NTYU - 28

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 90

Member
May 5, 2026
39
50
18
Bengaluru
தேடல் 28

file_00000000a34071fdbcde133f545db039.png

ஆரல்வாய்மொழி கணவாய்க்கு சற்று தள்ளி ஆங்காங்கே அமைந்திருந்த வீடுகளில் கடைக்கோடியில் இருந்த அந்த சிறிய வீட்டின் முன்பு வண்டியை நிறுத்தி இறங்கினான் ப்ரணவ். வீட்டை சுற்றி இரும்பு வேலியிட்ட காலி நிலத்தில் பல வண்ண பூச்செடிகளும் வீட்டுக்கு பின் குடை போல பரந்து விரிந்த வேப்ப மரமும் என கண்ணை கவர்ந்தது. அழைப்பு மணியை அடித்து காத்திருந்தான்.

வெள்ளை நிற பூக்கள் வேலைப்பாடுடன் மஞ்சள் வண்ண சாப்ட் லினன் சேலையணிந்து கதவை திறந்தது அவனின் கஸ்தூரி மான். அவள் கண்களோ இறுதியாக அவனிடம் தன் கரை காணா காதலை ஏற்கமாட்டாயா என யாசிக்க அவள் பார்வையை தவிர்த்து உள்ளே வந்து சோபாவில் அமர்ந்தவன்..

“ஊருக்கு ஒதுக்குப்புறமா தனியா அம்சமா ஒரு வீடு எல்லாத்துக்கும் வசதியில்ல..?” என்றான். உணர்ச்சியற்ற முகபாவத்துடன் அவனை பார்த்து..

“காபி போடவா..?

ஏன் விஷத்தை கலந்து முதல்லே என்னை முடிக்கிற ப்ளானா..?”
…..

பொதுவா நான் சொன்ன கண்டிஷன்க்கு எந்த குடும்ப பொண்ணும் ஒத்துக்காது..நீ எப்படி அக்செப்ட் பண்ண..அவ்ளோ லவ்வா என் மேல இல்ல நான் உனக்கு பத்தோட பதினொராவது ஆளா..?

இந்த செகண்ட் உனக்கு தெரிஞ்ச டாக்டரை கூப்பிட்டு என் வெர்ஜினிடி செக் பண்ணிக்கலாம்..” என அவன் முன் உடைந்துவிடவே கூடாது எனும் வைராக்கியத்துடன் கண்ணீரை உள்ளிழுத்தபடி பேசியவளை கண்டு சற்று தடுமாறினான் ப்ரணவ். பின் அவளிடம்..

“இப்படி ஒரு காதலுக்கு நானோ குறிப்பா என் நிறமோ தகுதியேயில்ல..எதுக்கு வீணா உன்னை கஷ்டபடுத்திக்கிற..?

திரும்பவுமா..? போதும் இன்னையோட எல்லாத்தையும் முடிச்சிக்கலாம்..” என அறைக்குள் நுழைந்தாள் மான்யா. இவளை என்ன சொல்லி தவிர்ப்பது..அவளை பற்றி நன்றாக தெரிந்தும் வார்த்தைகளால் குதறியெடுத்தாலும் தன் முடிவிலிருந்து மாறாமல் அடமாய் நிற்பவளை இறுதி முயற்சியாக அவளை நெருங்கினால் எப்படியும் தன்னை விலக்கி விடுவாள் எனும் நம்பிக்கையுடன் அறைக்குள் வந்தான்.

ஜன்னல் கம்பியை பிடித்தபடி எதிரே தெரியும் மலைகளை வெறித்தவாறு நின்றிருந்த பாவையின் தோற்றம் மனதை பிசைந்தாலும் அவளை திசை திருப்ப தொண்டையை கனைக்க..மெதுவாக திரும்பி வந்து கட்டிலில் படுத்துக்கொண்டாள்.

தன் சட்டை பட்டன்களை கழட்டியபடி ப்ரணவ் அவளிடம்..

“இப்பவும் சொல்றேன்..நான் உன்னை கட்டாயப்படுத்தல..அதே போல நீயும் என் பின்னாடி வராத..ஓகேயா..?” என அவளை பார்க்க..கண்களை இறுக்க மூடிக்கொண்டாள் மான்யா. இவளை..? ஆக்க்ஷன் ல தான் இவ பைத்தியத்தை தெளிய வைக்கனும்..என நினைத்தபடி ப்ரணவ் அவள் மேல் படர மான்யாவின் உடல் ஓர் நொடி தடுமாறியது.

கட்டில் விரிப்பினை கசக்கி கைகளுக்குள் அடக்கியவளை நிமிர்ந்து பார்த்த ப்ரணவ் கண்ணீர் விழ தயாராயிருக்கும் அவள் விழிகளில் முத்தமிட்டான். துவர்ப்பு சுவையை உணர்ந்து நெஞ்சோடு அவளை இழுத்து அணைத்துக்கொள்ள எத்தனித்தவனின் கையில் சிக்கியது தலையணைக்கடியிலிருந்த லைட்டர். அவன் அவளுக்கு பரிசாய் எறிந்த அதே லைட்டர். கடுஞ்சீற்றத்துடன் அவளிடமிருந்து விலகியவன் அவளையும் தூக்கி நிறுத்தி..

“என்ன இது..?” என கேட்க அவன் கைகளில் லைட்டரை கண்டு திகைத்தவள் அவனிடம்..

“இது..இது..பர்ஸ்ட் டைம் ல..நீ வர்றதுக்கு முன்னாடி தம்மடிச்சேன்..மறந்து இதை இங்க வச்சுட்டேன்..” என அவனிடமிருந்து வாங்க முற்பட்டவளை ஓங்கி அறைந்தான் ப்ரணவ்.

எதிர்பாராத அடியில் படுக்கையில் விழுந்தவளின் சேலை மாராப்பு விலக மின்னல் வேகத்தில் சேலையை எடுத்து தன்னை போர்த்திக்கொண்டவளின் கரத்தை பிடித்த ப்ரணவ்..

“பிறந்து வளர்ந்தது இந்த மண்ணுல னு இல்ல எங்கயிருந்தாலும் இது தான் நீ..என்னை மட்டுமே காதலிச்சு..நான் விலக விலக என்னை விடாம பிடிச்சிழுத்து இந்த நிலைமைக்கு கொண்டு வந்தது நீ..உன்னை பொறுத்தவரைக்கும் இந்த ஜென்மத்துல நான் தானே உன் புருஷன்..? கல்யாணத்துக்கு முன்னால உன்னையே என்க்கிட்ட கொடுக்க ரெடியானவ கொஞ்சம் சேரி விலகினதுமே ஏன் இழுத்து போர்த்திக்கிட்ட..? கணவன் ற உரிமையோட தான் நானே உன்னை அடையனும் னு நினைக்கிற உன்னதமான பொண்ணு தான் என் மான்யா..ஆனா எனக்கு அந்த தகுதியில்லடி..தயவு செய்து என்னை விட்ரு.. உன்னை பத்தி இன் & அவுட் தெரிஞ்சும் உன்னை உன் கேரக்டரை வேணும் னு அசாசினேட் பண்ணேன்..என்னை வெறுத்து நீ ஒதுங்கி போகனும் னு நினைச்சேனே தவிர முறையில்லாம உன்னை அடையனும் நான் எப்பவுமே நினைச்சதில்ல..ஏற்கனவே காதல் ன்ற பேர் ல சில்லியா ரெண்டு தடவை ஏமாற்றபட்டிருக்கேன்..அதுவே ஆறாத ரணமா இன்னும் வதைக்குது..பத்தாததுக்கு பால் பன் மாதிரி வெள்ளை வெளேர் னு இருக்குற நீயும் அத வச்சே என்னை கார்னர் பண்ணா..? முடியல டி..சத்தியமா முடியல..நமக்குள்ள எல்லாம் முடிஞ்சதும் உன்னையே கொளுத்திக்கனும் னு தானே நான் கிஃப்ட் பண்ண லைட்டரை வச்சிருந்த..? இந்த ஒரு விஷயத்துக்காக உன்னை எப்பவுமே மன்னிக்க மாட்டேன் டி..” என கண்கள் கலங்க விலகியவனின் கரங்களை பிடித்த மான்யா அவன் உள்ளங்கையில் முகத்தை புதைத்துக்கொண்டாள். வேட்டையாடுவேன் என பொய்யுரைத்து வந்த வேடனின் கரங்களில் விரும்பி தஞ்சமடைந்த மான்குட்டி மீண்டு தன்னிலை வரட்டும் என தன்னையே அவளுக்கு கொடுத்து நின்றான் அவளின் வேடுவன்.

“ப்ரணவ்..கதவை திற..” என வெளியில் கதவை ஓங்கி தட்டிக்கொண்டிருக்கும் வினுயுகனின் குரலில் இருவரும் திகைத்தனர். சட்டென சுதாரித்த ப்ரணவ் அவசரமாக பட்டன்களை பூட்டியபடி மான்யாவிடம்..

“நான் போய் கதவை திறக்குறேன்..புது மாப்பிள்ள பிசியாயிருப்பான் னு நினைச்சேன்..நான் வந்து கூப்பிடுற வரை வெளிய வரக்கூடாது..” என அவளை எச்சரித்துவிட்டு அறைக்கதவை தாழிட்டு அவசரமாக வந்து கதவை திறந்தான்.

சிவந்த கண்கள், தாறுமாறாய் பட்டன்கள், கசங்கிய சட்டை முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சியுடன் நின்றிருந்தவனை பார்த்த வினு..

“நீ இங்க என்ன பண்ற..? யார் வீடு இது..?” என அவனை தள்ளிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தான். இவனை விரைவில் அப்புறபடுத்தவேண்டுமே என ப்ரணவ்..

“என் கசின் வீடு தான் டா..தூரத்து சொந்தம்..நைட் ஒரு வேலையா வந்தேன்..அப்படியே இங்க தங்கிட்டேன்..

ஓ..அந்த கசினுக்கு போன் பண்ணு..

டேய்..

போன் பண்ணு..

அவன் ஆஸ்திரேலியா ல இருக்கான்..இப்ப நைட் டைம்..” என சரமாரியாக பொய்யுரைத்தவனின் காலரை பிடித்த வினு..

“மான்யா..வெளில வா..” என கர்ஜிக்க..தலை குனிந்து நின்றான் ப்ரணவ். தன்னவனின் அனுமதியின்றி எப்படி வருவது என தவித்து நின்றவளுக்கு பளார் என சத்தம் கேட்க தாழிடபட்டிருந்த அறைக்கதவை வேகமாக தட்டினாள்.

நண்பனின் அடியில் சுருண்டு விழுந்தான் ப்ரணவ். தன் நண்பனை பார்வையால் எரித்தபடி கதவை திறந்தான் வினு. அவனை தள்ளிவிட்டு ப்ரணவிடம் ஓடியவள் அவனை எழுப்பி அமர வைத்தாள். பின் வினுவிடம்..

“நீங்க நினைக்கிற மாதிரி இங்க எதுவும் நடக்கல ண்ணா..அவர் மேல எந்த தப்புமில்ல..வரமாட்டேன் னு சொன்னவரை கம்பல் பண்ணி வரவச்சது நான் தான்..கொஞ்சம் பொறுமையா கேளுங்க.." என்றவளை இடை மறித்த வினு..

"அவனை எனக்கு நல்லா தெரியும்..கற்பு உங்களுக்கு மட்டுமில்ல எங்களுக்கும் இருக்கு..தோ இவனுக்கு இன்னும் எக்ஸ்ட்ராவா இருக்கு..நான் அடிச்சது அவன் உன்னை அப்ரோச் பண்ணின கேவலமான எண்ணத்துக்கு..நீங்க சொல்லல னாலும் ஓரளவுக்கு என்னால கெஸ் பண்ண முடியுது..இப்ப கொஞ்சம் வெளிப்படையா பேசலாமா..?” என சோபாவில் அமர்ந்தான் வினு.

“வாடா இங்க..” என ப்ரணவை அழைக்க பேச்சின்றி அருகே சென்று அமர்ந்தவனின் சட்டை பட்டன்களை சரியாக போட்டபடி அவனிடம்..

“இதே மாதிரி நான் துவண்டு நிக்கும் போது சரியா கைட் பண்ணி கூடவே இருந்து என் லைஃபை செட்டில் பண்ணவன் நீ..உனக்கு னு வரும் போது ஏன் டா உன்னையே ஏமாத்திட்டு எங்க மூஞ்சிலயும் கரி பூசற..? உனக்கு மான்யா மேல இன்ட்ரஸ்ட் இருக்கு னு தெரியும்..இந்த கோணங்கி சேஷ்டையெல்லாம் விட்டு வயசுக்கேத்த மாதிரி உனக்காக மாற பாரு..அம்மாக்கிட்ட மான்யா பத்தி பேசட்டுமா..?

….

அமைதியா இருந்தா என்னடா அர்த்தம்..? ஏதாவது சொல்லு..” என கேட்டவனின் தோளில் முகத்தை மறைத்துக்கொண்டான் ப்ரணவ்..உள்ளுக்குள் உடைந்துக்கொண்டிருப்பவனை மேலும் படுத்தாமல் தட்டிக்கொடுத்தபடி மான்யாவிடம்..

“இந்த பெட்ரோமாக்ஸே தான் வேணுமா..?” என கேட்க ஆமென வேகமாக தலையாட்டினாள் அவள்..வினு..

“உன் வீட்டில..” என கேட்கும் முன் மான்யா..

“அப்பா ம்மாட்ட ஏற்கனவே எங்களை பத்தி பேசிட்டேன் ண்ணா..இவரு ஓகே சொன்னதும் வீட்ல வந்து பேசறோம் னு சொல்லிருக்காங்க..ஆனா ஒரே ஒரு வேண்டுகோள் அப்பாக்கு..ஒரே பொண்ணு கல்யாணத்தை ராஜஸ்தான் ல சீரும் சிறப்புமா நடத்தி பாக்கனுமாம்..

அதுக்கென்ன..இங்க ஒரு தடவை அங்க ஒரு தடவை னு பேஷா பண்ணிக்கலாம்..என்னடா..? “ என நண்பனின் முகத்தை நிமிர்த்த முயன்றவனை தடுத்து எழுந்த ப்ரணவ் வினுவிடம்..

“நான் கிளம்புறேன்..நீ பேசிட்டு இவள ட்ராப் பண்ணிட்டு வா..” என அவனை பிடிப்பதற்குள் விரைவாக கிளம்பினான்.

வினு மான்யாவிடம்..

“எங்க கேங் ல கலர் கம்மி னாலும் களையான முகம் ப்ரணவ்க்கு மட்டுந்தான்..அதுல வந்த லவ் அன்ட் ப்ரேக் அப் ல மனச விட்டுட்டான்..காதல் மட்டுமே அலர்ஜி அவனுக்கு மத்தபடி நார்மல் பையன்..அடலசன்ட் ஏஜ் ல ஓகே..இந்த வயசுல உன்க்கிட்ட விழுந்தவனை நீயும் ரிஜக்ட் பண்ணிடுவியோ னு இவன் முந்திக்கிட்டு இப்படி கிறுக்குதனம் பண்ணிட்டான்..என்னை விட ரொம்ப நல்லவன் ம்மா..உண்மையான பாசத்துக்கு ஏங்கி நிக்கிறான்..பத்திரமா அவனை தாங்கி பிடிச்சிக்கோ..கூடிய சீக்கிரம் உன் வீட்டுல பொண்ணு கேட்டு வர்றோம்..” என எழுந்தான் வினு.

தன் ப்ரஹானை சரியாக புரிந்து கொண்ட மான்யா தாயாய், மனைவியாய், மகளாய் அவனை காலத்துக்கும் ஆராதிக்க தயாரானாள்.

தொடரும்.
 
Last edited:

Author: STN - 90
Article Title: NTYU - 28
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Love
Reactions: ஷமீம்