தேடல் 18
ஊரே ஒன்று கூடி பழி சுமத்திய பின்பும் அஞ்சாது தர்மமும் அதன் வழி வரும் கர்மாவில் நம்பிக்கை வைத்தபடி தன் வேலையை பார்த்து கொண்டிருந்த நிவிக்கு அன்று மதியம் வந்த செய்தி அவள் தலையில் பேரிடியை இறக்கியது. மதிய உணவு இடைவேளை முடிந்து வகுப்பிலிருந்தவளுக்கு தன் பெற்றோர் இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கபட்டுள்ளனர் என தெரிந்து ஓடோடி வந்தாள்.
தன் மகள் மேல் அபார நம்பிக்கை வைத்திருந்த சபாவிற்கு தன் சொல்லை மீறி நடந்து நேற்று அனர்த்தமாய் திருடி என பொய் பட்டம் வாங்கியதோடு நில்லாமல் இத்தனை காலமாய் சம்பாதித்திருந்த நற்பெயரை களங்கபடுத்தியதை தாங்கி கொள்ள முடியாமல் மதிய உணவில் மனைவிக்கும் தெரியாமல் கொடிய விஷத்தை கலந்து இப்போது கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தனர்.
ஐசியூ ஜன்னல் வழியாக இருவரையும் கண்ணீர் பெருக பார்த்தபடி நின்றவளுக்கு மனமே விட்டு போனது. ‘பழி பாவத்திற்கு அஞ்சி உயிரை மாய்த்துக்கொண்டால் மட்டும் அவப்பெயர் நீங்கிவிடுமா..துணிந்து நின்று அதை தவறென நிருபிக்க தவறிட்டீங்களே அப்பா..’ என உள்ளம் ஊமையாக அழ..
“அக்கா..” என ஓடி வந்தான் ஷிவநந்தன். ஹாஸ்டலில் தங்கி படித்து கொண்டிருப்பவனை உடனே அழைத்து வந்திருந்தான் நவீன். அவனுடன் அவன் பெற்றோர்களும் நிவியின் கை பற்றி ஆறுதல் கூறினர்.
தமக்கையை ஏறிட்டு ஷிவ்..
“என்னாச்சு அப்பா அம்மாக்கு..? “ என கேட்க பதில் சொல்ல முடியாமல் அவனை இறுக்கி கட்டிக்கொண்டாள் நிவி. தானும் அவளை அணைத்தபடி நின்றவனை நெருங்கி நவீன் இருவரையும் தட்டிக்கொடுத்து..
“மதியம் சாப்பிட்டது ஏதோ ஒத்துக்கல..பயப்பட ஒன்னுமில்ல ஷிவ்..” என்றான். சில நிமிடங்களில் மருத்துவர் வெளியை வரவும் நிவி..
“டாக்டர்..அப்பா மா எப்படி இருக்காங்க..?” என கேட்க..
“சாரி மா உங்கப்பா வரும் வழியிலேயே இறந்துட்டாரு..அம்மா பல்ஸ் ரொம்ப டவுனா இருக்கு..பிழைக்கிறது கஷ்டம். உங்கள கடைசியா பார்க்க பிரியபடறாங்க..” என அவள் கைகளை பிடித்து கொண்டு மெதுவாக சொல்லவும் உடைந்து அழுதுவிட்டாள் நிவி. அக்காவை தேற்ற முடியாமல் தானும் கலங்கி நின்றான் ஷிவ். நவீன் அவளை பற்றி..
“நிவி..அம்மாவை பார்க்கலாம்…வா ஷிவ்..” என இருவரையும் இழுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தான். உயிரை கையில் பிடித்தபடி தன் மகளை கண்ட தேவிகா கண்ணால் அருகில் அழைக்க, தொண்டையடைக்க அன்னையை நெருங்கினாள் நிவி. அவள் கையை பற்றி..
“நி…வி…எனக்…கே தெரி..யா..து..இப்ப…டி..உங்..க..ள..அனாதையா விட்டு..போவேன்..னு..நம்மள சிதைச்…ச அந்த முரு..கன கோயில் பொறுப்புல நீ வர விடக்கூடாது..தம்பி இ..னி..உன் பொறுப்…” என முடிக்கும் முன் அவர் உயிர் பிரிந்தது. இன்று காலையில் சிரித்தபடி வழியனுப்பிய தாய் கோழையான தந்தை உயிரற்ற சடலமாய் இப்போது..அடுத்து என்ன என மலங்க விழித்து நின்றாள் நிவேதிதா. அழுதழுது கண்ணீர் சுரப்பி வற்றிபோயிருந்தன அவளுக்கு.
நவீனின் உதவியுடன் பெற்றவர்களை நல்லமுறையில் அடக்கம் செய்து அனைத்து சாங்கியங்களும் முடித்து இதோ அக்காவும் தம்பியும் மட்டுமே குருவிக்கூட்டில். நவீன் நிவியிடம்..
“எல்லாத்தையும் கடந்து வா னு சொல்றது சுலபம் ஆனா உன் வேதனை..நீயா தான் வெளிய வரணும் நிவி..நான் கோபிசெட்டிபாளையம் போலீஸ் ஸ்டேஷன் ல சேர முடிவு பண்ணிட்டேன்..நீயும் படிப்பு முடிஞ்சு வேலை கிடைச்சதும் உடனே நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்..அது வரை நீயும் ஷிவாவும் என் பொறுப்பு..என் அம்மா அப்பா உன் கூட தான் இருப்பாங்க..பாத்துகங்க பா..” என அனைவரிடமும் விடைபெற்று கிளம்பினான். தன்னவனின் கூற்றில் உள்ள நிதர்சனத்தை புரிந்து கொண்டு தன்னை மீட்டுக்கொண்டாள் நிவி.
நாட்கள் வேகமாய் நகர முருகன் சபாபதியின் பதவிக்காக கோயில் நிர்வாகிகளை நெருக்க அவர்களிடம் சென்ற நிவேதிதா..
“என் தம்பி மேஜர் ஆகி வர வரைக்கும் இன்டர்மீடியேட்டரா யாரை வேணா அப்பாயின்ட் பண்ணுங்க இவரை தவிர..” என்றாள். அவள் கூற்றில் வெகுண்டு முருகன்..
“கல்யாணம் ஆகாமயே குடும்பம் நடத்துற உனக்கெல்லாம் இங்க வரவே தகுதியில்ல..நீ பேசாத..” என எச்சரிக்க பதிலுக்கு ஆவேசத்துடன்..
“வார்த்தைய அளந்து பேசு..நான் எப்படி னு இவங்க எல்லாருக்குமே தெரியும்..நீ எப்படி செக்ரட்ரி போஸ்ட்க்கு வருவ னு நானும் பாக்குறேன்..”என சவால் விட்டாள். சபாவின் மகள் என்பதற்காகவே அவளிடம் வீண் வாதம் செய்ய விரும்பாமல் ஒதுங்கி நின்றனர் கோயில் நிர்வாகிகள். ஆயினும் முருகனிடம்..
“கோயில் சம்பந்தபட்டத பத்தி மட்டும் பேச்சு இருக்கட்டும் முருகா…சபா பொண்ணு பர்சனல் விஷயமெல்லாம் இங்க பேசக்கூடாது.. “ என எச்சரித்தனர். நிவி இருக்கும் வரை பதவி கிடைக்காது என தெரிந்து சமயம் பார்த்து அவளை சாய்த்து விட காத்திருந்தான் முருகன்.
சத்தியமங்கல நகரின் எல்லையில் மரகததிற்கென பண்ணை வீட்டை வாங்கி கையொடு அவள் பெயரில் பதிவு செய்து மகன், மனைவி தங்கையை ஊருக்கு அனுப்பி வைத்த வேலாயுதம் முருகனுக்கு துணை நின்றான்.
மாதம் ஒரு முறை நிவி, பெற்றோரை பார்த்து செல்லும் நவீன் அன்றும் கோபிசெட்டிபாளையம் திரும்பும் போது தன்னவளுடன் பின்னால் அமர்ந்தபடி பல நாள் கழித்து மனதில் இதம் பரவ இச்சிறு பயணத்தை ரசித்தான். வண்டியை நிறுத்தி பாதையோரமாய் இருந்த சோளக்கருது வேகவைத்து விற்பவரிடம் இரு கருதுகளை வாங்கி கொடுத்தபடி நிவி..
“என்ன டாணாக்காரர் பேஃஸ் பளபளங்குது..?
ம்ம்..என் கற்றாழையோட உரசிட்டே வந்தேன் ல..அதான்..
பாத்து..ரொம்ப உரசினா கீறல் விழுந்துடும்..
இதுல ரொம்ப தெளிவு தான்..”என ஏக்கம் இழையோட கூறியவனின் கைக்குள் தன் கையை கோர்த்து..
“நீங்க இல்லை னா என்னால நினைச்சு கூட பார்க்க முடியல நவீன்..உங்களோட நூறு வருஷம் வாழ்ந்து காட்டி..” என சொல்வதற்க்குள் இருவர் பின்னந்தலையிலும் கட்டையால் பலமாக தாக்கபட்டனர். கைகளில் ஆயுதத்துடன் சுற்றி வளைத்த கும்பலை கண்டு பயந்து கருது விற்பவன் ஓடிவிட நவீனும் நிவியும் மயங்கி விழுந்தனர்.
கண்களை சிரமப்பட்டு மெல்ல திறந்து பார்த்த நவீனுக்கு எதிரே கால் மேல் கால் போட்டபடி கையில் மது பாட்டிலுடன் புகை விட்டவாறே அமர்ந்திருந்த முருகனை கண்டு அப்போதே அவனை இரண்டாய் கூறு போடுமளவு நரம்பு புடைத்தாலும் தன்னவளை அச்சத்துடன் தூழாவினான். விகார சிரிப்புடன் முருகன்..
“என்ன இன்ஸூ…உன் ஆள தேடுறியா..? அதோ அந்த ரூம் ல இருக்கா..இப்ப வரைக்கும் நீங்க டீசன்ட் லவ்வர்ஸ் னு எனக்கும் தெரியும்..ஆனா பாரு அவங்கப்பனுக்கு அப்புறம் அவன் வாரிசு தான் கோயிலை பாத்துக்கனுமா..ஏன் எங்களயெல்லாம் பாத்தா எப்படி தெரியுது..?” என கேட்க சுற்றிலும் நான்கு தடியர்கள் ஆளுக்கு ஒரு சரக்கு பாட்டிலுடன் கண்களில் போதையேற ஆங்காங்கே சரிந்திருந்தனர். இக்கயவர்களிடமிருந்து எப்படி நிவியை காப்பாற்றுவது என தவிக்கும் போதே நிவி அறையிலிருந்து பதட்டத்துடன் தள்ளாடியபடி வெளியே வந்தான் அவன் நண்பன். முருகனிடம்..
“ப..ங்..க…ளி…அந்த பொண்ணு உசிர விட்ருச்சு டா..” எனக்கூற அடித்த போதை இறங்கி தலையை பிடித்தபடி உள்ளே ஓடினான் முருகன்.
உரிமையிருந்தும் ஓர் வரையறைக்குள் தன்னை அனுமதித்த தீப்பாவை மாற்றான் தொட அனுமதிப்பாளா..?போராட முயன்று தன்னை மாய்த்துக்கொண்டவளை நினைத்து உள்ளுக்குள் சிறு நிம்மதியும் பெருந்துயரமும் ஒரு சேர உணர்ந்தான் நவீன். கண்ட நாள் முதல் இக்கணம் வரை எப்படியெல்லாம் வாழவேண்டும் என கனவு கண்டிருந்த ஜோடிக்கிளிகளை உருத்தெரியாமல் நசுக்கி கொன்றவர்களை இப்போதே காவு வாங்க துடித்தன அவன் கைகள்..கேவலம் சிறு பதவிக்கென அப்பாவி குடும்பத்தையே சிதைத்த இருவரின் குடும்பத்தை வேரறுக்காமல் தன் உயிர் போக கூடாது..இதையாவது நிறைவேற்று அன்னையே..என கண்ணீர் மல்க வேண்டினான் நவீன்.
நிவேதிதாவின் மரணம் எதிர்ப்பார்க்காததாய் அவர்களை உலுக்கி போட்டதும் சில நொடி திகைத்த முருகன் வேலாயுதத்தை அழைக்க விழுந்தடித்து ஓடி வந்தான் அவன். அப்பாவி பெண்ணின் உயிர் போக காரணமாயிருந்த பங்காளியை எப்படி காப்பாற்றுவது என யோசித்து இறுதியில் நவீனை பலமாக தாக்கி அவன் மூச்சு பேச்சின்றி வீழ்ந்ததும் இருவரையும் வண்டியில் ஏற்றி அருகிலிருந்த மலைக்குன்றுக்கு சென்று அங்கிருந்த பள்ளத்தாக்கில் இருவரையும் உருட்டி விட்டிருந்தனர் வேலா மற்றும் முருகனும்.
இரு தினங்கள் கழித்து ஓர் குடிசை வீட்டில் கண் திறந்து பார்த்தான் நவீன். குப்பையென வீசியெறிந்த அன்றே அங்குள்ள மலைவாழ் மக்களின் மூலம் மீட்கபட்டு வைத்தியரின் பச்சிலை வைத்தியத்தில் நவீனின் நினைவு திரும்பியது. இருப்பினும் உடல் முழுக்க குறிப்பாக வலது கால் பலத்த காயம் பட்டிருந்ததால் எழுந்து நடமாட ஓர் மாதமாகலாம் என்றார் வைத்தியர். இறுதி முச்சுள்ளவரை தன் காதலியாகவே மடிந்து போன தன்னவளின் கோர முடிவு அணையா தீயாய் உள்ளுக்குள் தகிக்க தங்களை அழித்த அரக்கர்களை வதம் செய்ய தக்க தருணத்திற்காக காத்திருந்தான் நவீன். இவ்வாறு முன்கதை யை சுருக்கமாக கூறி முடித்தவன் முகமூடியோடு..
“ஏதோ சொல்வாங்களே அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் னு..இப்பலாம் இன்ஸ்டன்ட் கர்மா..எந்த பதவிக்கு ஆசபட்டு எங்க குடும்பத்தை நிர்மூலமாக்குனானோ அந்த முருகனை வேரோடு அறுக்க போனா அவன் வாழ்ந்ததற்கான தடயமே இல்லாம அவன் வம்சமே ஒரு விபத்துல மொத்தமா அழிஞ்சிடுச்சு..அன்னைக்கு நானும் மாமாவும் சந்தோஷபட்டது கொஞ்சம் தான்..உன் அப்பன், அத்தைக்காரி லாம் என் அக்காக்கு பண்ண கொடுமைக்கு நீ அனுபவிக்கறதுல்லாம உனக்கு பொறக்காத இவளும் இப்ப உயிரை விட போறா..” என அம்மலையே அதிரும்படி கர்ஜித்தான் அவன்..அவன் ஷிவநந்தன்.
கூண்டு இணைக்கப்பட்டிருந்த கயிறை அறுக்கும் முன் கண்களில் பீதியோடு தன்னையே பார்த்து நின்றிருப்பவர்களை நோக்கிய ஷிவாவின் கண்கள்..
“தீரா..” என அழைத்தபடி வரும் கமலா மற்றும் மரகதத்தை பார்த்ததும் தீகங்குகளை வீசியது. சட்டென கயிறை விட்டு மரகதத்தை மட்டுமே பார்வையால் துளைத்தபடி..
“தீரா..நீ உயிரை விடறதுக்கு முன்னாடி முக்கியமா ஒன்னை தெரிஞ்சுக்கனும்..உன் அத்தை பொண்ணு சம்பந்தபட்டது..” என்றதும் அனைவரும் திகைப்புடன் அவனை பார்த்தனர்.
இதற்க்குள் அருவியின் பின்புறம் கரடுமுரடான மலைபாறைகளில் சத்தமில்லாமல் ஏறி ஓர் பாறையின் பின்னால் மறைந்து நின்று சுற்றிலும் ஒரு நொடி நோட்டம் விட்டான் வினுயுகன்.
மாலை மங்கிய வெளிச்சத்தில் கூண்டிலிருந்த கிருஷிகாவை உற்று நோக்கிய வினு, அவள் பயமின்றி அமைதியாக உறங்கி கொண்டிருக்கிறாள் என தெரிந்து தூரத்தில் வட்ட கம்பிக்கு நடுவில் நின்றபடி ஆட்டுவிக்கும் சர்க்கஸ்காரனை எப்படி நெருங்குவது என யோசிக்கலானான்.
தொடரும்.

Last edited:
Author: STN - 90
Article Title: NTYU - 18
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.