அத்தியாயம் 14 – 2

அப்பா இருக்கிற நாட்களில அதட்டி உருட்டிக்கொண்டு ராணி போல இருந்தது நீங்கஇந்த அழகிலமனசாட்சி கொஞ்சமும் இல்லாத…” 

  வெறுப்பும் கோபமுமாகக் கவி இடையிட்டுச் சீற, “கவி! போதும், வாயை மூடு! என்ன கதையெல்லாம் கதைக்கிற?” என்று அதட்டிவிட்டேன்.

   மறுநொடி, இருவரும் ஓடி வந்து என்னைக் கட்டிக்கொண்டு குழறி அழுது தீர்த்தார்கள்

   அப்போது தனித்து நின்ற சித்தியின் விழிகளில் பயத்தைப் பார்த்தேன், மிகத் தெளிவாகவே!

   தாய் வீட்டிலும் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து வெறுப்போடு ஒதுக்கிவிட்டனரே!

   “ச்சே! நீயெல்லாம் என்ன பிறப்பு? மற்ற இளம்பிள்ளைகள் போலவா அவள் இருக்கிறாள்?

   நீ என்னதான் சொன்னாலும் வாயை மூடிக்கொண்டு நடமாடுறாள்; உழைத்து அதை உங்களுக்காகத்தான் செலவு செய்யிறாள்; முழு ஆம்பள போல வீட்டைப் பார்த்துக் கொள்ளுறாள்; அப்படியிருக்க, இந்தளவுக்கு வன்மம்  ஏன்அவள் வேதனைப்படுறதைப்  பார்த்து அப்படி என்ன சந்தோசம் உனக்கு? இனிமேல்பட்டு இந்த வீட்டு வாசலுக்கும் வராத!” 

   தாயும் சகோதரிகளுமாக மாறி மாறித் திட்டி அனுப்பியிருந்தார்கள்

   குரலுயர, பட்டுப் பட்டென்று கத்தி அதட்டி உருட்டும் சித்தி அன்றும் அங்கு  கத்திவிட்டு வந்திருந்தாலும் இப்போதோ அதிர்வோடு நின்றிந்தார்.

   என்னருகில் நின்ற தங்கைகள் இருவரும் ஒருசேரத் தாயை முறைத்தார்கள். அவர்களின் விழிகளோ, வெறுப்பை வெளிப்படையாகவே காட்டி நின்றன

  “இவவப் பற்றி உங்களுக்கு விளங்காமல் இருக்காதக்கா! இருந்தும், இனிமேல் பட்டு எங்களுக்காக என்றும் இவவ எதுக்குமே நம்ப வேணாம். இவா உங்களுக்கு எப்பவும் நல்லது நினைக்க மாட்டாதீபி சொல்ல, “உங்களுக்கு என்று இல்லை நமக்கும் தான்; கெட்டது மட்டும் தான் செய்வா; சரியான பைத்தியம்!” இடையிட்டாள்,   கவி.

   இருவரையும் சமாதானப்படுத்த முயன்ற நான் தான் அன்று தோற்று நின்றேன்.

   அவர்களோ, மனதுள் இருந்த அத்தனை கோபமும் ஆதங்கமும் பீறிட வார்த்தைகளால் வாங்கு வாங்கென்று வாங்கி விட்டார்கள், அழுதுகொண்டேதான்.

  “எடியேய்! என்ன எல்லாம் கதைக்கிறீங்க? உங்கட ரெண்டு பேரின்ட நல்லதுக்குத்தான் எல்லாம் செய்யிறன். நீங்களோ, கொஞ்சமும் நன்றியில்லாமல் அவளோட நிண்டு…”   என்று, மகள்களைச்  சமாதானம் செய்ய முயன்றவருக்கும் தோல்விதான்.

  “யாரு? நீங்க எங்களுக்கு நல்லது செய்யிறீங்களோ? இதை நாங்க நம்ப வேணுமோ? உங்களுக்குப்  பைத்தியம். அப்பாவில உள்ள கோபத்தில எங்கள் மூணு பேரையும் துன்படுத்திப்பார்க்க ஆசைப்படுறீங்க. நல்ல காலம் அப்பா இதையெல்லாம் இருந்து பார்க்கேல்ல.” மீண்டும் சீறினாள் கவி

  இப்படியே மாறி மாறிக் கதைத்துச் சித்தியைக் கண்ணீரோடு அமர்த்தி விட்டார்கள்.

  அதன் பிறகு அவரில் ஒரு அமைதி இல்லாமல் இல்லை. இருந்தும் இயற்கையான சுபாவம் அவ்வளவு இலகுவில் மாறுமா என்ன? எதிர்ப்படுகையில் அடிக்குரலில் வார்த்தையெனும்  ஊசியால்  குத்தினார் தான்

  அதுதான் பழக்கப்பட்டதாச்சே! பிரச்சனையாக எண்ண முடியவும் இல்லை

  இப்படிகடந்து வந்த நினைவுகளின் இடையூறுகளோடு  தயாராகிய நான் பழக்கதோசத்தில் கறுப்புப்பொட்டை எடுத்து நெற்றியில் ஒட்டிவிட்டுக் கணம் நிதானித்தேன். அதேநேரம் மிகவும்  தற்செயலாகத்தான் என் இடக்கையில் பார்வை படிந்தது. கருத்திலும் தான். வந்த வேகத்தில் கலியாணக் கோலத்தைக் களைந்த நான் எழுத்துக்குப் போட்ட மோதிரத்தைக் கழட்ட இல்லை.

   என்ன மறந்து விட்டேனா

   பச்! கலியாணத்துக்கு முதலே போட்டது தானே? எப்படியும், உடனே என்று இல்லையென்றாலும்  நாளோட்டத்தில் எல்லாம் நல்லபடியாகும்  என்ற நம்பிக்கை மனதோரம் வாசம் செய்யும் போதல்லவா அந்த   மனிதனுக்குக்  கையை நீட்டி இருந்தேன் .

   ஆனால், இக் கணமோ, எங்களுக்குள்ளே நேர் சீராக எவ்விதமான சந்தர்ப்பங்களும் இல்லை என்ற எண்ணம் தானே நெஞ்சில் நிறைந்து கிடக்கு.

  ‘அதுக்குப் பிறகு என்ர விரலில இந்த மோதிரத்துக்கு என்ன வேலையாம்?’

   உள்ளத்தின் முணுமுணுப்போடு மோதிரத்தை உருட்டி  முக்கால் வாசி கழட்டிய எனக்குஏனோ முழுமையாகக் கழட்ட முடியவில்லை.

  ‘ஏனெனிந்தக் குழப்பம்?’ என்ற தடுமாற்றமும் அவ்வளவாக எழவில்லை.

   மொடாக்குடியன், காதல் தோல்வியில் காதலி நினைவோடு இருப்பவன் என்று எல்லாமே தெரிந்ததுதானே கல்யாணம் செய்தேன். பிறகென்ன? இப்ப வந்து அதை இதைச் சொல்வது

  என் மீதுதான் மிகுந்த கோபமும் எரிச்சலும்  ஏற்பட்டது .

  திருமணத்தின் பின்னர், அவர்களின் வீட்டு வாயிலில் தனியே விட்டுச் சென்ற போது மனத்தில் சுருக்கென்றாலும் எவ்வளவோ சமாளித்துத் தானே நின்றேன்? வீட்டை விட்டெல்லாம் வந்து விடவேண்டும் என்ற எண்ணம் என்னுள் துளியும் இருக்கவில்லை. ஒருவித அமைதியோடுதான் சாமியறையில் விளக்கேற்றினேன்

   அப்படியிருக்க, அறையின் சுவர் முழுவதும் அந்தப் படங்களை பார்த்ததும் அதிர்ச்சியில் மூளை இயங்க மறந்தது உண்மை தான். நானும் ஒரு சாதாரணமானவள் தானே

   அதுமட்டுமாவந்த வேகத்தில் கேட்டுக் கேள்வியில்லாது அடித்தார் பாருங்க. அதோடு என்னவெல்லாம்  சொன்னார்.

   அத்தனை இலகுவாக மரணிக்கும் வசனங்களா சொன்னார்

   நேருக்கு நேராகப் பார்த்துநான் காதலியை மறக்க மாட்டேன்என்கையில், ‘நான் அங்க எதற்கு?’ என்று தோன்றாது இருக்குமா

   அதோடு, சகோதரன் காதலியை நினைத்துக்கொண்டு இருக்க, நான் அங்கிருந்து வேதனைப்படுவதைக் காணவே கலியாணம் செய்து வைத்தேன் என்றாரே சித்தி.

  “செத்துப் போன உன்ர  அப்பா இதைப்  பார்த்து மனம் எரிய வேணும்; அது போதும் எனக்கு!” என்றாரே. அதுவும் சேர்ந்துதான் என்னை வெளியேற வைத்தது.

  எதற்காக அங்கிருந்து துன்பப்பட்டு, ‘நீ வேண்டாம்!’ என்று வெளிப்படையாகவே சொல்லும் அந்த மனிதனையும் துன்பப்படுத்த வேண்டும்

   அதற்குப் பதில் என் வீட்டில் தங்கைகளோடு இருந்து விடுகின்றேன். என் தங்கைகளுக்காக என்றுதானே இந்தத் திருமணத்துக்குச் சம்மதித்தேன்.

   இனி ஏன் திருமணம் செய்யவில்லை என்றெல்லாம் ஊரார் கதைக்க மாட்டார்கள்

  “ஐயோ பாவம்! இப்படியாப் போச்சே!” என்று, அவர்கள் படும் பரிதாபம் என்னை ஒன்றும் செய்யப் போவதுமில்லை.

  ‘என் தங்கச்சிகளுக்கு அக்காவாக மட்டும் இருந்திட்டுப் போறன்எண்ணி முடிக்கையில் அந்த மோதிரத்தையும் கழட்டியிருந்தேன்.

   இருந்தும் கண்ணாடியில் தெரிந்த என் நெற்றியிலிருந்த அந்த கறுப்புப் பொட்டுப் பொருந்தவில்லை எனும் எண்ணம் என்னுள் ஒடித் திரிந்தது.

  தாமதம் எல்லாம் செய்யாமல் அங்கிருந்த குட்டி லாச்சியைத்  திறந்து சிவப்புப் பொட்டை எடுத்து நெற்றியில் ஒட்டி நன்றாக அழுத்திவிட்டேன்.

   முன்னுக்குப் பின் முரணாக நடக்கிறேனா?

   எல்லாம் முடிந்திட்டு என்று சில கணங்களுக்கு முன் நினைத்தவள் செய்யும் வேலை என்ன?

   அது ஒன்றுமில்லை. நான் முதலும் அடர் சிவப்பில் ஒட்டுப் பொட்டு வைப்பேன் தானே? பிறகென்ன

   கைப்பையை எடுத்துக்கொண்டு வெளியே வந்து, தங்கைகளின் புத்தகப்பைகளோடு பையை வைத்துவிட்டு சமையலறை நோக்கித் திரும்ப, அதுவரை அங்கு நின்ற சித்தி கையிலிருந்த பாத்திரத்தை நங்கென்று வைத்துவிட்டு வெளியில் வந்தவர், என்னை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தபடிதான் சென்றார்.

 “பரிசிக்கேடு! தலைவிதி! படவேண்டிக் கிடக்கு!” 

  அவர் முணுமுணுத்தது எனக்கு நன்றாகவே கேட்கவும் செய்தது

  “அக்கா வாங்கோ…” அழைத்தாள்  கவி

   நாலு அடிகள் வைத்திருப்பேன், “கவி, தீபி இங்க வந்து பாருங்க, யாரு வருகீனம் என்று”  சொன்ன சித்தியின் குரலிலும் அதீத பரபரப்பு. சட்டென்று திரும்பியவர் என்னைத்தான் பார்த்தார்.

   கவி, தீபி அசையவில்லை. அவர்கள் தான் எவ்வளவோ சொல்லியும் தாயோடு  கதைப்பதையே  நிறுத்தியிருந்தார்களே!

   ‘அப்பிடி யார் வாறது?’  வாசலை நோக்கி நடந்தேன் நான்.

error: Alert: Content selection is disabled!!