தேடல் 29
காலம் தாழ்த்தாமல் அவ்வார இறுதியில் தன் பெற்றோர் மனைவி மற்றும் மான்யாவின் பெற்றோரை தன் காரில் ஏற்றிக்கொண்டு வினுயுகன் ப்ரணவ்வின் சொந்த ஊரான அழகியபாண்டியபுரத்தை நோக்கி அந்த நெடுஞ்சாலையில் முன்னே செல்ல தீரன் தன் காரில் மனைவி, மகள் மற்றும் மான்யாவுடன் பின்தொடர்ந்தான். ஆரல்வாய்மொழியிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள இவ்வூர் பெயரை போலவே காணுமிடமெல்லாம் சிறு ஓடைகளும், பச்சை பசேலென வயல் வரப்புகளுடன் தூரத்தில் உயரமான மலைத்தொடர்கள் என கண்ணுக்கு விருந்தாய் காட்சியளித்தது. இவர்களை வரவேற்க்கவென ப்ரணவ் இரு நாட்கள் முன்பே வந்துவிட்டான்.
ப்ரணவ்வின் தந்தை சிறு வயதில் இறந்துவிட அவன் தாய் சாராதா ஒற்றை ஆளாய் கணவனின் அரிசி ஆலையை நிர்வகித்து தன் மகன் மற்றும் மகளை ஆளாக்கியவர். ப்ரணவ்வின் தங்கை தேன்மொழிக்கு திருமணமாகி மூன்று வயது மகனுடன் நாகர்கோவிலில் வசிக்கிறாள். அவள் கணவன் விவேக் நாகர்கோவில் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிகிறான். பிறந்து வளர்ந்தது வாழ்ந்துக்கொண்டிருப்பது வளர்ந்து வரும் கிராமபகுதியெனினும் முற்போக்கு சிந்தனையுடன் தங்கள் பிள்ளைகளின் விருப்பத்தை கேட்டு அது சரியாக இருப்பின் ஆதரவளித்து அவர்களின் ஆசையை நிறைவேற்றும் யதார்த்தமான அன்னை சாரதா. சிறு வயதில் கணவனை இழந்தாலும் சேமிப்பு, இதர சொத்துக்கள் மற்றும் தொழில் என அவர் விட்டு சென்றதை திறம்பட நடத்தி இன்றளவும் கௌரவத்தோடு வாழ்ந்து வருபவர் அவர். வரும் வழியில் பட்டாசாய் வளவளத்து கொண்டிருந்தவள் தன்னவனின் வீட்டை நெருங்கியதும் வாயை இறுக்க மூடிக்கொண்டாள் மான்யா. அவளை தவிர அனைவரும் வீட்டிற்க்குள் நுழைய சாரதா..
“வாங்க..வாங்க..” என அனைவரையும் கரம் குவித்து வரவேற்றவர் வினுவிடம்..
“வினு..எங்க டா என் மருமக..?” என கேட்க குனிந்த தலையுடன் புடவை தலைப்பை போர்த்தியபடி பவ்யமாக நிற்கும் தன் செப்பு சிலையை கண்டு அடக்கமுடியாமல் வந்த சிரிப்பை கை வைத்து மறைத்து கொண்டான் ப்ரணவ். அவளிடம் விரைந்த சாரதா அவள் முகத்தை நிமிர்த்தி ஒரு முறை ஆழ்ந்து பார்த்தவர் அவளுக்கு தன் கைகளால் திருஷ்டியெடுத்து..
“வலது கால் வச்சு உள்ள வா ம்மா..” என்றார். மாமியார் அதுவும் கடைக்கோடி பகுதியில் வாழ்பவர் கறாராக இருப்பாரோ என பம்மிய மான்யா பொறுமையின் சிகரமாய் கம்பீரத்தோற்றத்துடன் பாசமாக அரவணைக்கும் அன்னையை கண்டதில் கண்கள் கலங்க அவர் காலில் விழுந்து வணங்கினாள்.
தன் ஆசை மருமகளை மனதார ஆசீர்வதித்தபடி வீட்டுக்குள் அழைத்து சென்றார். வந்தவர்களுக்கு நீர் குவளைகளை வினு மற்றும் ப்ரணவ் கொடுக்க சாரதா உதவியுடன் அனைவருக்கும் டீ மற்றும் ஜிலேபி பஜ்ஜி என பெண் பார்க்கும் படலம் மாறி மாப்பிள்ளையை காண வந்திருக்கும் படலமாய் மாறியதில் தீரன் மற்றும் நிலா வானில் மிதந்தனர். அவர்களுக்கு உதவ என எழுந்த செந்தாவை இழுத்து அமர வைத்தான் தீரன்..வேதாவிடமும் கண் காட்ட தீரனின் காதருகே வந்து..
“என் பையன் எல்லா வேலையும் செய்வான்..கேட்டுப்பாரு என் மருமகள..உன்னை மாதிரி ஆளுங்கள ஏவிவிட்டு வேலை வாங்க மாட்டான்..
எச்சூஸ் மை திடீர் மம்மி..ஊருக்கே ராஜா னாலும் வீட்டுக்கு..அதான் எங்க நிலைமை ..இதெல்லாம் அபூர்வமா நடக்கிற விஷயம்..கொஞ்ச நேரம் என்ஜாய் பண்ணிக்கிறேனே..” எனக்கூற அவன் தலையில் செல்லமாக தட்டினார் வேதா.
வந்ததிலிருந்து நிமிர்ந்து பாராவிட்டாலும் வாழப்போகும் மருமகளாய் உரிமையெடுத்து அனைத்து வேலைகளையும் சுருட்டிக்கொள்ள உடல் பரபரத்தாலும் இன்னும் வாய் வார்த்தையால் தன் மனதிலுள்ளதை சொல்லாமல் தவிர்ப்பவனுக்காக தயங்கி அமர்ந்திருந்தாள் மான்யா.
டீக்குவளைகளுடன் வந்த ப்ரணவ்வை கண்டு அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டான் தீரன்..சத்தமில்லாது நடக்கும் அனைத்தையும் போனில் வீடியோவாக எடுத்துக்கொண்டிருந்தாள் நிலா. சாராதா வரவும் கப்பென்று சிரிப்பை நிறுத்தினான் தீரன். அனைவருக்கும் கொடுத்து மான்யாவிடம் வந்த ப்ரணவ் ட்ரேயை நீட்ட, அப்போதும் தலை நிமிராமல் குவளையை மட்டும் எடுத்த மான்யாவை தீரன்..
“அப்புறம் மை தங்கைக்கோர் கீதமே..மாப்பிள்ளய பிடிச்சிருக்கா னு நிமிர்ந்து பார்த்து சொல்லுங்க..” என சிரித்தபடி சொன்னவனை முறைத்தனர் ஆரல் ஹீரோக்கள் இருவரும். சிறியவர்களின் கலாட்டாக்களை ரசித்தபடி மான்யாவின் தந்தை உதய்சிங் ரத்தோட் சாராதாவிடம்..
“சம்பந்தியம்மா..எனக்கு இருக்கிறது ஒரே பொண்ணு..அவ விருப்பபடி அருமையான பையனை தான் தேர்ந்தெடுத்திருக்கா னு உங்கள பாத்ததும் மனசு நிறைஞ்சிடுச்சு..எங்க பக்கம் என்னை மீறி யாரும் எதும் பேச மாட்டாங்க..ஜோத்பூர் ல எங்க மக்கள் முன்னாடி இவங்கள நிறுத்தி காட்டனும்..பழைய சம்பிரதாயங்களை கடைபிடிச்சிக்கிட்டே மனுஷங்களோட விருப்பம் உணர்வுகளை மதிக்க கத்துக்கோங்க டா..உங்களுக்கும் ஒரே பையன்..உங்க ஆசைய சொல்லுங்க..
என் பசங்களை மீறி எனக்கு எதுமேயில்ல..அதனால வர்ற வைகாசி மாசத்துல வர்ற முதல் முகூர்த்த நாள் ல கல்யாணத்தை வச்சிக்கலாம்....
சரிங்க..இங்க கல்யாணம் முடிஞ்சு நாமெல்லாம் அடுத்த நாளே ஜோத்பூர் கிளம்புற மாதிரியிருக்கும்..ஒரு மாறுதலா மகன் கல்யாணத்துல சேரை போட்டு உட்கார்ந்து என்ன செய்யனும் னு மட்டும் சொல்லுங்க போதும்..
கண்டிப்பா சம்பந்தி..என் பொண்ணும் மாப்பிள்ளைக்கிட்டயும் ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்றேன்..இருங்க அரை மணி நேரத்துல சமைச்சிடுவேன்..இருந்து சாப்பிட்டு கிளம்பலாம்..” என சாரதா சமையலறை செல்ல மான்யா தன் அன்னை பத்மினியின் கையை சுரண்ட..அவர் சாரதாவிடம்..
“மான்யா உங்களுக்கு ஹெல்ப் பண்ணவா னு கேக்கறா சம்பந்தி..”என கேட்டவரிடம் சாரதா..
“கல்யாண பொண்ணு கை கால் ல கீறலோ காயமோ படக்கூடாது சம்பந்தி..நான் பாத்துக்குறேன்..பைவ் ஸ்டார் ஹோட்டல் ஓனரோட மாமா இருக்கும் போது நமக்கென்ன கவலை..? வாங்க தம்பி..இன்னிக்கு ஒரு நாள் பொண்ணுங்களுக்கு ரெஸ்ட் கொடுப்போம்..” என தீரன் கையை பிடித்திழுக்க வினு மற்றும் ப்ரணவ் ஹை - பை அடித்து மகிழ்ந்தனர்.
பரபரவென தன் மொபைலில் யாருக்கோ அழைத்த செந்தாவிடம் சாரதா..
“யாருக்கு மா போன் பண்ற..?
108 க்கு ம்மா..என் வீட்டுக்காரருக்கு பொருளை வளர்க்க தான் தெரியும் சமைக்க தெரியாது ம்மா..” என உரைத்தவளை தீரன் ஒற்றை விரலை காட்டி பத்திரம் என எச்சரித்தவாறு வினுவுடன் சமையலறைக்கு செல்ல மான்யாவை பார்த்த ப்ரணவ்..
“உங்க ஊர் லிருந்து வந்த மார்பிள் டைல்ஸ் தான்..ரொம்ப நேரம் குனியாத..பூமாதேவி பயந்துட போறாங்க..” என அவளை வாரிவிட்டு உள்ளே நுழைந்தான்.
சொன்னபடி அரை மணி நேரத்தில் வடை பாயசத்தோடு அருமையாக சமைத்திருந்தார் சாரதா. வேதா மற்றும் செந்தாழினி எழுந்து..
“பசங்களும் நீங்களும் சமைச்சு டயர்டாயிருப்பீங்க..நாங்க பரிமாறுறோம்..நீங்கலாம் உட்காருங்க..வா நிலா..மான்யா எல்லாம் எடுத்து கொடு வா..” என சிறிதும் அலட்டலின்றி பரிமாறும் மனைவியை ரசித்து பார்த்தார் மாணிக்கம்.
விருந்து முடிந்து அனைவரும் கிளம்பும் முன் ப்ரணவ் உதய்சிங்கிடம்..
“நீங்க அனுமதிச்சா இவளோட ஒரு அஞ்சு நிமிஷம் தனியா பேசலாமா..? “ எனக்கேட்க பின்னிருந்து வினு மற்றும் மான்யா வேண்டாம் வேண்டாம் என கையசைக்க அப்பாவி உதய்..
“என்ன மாப்பிள்ள அனுமதியில்லாம் கேட்டுட்டு..? தாராளமா பேசுங்க..” என்றார். மான்யாவிடம்..
“வா..” என்றபடி அவன் முன்னே நடக்க சாராதாவை பார்த்தாள் மான்யா..அவர் கண்களிலே அனுமதி வழங்க..தயக்கத்துடன் அவன் அறைக்குள் நுழைந்தாள்.
தனியறைக்குள்ளும் தலை குனிந்து நிற்பவளிடம்..
“இந்த அடக்கம் ஒடுக்கம் எத்தனை நாளைக்கு..?
காலத்துக்கும்..
நம்பனுமா..?
உங்க இஷ்டம்..
கொஞ்சம் சீரியசா பேசலாமா..? நீ ஜோத்பூர் ராத்தோட் வம்சத்துல பிறந்தவ..ஆனா நான் சாதரண குடும்பத்தை சேர்ந்தவன்..நம்ம கல்யாணத்துக்கப்புறம் நீ என்னை மீறி போக எப்பவும் விடமாட்டேன்..இப்பவும் டைமிருக்கு..நல்லா யோசிச்சுக்கோ..” என வலியுறுத்தியவனை நேருக்கு நேர் பார்த்த மான்யா..
“என் அடிப்படை தேவைகளுக்கு மட்டுமே பணம் தேவை..அது என் உழைப்பு ல இருக்கனும் எப்பவும்..என் லைஃப் ல விலைமதிப்பில்லாத பொக்கிஷம் னா நீங்க தான்..உங்க மனசுல ஒரு சின்ன பொட்டலமா வது நான் இருக்கேனா..?” என தவிப்புடன் கேட்டவளின் விழிகளை பார்த்து..
“ம்ப்ச் இல்லையே..” என உதடுகளை பிதுக்கினான் ப்ரணவ். சில நொடிகள் அவனை வெறித்து பார்த்தவள்..
“இதுக்கு மேல உங்கள டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்..அப்பாக்கிட்ட மெதுவா சொல்லி இதை நான் நிறுத்திடறேன்..சந்தோஷமாயிருங்க ப்ரஹ..ப்ரணவ்..” என்றவள் வெளியேற போகும் முன் ஒரேயெட்டில் அவளை தன்னிடம் இழுத்து அவளை தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டான்.
உள்ளுக்குள் ஆவி துடித்து கொண்டிருக்க வெளியில் கற்சிலையாய் இறுகி நின்றாள் மான்யா. அருவியாய் கொட்ட துடிக்கும் கண்ணீரை உள்ளிழுத்தவளுக்கு தன் பின் கழுத்து புறமாய் அணிந்திருந்த தங்க சங்கிலியை இழுத்து என்ன செய்கிறானிவன் என முகத்தை பின்னிழுக்க அவன் கன்னத்தோடு இவள் கன்னம் உரசியது. இணை சேர்ந்த உயிர் தண்டவாள தடமிரண்டில் வேட்கை தீ பற்றிக்கொள்ள இதுவரை அறியாத அந்த இனிய பரவசம் ஜிவ்வென இருவரின் நாடி நரம்புகளில் ஓடி, அணைப்பை பிரியாத பந்தமாக மாற்றியது. அவள் காதருகே வந்த கள்வன்..
“பார்த்த முதல் நாளிலிருந்து கொக்கியா என்னை இழுத்து
வம்படியா கார்னர் பண்ணி கடைசியா என் கிஃப்ட் வச்சே என்னை கட்டம் கட்டுன என் காட்டுச்சிறுக்கிக்கு இப்ப நான் வேணாமா..ம்..?” என கேட்க அவள் இந்த உலகில் இருந்தால் தானே..? வெகு அருகாமையில் அவனின் சுவாசம் இவள் உயிரில் சாமரம் வீச பேச்சையே மறந்து உறைந்து நின்றவளை உலுக்கியவன்..
“பிடிச்சிருக்கா..?” என்று அவள் சங்கிலியில் புதிதாக சேர்த்திருந்த டாலரை உயர்த்திக் காட்டினான். அவள் குனிந்து பார்த்த அடுத்த நொடி, விழிகள் பரவசத்தில் விரிந்தன. முடிவில்லாத(Infinity) ∞ குறியீடு வடிவில் வடிவமைக்கப்பட்ட அந்த லாக்கெட்டில் P M என்ற எழுத்துகள் சிறிய வைரக் கற்களால் பதிக்கப்பட்டு, அவள் மார்பில் அசைந்தாடியது.
விழிகள் மூடாமல் அவனையே பார்த்திருந்தாள் மான்யா. இடை விடாத பாவையின் விழி அம்பில் சிறு வெட்கம் வர அவள் தோளில் முகத்தை பதித்துக்கொண்டான்.
தனக்கான காதலை செயலில் காட்டிய மன்னவன் மீது எல்லையற்ற அன்பு பெருக திமிருடன் வலம் வந்த தன் முரட்டுக்காளையே அவஸ்தைபடுமளவிற்கு தன்னோடு இறுக்கி கட்டிக்கொண்டாள் மான்யா.
தொடரும்.

Author: STN - 90
Article Title: NTYU - 29
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.