ஆழியின் மெளனம் ஏனோ 19 – 1

மௌனம் -19

அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தலையில் கை வைத்து அயர்ந்து அமர்ந்திருந்தான் செழியன் .

அதைப் பார்த்த ஆழினியின் காதல் கொண்ட மனமோ பரிதவித்துக் கொண்டிருந்தது.

அவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கவும், அவனைப் பார்த்தவள்,

“என்ன ஆச்சு? தலை வலிக்குதா? டீ கொண்டு வரவா?” என்றுக் கேட்டாள்.

அவளை நிமிர்ந்து பார்த்த செழியன், ‘என்னுடைய தலைவலியே நீதான்…’ என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டவன்,
“ஆழி… உண்மையிலேயே நான் ஏன் இப்படி இருக்கேன்னு உனக்குப் புரியலையா? தயவுசெய்து என்னை டென்ஷனாக்காமல் போயிடுடி.” என்றுக் கூற.

அவளுடைய கண்கள் கலங்கின.

“நான் போறேனு தான் சொல்றேன். நீங்க தான் விட மாட்டேங்குறீங்க.” என்றாள்.

“பைத்தியமாடி நீ! நான் உன்னை கீழே தான் போக சொன்னேன். இதை மட்டும் இப்படி புரிஞ்சுக்குறவ. எனக்கு உன்னைத் தான் பிடிக்கும்னு சொல்றேன். அதைக் கொஞ்சமாவது உன் மண்டையில ஏத்துக்கிறியா”

“இல்லை… நீங்க ஏதோ ஒரு காரணத்துக்காக இப்படிச் சொல்றீங்க. உங்களுக்கு தனுவைத்தான் பிடிக்கும். அது எனக்கு நல்லாத் தெரியும்.”

செழியன் எதுவும் பேசாமல் அவளைப் பார்த்தான்.

“சரி… விடு. இதைப் பத்தி இனிமே பேச வேண்டாம். ஏற்கனவே எனக்கு தலைவலி இருக்கு. பேசினா அது இன்னும் அதிகம்தான் ஆகும். எனக்காக நம்ம வெட்டிங் டே வரைக்கும் வெயிட் பண்ணு. எல்லாருக்கும் சொல்லியாச்சு. ஃபங்ஷன் முடிஞ்சதும் நானே உன்னை பேக் பண்ணி அனுப்புறேன். ஓகேவா? இப்போ என்னை கொஞ்சம் நிம்மதியா விட்டுடு…” என்றான்.

“அப்போ டீ…?” என்று அவள் தயக்கத்துடன் கேட்டாள்.

“எதுவும் வேண்டாம். எனக்கு கொஞ்ச நேரம் தனியா இருந்தாலே போதும்.”

அந்த வார்த்தைகள் ஆழினியின் மனதை இன்னும் அதிகமாகக் காயப்படுத்தின.

‘கொஞ்ச நேரம் கூட என் மேல பிரியம் இருக்கிற மாதிரி உங்களால நடிக்க முடியலைல? உங்களுக்கு என்னைப் பிடிக்காது. அதுதான் உண்மை. பங்ஷனுக்கு சொல்லியாச்சு. உங்க கவுரவம் குறையக் கூடாது. அதுக்காகத்தானே இப்படி சொல்றீங்க.

இவ்வளவு நாள் உங்களுக்காகப் பொறுத்துக்கிட்டேன். இன்னும் இரண்டு மூணு நாளும் பொறுத்துக்கிறேன். அவ்வளவுதானே…’

என்று மனதிற்குள் எண்ணியவள், கண்களில் தேங்கிய கண்ணீரை மறைத்தபடியே அவனைப் பார்த்தாள்.

பின்னர் ஒரு வார்த்தையும் பேசாமல் அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

கலங்கிய கண்களை மறைத்தவாறு கீழே இறங்கி வந்த ஆழினியை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தார் லட்சுமி.

வழக்கமாகக் காலை உணவு முடிந்ததும் தனது அறைக்குச் சென்றுவிடும் அவர், நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்த நித்யமயூரியிடம் பேசிக்கொண்டிருந்தார்.

ஆழினியைப் பார்த்ததும்,
“என்ன வேலை எதுவும் இல்லையா? குட்டிப் போட்ட பூனை மாதிரி எதுக்கு இப்படிச் சுத்திக்கிட்டே இருக்க? போய் கிச்சன்ல உன் மாமியாருக்கு ஏதாவது ஹெல்ப் பண்ண வேண்டியதுதானே.” என்று வினவினார் லட்சுமி.

“அங்க தானே போறேன்,” என்று முணுமுணுத்தபடியே கிச்சனை நோக்கிச் சென்றாள் ஆழினி.

அப்போது, “பாட்டி… மச்சான் எங்க? கடைக்கு ஏன் இன்னும் கிளம்பல?” என்றபடி தன்ஷிகா உள்ளே வந்தாள்.

அவளது குரலில் அப்படியே நின்று விட்டாள் ஆழினி.

“அவன் அப்பவே கிளம்பிட்டானே… உன்னைக் கூட்டிட்டுப் போகலையா?” என்று குழப்பத்துடன் வினவினார் லட்சுமி.

“கார் கூட இங்கதான் இருக்கு பாட்டி,” என்றாள் தன்ஷிகா.

“அவருக்கு முடியலன்னு சொன்னாங்க,” என்று ஆழினி மெதுவாகக் கூறினாள்.

“என்னது? செழியனுக்கு முடியலையா?” என்று பதறிய லட்சுமி, உடனே மாடிக்குச் செல்ல முயன்றார்.

“ஐயோ பாட்டி… நீங்க உக்காருங்க,” என்று அவரைத் தடுத்தாள் நித்திய மயூரி.

“நான் போய் என்னன்னு பார்த்துட்டு வரேன் பாட்டி,” என்று கூறியபடி தன்ஷிகா மாடிக்குச் சென்றாள்.

செல்லும் வழியில் ஆழினியை ஒரு பார்வை பார்த்துவிட்டே சென்றாள்.

அவனுக்கு முடியலன்னா பெரியவங்கக்கிட்ட வந்து சொல்ல மாட்டியா? ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போக வேணாமா? யாருக்கு என்ன ஆனா என்னன்னு இருக்க? கொஞ்சமாவது புருஷன் மேல உனக்கு அக்கறை இருந்தா தானே.” என்று லட்சுமி புலம்ப.

“லேசா தலைவலிக்குதுன்னு சொன்னார்.”

“அப்படியா? அப்போ இஞ்சி தட்டி போட்டு டீ கொண்டு போ அதை குடிச்சாலே அவனுக்கு சரியாயிடும்.” என்று லட்சுமி படபடத்தார்.

ஆழினியோ சரி என்பது போல் தலையசைத்துக் கொண்டு கிச்சனுக்குள் நுழைந்துக் கொண்டாள்.

மாடிக்குச் சென்ற தன்ஷிகா, கதவைத் தட்டி விட்டு அறைக்குள் நுழைந்தாள். அங்கு ஓய்ந்திருந்த செழியனைப் பார்த்ததும் பதற்றத்துடன் அருகில் சென்றாள்.

“என்ன ஆச்சு மச்சான்? அண்ணி கிட்ட பேசுனீங்களா? எதுவும் பிரச்சனையாகிடுச்சா? அதான் அவங்க முகமும் சோர்வா, ஏதோ போல வீட்ல இருக்காங்கல.” என்று வினவ.

சிந்தூராவிடம் பேசியதை எல்லாம் சுருக்கமாகச் சொல்லி முடித்தான்.

“அண்ணி தான் நம்மவீட்ல அடுத்த தலைமுறைல பொறந்த மொத பொண்ணுன்னு அவ்வளவு செல்லம் கொடுத்தாங்க. அவங்களுக்கு தான் முதல் உரிமை. நானோ, மய்யூவோ கூட போட்டி போட்டதுக் கிடையாது. ஆனால் அண்ணி! அவங்களோட உரிமைக்காக நம்ம எல்லோருடைய வாழ்க்கையிலும் இப்படி விளையாடிருக்க் கூடாது.” என்று கண் கலங்க கூறினாள் தன்ஷிகா.

“சரி விடு தனு. அவங்கப் பண்ணது தப்பு தான். அதுக்காக அவங்களை ஒதுக்க முடியாது. முடிஞ்ச வரைக்கும் அக்கா செஞ்சதை மறக்கப் பாரு தனு. அது மட்டும் இல்ல. உன்னோட கடந்த காலத்தையும் மறக்க பாரு. நம்ம நயனிக்காவது அதுல இருந்து வெளியே வா. நல்ல பையனா நான் பார்க்குறேன்.” என்று கரகரத்த குரலில் கூறினான் வியன் செழியன்.

“கொஞ்சம் டைம் குடுங்க மச்சான்.”

“இதுவே ரொம்ப லேட். நயனிக்கு விவரம் புரியறதுக்குள்ள நீ நல்ல துணையோடு உன் வாழ்க்கையை ஆரம்பிக்கணும். நீ பட்ட கஷ்டத்துக்குத்தான் அந்த அசோக் சீக்கிரமா போய்ச் சேர்ந்துட்டான். அவனோட பேர் கூட நயனிக்குத் தெரியக்கூடாது. நான் சொல்றது புரியுதா? நான் மாப்பிள்ளை பார்க்கட்டுமா?” என்று வியன் செழியன் வினவினான்.

“சரிங்க மச்சான்!” என்றவளின் பதிலில், இவ்வளவு நேரம் அவள் மனதில் இருந்த கவலைகள் சற்று பின்னுக்குச் சென்றன.

“சரி, வா. உன்னை கடையில் விட்டுட்டு நான் வெளியே போகணும்” என்று புன்னகையுடன் செழியன் கூறினான்.

“உங்களுக்கு முடியலன்னு ஆழி சொன்னாங்க. நீங்க என்னடான்னா, வெளியே கிளம்பணும்னு சொல்றீங்களே, மச்சான்?”

“ஆமா. நீ சொன்ன வார்த்தையிலேயே என்னோட தலைவலி எல்லாம் போயிடுச்சு. சீக்கிரம் உனக்குக் கல்யாணம் பண்ணி வச்சாலே, என்னோட மீதி தலைவலியும் குறைஞ்சிடும்.” என்று புன் சிரிப்புடன் கூற.

“என்ன சொல்றீங்க மச்சான்? நான் உங்களுக்கு தலைவலியா?” என்று முறைத்தாள் தன்ஷிகா.

“நீ தலைவலி இல்ல. ஆனால் உன்னை வச்சுத்தான் எனக்குத் தலைவலியே வருது. நான் எதைச் சொன்னாலும் ஆழினி நம்ப மாட்டேங்குறா! அக்கா அவ மனசுல நல்லா விஷத்தை கலக்கிட்டாங்க.

எனக்கு அவளை பிடிக்காதாம். உன்னைத்தான் எனக்குப் பிடிக்குமாம். அதுனால டைவர்ஸ் வாங்கிட்டு போயிடுவாளாம். நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழணுமாம்.”

“சரியான பைத்தியம் தான் இந்த ஆழினி.” என்று கடுப்பாகக் கூறினாள் தன்ஷிகா.

“அவ சரியான பைத்தியம். நீ சரியாகாத பைத்தியம். உங்க ரெண்டு பேர் கிட்டயும் மாட்டிக்கிட்டு நான் தான் இப்ப பைத்தியம் மாதிரி சுத்திகிட்டு இருக்கேன்.

முதல்ல அவளுக்கு பிடிக்காமல் நன்றிக்கடனுக்காக கல்யாணம் பண்ணிக்கிறேன் னு எனக்குகோபம் தான்.

அந்த கோவத்தை பேசாமல் அவக் கிட்ட காண்பிச்சேன். அவளோ உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாத வருத்தத்துல தான் நான் பேசலன்னு நினைச்சுக்கிட்டா.

error: Alert: Content selection is disabled!!