“அப்புறம் ஏன்பூவைத் தூக்கிப் போட்டீங்க.” என்றுத் தயங்கித் தயங்கிக் கேட்டாள்.
“அது நான் இந்த ரூம் புக் பண்ணும்போதே அவங்கக் கிட்ட சொல்லியிருந்தேன். ரூம்ல தனியா, இன்பினிட்டிவ் ஸ்விம்மிங் பூல் இருக்கு. அதுலதான் டெக்கரேஷன் பண்ணச் சொல்லியிருந்தேன். அந்த இடியட்ஸ் ரூம்லயே பண்ணிட்டாங்க. அதான் டென்ஷனாகிட்டேன். யூ டோண்ட் வொரி! இப்போ ஸ்விம்மிங் ஃபூல்ல ரெடி பண்ணிட்டு இருக்காங்க,” என்று மெதுவாக கிசுகிசுத்தான்.
அவன் சொன்னதைக் கேட்டவளின் முகம் செவ்வானம் போல சிவந்தது.
எதுவும் பேச முடியாமல் மெல்ல அவன் தோளில் சாய்ந்தாள்.
அவளை அணைத்தவன் அவளது இதழில் மெதுவாக ஒரு முத்தத்தைப் பதித்தான்.
அவளோ உடனே அவனைத் தள்ளிவிட்டு சுற்றிலும் பார்த்தாள்.
அங்கொன்றும், இங்கொன்றுமாக ஆட்கள் இருக்க.
அவள் வெட்கத்துடன் தவித்தாள்.
அதைப் பார்த்தவன் சிரித்துக்கொண்டே,
“சரி… சரி மிச்சத்தை நம்ம ரூம்ல பார்த்துக்கலாம்.” என்று அவளது கையைப் பிடித்துக்கொண்டு கடல் அலையிடம் அழைத்துச் சென்றான்.
அந்தக் கடற்கரையில் அவள் ஒரு சிறு குழந்தையைப் போல மாறிவிட்டாள்.
அலைகள் வந்து அவர்களது கால்களை நனைப்பதும், பின்பு போவதுமாக இருக்க.
திடீரென்று வியன் செழியன் வாய் விட்டு சிரித்தான்.
“என்னாச்சு எதுக்கு சிரிக்குறீங்க?” என்று ஆழினி புரியாமல் வினவ.
“அதுவா… உன்னோட ரிங்டோன் ஞாபகம் வந்துடுச்சு. இந்த கடலலையும் நெருங்கி வருது. கிட்டா வந்தால் விலகிப் போகுது.” என்று விட்டு மெல்லிய குரலில் பாடினான் வியன் செழியன்.
“மெல்ல நெருங்கிடும் போது
நீ தூர போகிறாய்!
விட்டு விலகிடும் போது
நீ நெருங்கி வருகிறாய்!
காதலின் திருவிழா
கண்களில் நடக்குதே!
குழந்தையை போலவே
இதயமும் தொலையுதே!” என்று பாட.
அவன் குரல் மனதை மயக்கினாலும் தன்னை கிண்டல் பண்ணுவது புரிய, அவனை முறைத்துக் கொண்டு அந்த ஈர மணலில் நடந்துச் சென்றாள் ஆழினி.
அவள் பதித்த ஒவ்வொரு காலடித் தடத்தையும் பின்தொடர்ந்து அவனும் நடந்தான்.
“இனி உன்னை பிரிவதாக இல்லை. நீ எங்கே சென்றாலும், உன்னை விடாமல் நான் பின்தொடர்வேன்…”
என்று சொல்லிக்கொண்டே அவன் அவளுக்குப் பின்னால் நடந்தான்.
அவளோ லேசாகத் திரும்பிப் பார்த்தாள்.
மணலில் பதிந்திருந்த இருவரது காலடித் தடங்களைப் பார்த்ததும் அவளது முகத்தில் இருந்த கோபம் மறைந்து ஒரு சிறிய புன்னகை மலர்ந்தது.
திரும்பி அவனது நெஞ்சில் குத்தியவள், அப்படியே சாய்ந்துக் கொண்டாள்.
மெல்ல சூரியன் உதயமாகத் தொடங்கியது.
அந்தப் புதிய காலை போலவே, அவர்களது வாழ்க்கையும் இனி என்றும் மகிழ்ச்சியுடன் விடியட்டும்…
எபிலாக்
ஒரு வருடத்திற்கு பிறகு…
அவர்களது வீட்டில் அன்று ஒரே பரபரப்பாக இருந்தது.
ஆழி அங்கும் இங்குமாக நடந்துகொண்டிருந்தாள். வீட்டில் நடக்கும் வேலைகளை எல்லாம் ஒருமுறை பார்த்துவிட்டு, மீண்டும் வேறு வேலையை கவனிக்க ஓடிக்கொண்டிருந்தாள்.
அதைப் பார்த்த சிந்தூரா,
“எதுக்கும்மா இப்படி அலைஞ்சிட்டு இருக்க? நீ ரெஸ்ட் எடு? நான் பார்த்துக்கிறேன்.” என்றுக் கூற .
அருகில் இருந்த நித்யமயூரியும், செழியனும் அவளைப் பார்த்தனர்.
அவர்களது பார்வையைப் பார்த்ததும் சிந்தூராவுக்குப் புரிந்துவிட்டது.
தன்னை இன்னும் நம்பாமல் இருக்கிறார்கள் என்று புரிய வலியுடன் அங்கிருந்து நகர்ந்தாள்.
இன்று தனுவின் திருமணம்.
அவர்களது மெயின் ப்ராஞ்சில் மேனேஜராக வேலை பார்த்து வந்த மித்ரனுக்கும், தனுவுக்கும் திருமணம்.
மித்ரன் ரொம்ப ரொம்ப நல்லவன். தனுவை பிடித்துப் போய் செழியனிடமே கேட்டான். அவனைப் பற்றி நன்கு தெரிந்ததால், இந்தத் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது.
வீடு முழுவதும் சந்தோஷத்திலும் உற்சாகத்திலும் இருந்தது.
இவ்வளவு நேரம் அந்தத் திருமணத்தில் புன்னகையுடன் ஒவ்வொரு வேலையையும் பார்த்துக்கொண்டிருந்த சிந்துரா அவர்களின் நம்பிக்கை இல்லா பார்வையை உணர்ந்தவள், எதுவும் சொல்லாமல் அங்கிருந்து மெதுவாக நகர்ந்தாள்.
அதைப் பார்த்த ஆழினி,
“நீங்க ஏன் எப்ப பார்த்தாலும் அண்ணியை இப்படிப் பார்த்துட்டே இருக்கீங்க? அவங்க பாவம்,” என்று கூற.
“சரி… நான் போய் அக்காவை சமாதானப்படுத்துறேன். இதையே நினைச்சுட்டு கவலைப்படாதே. நம்ம பேபியும் கவலைப்படும்.” என்று நிறைமாத வயிற்றுடன் இருந்த ஆழியினிடம் கூறி விட்டு சிந்தூராவை தேடி சென்றான் செழியன்.
சிந்தூராவோ அவளது அறையில் கலங்கிய கண்களுடன் இருந்தாள்.
“அக்கா…” என்று செழியன்
அழைத்ததும் திரும்பிப் பார்த்தாள்.
“செழியா! நான் தப்பு செஞ்சேன்தான். ஆனா அதுக்காக என்னை மன்னிக்கவே மாட்டீங்களா?”
“அக்கா! மறுக்கணும் தான் நினைக்கிறேன். ஆனா முடியல. காலம்தான் மாத்தணும். ரொம்ப நீ யோசிக்காத. போகிற போக்குல விடு.”
“ ஆழிக்கு நிறை மாசம்டா. அலைச்சல் உடம்புக்கு நல்லது இல்லைன்னு தான் சொன்னேன்.”
“ சரி! அத விடுக்கா. அத்தான் உன்னை தேடப் போறாங்க. உன் நாத்தனாருடைய கல்யாணம். நீ அங்க இருக்கணும் வா.” என்று கையோடு அவளை அழைத்துச் சென்றான்.
தன்ஷிகாவோ இதை எதையும் கவனிக்காமல் வேறொரு உலகத்தில் இருந்தாள்.
அவளது உலகம் முழுவதும் இப்போது மித்ரன் மட்டுமே.
மித்ரன் முதலில் அவனது விருப்பத்தை தன்ஷிகாவிடம் தான் கூறினான்.
ஆனால் அவள்தான் ஏற்றுக்கொள்ளாமல் அவனை மறுத்துக்கொண்டிருந்தாள்.
இது சரி வராது என்று நினைத்தவன், நேராக செழியனிடமே சென்று நின்றுவிட்டான்.
மித்ரனைப் பற்றி செழியனுக்கே நன்கு தெரியும். இருந்தாலும்
அவனுடைய குடும்பம், குணம், பொறுப்பு என அனைத்தையும் தெரிந்துகொண்ட பிறகு, தன்ஷிகாவுக்கும் அவன் மீது விருப்பம் இருப்பதைப் புரிந்துகொண்டார்.
அதன்பிறகு அவர்களது திருமணத்தையும் அவனே முன்னின்று ஏற்பாடு செய்துவிட்டான்.
இதோ…
அன்றுதான் அந்தத் திருமணமும் கோலாகலமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது.
அந்த நேரத்தில் திடீரென்று ஓடிவந்த நயனிகா
“டாடி!” என்று மித்ரனை அழைத்தது.
மித்ரன் உடனே திரும்பிப் பார்த்து,
“என்னடா?” என்று குழந்தையைத் தூக்கிக்கொண்டான்.
பிறகு சிரித்துக்கொண்டே,
“மம்மியைப் பார்க்கலையா?” என்று கேட்டவாறு தன்ஷிகாவிடம் அழைத்துச் சென்றான்.
அவளைப் பார்த்ததும் தன்ஷிகா நயனிகாவை வாங்குவதற்காக கைகளை நீட்ட,
நயனிகாவோஹ் “டாடி கிட்ட தான் இருப்பேன்.” என்று அவனது தோளில் சாய்ந்துக் கொண்டு கூறினாள்.
அதைக் கேட்டதும் தன்ஷிகாவின் முகத்தில் உலகத்தையே வென்ற மகிழ்ச்சி தெரிந்தது.
ஒரு காலத்தில் மித்ரனை ஏற்றுக்கொள்ளத் தயங்கியவள், இன்றோ அவனது இன்னொரு புற தோளில் சாய்ந்துக் கொண்டாள்.
இருவரையும் அணைத்த மித்ரனைப் பார்த்த லட்சுமியின் கண்கள் கலங்கியது.
“என்ன பாட்டி உன் டார்லிங் உன்ன டீல்ல விட்டுட்டாங்கன்னு கவலையா இருக்கியா?” என்று நித்யமயூரி கிண்டலடித்தாள்.
பாட்டிக்கு எப்பொழுதுமே மித்ரனை மிகவும் பிடிக்கும். அவ்வப்போது அவன் கடை விஷயமாக வீட்டிற்கு வருவான்.
அவன் மேல் லட்சுமிக்கு தனி பிரியம் உண்டு. அதை வைத்து அவள் கேலி செய்ய.
அங்கு எல்லோரும் சிரித்தனர்.
ஆழினியும் வாய்விட்டு சிரிக்க. திடீரென்று இடுப்பு பிடித்துக் கொண்டது.
“ஆழி பார்த்து! பார்த்து!” என்று சுமதியும், கவிதாவும் அவளை ஒரு பக்கம் தாங்க.
செழியனோ பதறி விட்டான்.
“ தண்ணி எடுத்துட்டு வாங்க.”என்ற லட்சுமி எல்லோரையும் விலக சொல்லி ஆழினியை ஆசுவாசப் படுத்தினார்.
ஆழினியோ தனக்கு ஒன்று என்றதும் பதறும் குடும்பத்தை பார்த்து கண்கள் கலங்கியது.
அகிலனோ, “ முடியலன்னா சொல்லுமா ஹாஸ்பிடல் போகலாம்.” என்றுக் கூற .
“ஆமாம் அண்ணன் சொல்றது தான் சரி.” என்று இனியனும் கூற.
இருவரையும் பார்த்து,” எனக்கு ஒன்னும் இல்ல மாமா. நான் நல்லா இருக்கேன்.”என்று புன்னகைத்தாள் ஆழினி.
“கொஞ்ச நேரத்துல எல்லாரையும் பயமுறுத்திட்ட. முதல்ல திருஷ்டி சுத்தி போடணும்.” என்ற லட்சுமி மொத்த குடும்பத்தையும் உட்கார செய்து அவர்களுக்கு திருஷ்டி சுற்றினார்.
“என்னைக்கும் இப்படியே எல்லோரும் ஒற்றுமையாக இருக்கணும். இந்த வீட்டுல சண்டை, பிரிவு எதுவும் வரக்கூடாது. சந்தோஷமும் சிரிப்பும் மட்டுமே நிறைந்திருக்கணும்,” என்று மனதார வாழ்த்தினார்.
அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தனர்.
கடந்த காலத்தில் இருந்த கசப்புகள் அனைத்தும் மெல்ல மறைந்து…
அவர்களது வாழ்க்கையில் புதிய உறவுகளும், புதிய சிரிப்புகளும், புதிய நினைவுகளும் மலர்ந்தன.
சில உறவுகள் நம்மைத் தேடி வரும்…
சில உறவுகளை நாம் தேடிச் செல்வோம்…
ஆனால் உண்மையான அன்பு இருக்கும் இடத்தில்,
எத்தனை தடைகள் வந்தாலும் அந்த உறவு மீண்டும் மீண்டும் நம்மை ஒன்று சேர்த்துவிடும்.
அப்படித்தான் அவர்களது வாழ்க்கையும்…
தன்ஷிகாவின் காதலால் பிரிந்த உறவுகள், புரிதலால் வளர்ந்து,
அவளது மறுமணத்தில் அன்பால் இணைந்தது
சுபம்.

