NTYU - 23

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 90

Member
May 5, 2026
39
50
18
Bengaluru
தேடல் 23

file_00000000d6447206a865e42f3c8ec84d.png

தை மாத கிருத்திகை நாளன்று தோவாளை திருமலை முருகன் மலைக்கோயிலுக்கு தன் மகன் மற்றும் மருமகள் வாழ்க்கை மீண்டும் மலர விளக்கேற்றி வேண்டிக்கொள்ள அதிகாலையிலேயே வந்திருந்தார் கமலா. நெய் தீபமேற்றி கந்தனிடம் தன் மக்கள் ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ அருள் புரியுமாறு மனமுருக வேண்டிக்கொண்டு பிரகாரத்தை சுற்றி வந்து அமர்ந்தார்.

சற்று தள்ளி செட் புடவை பட்டு பாவாடையுடன் பக்தர்களுக்கு பிரசாதம் கொடுக்கும் செந்தா மற்றும் கிருஷிகாவை கண்டதும் ஏனோ பக்கத்தில் தன் மகனும் பட்டு வெள்ளை வேட்டிச்சட்டையில் இருந்தால் நிறைவாக இருக்குமே என மனதில் மின்ன அவர்களை நெருங்கினார்.

கமலாவை கண்டு அளவாய் புன்னகைத்த செந்தா..

“நான் உன்க்கிட்ட கொஞ்சம் பேசனும் ம்மா..

இன்னிக்கு லீவு தான்..வாங்களேன் வீட்டுக்கு அப்படியே சாப்பிட்டு கிளம்பலாம்..

ஒரு நிமிஷம்..” என நிலாவை அழைத்து தான் செந்தா வீட்டிற்கு செல்வதாகவும் வர தாமதாமாகும் என தெரிவித்த கமலா செந்தாவுடன் கிளம்பினார்.

கிருவை பள்ளிக்கு அனுப்பிவிட்டு கருப்பட்டி காபியுடன் வந்த செந்தா..

“காபி எடுத்துக்கங்க..” என்றாள். காபி பருகிக்கொண்டே நேரடியாக விஷயத்திற்கு வந்தார் கமலா.

“சந்தர்ப்பத்துக்கு தகுந்த மாதிரி மாத்தி மாத்தி பேசறேன் னு யோசிக்காம என் பையனை கல்யாணம் பண்ணிக்கோ ம்மா..நீ மருமகளா என் வீட்டுக்குள்ள வந்தா என் பையனோட நிலா வாழ்க்கைக்கும் ஒரு வழி பிறக்கும்..உன்னால தான் முடியும்..

உங்களை எனக்கு புரிஞ்சுக்க முடியுது..வெளிப்படையா சொல்லப்போனா கணவன் மனைவி உறவை நினைச்சாலே எனக்கு இன்னும் உடம்பு நடுங்குது..நான் உங்க மகன் வாழ்க்கையில வெறும் காகித பூ மாதிரி தான் இருப்பேன்..முதலும் கடைசியுமா நான் ஆசபட்டதே உங்க பையனை மட்டுந்தான்..அவருக்கே இப்படி ஒரு சூன்யமான வாழ்க்கை கொடுக்க என்னால முடியாது ம்மா..நாளாக நாளாக உங்களுக்கு இந்த உண்மை புரியும்..என்னை மன்னிச்சிடுங்க ம்மா..” என தெளிவாக கூற அனைத்தையும் அமைதியாக உள்வாங்கியபடி அமர்ந்திருந்தார் கமலா. செந்தா..

“நிலா விஷயமா நானே அவர்க்கிட்ட பேசணும் னு இருந்தேன்..கவலைப்படாதீங்க உங்க பசங்க நல்ல மனசுக்கு நல்ல படியா இருப்பாங்க..” எனக்கூற ஏனோ தம் மக்களை விடுத்து செந்தாவை தன் மகளாக நினைக்க தோன்றியது கமலாவிற்கு. எப்படியும் தீரனிடம் இவள் தப்பிக்க முடியாது என புரிந்துக்கொண்டு கமலா..

“உன் நல்ல மனசுக்கு உனக்கும் ஒரு விடிவு காலம் வரணும் ம்மா..நான் கிளம்புறேன்..” என எழுந்தார் கமலா.

தன் மகனிடம் செந்தாவை பற்றி முழுமையாக கூறி..

“பாப்பா வாழ்க்கை செட்டிலானதும் என்ன பண்ணுவியோ அவளை என் மருமகளா முறையா நீ தான் கூட்டிட்டு வரணும்..” என்றார் கமலா. அவள் வாயால் தன்னை விரும்புவதாக சொன்னதை கேட்டு இதமாக உணர்ந்தான் தீரன்.

பலரின் கவனத்திற்க்குரிய அந்த பாப்பாவோ தனது அடுத்த கட்ட பயிற்சியாக அந்தரத்தில் பைக்குடன் பறந்து தலைகீழாக உருண்டு மீண்டும் தரையை வந்தடைந்தது. தோவாளை ஊரை விட்டு சற்று தள்ளி இதற்க்கான பயிற்சியினை மேற்கொண்டிருத்த நிலன்யாவை நோக்கி புயலென வந்த வினுயுகன் அங்கிருந்த பயிற்சியாளரின் முகத்தில் சில காகிதங்களை வீசி..

“இப்பவே எல்லாத்தையும் நிறுத்துங்க..தக்க பாதுகாப்பில்லாம இப்படி ஏர் ஸ்டன்ட்ஸ் பண்றது இல்லீகல் னு உங்களுக்கு தெரியாது..?

சார்..நான் வேணா வேணா சொல்ல நிலன்யா தான் எதுவானாலும் நான் பாத்துக்குறேன் னு போர்ஸ் பண்ணி என்க்கிட்ட ட்ரெய்னிங் எடுக்குறாங்க..

அவளே சொன்னாலும் இனி ஒருத்தர் இங்க இருக்க கூடாது…அவுட்..” என கர்ஜித்தான் வினு. தன்னை விட்டால் போதும் என திரும்பி பாராமல் ஓடினார் அவர்.

வினுயுகன் வந்தது தெரிந்தும் பைக் ஓட்டியபடியே வீலீங் செய்து கொண்டிருந்தவளை அசையாமல் பார்த்து நின்றான் வினு. ‘ கிழிஞ்சுது போ..’ என நினைத்தபடி அவனை நெருங்கி வண்டியை நிறுத்தியும் அவளையே உறுத்து விழித்து கொண்டிருந்தவனை கண்டு சிறு பயத்துடன் தலக்கவசத்தை கழட்டியவள் அவன் முகத்தை தவிர்த்து..

“என்னோட ரொம்ப நாள் ஆசை..அதான்..” என முடிக்கும் முன் கையை ஓங்கினான் வினு. இதை எதிர்பாராத நிலா சட்டென தலையை நகர்த்த அவளை தன்னிடம் இழுத்தபடி வண்டியை ஓங்கி உதைத்தான். தரையை உராய்ந்துக்கொண்டு சற்று தள்ளி உருண்டு விழுந்தது அவள் வண்டி.

சட்டென அவனிடமிருந்து விலகி..

“எதுக்கு என் வண்டியை உதைச்சீங்க..?” என எகிறிக்கொண்டு வந்தாள். அவள் கண்களை தவிர்த்து..

“என் உயிரோட விளையாட உனக்கு யாரு டி உரிமை கொடுத்தது..?” என கேட்க முதலில் திகைத்தவள் பின்னர் பல்பு எரிய அன்றும் இன்றும் என்றுமே மாறா காதலுடன் சண்டையிடுபவனிடம்..

“இதே ஷிவநந்தன் இருந்திருந்தா இப்படி கேப்பீங்களா..?” என அசராமல் கேட்டவளை பார்த்து திகைத்து அவளை விலக்கினான் வினு. சில நொடிகளில் தன்னை சுதாரித்துக்கொண்டு..

“பொண்ணுங்க பைக் ரேசிங் இப்ப தான் வெளில தெரிய ஆரம்பிக்குது..அதுக்குள்ள நீ வாரி விழுந்து மொத்தமா மண்ண போட்டு மூடப்போறியா..இடியட்..

ஹலோ..என்ன ஓவரா பேசறீங்க..? என் லைஃப்பை பாத்துக்க எனக்கு தெரியும். மொதல்ல இந்த காவிய காதல் சீனெல்லாம் போடாம உங்களுக்கான லைஃப் பாருங்க..வந்துட்டான் 21 st சென்ட்சுரி சலீம்..” என முணுமுணுத்தபடி நகர்ந்தவளை ஆயாசாமாக பார்த்த வினு..

“இன்னும் எத்தனை நாள் இப்படி உன்னையும் ஏமாத்திட்டு என்னையும் ஏங்க வைப்ப லயா..?” கரகர குரலில் கேட்டவனின் வேதனை அவளையும் தாக்க கண்களில் முனுக்கென வந்த கண்ணீரை மறைக்க திரும்பி நின்றாள். அவள் முதுகை பார்த்தவாறே..

“உன்னை நான் எந்தவிதத்திலயும் எதுக்குமே கம்பெல் பண்ண மாட்டேன். ஆனா உன்னை தவிர வேற யாரையும் என் மனைவியா என்னால பாக்க கூட முடியாது..எங்கேயோ தூரமாயிருந்தாலும் நீ நல்லாருக்கே ன்ற சந்தோஷமே என்னை வாழ வைக்கும் லயா..தயவு செய்து இனி இந்த மாதிரிலாம் பண்ணாத..” எனக்கூறியவனை நெருங்கி அவன் சட்டை காலரை பற்றி..

“இதோ என் மேல நீ காட்டுற அக்கறை இந்த அன்பு, இந்த அதீத காதல் இதுக்கெல்லாம் நான் என்ன திருப்பி கொடுத்தேன் உனக்கு..? யார் என்ன சொன்னாலும் நான் உன்னை நம்பியிருக்கனும்..ஆனா..நான்..நான்..உன்னையும் நம்பல..நம்ம காதலையும் நம்பல..உன் கண் முன்னாடி இன்னொருத்தனுக்கு மனைவியா..காதலை மறந்து அடுத்த கட்ட வாழ்க்கைக்கு ரெடியானதை ஈசியா கடக்க முடியல டா..” என அவன் மார்பில் சாய்ந்து அவள் தேம்பியழ துடித்து போனான் வினு. கதறியழுபவளை காண பொறுக்காமல் அவளை விலக்கி..

“அடச்சீ..அழறத நிறுத்து..எப்ப பாத்தாலும் இன்பீரியரா பீஃல் பண்ணிட்டு..உனக்கே தெரியாத உன்னை பத்தி சொல்லவா..? கழுத்துல தாலி ஏறியதும் கட்டினவனை தவிர வேற யாரையும் நினைக்காதது நீ பிறந்த மண்ணோட குணம் டி குரங்கு.. அப்படியே நீ ரெடியாயிட்ட னு ஷிவ்வும் சராசரி கணவனா உன்னை தொட்ட நெக்ஸ்ட் செகன்ட் உசிரை விட்டிருப்ப..இதான் நடந்திருக்கும்..உன்னை கணவனா தொடற உரிமை எனக்கு மட்டுந்தான் லயா..”என எங்கோ பார்த்தபடி பேசியவனின் விழிகளையே பார்த்து நின்றாள் நிலா. அவள் விழி வீச்சில் சற்று தடுமாறிய வினு..

“என்ன புதுசா பாக்குற மாதிரி பாக்குற..?

இப்பவும் என்னை அதே காதலோட தான் பாக்குறியா யுகன்..?

ஏன் உனக்கென்ன..?
போடிங்..நம்பாதவங்களுக்கு புரிய வைக்க முடியாது..

உன்னை நம்புறதுக்கு என்னைக்காவது என் கண்ணை பாத்து பேசியிருக்கியா..?பதில் சொல்லு..என் கண்ணை பாத்து பதில் சொல்லு..நான் பாக்காத போது என்னை விழுங்குற மாதிரி பாத்துட்டு நான் உன்னை பாக்கும் போது பாக்கமாட்டேங்குற ஏன் டா ஏன்..? “ என அவன் தோள்களை பற்றி உலுக்க அவள் விழிகளோடு விழிகள் கலந்து அளவில்லா நேசத்துடன்..

“ஏன் னா உன் கண்ணை பாத்தா அடுத்த செகன்ட் உன்னை ஆளில்லா தீவுக்கு கடத்திட்டு போய் குடும்பம் நடத்தி புள்ள குட்டிகளோட சந்தோஷமா வாழ்ந்து கடைசி காலத்துல உன் மடியில உயிரை விட தோணுது..செய்யட்டுமா..?இல்லை உன்னை இழுத்துட்டு போனாலும் நீ தான் என் கூட வாழ்ந்துடுவியா?
உனக்கு நடந்தது கல்யாணமே இல்ல னு உயிரை கொடுத்து நிருபிச்சிட்டு போயிருக்கான் ஒருத்தன்..ஊரென்ன நினைக்கும் னு நீ வேணா என்னை விட்டு விலகியேயிருக்கலாம்..ஆனா என்னால முடியாது..உன்னை பாத்த அடுத்த செகண்ட் எனக்கு நீ வேணும்..என் மனைவியா உரிமையா என் வாழ்க்கைக்குள் வரணும்..நீ தயங்கி நிக்கற, நான் தனியா நிக்கிறேன் அவ்ளோதான்..” என அவள் கைகளை தட்டிவிட்டு பைக்கில் ஏறியவன் ஆக்சிலேட்டரை உறும விட்டான். அவன் பதிலில் ஆணி அடித்தது போல மூச்சு விட மறந்து நின்றிருந்தாள் நிலா.. இவனை எப்படி தவற விட்டேன்..? யுக யுகமாய் பல காதலை இந்த பூமி கண்டிருக்க விண்ணை தாண்டி தனக்காக கோட்டை கட்டி கண் விழியிலே காதல் விதைக்கும் தன் வினுயுகனை கண்டு மெய் சிலிர்த்தது நிலன்யாவிற்கு. தொடர்ந்து ஒலித்த உறுமலில் அமைதியாக இவள் ஏறவும் காற்றை கிழித்து கொண்டு பறந்தது வண்டி நிலவின் மாமனை நோக்கி.

தன் வயலில் நிலக்கடலையை சாகுபடி செய்து கொண்டிருந்த தீரனை வினு ஒரு விசிலடித்து அழைக்க..அது யாரென நிமிர்ந்த தீரன் பின்னே நிலா நிற்பதை கண்டு ஓடி வந்தான். வினு அவனிடம் ..

“உன் நிலாக்குட்டி ஏர் ல பைக்கோட அந்தர் பல்டியடிக்கிறது கூட தெரியாம இங்க என்ன ******?

நிலக்கடலைய தான்..

அப்பப்போ வீட்லயும் ஒரு கண்ணை வைடா பருப்பு..

ஆமா என்ன ராகு மட்டும் தனியா வந்திருக்கு..? கேது வரலயா..ஆங் வந்துருச்சு..” என அவர்களை நோக்கி வந்த ப்ரணவை பார்த்து கேட்ட தீரனை முறைத்த வினு..

“முழுசா 71/2 ய கைக்குள்ள வச்சிருக்க..நீ தான் பத்திரமாயிருக்கனும்..” என ப்ரணவ்வுடன் கிளம்ப தீரன் நிலாவை கேள்வியாக பார்த்து நின்றான். நிலாவோ..

“சேஃப்டி மெசர்ஸ்யோட தான் ஸ்டன்ட் பண்ணேன் மாமா..நிறைய வாங்கிட்டேன் ப்ளீஸ்..” என கயிற்று கட்டிலில் சாய்ந்தாள். டன் கணக்கில் ஆசையிருந்தும் தேவையில்லாததை நினைத்து தற்போதைய வாழ்க்கையை தொலைத்துக்கொண்டிருக்கும் இருவர் மீதும் பற்றிக்கொண்டு வந்தது தீரனுக்கு.

தொடரும்.
1778468203196.png
 

Author: STN - 90
Article Title: NTYU - 23
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: ஷமீம்