அத்தியாயம் 27- 3

மனம் கடமுடக்க, இலக்கில்லாது எங்கெங்கோ அலைந்த மோட்டார் சைக்கிள் மீண்டும் வீட்டுக்கு வருகையில் சில மணிகள் கடந்திருந்தன. மிக நன்றாகக் களைத்துப் போயிருந்தேன் நான். அதுபோலவே என் உள்ளமும் தொய்ந்து போயிருந்ததுகோபம் மட்டுப்பட்டிருந்தாலும் குறையவில்லை.  

  பிடிப்பில்லா வாழ்க்கை எத்தனைக்கு ருசிக்கும்  சொல்லுங்கள்

  மோட்டார்  சைக்கிளைக் கொண்டு வந்து நிறுத்துகையில் வீட்டு வரவேற்பறையில்  வெளிச்சம் தெரிந்தது.

  “இண்டைக்கு யாராவது ஒரு வார்த்த கதைக்கவேணும்அப்ப இருக்கு!” என்றபடிதான் முன்வாயிலைத் திறந்து உள்ளிட்டேன்.

  கூடத்தில் கிடந்த மேசையில் கொப்பி புத்தகங்கள் பரப்பியிருக்க வேலையாக இருந்தாள் உதயா. மற்றவர்களின் நடமாட்டம் இல்லை. தூங்கிவிட்டார்கள் போலும்

  என் மனம் என்னதான் எதிர்பார்க்கின்றது என்றில்லாது சற்றே நின்று பார்த்தேன். அவளோ, நான் வந்ததை உணராதது போலவே வேலையில் கண்ணாயிருந்தாள்மீண்டும் முறுக்கிக்கொண்டது உள்ளம்.

    ‘இனிமேல் பட்டு இவளோட ஒரு வார்த்த கதைக்கிறேல்ல. நாமாப் போய்க் கதைக்கக் கதைக்கத்  தலைக்கு மேல எல்லா ஏறி ஆடப் பார்க்கீனம்!’  மனம் சீற, வறண்டுகிடந்த நாவையும் காந்திய வயிற்றையும் உணர்ந்து, தண்ணீர் குடிக்கவென்று தான் சமையலறைக்குள் நுழைந்தேன்.

    அங்கே, முதல் பார்வையிலேயே பட்டது, நான் எழுந்து போகும் பொழுது எப்படி இருந்ததோ, அப்படியே, உணவும் பாத்திரங்கள் பரப்பி வைக்கப்பட்டிருந்ததே!

   ‘! ரோசம் கெட்டவன் வந்து விழுங்குவான் எண்டு அப்பிடியே விட்டிருக்கிறாளோ!’ 

  அப்படியேஒரே எற்றாக ஏற்றிவிடப் பரபரத்த கால்களை அடக்கிக் கொண்டே தண்ணியை எடுத்து மடமடவென்று குடித்த போதுதான், அங்கே, உதயாவின் சாப்பாட்டுத் தட்டும் மூடி வைக்கப்பட்டிருப்பதை  அவதானித்தேன்.

   ‘அவளும் சாப்பிடேல்லையோ!’  பசி என்றாளே என்ற எண்ணமும் கைகோர்க்கத் தட்டைத் திறந்து பார்த்தால்  பரிமாறப்பட்ட தோசைகளும் சம்பலும் அப்படியே கை படாதிருந்தது. நான் சாப்பிட்டுவிட்டு வைத்த தட்டும் அருகே மூடியிருந்தது.

   விறுவிறுவென்று அவளை நோக்கிச் செல்கையிலேயே என்னுள் அதுவரையும் கனன்றிருந்த ஆத்திரம் தணிந்திருந்தது. ஒருவேளை, குளிர்ந்த நீர் போனதால் இருக்குமாக்கும்! பிடரித் தலையைக் கோதிக்கொண்டே அவளருகில் சென்று நின்றேன்.

  அப்போதும் அவள் என்னைப் பார்க்கவில்லை; ஏன் அப்படியொருவன் அருகில் வந்து பார்த்துக்கொண்டிருக்கிறான் என்றுணர்ந்தது போலவே காட்டிக்கொள்ளவில்லை.

 நீ சாப்பிடேல்லையா என்ன?” கேட்டும், நிமிரவில்லை அவள்.

 “உதயா உன்னத்தான் கேட்கிறன்ஏன் சாப்பிடேல்ல?” இப்போது என் குரல் சற்றே உயர்ந்திருந்தது

  சரேலென்று நிமிர்ந்து பார்த்தாள். சும்மா இல்லை எக்கச்சக்க முறைப்புப் பார்வை

  “நான் பார்க்க வேண்டிய பார்வையிது! ஒருத்தன எல்லாருமாச் சேர்ந்து எத்தனைக்கெண்டு சுற்றிச் சுற்றித் தாக்குவீங்களாம்?” 

  என் வாய் சும்மாயிரேன் என்று இப்படிச் சொல்லியிருந்தது. கேட்டவள் பார்வையில் இன்னும் உக்கிரம் ஏறியதுபோலிருந்தது.  

  “இங்க பாருங்க, எனக்கு இண்டைக்கே முடிக்க வேண்டிய வேலை நிறையக் கிடக்கு! இப்ப உங்களுக்கு என்ன தெரியோணும்” 

  “வேலைவெட்டியில்லாத நான் உன்னைக் குழப்ப இல்லையம்மாகுழப்பேல்ல. நீ வேலையைப் பார். அதுக்கு முதல் ஏன் சாப்பிடேல்ல எண்டு மட்டும் சொல்லு.” என் குரலில் கேலி

  எனக்கே என்னை நினைக்கஎன்ன மனுசனடா நீ!’ என்றிருந்தது. இவ்வளவு நேரமும் விசரன்  பைத்தியக்காரன் போல ரோட்டு ரோட்டா ஏன்  சுத்திக்கொண்டிருந்தேன்

  அதையிதை எண்ண விடாது குறுக்கிட்டது அவள் குரல்.

  ” ஏன் சாப்பிடேல்ல எண்டா என்ர வயிறும் மனசும் நல்லா நிறைஞ்சிட்டு. அதால பசிக்கேல்ல, சாப்பிடேல்லபோதுமா?” வெடுக்கென்று சொல்கையில் கண்களில் நீர்த்திரையிட்டதைக் கண்டேன். கணத்தில் குனிந்துவிட்டாள்

   நான் சொல்லிவிட்டுச் சென்றதையே எனக்குத் திருப்பியடித்துவிட்டு  வேலை செய்கிறாளாம்.

  “உதயா வா, வந்து சாப்பிட்டுட்டு வேலையச் செய்.”

  “தயவு செய்து உங்கட அலுவலப் பாருங்க .”

  “எனக்குச் சரியாப் பசிக்குது உதயா… ” என்று சொல்கையில் , ‘பசிச்சாப்  போய் எடுத்துப் போட்டுச் சாப்பிடுங்க!’ என்று சொல்வாள் என்றே எதிர்பார்த்தேன். அவள் எதுவுமே சொல்லாது நிமிர்ந்து நேர் பார்வை பார்த்தாள். ஒருவார்த்தை கதைக்கவில்லை. விறுவிறுவென்று எழுந்து சமையலறைக்குள் நுழைய, பின்னால் போனேன் நான்

  “எல்லாம் ஆறிக்கிடக்குகறியை மட்டும் கொஞ்சம் சூடாக்கிறன்.” எனக்குச் சொன்னாளா? தனக்குத் தானே கதைத்தாளோ!

  “தோசை மா இருக்குபுதுசாச் சுடவோ?” இது எனக்குத்தான்.

  “இல்ல இல்ல வேணாம், இதையே சாப்பிடுறன். கறியை மட்டும் கொஞ்சம் சூடாக்கினால் சரி!” அமர்ந்து கொண்டேன் நான்

  அதே வெடுசுடுமுகத்தோடுதான் கறியைச் சூடுபண்ணி எடுத்தவள், “வேற பிளேட்டில சாப்பிடுங்க…” என்று நகர, ” இல்ல இல்ல இதிலயே சாப்பிடுறேன்இந்தக் கறிக்கு மேலயே கொஞ்சம் குழம்பு விடும்.”  தட்டை நீட்ட, “அது நல்லா ஆறிக்கிடக்கு.” என்றபடி, வேறொரு தட்டை எடுத்துப்  புதிதாகப் பரிமாறித் தந்தவளிடமிருந்து வாங்கிக் கொள்ளாது அவளையே பார்த்தேன் .

  “என்ன?” 

  “இல்லநீயும் சாப்பிடு!”

  “எனக்குப் பசியில்லை.”

  “உதயா விளையாடாத! நீ சாப்பிடுறது எண்டா நானும் சாப்பிடுறன். இல்லையோ வேணாம் விடு! பசிக்கவே படுகிறது ஒண்டும் எனக்குப் புதுசு இல்ல.” எழுந்து கொள்ள, “ஐயோ இருந்து சாப்பிடுங்க, நானும் சாப்பிடுறன்.” என்றவள் சாப்பிட்டு முடிந்தெழும் வரை ஒத்தவார்த்தை கதைக்கவில்லை. நானும்ஒரு தோசை, கொஞ்சம் சம்பல்என்றதுக்கு   மேல் ஒருவார்த்தை கதைக்கவில்லை.

error: Alert: Content selection is disabled!!