தில் கட்டிட்டு ஆக்டோபஸ் மாதிரி உன்னை இறுக்கமாக பிடிச்சு வைச்சிருந்த அந்த மாயவன்கிட்ட இருந்து உனக்கு விடுதலை கிடைச்சாச்சு. அடுத்து என்ன செய்யுறதுன்னு தான் பார்க்கணும்.” என்றான்.
“அடுத்து நான் என்ன செய்யணும் மச்சான், அதையும் நீங்களே சொல்லிடுங்க. உங்களைக் கல்யாணம் பண்ணிக்கணுமா? உங்க கூட சேர்ந்து வாழனுமா? குழந்தை பெத்துக்கணுமா? ஒன்னா இரண்டா இல்ல அதுக்கும் மேல வேணுமா?” உயிர்ப்பே இல்லாத குரலில் கேட்டாள்.
அவள் கண்களைப் பார்க்க தைரியம் இல்லாதவனாய் திரும்பி நின்று கொண்டவன், “இது எதுவும் தப்பில்லையே துவாரகா. காலத்துக்கும் நீ தனியா இருந்திட முடியாது. வாழ்க்கைத்துணையா நானும், எதிர்காலத்தில் நாம தளரும் போது பிடிச்சுக் காப்பாத்த நம்ம பிள்ளைங்களும் உனக்காக இருப்போம்.” என்றான்.
இந்த நொடியில் இருந்து இருவரின் வாழ்க்கைப் பாதையும் ஒன்று தான் என்பதை அவனுள் பலமுறை சொல்லிப்பார்த்து பதிய வைத்துக்கொண்டவன் இப்போது அவளுக்குள்ளும் செதுக்க ஆரம்பித்தான்.
“எனக்குத் தேவை ஒரு துணையா மட்டும் இருந்திருந்தா அந்த மாயவன் சொல்றதுக்கு எல்லாம் தலையாட்டிட்டு அவன் கூடவே இருந்திருப்பேன். என்னோட வயசான காலத்தில் என்னைப் பார்த்துக்க ஒரு துணை தான் வேணும் னா என் வயித்தில் உருவான குழந்தையைப் பெத்தெடுத்திருப்பேனே. எனக்கு இது இரண்டிலும் ஈடுபாடு கிடையாதே. அப்புறம் ஏன் மச்சான் எனக்கு நல்லது பண்றேன்னு இப்படி ஒரு காரியத்தைப் பண்ணி வைச்சிருக்கீங்க.
எந்தத் தப்பும் செய்யாத என்னைப் பார்த்து நடத்தை கெட்டவ, புருஷனுக்குத் துரோகம் பண்ணவ, விபச்சாரின்னு வெட்டவெளியில் நாக்கு மேல பல்லைப் போட்டு இந்த ஊர் உலகம் மொத்தமும் பேசும். நாலு சுவத்துக்குள்ள உங்களோட வாழ்ந்து அந்தப் பெயர்களை எல்லாம் நான் உண்மையாக்கணும். அப்படித்தானே மச்சான்.” என்றவளை சோர்வாகப் பார்த்தான் நவநீதன்.
“இப்ப நான் என்ன பேசினாலும் உனக்கு அது தப்பா தான் தெரியும். கொஞ்ச நாள் போனா நான் செஞ்ச எல்லாம் உன்னோட நல்லதுக்குத் தான்னு நீயே புரிஞ்சுப்ப. அதனால் அவசரப்பட்டு வார்த்தையை விட்டு என் மனசில் சஞ்சலத்தை உண்டாக்காம என்கூட வீட்டுக்கு வா.” என்றான்.
“எந்த வீட்டுக்கு மச்சான்?” பரிதாபமாகக் கேட்டவளைப் பார்த்து மனம் வேதனைப்பட்டது உண்மை. அதைப் பார்த்தால் இவளை மீட்டுக்கொண்டு வர முடியாது என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டவன், “நாம இரண்டு பேரும் பிறந்து வளர்ந்த வீட்டுக்கு, இனி நாம இரண்டு பேரும் சேர்ந்து வாழப்போற வீட்டுக்கு வான்னு நான் நவநீத கிருஷ்ணன் உன்னோட மச்சான் கூப்பிடுறேன்.“ என்றான்.
“சில நிமிஷத்துக்கு முன்னாடி வரை நான் அதை என்னோட வீடாத் தான் நினைச்சேன். நான் எடுத்த முடிவுக்காக அத்தை மாமா, தாத்தான்னு மூணு பேரும் என்மேல கோபமா இருந்தாலும் அவங்க காலுக்கு செருப்பா கிடந்தாச்சும் பழையபடி அவங்க மனசில் இடம்பிடிச்சிடலாம் னு நினைச்சேன். ஆனா அது எதுக்கும் வழியே இல்லாமப் பண்ணிட்டீங்களே.
இன்னைக்கு நீங்க பண்ண காரியத்துக்குப் பிறகு அந்த வீட்டில் எனக்குன்னு யாரு மச்சான் இருக்காங்க. அத்தை என்னை பாசமா பார்ப்பாங்களா? மாமா என்கிட்ட அன்பா நடந்துப்பாங்களா? எல்லாத்துக்கும் மேல தாத்தா என்னை அந்த வீட்டுக்குள்ள கால் வைக்க விடுவாங்களான்னு கூடத் தெரியல.” என்று அழுகையோடு சொன்னவள், “என்னைப் பாரு துவாரகா.” என்றவன் வார்த்தைகளைக் கேட்டு தன்னிச்சையாக நிமிர்ந்தாள்.
கண்கள் முழுவதும் தேங்கி நின்ற கண்ணீருக்கு நடுவில், மேற்கூரை இல்லாமல் வெட்ட வெளியில் வெயிலில் நான்கு மனிதர்களின் உயரத்திற்கு உயர்ந்து நிற்கும் அய்யனார் சிலை போல் நின்று கொண்டிருந்தவனைப் பார்த்தாள்.
“உன் அத்தை உனக்குத் தராத பாசத்தை, உன் மாமா உனக்குத் தராத பாதுகாப்பை, உன் தாத்தா உனக்குத் தராத கண்டிப்பை நான் கொடுப்பேன். காலத்துக்கும் உன்னைப் பொக்கிஷமாப் பார்த்துப்பேன். பதிலுக்கு நீ என்னைப் பார்த்துக்கிட்டா போதும்.” என்றவனை முறைக்க முயன்று தோற்றுப்போய் அதற்கும் கண்ணீர் தான் விட்டாள் துவாரகா.
“நடந்த விஷயத்தால் பாதிப்பு உனக்கு மட்டும் இல்ல, எனக்கும் சேர்த்து தான். நானும் தான் தப்பான பெயர் வாங்கிட்டு நிக்கிறேன். நானும் தான் உறவுகளை இழந்துட்டு நிக்கிறேன்.” என்றவன் சில கணங்கள் தடுமாறி தவித்து, நஞ்சை தொண்டைக்குழிக்குள் தடுத்து நிறுத்திய சிவனைப் போல் உயிர் உருக்கும் உணர்வுகளை தொண்டைக்குழிக்குள் அமிழ்த்தி சாதாரணமாகிவிட்டு, “எனக்காக நீ பெருசா எதுவும் செய்ய வேண்டாம். உனக்காக நான் செய்யும் எதையும் தடுக்க வேண்டாம்.” என்றான்.
“இதெல்லாம் எதுக்காக மச்சான்?” என்றவளுக்கு இன்னமும் காரணம் புரியவில்லை தான்.
“எல்லாம் அத்தைக்காக தான்.” என்று சத்தமாகச் சொன்னவன், “கொஞ்சம் எனக்காகவும் சேர்த்து தான்.” என்பதை மெதுவாகச் சொல்லிக்கொண்டான்.
“பஞ்சாயத்தில் நீங்க சொன்னது உண்மைன்னு இப்பவும் என்னால் நம்ப முடியல. நீங்களும், நானும் இத்தனை வருஷமா ஒரே வீட்டில் இருந்திருக்கோம். ஆசையா என்ன ஆராய்ச்சியா கூட உங்க பார்வை என் மேல பட்டது கிடையாது. திடீர்னு வந்து அன்பாம், ஆசையாம் யாரை ஏமாத்தப் பார்க்கிறீங்க. என் அம்மா சாகும் போது எதையாவது உளறினாங்களா? அதுக்காகத் தான் இப்படி நீங்களும் கஷ்டப்பட்டு, என்னையும் கஷ்டப்படுத்துறீங்களா?
அது தான் உண்மைன்னா வேண்டாம் மச்சான். செத்துப்போனவங்க ஆசையை நிறைவேத்த உயிரோட இருக்கிறவங்க சிரமப்படுறதை அந்த ஆண்டவன் கூட சரின்னு ஏத்துக்க மாட்டான். ஐஸ்வர்யா அக்கா கூட உங்களுக்கு நிச்சயம் நடக்கும் போது நான் உங்க ஜோடிப் பொறுத்தத்தைப் பார்த்திருக்கேன். உங்களுக்கு அவங்க தான் சரி.” என்றாள்.
“பேசி முடிச்சுட்டியா? நீ ரொம்ப வீக்கா இருக்க. அதனால் கொஞ்ச நாள் கம்மியாவே பேசு. அப்புறம் இன்னொரு முறை ஐஸ்வர்யா கூட என்னை சேர்த்து வைச்சுப் பேசாத. என்ன இருந்தாலும் இன்னொரு வீட்டில் போய் வாழ வேண்டிய பொண்ணு. கொஞ்ச நாள் எல்லோரையும் மறந்திடு, என்னை, உன்னை மட்டும் நினை.” என்று அவள் கரத்தைப் பற்றி தரையில் இருந்து எழுப்பியவன் முன்னே நடக்க ஆரம்பித்தான்.
“இப்ப பிடிக்கிற உன்னோட இந்தக் கையை காலத்துக்கும் நான் விட மாட்டேன். அத்தை மேல இருக்கிற அன்பு, உன்னோட வாழ்க்கை இப்படியாக நானே ஒரு காரணம் ஆகிட்டேனேங்கிற குற்றஉணர்ச்சி, உன்மேல் இருக்கும் அன்பு தான் இப்போதைய என்னோட நிலைப்பாடு. இருந்தாலும் இது இப்படியே வாழ்க்கை முழுக்க தொடராது. எல்லாம் சரியாகிப்போகும். இந்த உலகத்தோட ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் நீ அனுபவிப்ப. உன்னை நான் சந்தோஷமா பார்த்துப்பேன்.” என்று தன்னோடு சொல்லிக்கொண்டான். அவன் நினைக்கும் அளவு அது அத்தனை சுலபம் இல்லை என்பது அவனுக்குத் தெரியவில்லை பாவம்.
இருவரும் வீட்டு வாசலிற்கு வந்து சேர்ந்த அடுத்த கணம் கனமான உலக்கை ஒன்று அவர்களுக்கு முன்னால் வந்து விழுந்தது. பதறிப்போய் தடுமாறி விழப்பார்த்த துவாரகாவை தன் பின்னால் மறைத்துக் காத்தான் நவநீதன். இந்தக் காட்சியை முறைப்போடு பார்த்துக்கொண்டு வீட்டினுள் இருந்து வெளியே வந்தார் காத்தவராயன்.
“பரம்பரை பரம்பரையா என் பாட்டன் முப்பாட்டன் காப்பாத்தி வைச்சிருந்த குடும்ப கௌரவத்தை சாக்கடையில் கரைச்ச சந்தனமா அலங்கோலமாக்கிட்டு, எதுக்காக இங்க வந்த. என் அஸ்தியையும் அதே சாக்கடையில் கரைக்க நினைக்கிறியா?” பேரனைப் பார்த்து ஆக்ரோஷமாகக் கேட்டார்.
கனல் தெறிக்கும் அவர் கண்களை சளைக்காமல் நேருக்கு நேராகப் பார்த்தபடி, “என்னால் போன குடும்ப கௌரவத்தை நீங்களும் உங்க பங்குக்கு போக வைக்க வேண்டாம். எதுவா இருந்தாலும் வீட்டுக்குள்ள போய் பேசிக்கலாம்.” அமைதியான குரலில் சொன்னவன், துவாரகாவின் கரத்தைப் பிடித்தபடி வீட்டு வாசல்படியில் கால் வைக்கப் பார்த்தான்.
“சொல்லிக்கிட்டே இருக்கேன் என் வீட்டுக்குள்ள எதுக்காக வர.” என்றபடி நவநீதன் நெஞ்சில் காத்தவராயன் ஓங்கி மிதிக்கப் போக, குறுக்கே வந்து நின்றார் கண்ணப்பன். மகனைப் பார்த்ததும் கோபம் சற்றே தணிய, “கண்ணப்பா இவனை இங்க இருந்து போகச் சொல்லு.” என்றார்.
“ஏன் போகணும்?” என நவநீதனும், “அவன் எங்கப்பா போவான்?” என கண்ணப்பனும் ஒரே நேரத்தில் கேட்டனர்.
“எங்கேயோ போகட்டும். எங்கேயோ போய், யார்கிட்டையாவது கை கட்டி வேலை செஞ்சு, ஊரும் உறவும் பேசும் ஏச்சு பேச்சுகளைத் தாங்கிட்டு ஒருவாய் சோறு திங்க முடியாம தடுமாறும் போது தான் அவன் செஞ்ச தப்போட வீரியம் அவனுக்குப் புரியும்.” என்றபடி வந்தார் அஞ்சனை.
குடும்பத்தினரிடம் சண்டையிடும் நினைப்பில் முன்னேறப் பார்த்த நவநீதனை அவன் கரத்திற்குள் நடுங்கிக்கொண்டிருந்த துவாரகாவின் கரம் தடுத்தது.
தலைமுடியை கோதிக்கொண்டவன், “அப்பா, அம்மா, தாத்தா உங்களோட கோபம் எனக்குப் புரியுது. ஆனா இது நான் ஆசையிலோ ஆத்திரத்திலோ எடுத்த முடிவு கிடையாது. நல்லா யோசிச்சு எடுத்த முடிவு. என்மேல் நம்பிக்கை இருந்தா என்ன ஏதுன்னு கேட்காம கொஞ்ச நாள் அமைதியா இருங்க.” என்றான்.
கண்ணப்பனுக்கு இதுவே போதுமானதாக இருந்தது. ஆனால் அஞ்சனைக்கும், காத்தவராயனுக்கும் எதுவுமே போதுமானதாக இல்லை.
மகன் எதற்காக இப்படிச் செய்திருப்பான் என்று கண்ணப்பன் யோசித்ததால் அவரால் சற்றே இயல்பாக இருக்க முடிந்தது. ஆனால் மற்ற இருவரும், தாங்கள் ஆசையாக வளர்த்தவன் இப்படிச் செய்துவிட்டானே என்பதிலேயே நின்றுவிட்டதால் அவர்களால் கோபத்தை தவிர வேறு எதையும் காட்ட முடியவில்லை.
நவநீதன் அசந்த நேரத்தில் அவன் பின்னால் பாதுகாப்பாக நின்றிருந்த துவாரகாவை அஞ்சனை இழுக்க, அவளை மீண்டும் தன் பாதுகாப்பிற்குள் கொண்டு வரும் நோக்கத்தில் நவநீதனும் தோள் பிடித்து தன் பக்கம் இழுத்தான். அஞ்சனைக்கு இருந்த வெறிக்கு அவர் பலம் அதிகமாக இருக்கவே, நவநீதனின் பிடி விலகி துவாரகாவின் கழுத்திற்குச் சென்ற அவனின் கரம் அவள் கழுத்தில் கிடந்த தாலியோடு வெளியே வந்தது.

Author: துவாரகா
Article Title: Episode 9
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.