அத்தியாயம் 33- 4

 “நான் விரும்பினவளையும் அசிங்கப்படுத்தி, கட்டுறவளையும் அசிங்கப்படுத்திற வேலை செய்ய என்ர மனம் கொஞ்சமும் இடம் கொடுக்கேல்ல.” என்று அவர் சொன்னபோது, கண்ணீரோடு தத்தளித்தபடி  அவர் முகத்தில் தரித்து நின்ற  என் விழிகள் அப்பால் விலகின

   ‘! அப்ப அவரிட காதலிக்கும் அவேட காதலுக்கும் அசிங்கம் எண்டுதான் யோசிச்சவரோ!’ உள்ளம் தடதடத்தது.

   “நீங்க முதல் என்னை விடுங்கவன்!” மீண்டும் விலகி அமர முயன்றேன்.

   “நான் சொல்லி முடிக்கிற வரைக்கும் உன்ன விடப் போறதில்ல.” என்றவரை, என்ன செய்யலாம்?

  மீண்டும் அவர் தலை என் தலையோடு சாய்ந்தது

   “நான் உனக்கு எந்த விதத்திலும் பொருத்தமில்லை எண்டும் மனசுக்கப் பெருத்த உறுத்தல் இருந்திச்சு! என்னென்னவோ  நடந்து கலியாணம் என்றது வரைக்கும் வந்தாச்சு என்ன செய்யிறதுஎன்னால அப்ப முடிஞ்சது ஒன்றுதான், உன்ர கழுத்தில தாலி கட்டேக்கஇனி நீ என்ர பெஞ்சாதி, என்னை விட்டுப் போனவள் போனதாகவே  இருக்கட்டும்.’ என்ற தீர்க்கமான முடிவெடுத்திட்டே தாலியக் கட்டினன் தெரியுமா

  போனவளை நினைக்கிறது இல்ல எண்டு  முடிவெடுத்திட்டாலும் அதுஅது என்ன லேசான விசயமா சொல்லு? என்ர  இதயத்தை நானே அறுத்து ஏறியிற வேதனை அது! அதுவே, அந்த நேரம் உங்க எல்லாரிலும் கொலை வெறியைத் தூண்டிச்சு!” 

  அவரின் கைவளைக்குள் இருந்த என் தலையில் அவர் முகம் சாய்த்திருந்தார். குரலில் வழிந்த கசப்பில் தலையை நிமிர்த்தி அவரைப் பார்க்க முயன்றேன்முடியவில்லை.  

   சிறிதுநேரம் அவர் எதுவுமே கதைக்கவில்லை. நானோ, எதுவும் கதைக்கும் மனநிலையில் இருக்கவில்லை. அவரைவிட்டு விலகிச்செல்ல முயல்வதையும்  விட்டுவிட்டு அப்படியே இருந்தேன்.

    “இங்க பார் உதயா!” என் முகம் பற்றி நிமிர்த்தி விழிகளில் உற்றுப் பார்த்தார்.

     “அண்டைக்கு  அந்த விசரில தான்  உன்ன வாசலில் விட்டுட்டு உள்ள போனன். உன்னிலும் சரியான கோவம்  தான். என்னைப் பற்றி எல்லாமே  தெரிஞ்சும் நீ எப்பிடிக்  கலியாணத்துக்குச்  சம்மதம் சொல்லலாம் எண்ட  கோபம். நீ வேணாமெண்டு விலக வேண்டியதுதானே என்று நினைச்சன். இல்லையோ வந்து அனுபவி என்றளவில இருந்திச்சு

    அதேநேரம் நான்  காதலிச்சவளுக்கும் உனக்கும்  அநியாயம் செய்திட்டன் எண்ட குற்றவுணர்வும் போட்டு வதைச்சிக்கொண்டு இருந்திச்சு! எல்லாருக்கும் முன்னால எதையாவது கத்தித் துலைச்சிருவனோ எண்டெல்லாம் உண்மையாவே பயமா இருந்திச்சு! அதனாலதான் கொஞ்ச நேரம் எல்லா ஆர்ப்பாட்டத்திலயும் இருந்து  விலகிப் போவம் என்று இங்க வந்து இருந்தன். அது பார்த்தால் படம் உடைபடவும்…” படபடவென்று சொன்னவர் பேச்சு நின்றது. விழிகளையும் விலக்கிக் கொண்டார்.

  அந்தநாள் வாழ்வில் மறக்க முடியவே முடியாதுதான். விடமாட்டார் என்று தெரிந்தாலும் தள்ளியிருக்க  முயன்றேன்

  என் அசைவு உணர்ந்து என் முகத்தை உற்றுப் பார்த்தவர், “உண்மையாவேமனமார வருந்திக்கேட்கிறன் என்ன மன்னிச்சுக் கொள்ளு உதயா!” என்றவர் கண்கள் நிறைந்து நின்றதை மதியொளி வெளிச்சம் போட்டுக் காட்டியது.

   என் கண்களும்  தளுப்பினவேயொழிய வாய் பேசவில்லை

  “அன்றைக்கு எனக்கு உண்மையில் பைத்தியம் பிடிச்சது போல இருந்திச்சு

  நானே அவளை, அவள் நினைவை தலை முழுகீட்டு உனக்குக்  கணவன் எண்ட ஒன்றில உறுதியா நிக்க வேணுமெண்டு  முடிவெடுத்திருந்த நேரம்,    அவள்ட படங்கள் கிடந்த நிலை பார்த்து என்னையே எனக்கு வெறுத்துப் போச்சுத் தெரியுமா?  

   நீ அப்பிடியெல்லாம் செய்வாய் எண்டு நான் கொஞ்சமும் நினைச்சிருக்கேல்ல. ஆனால், செய்திட்டியே எண்ட கோபத்தில் அறைஞ்சிட்டன்.” 

  என் தலையைத் தன் நெஞ்சோடு அழுத்தி உச்சியில் கன்னம் பதித்தார்

  “உன்னில, வீட்டாக்களில் என்று எல்லாரிலும் இருந்த கோபத்துக்கு வடிகாலா உன்னைப் போட்டு அறைஞ்சிட்டன் டிகரம் என் கன்னத்தை மென்மையாகத் தடவியது.

  “அழாத உதயா…” குரல் தளதளத்து வந்தது

  “மன்னிச்சுக் கொள்ளடி!” மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார், என் கண்கள் தள்ளிய நீரைத் துடைத்தபடி.

  “இதெல்லாம்இன்றைக்கு நீ என்ர  பெஞ்சாதி என்று உணர்ந்திட்டு நான் செய்தவற்றை எல்லாம் சமாளிக்கச் சொல்லுற சாட்டோ எண்டு கூட இருக்கடி!”

   குரல் நடுங்கச் சொன்னவர் விழிநீர் என் கன்னத்தில் பட்டுத் தெறித்தது

  நான் எதுவுமே சொல்லவில்லை. சொல்லும் மனநிலையிலும் இல்லை.

  அவர் பற்றி முழுதும் தெரிந்து கலியாணம் செய்தவள் நான். அதுவும் எத்தனை பயங்கள், தவிப்புகள் இருந்தாலும் வாழ்வேன் என்ற நப்பாசையோடு இருந்தேன் தானேஎன்ன சொல்லக் கிடக்கு?

  அந்த வாழ்வு, கட்டிவிட்டோம் வாழ்ந்திட்டுப் போவோம் என்றில்லாது மனங்கள் ஒன்றுபட்டதாக இருக்க வேண்டும் என்றது மட்டுமே என் தணியாத ஆசைசூர்யா இப்படிக்  கதைப்பதைப்  பார்க்கையில் அது கை கூடும் என்ற நம்பிக்கை முழுமையாக வந்திருந்தது

 உண்மையில் எனக்கு ஒரு கலியாணம் தேவையாகவும் இருந்திருக்கலாம் உதயா; அதுவும் ஒரு ஆத்மார்த்தமான உறவு

  அதை வெளியில சொல்லவோ எனக்கு நானே  உணர்த்தவோ முடியாத நிலையிலும் நான் இருந்திருக்கலாம். இல்லாட்டி, இண்டைக்கு உன்னைக் கட்டிப் பிடிச்சுக்கொண்டு, நான் நடந்து கொண்ட முறைக்கெல்லாம் இப்பிடி உன்னட்ட விளக்கம் சொல்லிக்கொண்டிருப்பனா சொல்லு?

   நீ என்னைப் புரிஞ்சு கொள்ளவேணும் என்ற தவிப்பு என்னைப் போட்டுக் கொல்லுது உதயா.” என்றவர் பார்வை,  ‘புரிந்து கொள்ள முடிகின்றதா?’ என என்னிடம் யாசித்து நின்றது

   என்னதான், கேள்விகள் அவர் தரவேண்டிய விடைக்காக காத்திருந்தாலும், இந்தக்கணம், இப்படிக் கண்ணீரும் கலக்கமுமாக  சூர்யா தன்னிலை விளக்கம் சொல்லிகொண்டிருக்க அதைக் கேட்டுக் கொண்டிருக்க முடியாதிருந்தது எனக்கு.

  அவர் மனத்தை முழுமையாக அவரின் வாய்வார்த்தைகளில் கேட்கவும் ஆவலாக இருந்தாலும், இந்தக் குற்றவுணர்வும் சோகமும் சகிக்க முடியாததாக இருந்தது.  

  அதுவே, “குட்டிக்கு விசா வந்தது, அவள், நீ வந்தால் தான் போவன் எண்டதெல்லாம் நான் உன்னக் கூட்டிக் கொண்டுவர ஒரு சாட்டுடி. அப்படியில்லாட்டியும் நீ வந்திருப்பஇல்ல இல்லநானே வந்து கூட்டிக்கொண்டு போயிருப்பன். என்னஅதுக்குச் சில நாட்களாகி இருக்கும்.” என்று அவர் சொன்னதற்கு, “! நம்பிட்டன்…” கொடுப்புக்குள் நுழைந்த நகைப்போடு சொல்ல வைத்தது.

error: Alert: Content selection is disabled!!