STN - 90
Member
தேடல் 25

விழிதீரனின் மனைவியாய் செந்தாழினி புகுந்த வீட்டில் வலது காலை எடுத்து வைக்க கூடவே ஒரு குட்டி மற்றும் வலிமையான பாதமும் இணைந்து வீட்டுக்குள் நுழைந்தது அத்தனை கவித்துவமாய் இருந்தது.
பொதுவாக மணமக்களுக்கு செய்யும் எந்த சடங்கும் வேண்டாம், வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்துகொள்கிறோம் என தீரன் ஏற்கனவே கூறியதால் எவ்வித சங்கடமுமின்றி பூஜை அறையில் விளக்கேற்றி விட்டு கூடத்தில் வந்து அமர்ந்து கொண்டாள் செந்தா.
புது இடம், புதிய மனிதர்களுடன் தான் இனி மீதி வாழ்க்கை எனும் மிரட்சி கண்களில் தெரிய அவளை சகஜமாக்கும் பொருட்டு நிலன்யா..
“வாங்கக்கா தோட்டத்தை சுத்தி பாக்கலாம்..கிரு வா..” என இருவரையும் அழைத்து செல்ல குலதெய்வ பூஜை முடிந்த அலுப்பில் இருபெண்களும் சற்று ஓய்வெடுக்க தீரன் தன் பைக்கில் வெளியே கிளம்பினான்.
தன் கணவன் வெளியே செல்கிறான் என தெரிந்தும் வீட்டுக்குள் வந்த செந்தாவிடம் நிலா..
“உங்களுதும் கிரு ட்ரசஸ், முக்கியமான திங்க்ஸ் லாம் மேலே மாமா ரூம் ல இருக்கு..ட்ரஸ் சேஞ் பண்ணிகங்க..கிரு வா ட்ரஸ் மாத்திப்பியாம்..” என அவளை தன் அறைக்கு கூட்டி சென்றாள்.
தீரனின் அறையில் நுழைந்தவளுக்கு அவள் மனநிலை அவளுக்கே விளங்காமல் தன் ட்ராலியில் இருந்து பருத்தி சேலையெடுத்து அணிந்தவளை இரவு உணவிற்காக மரகதம் அழைக்க கீழிறங்கி வந்தாள். உணவு முடித்து மறுநாள் கிரு பள்ளிக்கு எடுத்து செல்லும் புத்தகங்கள் சீருடை என எடுத்து வைக்க கிருஷிகா தூக்க கலக்கத்துடன் வந்தாள். பெரிய கிங் சைஸ் தேக்கு மர கட்டிலில் புது பெட்கவர்கள், போர்வை, தலையணைகள் என வசதியாக இருக்க கிருஷிகாவை படுக்க வைத்து அவள் உறங்கியதும் கீழிறங்கி வந்தாள் செந்தா. கூடத்து சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி அமர்ந்திருக்கும் கமலாவை நெருங்கி..
“நீங்க இன்னும் தூங்கலயா ம்மா..?
தீரனுக்காக காத்திருக்கேன் செந்தா..நேரத்தோட வந்தான் னா சாப்பாடு போடனும்..இல்ல பாலை குடிச்சிட்டு படுத்துடுவான்..
நீங்க போய் படுங்க..நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்..
இல்ல ம்மா..நீ நேரமா படு..வேலைக்கு போற புள்ள..இவன் வர நடுசாமம் ஆயிடும்..அந்த அருவிக்கரைக்கு போய் அவன் தோஸ்த்துக்கிட்ட இன்னைக்கு நடந்தத சொல்லனுமில்ல..எனக்கு இது பழக்கம் தான்..” எனக்கூறவும் அமைதியாக தன் அறைக்கு திரும்பிய செந்தா படுத்து விட்டாள்.
நள்ளிரவில் வீட்டு கதவை தட்டும் சத்தத்தில் விழித்த செந்தா மாடியிலிருந்து பார்க்க தீரன் நின்றிருந்தான். கூடத்தில் கமலா இல்லை என தெரிந்து இறங்கி கதவை திறந்தாள். தன் மனையாளை எதிர்ப்பார்த்திராத தீரன் வியப்புடன்..
“ஹேய்..நீ இன்னும் தூங்கலையா..?
பர்ஸ்ட் ஷிப்ட் முடிஞ்சு இப்ப செகண்ட்..” என கதவை தாழிட்டவளிடம்..
“நீ படு..நானும் அஞ்சு நிமிஷத்துல வர்றேன்..” என தீரன் மாடியேற அவனை பின் தொடர்ந்தாள் செந்தா.
ஐந்து நிமிடத்தில் குளித்து இரவு உடையுடன் வந்தவன் தன் ருஷியை ஒரு பார்வை பார்த்து கீழிறங்கி பால் தம்ளருடன் அறைக்கு திரும்பியதும் புடவையிலிருந்து குர்திக்கு மாறியிருந்த மனைவியை பார்த்து உள்ளம் நொறுங்க அறை பால்கனியில் நின்றான்.
ஒரு மணி நேரமாகியும் படுக்கைக்கு திரும்பாத கணவனை கூப்பிடுவதா வேண்டாமா என பட்டிமன்றம் நடத்தியவள் ‘என்ன அக்மார்க் மனைவி மெட்டீரியலா மாறிட்டோம்..இவனுக்கெல்லாம் பாவம் பாக்க கூடாது.. வச்சு செய்யனும்..தூக்கம் வந்தா தன்னால வருவான்..’ என நினைத்து கண்களை மூடினாள் செந்தா.
மறுநாள் கிருஷிகா பள்ளிக்கு கிளம்பிச்சென்றும் முழித்திராத கணவனை எழுப்ப மனமின்றி கீழே கமலா அறையில் குளித்து விட்டு வேலைக்கு கிளம்ப தன் ஹேண்ட்பேக்கை எடுக்க வந்தாள் செந்தா. குளித்து கையில்லா பனியன் வெள்ளை வேட்டியுடன் தலை வாரி கொண்டிருந்தவன் மனைவியை பார்த்து..
“யாழி..இனி நம்ம ரூம் லயே குளிச்சு ட்ரஸ் மாத்திக்க..அந்த டைம் நான் வெளிய போயிடறேன்..சராசரி கணவனா உன்னை ரசிக்கறது என் உரிமை..அதுக்காக உன் மேல பாய்ஞ்சிடவும் மாட்டேன்..உன் பயமும் தெரியும்..உன் ஆசையும் புரியும் எனக்கு..நமக்குள்ள நடக்கிறது இந்த ரூமை தாண்டி எங்கேயும் போக வேண்டாமே..நீயும் நானும் வேற வேறயா ட்ரீட் பண்ணாத..மனசு வலிக்குது..எதுனாலும் என்க்கிட்டயே கேளு..
எனக்கு வாட்டர்மிலன் ஸ்டாரை சந்திக்கனும்..ஏற்பாடு பண்ண முடியுமா..?
அது யாரு..?” தெரிந்துக்கொண்டே கேள்வி கேட்டவனை அறியாது செந்தா..
“என்ன தர்பூச தெரியாதா..? அவ்வா..என்ன ஒரு அவமானம்..என்ன ஒரு அவமானம்..? “ என நொடிக்கு நொடி மனையாளின் முகத்தில் பிரதிபலிக்கும் உணர்வுக்குவியல்களில் தன்னிடம் மட்டுமே வெளிப்படும் இளவயது செந்தாழினியின் சேட்டைகளில் மீண்டும் மீண்டும் தன்னை தொலைத்து நின்றான் தீரன்.
காதருகே கைகளை கொண்டு வந்து
‘நடிப்ப்ப்ப்ப்பு அரக்கன்’ என அவளின் அபிநயத்தில் சித்தம் தடுமாற கண் சிமிட்டாமல் பார்த்து நின்ற கணவனின் முன் சொடக்கிட்டு..
“என்ன ப்ரீஸ் ஆயிட்டீங்க..? அவரை மீட் பண்ண முடியுமா முடியாதா..?
அவரை மீட் பண்ணி என்ன பண்ண போற..?
என்னமோ தான் மட்டுமே நடிக்க பிறந்தவன் னு பீலா விட்டிட்டிருக்க ஆள்க்கிட்ட உன்னை விட சூப்பரா ஆக்ட் பண்றவன் எங்க வீட்லயும் இருக்கான் னு சொல்லனும்..
யாரது..?
நீங்க தான்..
பாவம்..புது பொண்டாட்டி னு விட்டு பிடிச்சா என்னையவே டீஸ் பண்ணுவியா..? “ என அவன் அருகே வருவதற்குள் பேக்கை எடுத்துக்கொண்டு ஓடியே போனாள் செந்தாழினி. குறும்புக்கார மனைவி கரும்புசாறாய் மனதில் தித்தித்திட நிறைவான புன்னகையுடன் வயலுக்கு கிளம்பினான் அந்த மாடர்ன் விவசாயி.
ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள ஸ்பிதி பள்ளத்தாக்கில் (Spiti Valley) உள்ள காசா(Kaza) எனும் கிராமத்திற்கு தான் இம்முறை ட்ரெக்கிங் வந்திருந்தான் வினு. அங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு மேற்கொண்டு பழகுவதற்கு மிக மென்மையானவர்களாக இருந்தனர். வழக்கமான பனிபொழிவு காட்டிலும் இவ்வருடம் அதிகமாய் பனி பொழிய சாலைகள் பனிகளால் மூடப்பட்டு போக்குவரத்து தடைபட காசா ஹோம் ஸ்டடேவினுள் மேலும் சில நாட்களை தனிமையில் கழித்தான் வினு.
ஒரு வாரம் கடந்து பனிப்பொழிவு சற்று குறைந்து மக்கள் போக வர சாலைகளை பயன்படுத்த ஆரம்பித்த வேளையில் தீரனுடன் பைக்கில் வந்து இறங்கினாள் நிலா.
தீரன் நிலாவிடம்..
“இங்கிருக்கிற ஷாம்பலா ஹோம்ஸ்டே ல தங்கியிருக்கான்..பாத்து பத்திரமா ட்ரைவ் பண்ணு..நிலா..” என அவள் தோளை தட்டிக்கொடுத்தபடி கிளம்பினான். சுற்றிலும் ஓங்கி உயர்ந்த மலைகள் அதன் முகட்டில் பனிபடலங்கள், ஆங்காங்கே மக்கள் நடமாட்டம் என ரசித்துக்கொண்டு தன் மன்னவனை காதலில் கைதாக்க விரைந்தாள் யுகனின் லயா.
காசா கிராமத்திலிருந்து 23 கி.மீ தொலைவில் அமைந்துள்ள உலகிலேயே மிக உயரமான, சாலை வசதி நிறைந்த கோமிக் (Komic) எனும் மற்றொரு மலைக்கிராமத்தை அடைந்தாள் நிலா. இரும்பு குதிரையில் தன்னை களவாடிய தன் யுகனிடம் காதலை சொல்ல இதை விட பொருத்தமான இடம் கிடைத்துவிடுமா என்ன..?
அன்று மதியம் ஷாம்பலா ஹோம்ஸ்டேயின் உரிமையாளர் வினுவிடம்..
“சாப்..நீங்க கோமிக் போயிருக்கீங்களா..?
இல்ல..இந்த ட்ரிப் லாஸ்ட் ஹால்ட் அங்க தான்..
ஓ..ஆனா இன்னிக்கு பௌர்ணமி..சாயங்காலம் 6.30 மணிக்கு மூன்ரைஸ் பார்க்க அவ்வளவு அழகாயிருக்கும்..ப்ரீயா இருந்தா இப்பவே கிளம்புங்க..அப்படியே 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான தாங்க்யூட் (Tangyud) புத்த மடாலயம் பாத்துட்டு நைட்க்குள்ள இங்க வந்துடலாம்..
நான் இன்னிக்கு ப்ரீ தான்..கொஞ்ச நேரத்துல கிளம்புறேன்..தாங்க்ஸ் பார் தி சஜஷன்..” என தன் அறைக்கு சென்றான் வினு. தீரன் இங்கு வருவதற்கு முன்பே உரிமையாளரை போனில் அழைத்து தங்கள் குடும்ப கதையை சுருக்கமாக கூறி வினுவை அன்று மாலை கோமிக் கிராமத்திற்கு தனியாக அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தான். அவரும் சம்மதிக்கவே இதோ யுகயுகமாய் வான்நிலவுடன் காதலில் வாழ்ந்தவன் தன் உயிர்நிலவுடன் சங்கமிக்க போவதையறியாது கோமிக் கிராமத்திற்கு விரைந்தான் நிலவுக்காதலன்.
பூமி சொர்க்கத்தை சந்திக்கும் இடமான கோமிக் கிராமத்தில் வாழும் மக்கள் எண்ணிக்கை 160 பேர் மட்டுமே என்பது மறுக்கமுடியாத உண்மை. அவ்வூர் மக்களை ரசித்தபடி உரிமையாளர் குறிப்பிட்டிருந்த இடத்திற்கு வந்த வினு தன் பைக்கை நிறுத்தி வைத்து சுற்றி பார்வையை சுழல விட்டான்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை உயர்ந்த மலைகள், ஆங்காங்கே வீடுகள் சற்று தொலைவில் தாங்யூட் கோபுரத்தில் பெரிய புத்தர் சிலை என கண்ணுக்கு விருந்தாக அமைய தூரத்து முகட்டில் உதயமாகும் நிலவுக்காக காத்திருந்தான் வினு.
தரையில் கால் நீட்டி அமர்ந்திருந்தவன் இருண்ட வானில் பாதரச கலவையை தெளித்தது போல ஒளி பரப்பி மெல்ல வெளிவரும் முழு நிலவை காணும் முன் அந்நிலவுக்கு போட்டியாய் ஆகாய நீலநிற சாஃப்ட் சில்க் வெண்மை நிற அகல பார்டர், புடவை முழுதும் வெண்ணிற பூக்களின் வடிவமாய் அதே நிற முத்து மாலை மற்றும் குட்டி ஜிமிக்கியுடன் கண்கள் சிந்திய தீரா காதலுடன் வெண்ணிலா கதிர்கள் நங்கையவளின் பட்டு மேனியில் பட்டு ஒளி பெற்றனவோ எனும் படி வான் சுமந்த பூரண ஒளி பின்னணியில் தேவதையென
எதிரே நடந்து வருபவளை கண்டு முதலில் மிரண்டு எழுந்தவன் தன் சுயத்தை இழந்து இமைக்காமல் அவளையே பார்த்திருந்தான் வினுயுகன்.
மூச்சு பேச்சின்றி உறைந்து நிற்கும் தன்னவனை நெருங்கி அவன் கண்களோடு கண்கள் நோக்கி..
“தனக்கு சொந்தமில்லை னு தெரிஞ்சும் பூக்களை பாதுகாக்குற முட்களை போல நாம முதன் முதலா பார்த்த நாள் லருந்து இப்ப வரைக்கும் கொஞ்சங் கூட மாறாம குறையாம என்க்கிட்ட காதலை அள்ளி அள்ளி கொடுக்குற அட்சய பாத்திரம் டா நீ..திசை மாறி போனாலும் என்னை வச்சு கேம் ஆட நினைச்ச ஷிவநந்தனை அசைச்சு பார்த்த உன் நேசம்..ஏன் நமக்குள்ள இத்தனை அன்பு? ஏன் நமக்குள்ள இத்தனை பிணைப்பு? னு குழம்பி தவிக்கும் போது என் இடத்திலிருந்து யோசிச்சு எனக்காக பேசி நான் யாரு னு உண்மையா எனக்கே உணர வச்ச பாரு..அந்த நொடி தான், இனியாவது எனக்காக நமக்காக வாழனும் னு புரிஞ்சுது.. காதல் னா என்னன்னு சொல்லிக் கொடுத்தது நீ..என் உலகமா, என் வாழ்க்கையா…என்னை உயிர்ப்போட வாழ வைக்க உன்னால மட்டும் தான் முடியும்..It took me time to understand myself..I finally see where I belong with you. Will you marry me Yugan..?” என அவன் முன் மண்டியிட்டு ஒற்றை சிகப்பு ரோஜாவை அதீத ஆசை மற்றும் எதிர்ப்பார்ப்புடன் நீட்டினாள்.

Komic Village
தொடரும்.

Last edited: