NTYU - 14

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 90

Member
May 5, 2026
39
50
18
Bengaluru
தேடல் 14

file_00000000429071fab8adee49068168f4.png


செந்தாழினியை பற்றி முற்றும் அறிந்தபின் இனி காலம் தாழ்த்தாது அவளை தன்னோடான வாழ்க்கை பயணத்தில் முறையாக இணைக்க விரைவில் தன் வீட்டினரிடம் இதை பற்றி பேச வேண்டுமென நினைத்து தன் வேலைகளை கவனித்தான். வேதாவை நினைத்து தீரனுக்கு பிரமிப்பாக இருந்தது. ஏனோ வினுயுகன் விஷயத்தில் தன் அணுகுமுறை தவறோ என காலங்கடந்து எண்ணினான்.

கிருஷிகாவின் படிப்பு முடியவும் அடுத்த வருட படிப்பிற்காக ஆரல்வாய்மொழியில் உள்ள புகழ் பெற்ற பள்ளிகளுக்கு அலைந்து கொண்டிருந்தாள் செந்தா. இது வரை தீரனின் அருகாமையில் கிருஷிகாவும் தெளிந்திருந்தாள். இக்கொடியசம்பவத்துக்கு பிறகு கிருவை பெண்களுக்கென தற்காப்பு கலை பயிற்றுவிக்கும் கூடத்தில் அவளை சேர்த்து விட்டிருந்தான். உடல் வலிமையோடு நெஞ்சுரம் மிக கிரு இனி எவரையும் சமாளிக்கும் திறனை படிப்படியாக வளர்த்து கொண்டாள்.

அவள் பாதுகாப்பை பெரியவர்களிடம் வலியுறுத்தி எப்பொழுதும் அவள் மேல் ஒரு கண் வைக்குமாறு சொன்னவனை பார்த்து வேதா..

“கிரு எங்க பொறுப்பு, இனி பெரிய பாப்பாவை கொஞ்சம்..” என முடிப்பதற்குள் தீரன் சிவந்த முகத்தை திருப்பி..

“ஆல்வேய்ஸ் ம்மா..” என அவர்களிடம் விடைபெற்று தோவாளைக்கு திரும்பினான் தீரன். மொத்தமாக ஊரை விட்டு செல்லும் முன் தன்னிடம் ஒரு வார்த்தையாவது பேசுவான் என எதிர்ப்பார்த்து ஏமாந்து போனாள் செந்தா.

விரைவில் தீரனுக்கு நல்ல பெண்ணாக பார்த்து மணமுடிக்க வேண்டுமென கமலா தரகர்களிடம் சொல்லி வைத்தார். அன்றிரவு உணவு வேளையில் தீரன் தன் அத்தை மற்றும் அன்னையிடம் செந்தாழினியின் கடந்த கால வாழ்க்கையை சுருக்கமாக கூறி..

“இனி நீங்க தான் சொல்லனும்..” என இருவரையும் பார்க்க..கமலா அமைதியாயிருந்தார். தன் மருமகனின் ஆசையை கேட்டு அதிர்ச்சியுற்ற மரகதம் அவனிடம்..

“வாழையடி வாழையா பேர் புகழோடு வாழ்ந்த ஜமீன்தார் குடும்ப வாரிசு நீ..போயும் போயும் அந்த கெட்டு..”என சொல்ல வரும் முன் கடுங்கோபத்துடன் தீரன்..

“அத்தை..பாத்து வார்த்தைய விடுங்க..அவளை பத்தி எதுவுமே தெரியாம தாலி கட்டியிருக்கேன்.. இப்பவே அவ என் மனைவி தான்..”என கடுங்குரலில் எச்சரித்தான் தீரன். இது வரை அதிர்ந்து பேசியிராதவன் நேற்று வந்தவளுக்காக தங்களை கடிகிறான் என்பதையே ஜீரணிக்க முடியாமல் போனது இரு பெண்களுக்கும். மகனை வெறித்தபடியிருந்த அன்னையை பார்த்து..

“ஊரறிய எப்ப அவ கழுத்துல மூணு முடிச்சு போட்டேனோ அப்பவே நாங்க கணவன் மனைவி தான்..அவ விருப்பத்துக்கு மதிப்பு கொடுத்து தற்காலிகமா விலகி நிக்கிறேன்..ருஷி விஷயத்துக்கப்புறம் இனி உங்களை சேர்த்து அவங்களும் முழுக்க என் பொறுப்பு..உங்க சம்மதம் கிடைக்கலனா நாங்க தனி தனியாகவே வாழ்ந்து முடிச்சிருவோம்..யாழி முறையா என் வாழ்க்கைக்குள் வரணும்..இல்ல இப்படியே இருந்துடுவேன் உங்க கூட..என் குடும்ப பாசத்தை வச்சு என்னை மிரட்டினா உங்களுக்கு முன்னமே என் உயிர் போயிடும்..இதுக்கு மேல என்னை கட்டாயபடுத்தாதீங்க..” என திட்டவட்டமாக தன் விருப்பத்தை தெரிவித்திருந்தான் தீரன்.

விஷயத்தை கேள்விப்பட்ட நிலா, ராஜீவன் தீரனுக்கு பரிந்து பேசவும் இனி ஆகப்போவது ஒன்றுமில்லை என தீரனிடம் பேசுவதையே படிப்படியாக குறைத்துக்கொண்டனர் கமலா மற்றும் மரகதம். தீரனும் புரிந்து அனைவரையும் அரவணைத்தபடி தன் வேலைகளை கவனிக்கலானான்.

நிலா ராஜீவன் வாழ்க்கை தெளிந்த நீரோடையாய் பயணிக்க, வீட்டிற்கு வரும் மகளின் முகப்பொலிவில் நிம்மதியுற்றாலும் தன் மகள் வயிற்று குழந்தையை கண் குளிர பார்த்துவிட்டால் இந்த கட்டை நிம்மதியாக வேகும் என மனதில் நினைத்தாலும் அதற்கான தருணத்தை ஆவலாய் எதிர்ப்பார்த்தார் மரகதம்.

கிருஷிகாவிற்கு ஆரல்வாய்மொழியில் உள்ள பள்ளியில் இடம் கிடைத்துவிட, செந்தாவிற்கும் இடமாற்றம் விரைவில் கிடைக்க மொத்தமாக திருநெல்வேலியை விட்டு ஆரல்வாய்மொழியில் குடிபெயர்ந்தாள். அவளின் கதையை கேட்டதிலிருந்து தூக்கம் என்பதே எட்டா கனியாய் ஒவ்வொரு இரவிலும் அவளை தன் கைவளைவுக்குள் வைத்து புரையோடிய அவள் கறுப்பு பக்கங்களை மறக்கவைத்து இறுதி வரை உன்னுடன் நானிருப்பேனடி என அவளுக்கு தான் மட்டுமே அனைத்துமாகி உருமாற வேண்டும் என தவித்து போனான் தீரன்.

அன்று தன் மாமன் மகனுக்கு புது வண்டி வாங்கும் முன் புதிதாக வந்துள்ள பைக்குகள், இதர விவரங்களை சேகரிக்க மான்யா தோவாளையில் உள்ள வினுவின் வி.என் ரைடர்ஸ் ஷோரூமிற்கு வந்திருந்தாள். ஊரார் பேச்சுக்கு கட்டுப்பட்டு வினு ஒதுங்கி விட ப்ரணவ் முழு பொறுப்பை ஏற்று கொண்டான்.

அங்குள்ள பணியாளரிடம் தேவையான விவரங்களை சேகரித்தவள் தன் மாமன் மகனிடம் ராஜஸ்தான் மொழியில்..

“தீரஜ் எந்த வண்டி டிசைட் பண்ணிருக்க..?

Yamaha R15 V4 முன்னி..

E- Vehicles பாக்கலாமேடா..

இல்ல எனக்கு இது தான் வசதி..

ஓகே கலர் சூஸ் பண்ணிட்டியா..?

ம்ம்..டார்க் ப்ளூ..” என புன்னகையுடன் கூற தன் மாமன் மகனின் தோளில் கை போட்டவாறே..

“எப்ப டா ட்ரீட்..? “ என கேட்டவளை சிறு நகையுடன் தள்ளி நிறுத்தியவன்..

“இந்த வீக்கெண்ட் நீயே சூஸ் பண்ணு..என் பிரண்ட்ஸ்க்கும் சேர்த்தே கொடுத்துடலாம்..” என்றான் அந்த வெள்ளாவியில் வைத்து வெளுத்த தீரஜ். ஷோரூமில் மான் நுழைந்ததிலிருந்து கறுஞ்சிறுத்தை ஒன்று அவளை வேட்டையாடும் விழிகளுடன் பாரத்திருந்ததை அவள் அறியவில்லை.

தேவையான ஆவணங்களை கொடுத்து முழுவதும் பணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளுமாறு தன் முதலாளியிடம் இருவரையும் அனுப்ப உள்ளே வந்தவள் ஷாக்கடித்தது போல நின்றுவிட்டாள் மான்யா. விலையுயர்ந்த வெண்மை நிற லினன் ஷர்ட், கருநீல நிற டெனிம் அணிந்து கண்களில் டன் கணக்கில் கடுமையை சுமந்தவண்ணம் லேப்டாப்பில் பார்வையிடுபவனை அந்நிலையிலும் ரசித்தன மானின் விழிகள்.

இவளை ஏறெடுத்தும் பார்க்காதவன் வெள்ளாவி பையனிடம் சம்பிரதாய சிரிப்புடன்..

“கங்கிராட்ஸ்..ம்ம்..” என பைஃலை பார்த்து..

“தீரஜ் ரைட்..? எனிதிங் எல்ஸ் டு யூ லுக் பாஃர்..?” என சரளமான ஆங்கிலத்தில் பேசியவனை வாய் திறந்து பார்த்தாள் மான்யா. தீரஜ்..

“நத்திங் சார்..

குட்..கமிங் ப்ரைடே நீங்க கேட்ட கலர் ல வண்டி தயாராயிருக்கும்..ஹாப்பி & சேஃப் ரைடிங் தீரஜ்..

தாங்க்யூ ..நான் ஊருக்கு புதுசு..அதான் என் அத்தை பொண்ணை கூட்டிட்டு வந்தேன்..

ஓ..ஹாய்..” என ஒற்றை சொல்லில் அவளை விலக்கி வைத்து அவன் கைகளை குலுக்கி வெளியே அனுப்பினான். தப்பிச்சோம் டா சாமி என முதலில் ஓடியவள் மீண்டும் திரும்பி வந்தாள்.

தலையை திருப்பாமல் இதழ் வளைத்து நக்கலுடன் அவளிடம்..

“என்ன வேணும் மிஸ்..ஆர்…?

மிஸஸ் ஆக இந்த கருப்பண்ணசாமி மனசு வைக்கனுமே..?” என்றாள் மான்யா. சட்டென ப்ரணவ்..

“தோ பார்றா அசலூர் ஆட்டக்காரிய..ஏன் இன்னிக்கு நைட் அவன் வரலயா..?

ஏன் நீ வர்றியா..?” என மான்யா கேட்க, சரேலென நாற்காலியை காலில் தள்ளி எழுந்தவன்..சிவப்பேறிய விழிகளுடன்..

“வார்த்தையை விடறதுல கவனமிருக்கட்டும்..முக்கியமா என்க்கிட்ட..” என அவளருகில் வந்து விரல் நீட்டி எச்சரித்தவனை அசட்டை செய்தவள் அவன் பாண்ட் பாக்கெட்டினுள் சற்று வெளியே வந்திருந்த அவள் வண்டி சாவியினை உருவியவள்..

“என்னை காயப்படுத்தனும் னு தான இத ஒளிச்சு வச்ச..? இப்ப சொல்றேன் நல்லா மண்டையில ஏத்திக்கோ..என்னை மட்டம் தட்ட கன்னா பின்னா னு அந்த வாய் பேசினாலும் உன் கண்ணு வேற சொல்லுதே மை ஸ்வீட் டார்க்கி..” என உதடுகள் குவித்து மான் கொஞ்சி பேச அவள் ‘டார்க்கியில்’ காண்டானவன்..

“ஏய்..சீ..சாதாரணமா பேசு..இந்த நிக் நேம் லாம் அந்த பால் டப்பாவோட நிறுத்திக்க ஆமா..கிளம்பு முதல்ல..” என தன் இருக்கைக்கு சென்றான் ப்ரணவ். தன் நிறத்தை குறிப்பிட்டு அவள் வைத்த பெயரை அறவே வெறுத்தான். ஆனால் அவனுடைய மானின் கண்களுக்கோ அந்த நிறமே தனி போதையை கொடுக்கிறது என எங்ஙனம் அறிவான் இக்கவர்ச்சி கண்ணன்?

புது வண்டியை டெலிவரி எடுக்க வெள்ளிக்கிழமை தீரஜ் மட்டுமே வந்திருக்க, எங்கே அந்த பாலைவனச்சேலயை காணோம்..? என கேட்டுவிட துடித்த நாவை அடக்கிய ப்ரணவ் அதே சம்பிரதாய புன்னகையுடன் புது வண்டிக்கான சாவியை கொடுக்க..’க்ளிக்’ எனும் சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தான். பிஸ்தா நிற பாந்தினி புடவையில் பளிச்சென நின்றவளை கண்டு உள்ளம் தடுமாறவும் சட்டென அங்கிருந்து வெளியேறும் முன் மான்யா..

“ஹலோ டேம்..சாரி மேனேஜர் சார்..புது வண்டி எங்க சொந்த காசுல வாங்குறோம்..ஒரு போட்டோ ப்ளீஸ்..” என விஷமத்துடன் கேட்பவளை தவிர்க்க முடியாமல் ப்ரணவ் திரும்பி மீண்டும் சாவியை தீரஜிடம் கொடுக்க தன்னவனை மட்டுமே வளைத்து வளைத்து படம் பிடித்துக்கொண்டாள் மான்யா.

அன்று மாலை தன் வாட்சப்பில் புதிதாக யாரோ ‘பறக்கும் முத்தம்’ ஸ்டிக்கரை அனுப்பியிருக்க, திகைப்புடன் டிபியை பார்த்ததும் ப்ரணவின் இதயம் எம்பி குதித்தது.

அழகான கஸ்தூரி பெண்மானின் உடலில் ப்ரணவின் முகத்தை ஒட்டவைத்து அதை டிபியாக வைத்திருந்தாள் மான்யா.

இவளை என பல்லை கடித்தவன் அவளுக்கு உடனே அழைக்க, மறுமுனை உடனே எடுக்கப்பட்டு மௌனமாக இருந்தது. ப்ரணவ்..

“ஏய்..அறிவிருக்கா உனக்கு..?எதுக்கு என் போட்டோவை உன் டிபியா வச்சிருக்க..அதுவும் கண்றாவியா மான் உடம்புல..?” என பட்டாசாய் பொரிந்தவனிடம்..

“அம்புட்டு லவ்வு என் கருத்த மச்சான் மேல..

மான்யா..லாஸ்ட் & பைஃனல் வார்னிங்..என் கலரை பத்தி எப்பவுமே நீ பேச கூடாது..காட் இட்..?

அதான் எனக்கு பிடிச்சிருக்கு டார்க்கி..

ஓ அவ்ளோ ஆசயா மாமன் மேல..? தென் லெட்ஸ் ட்ரை லிவிங்டுகெதர் ரிலேஷன்ஷிப்..ஒத்துவரலைனா ப்ரச்சினையில்லாம பிரிஞ்சிரலாம் என்ன சொல்ற..?

குட் சாய்ஸ்..ஆனா எனக்கு பிடிக்கலயே..என்ன தான் வடகத்திய பொண்ணாயிருந்தாலும் நான் பிறந்து வளர்ந்த இந்த மண்ணோட பாரம்பரியம், கலாச்சாரத்தை ரொம்ப மதிக்கிறேன்..சோ அது செட்டாகாது..அப்படி என்ன சாருக்கு லவ் ப்ரேக் அப்..இதுல கண்ல மாட்டின பெண்களையெல்லாம் வச்சு செய்யுறீங்க..?

….

டார்க்கி..

….

ஹலோ..

….

அரே பிரஹான் பிஷ் லைன் ல இருக்கியா..?

ம்..

என்ன பீலிங்சா..? என்ன உன் பிராண்ட்..?

நீ அடிக்கிற அதே ப்ராண்ட் தான்..

ஓ நீயும் ரம்..பா ரம்..பா பையனா..? சரி என் ப்ராண்டையே அனுப்பிவைக்கிறேன்..தனியா குடிச்சிட்டு உடனே மட்டையாயிடு..இன்னொருநாள் பொறுமையா கேட்குறேன் உன் கதையை..ஒன் மோர் திங்..என் டிபி உனக்கு மட்டும் தான் விசிபிளா இருக்கும்..இதனால கட்டதுரைக்கு எந்த பாதகமும் வராது..மறக்காம சாப்பிட்டு போத்திட்டு படுத்துடு..” என போனை அணைத்தாள் மான்யா. கடந்து போன காதல் நினைவுகளில் மூழ்கிய ப்ரணவின் கண்கள் சற்றே கலங்கியது.

பாலை நிலம் போல வறண்ட இதயத்தில் நீரூற்றாய் உயிரூட்ட வருமோ அவனின் கஸ்தூரி மான்?


தொடரும்.
 
Last edited:

Author: STN - 90
Article Title: NTYU - 14
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.