அழகிய சவால் நீ 5 – 2

“என்ன, பிளான் அவுட் என்று வொரியா?” கண்ணடித்துத் தன்னிடம் கேட்டவருக்கு என்ன பதில் சொல்வது? சற்றே தடுமாறினாலும், “கிளாஸ் கொஞ்சம் விரைவாக முடிந்தால், நாங்க பிளான் சக்ஸஸ் ஆக்கி விடுவோமே!” விழிகள் சிரிப்பில் சுருங்கப் பதிலளித்தாள், ஒலிவியா.

 

“இந்தப் போட்டியில் இருக்கிற வரை இதில் மட்டுமே கவனம் இருக்கட்டும்!” எச்சரிப்பது போல் சொன்னவர், “உனக்குச் சமையல் துறையில் பிரகாசமான எதிர்காலம் இருக்கு ஒலிவியா!”அன்போடு சொன்னார்.

 

அவ்வளவு பேருக்கும் இடையில், எந்நேரமும் துறுதுறுவென்று இருப்பதோடு, தனக்கான சவால்களிலும் கண்ணும் கருத்துமாக இருப்பவள் மீது தனி அன்பே அவருக்கு உருவாகிவிட்டிருந்தது. அதை அவ்வளவாக வெளிக்காட்டியதில்லை, இப்படித் தற்செயலாகக் கசிந்தால் தான் உண்டு.

 

ஒலிவியாவின் மறுபுறம் வந்துகொண்டிருந்த சக போட்டியாளன், “கல்லுக்குள் ஈரம் கொஞ்சம் இருக்குப் பாத்தியா!” அவள் காதுக்குள் குசுகுசுத்தான்.

 

அன்றைய மாஸ்டர் கிளாசில், ‘ஹெபாச்சி’யில்(Hibachi) வைத்து இறைச்சி, மீன் சுடுவது பற்றிய செய்முறை விளக்கங்கள், சின்ன சின்ன நுணுக்கங்கள் என்று கூற ஆரம்பித்தார், ஆரோன் டேல். அடுத்துக் கடந்த நிமிடங்கள் ஒன்று ஒன்றும் போட்டியாளர்களுக்கு மிகப் பயனுள்ளதாக இருந்தது.

 

அவர் தயாரித்த மீன் இறைச்சிகளை, இருவர் இருவராகச் சுவையும் பார்த்தார்கள்.

 

அடுத்து, வெர்த் ‘அண்டர் பான்ரி’ இன்கிரிடியென்ஸ் வைத்து ஒரு டிஸ் தாயாரித்துக்காட்டினான். ஒவ்வொன்றையும் சொல்லி சொல்லி வேகமாக அவன் சமையல் செய்த விதம், இடையிடை போட்டியாளர்களைப் பார்த்துச் சிறுமுறுவல், கேட்ட கேள்விகள் என்று அழகிய தருணங்களால் ஒலிவியா நெஞ்சம் நிறைந்து கொண்டிருந்தது.

 

அடுத்து, கிறிஸ்டினாவின் முறை. உங்கள் எல்லோருக்கும் பிடித்த ஒருவர் வரப்போகிறார் என்று சொல்லி, பாஸ்தா குயின் என்று எல்லோராலும் அழைக்கப்படும் ஹோம் குக்கிங் சீசன் எட்டின் வெற்றியாளர் மரியாவை அழைத்தார். அவள், ஐந்து வகையான பாஸ்தா செய்து காட்டினாள்.

 

மூன்று வகுப்புகளும் முடிய, மதியம் கடந்திருக்கவே ‘கட்’ என்றிருந்தார்கள்.

 

“இனி, நீங்கள் ஏற்கனவே திட்டம் போட்டது போல் ஊரைச் சுற்றி வரலாம். நாங்களும் உங்களோடு வருவதில் ஏதேனும் ஆட்சேபனை இல்லையே!” சிரிப்போடு கேட்டார், கிறிஸ்டினா.

 

போட்டியாளர்கள் ஆரவாரம் செய்து மகிழ்வை வெளிப்படுத்தினார்கள். அவர்களோடு மூவரும் சேர்ந்து கொள்ள, நிகழ்ச்சிக்குழு ஒழுங்கு செய்திருந்த உணவை உண்டு விட்டு ஊர் சுற்றப் புறப்பட்டார்கள்.

 

பொழுது சாயும் வேளை திரும்பி வந்தவர்கள் அத்தோடு அமைதியாகவில்லை. கிடைத்த அருமையான பொழுதை விட்டுவிடுவதா? நிகழ்ச்சிக்குழுவிடம் கேட்டு காம்ப் ஃபயருக்கு ஏற்பாடு செய்தார்கள்.

 

காரிருள், அதைக் கிழித்துக்கொண்டு கொழுந்து விட்டெரிந்த காம்ப்ஃபயர், சற்றே தள்ளி வைக்கப்பட்டிருந்த டிஸ்கோ மல்டி கலர் மின்விளக்கிலிருந்து கசிந்த பல்வண்ண ஒளிக்கலவை என, அவ்விடமே தேவலோகமாகியிருந்தது.

 

அன்றைய அவர்கள் கொண்டாட்டத்துக்கு மெருகு சேர்த்தது, போட்டியாளர்களும் நிகழ்ச்சிக்குழுவினர், நடுவர்கள் என்று எல்லோரும் சேர்ந்து பாடியது. அதுவரை அங்கங்கே குழுவாக நின்றவர்கள் கூட வந்தமர்ந்து கொண்டார்கள்.

 

திடுமென்று ‘I found a love for me’ என்று ஆரம்பித்திருந்தான், வேர்த்.

 

சட்டென்று நிசப்தம் சூழ்ந்தது. எல்லோர் பார்வையும் அவன் மீது! விழிகளை மூடிக்கொண்டு சற்றே நிமிர்ந்து வானம் பார்த்தபடி இருந்தான், அவன்.

 

Oh darling, just dive right in and follow my lead

Well, I found a girl beautiful and sweet

Oh, I never knew you were the someone waiting for me

 

குழைந்து உருகி வழிந்தது, அவன் குரல். முதலில் ஆச்சரியத்தோடு பார்த்திருந்த ஒலிவியா தன்னையும் அறியாது விழிகளை மூடிக்கொண்டாள். கண்களுள் எப்பக்கம் திரும்பினாலும் பனிமலைகளும் பூவாய்க் கொட்டும் பனித் தூவலும்! அதனிடையே, இருவர் மட்டுமாக இறுகப் பற்றிய கரங்களோடு, ஒருவர் கதகதப்பை மற்றவர் உணர்ந்தபடி நெருங்கி நின்று தாள இலயத்துக்கேற்ப நடனமாடிக் கொண்டிருந்தார்கள்!

 

Baby, I’m dancing in the dark with you between my arms

Barefoot on the grass, listening to our favorite song

When you said you looked a mess, I whispered underneath my breath

But you heard it, darling, you look perfect tonight

 

வேர்த் குரல் செவிவழி நுழைந்து அவளுள் செய்த மாயம் விழிகளோரம் மெதுவாகக் கசிந்து வழிந்தது.

 

விழி திறந்து அவனைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. திறந்தால் அந்தப் பனிமலையும் அவன் அருகண்மையும் என்னவாவது என்றெண்ணியவள், தாமதியாது வாய் திறந்தும் இருந்தாள்.

 

Well, I found a man stronger than anyone I know

He shares my dreams, I hope that someday we’ll share a home

I found a love, to carry more than just my secrets

To carry love, to carry children of our own

 

வேர்த் பாடுவான் என்பது அவனோடு நெருக்கமானவர்கள் அறிந்ததே! ஆனால், இவள்? பட்டென்று விழி திறந்த வேர்த் இமைக்க மறந்தான்.

எல்லோர் பார்வையையும் தனதாக்கிக்கொண்டவளோ, மெல்லிய நடனத்தோடு அவன் கரம்பற்றி பனித்தூவலில் கால்புதைய நடந்தபடி பாடினாள்…பாடினாள்…

 

We are still kids, but we’re so in love

Fighting against all odds, I know we’ll be alright this time

Darling, just hold my hand, be your girl, you’ll be my man

And I see my future in your eyes

 

Well baby, I’m dancing in the dark, with you between my arms

அவள் குரல் குழைந்து வருடிச் செல்ல, அவன் குரல் இணைந்து கொண்டது.

 

while listening to our favorite song

When I saw you in that dress, looking so beautiful

I don’t deserve this, darling, you look perfect tonight

 

Baby, I’m dancing in the dark, with you between my arms

Barefoot on the grass, while listening to our favorite song

I have faith in what I see, now I know I have met

An angel in person, and she looks perfect

 

பாடல் இசைக்கும் குரல்களோடு தாளலயமாக இணைந்து காம்ப் ஃபயர் விறகு எரிந்து பொறி பறந்தது. சுற்றி இருந்தவர்களோ மந்திரத்தில் கட்டுண்டவர்கள் போல் அவர்கள் குரல்களின் பிடியில் அகப்பட்டுச் சலனமின்றி இருந்தார்கள்.

 

ஒரிஜினல் வெர்ஷன் தான் ஒளிபரப்பாகிறதோ என்ற ஐயம் எழும் வண்ணம் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.

 

முத்தாய்ப்பாக ,No, I don’t deserve it, you look perfect tonight என்ற வேர்த், பட்டென்று விழிகளைத் திறந்து ஒலிவியாவைப் பார்த்தான்.

 

அவளோ, மியா இறுகக் கட்டிப்பிடித்து வாழ்த்த மற்றவர்களும் சேர்ந்து கொள்ள அவர்களுள் மறைந்து போனாள். நான்காம் பிறை நிலவைப் போல், இடையிடை தென்பட்டவள் பார்வை அவன் பார்வையோடு உரச, வேர்த் இதயம் மெல்ல அதிர்ந்தது.

 

எல்லோருமே சேர்ந்து பாராட்டித் தள்ளினார்கள். இருவரும் ஒற்றைச்சொல் உதிர்க்கவில்லை. மனங்கள் இரண்டும் திடீரென்று கவ்விக்கொண்ட அமைதியின் பிடியில்!

 

 

error: Alert: Content selection is disabled!!