அத்தியாயம் 15 – 1

 சித்தியின் இந்தப் பரபரப்புக்குக்  காரணம் யார்? அதுவும், தங்கைகளை  அழைத்தபடி அவர் என்னைப் பார்த்த பார்வையே  வாசலை நோக்கி என்னை நடத்திச் சென்றது.

  ஆனால்நிச்சயம் இவர்களை எதிர்பார்க்கவில்லை; அதுவும் அவரை

  ஒரு கணம், ஒரே ஒரு கணம் அசைவற்று நின்றேன் தான். மறுநொடியோ, திரும்பிவிட்டேன். என்றாலும் உள்ளத்தில் என்னையும் அறியாது ஒரு நடுக்கம் ஓடித்திரிந்தது. கோபத்தில் வந்த நடுக்கமது

  ‘இவர்களில் நான் கோபம் கொள்வது சரியா என்ன? எல்லாமே நானே தெரிந்து வர வைத்தவை ஆயிற்றே!’ அதே உள்ளம் தான் இப்படியும் எண்ணிக் கொண்டது.

   ‘இப்ப என்னத்துக்கு வந்திருக்கீனம்?’ கேள்வியை முனகிய உள்ளம், ‘அவர்களின் அக்கா வீடு, என்னத்துக்கும் வந்திட்டுப் போகட்டும்.’ பதிலையும் முணுமுணுத்தது.  

   இருந்தும், எப்போதுமே மிக மிக அத்தியாவசியம் என்றால் ஒழிய சூர்யா இங்கே எல்லாம் வருவதில்லை. அதுவும், அப்பா இறந்த பின்னர் வருவதே இல்லை என்று சொல்லலாம்

  சித்தியும் சூர்யாவும் சுமூகமாகக் கதைத்ததையே நான் காணவில்லையே! எப்பவுமே எதிர் எதிர் துருவங்கள், எல்லாவற்றிலுமே கருத்துவேறுபாடுடையவர்கள்.

  அப்படியிருக்க இன்று இவர்கள் வந்துள்ளது?

  “யாரக்காநேரம் போகுதுநீங்க வந்து சாப்பிடுங்க; நாங்க சாப்பிட்டாச்சு!” என்றபடி, எழுந்து வந்தாள் கவி.

  “ம்ம்அஞ்சு நிமிசத்தில போகலாம்.” முணுமுணுத்தபடி நகர்ந்த என்னை, ஓடி வந்து பிடித்து நிறுத்தியிருந்தார்  குட்டி

  அவர் முகத்தையும் நான் பார்க்கவில்லை. கவியைத் தான் பார்த்தேன்.

  அவளும் சட்டென்று அதிர்ந்து தான் போனாள். மறுநொடி, அவள் முகத்தில்  எள்ளும் கொள்ளும் வெடித்தது. சூர்யாவைக் கண்டாளோ  சரி

  ‘விடியவெள்ளனக் காட்டி என்ன இதெல்லாம்?’  மனதுள் எரிச்சல் மண்டியது.

   தீபியும் வந்து நின்று தன் குட்டிச்சித்தியை நெருப்பாகச் சுட்டாள். இத்தனைக்கும் குட்டிச்சித்தி என்றால் இருவருக்குமே அவ்வளவு பிடிக்கும்.

  “என்ன இந்தப் பக்கம்? அதுவும் விடியவே?” வேண்டா வெறுப்போடு கேட்டது கவி.

  வருத்தமும் கேலியும் கலந்த முறுவலொண்று அவர் முகத்தில் மின்னி மறைந்தது

   “நான் தூக்கி வளர்த்த நுள்ளான் எல்லாம் கேள்வி கேட்குது! ம்ம்…” என்றபடி, தங்கைகளைப் பார்த்து முறைத்தார்

   “ஏன்டிஉங்கட வீட்ட நான் வர, நேர காலமெல்லாம் பார்க்க வேணுமே! நான் ஒண்ணும் உன்னட்ட வரேல்ல. என்ர அண்ணிட்ட வந்தன்.” தொடர்ந்து சொன்னார்.

   ‘என்ன? அண்ணியா?’ நான் மனதுள் அதிர்ந்தது போலவே தங்கைகளும்  சில கணங்கள் அதிர்ந்து நின்றுவிட்டார்கள்

   “இங்க பாருங்க குட்டிச்சித்தி, நுள்ளான் எண்டு சொல்லிப் போட்டு, போற போக்கில நசுக்கீட்டுப் போகலாம் எண்டு மட்டும் நினைக்காதீங்க! எனக்குத் தேவையில்லாமல் கதைக்க விருப்பம் இல்ல. அதோட நேரமும் இல்லநீங்க அலட்டாமல் வந்த வேலையை முடிச்சிட்டுக் கிளம்புங்க. எங்களுக்குப்  பள்ளிக்கு நேரமாகுது.” 

   பெரிய மனிசியாகப் படபடத்த கவி, என்னை வந்து இழுத்தாள்.

   என் கல்யாணம் தங்கைகளை முதிர்ந்தவர்களாக்கி விட்டது என்பது தெள்ளத்  தெளிவாகவே புரிந்தது. உன்னால் முடியவில்லையோ நாங்கள் உனக்கு இருக்கிறோம் என்ற வகையில் தான் இந்த நாட்களில் இருவருமே நடந்து கொள்கிறார்கள்.

  “அதுதானே? பெரிசா அக்கறை உள்ள ஆக்கள் போல நாடகம் போடீனம்  அக்கா. இதுக்குப் பின்னால என்ன இருக்குதோ தெரியாது.” தீபியும்  சேர்ந்து கொண்டாள்.

  “பார்! பெரிய மனிசி போலக் கதைக்கிறதை. உங்களுக்கு வாய் அறம்புறமாக் கூடித்தான் போச்சு!” கடிந்துகொண்டார் குட்டி

   “சொந்தம் எண்டு சொல்லிக்கொண்டு சுத்தி இருக்கிறதுகள் எல்லாமே எங்கள இப்பிடி அறம்புறமாக் கதைக்க வச்சால்  நாங்களும் தான் என்ன செய்யிறது?” என்று, வெடுசுடு என்ற கவியின் தலையில் வலிக்காது கொட்டினார் அவர்

   அவளோ விறைப்பாகப்  பின்னால் நகர்ந்து கொண்டாள்.

   “இன்னும் கொஞ்ச நாளில வெளிநாடு போயிருவன், நான் என்ன செய்தன் எண்டு என்னோட இப்பிடி முறைக்கிறீங்க? ” என்றவர், “சரி சரி, அதைப்பற்றிப்  பிறகு பார்ப்பம், இப்ப நீங்க பள்ளிக்கு போங்க; நான் உதயாவோட கொஞ்சம் கதைக்க வேணும்; அதுக்குத்தான் வந்தம்.” என்றார், குரலில்  கண்டிப்போடு.

   “என்ன விளையாடுறீங்களா? அக்காவும் வர வேணும்.” என்ற தீபி, “என்ன வந்தமா? யாரோட வந்தீங்க? அம்மம்மா வந்தவாவோ? திரும்பவும் எங்கட அக்காட  வாழ்க்கையில விளையாட்டுக் காட்டப் போறீங்களா?” 

   சீறியபடி  சென்று வாயிலைப்  பார்த்தவள் அப்படியே திகைத்துப் போய் நின்றுவிட்டாள்.

   “ஏன்  தம்பி அங்கயே நிக்கிற? உள்ள வாவன் டா!” சித்தி அழைப்பதும் கேட்டுது.

   “தம்பியா?” கவியும் வாயிலை நோக்கி நகர, “உதயா!” என் முகம் பற்றித் திருப்பி உற்றுப் பார்த்தார் குட்டி

    எங்களுள் அப்படியொன்றும் அதிக வயது வித்தியாசம் இல்லை. என்னைவிட ஆறு வயது பெரியவர் அவர். இருந்தாலும் சித்தியின் தங்கை என்கின்ற மரியாதையோடு தான் பழகுவேன். பழகுவேன் என்றால் எப்போவாவது கதைக்கும் சந்தர்ப்பம் வந்தால் அதே எண்ணத்தில்  தான் கதைப்பேன்

   இப்போதோ, முன்னர் இருந்த மனநிலை என்னுள் நிச்சயம் இல்லை.

   சகோதரனுக்கு ஆரவாரமாகத் திருமண ஏற்பாடுகள் செய்தவர்களுக்கு, அந்த வீட்டில் அவர்களின் சகோதரன், காதலியின் நினைவுகள்  மறந்திடாதிருக்கச் சுற்றிலும் அப்பெண்ணின் அடையாளங்களோடு வாழ்வது தெரியாமல் இருந்திருக்குமா என்ன

  அடதிருமணம் முடித்து வீட்டுக்கு வருபவள் மனம் என்ன பாடு படும் என்ற சின்ன அக்கறை?

  பச்! இவர்களில் கோபித்து என்ன பயன் சொல்லுங்க? எல்லாம் நானே தேடிக்கொண்டது. விடுங்க

  இருந்தும்இவர்கள் ஒருவரையும் பார்க்கவே பிடிக்கவில்லை; பார்வையை விலத்திவிட்டேன்.

  “கவி, தீபிய பள்ளிக்கூடம் போகச் சொல்லும் உதயா; நீர் கொஞ்ச நேரத்தில போகலாம், அவேட்ட சொல்லிவிடும்; ப்ளீஸ் உதயா!” கெஞ்சுதலாகச் சொன்னார்.

 சட்டென்று முகத்துக்கு நேரே வெடுக்கென்று கதைக்கவும் முடியவில்லை. விழிகள் கலங்கிவிட்டன. அதை மறைக்கவும் முடியவில்லை.

  “இல்ல. நான்நானும் கட்டாயம் போக வேணும். பத்து நாள் லீவுக்குப் பிறகு இண்டைக்குத்தான் போறன்.” சொன்னபடி, என் கரத்தை விடுவித்துக்கொண்டு நடந்து கைப்பையை எடுத்துக் கொண்டேன்.

 “காலில காயமெல்லாம் மாறீட்டா உதயா? இன்னும் லேசா நொண்டி நடக்கிறீர்?” அவர்தான் கேட்டார்

  நானோ தங்கைகளோ பதில் சொல்ல முனையவில்லை.   

  “கவி , தீபி போவமா?”  நான் கேட்டதும், “இல்ல உதயா, கொஞ்ச நேரம் மா! ப்ளீஸ்!” அவர் கண்களும் கலங்கிப் போயின.

  “நீங்க போயிட்டு வாங்கஅக்கா கொஞ்சத்தில் வருவா.”

   மீண்டும் தங்கைகளிடம் சொல்ல, “எத்தின தரம் சொல்ல வேணும்? ரெண்டு பேரும் வீணா என்னட்ட வாங்கித் துலையப் போறீங்க. ஓடுங்கோ!” என்றபடி வந்தார் சித்தி.

   அவர்களோ அசையாது நின்றார்கள். முகத்திலோ அவ்வளவு கோபமும் வெறுப்பும்.

   “என்ன எல்லாரும் சேர்ந்து திரும்பவும் நாடகம் போடப் போறீங்களா? ஒருக்காப் போட்ட நாடகத்தில வெளியில இறங்கினாப்  போறவன் வாறவன் எல்லாம் சிரிப்பாச் சிரிக்கிறாங்கள். இந்தமுறை அதுக்கு வேற இடம் பாருங்க! அக்கா நீங்க வாங்க.”  

error: Alert: Content selection is disabled!!