ஆழியே மெளனம் ஏனோ 16 – 1

மௌனம் -16
ஆழினி முணுமுணுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், “சாரி…” என்று மீண்டும் மன்னிப்பு கேட்டாள் நித்யமயூரி.

“லூசாடி நீ! நீ என்ன பண்ணுவ?”

“இல்ல ஆழி! நானும் உன் மனசுல ஆசையை உண்டாக்கிருக்கக் கூடாது. அண்ணன் உன்னையே பார்த்துட்டே இருக்கிறது போல தோணுச்சு. உனக்காக எஃபோர்ட் எடுத்து செய்யுறது போல தோணுச்சு. ஆனால் அது சாரிட்டியாம்.” என்றவளின் கண்கள் கண்ணீரை பொழிய.

அதைக் கேட்ட ஆழினியின் மனதும் வலியில் துடித்தது.

அதையெல்லாம் தனக்குள்ளே புதைத்துக் கொண்டவள் லேசாக புன்னகைத்து, “ விடு மய்யூ. உங்க அண்ணன் பார்க்கவும், ஒரு ஃபீல் வந்தது தான். பட் இதெல்லாம் இந்த ஏஜ்ல வர்ற ஒரு சின்ன ஈர்ப்பு. ஜஸ்ட் சைட் அடிச்சேன், அவ்வளவுதான். சைட் அடிக்கிறவங்க எல்லாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியுமா? இப்படி பண்ணனும்னா நீயும் நானும் எத்தனை பேரை பண்ணி இருக்கணும்.” என்று வினவ.

“அதுவும் சரிதான்…” என்று நித்யமயூரி சமாதானமாகத் தலையாட்டினாள்.

ஆனால், ஆழினி செழியனைப் பற்றிய நினைவை தனக்குள்ளே பொக்கிஷமாக புதைத்துக் கொண்டாள்.

செழியனைப் பற்றிய பேச்சை தங்கள் நட்புக்குள் வராமல் பார்த்துக் கொண்டாள்.

எப்போதெல்லாம் செழியனைப் பற்றிய பேச்சு வருதோ அப்போதெல்லாம் தன் வழக்கமான கலகலப்பான பேச்சால் அந்த இடத்தையே மாற்றிவிடுவாள் ஆழினி.

அதனால்தான் நித்யமயூரி தன் அண்ணனுடைய திருமணத்திற்கு ஆழினியை எந்தத் தயக்கமும் இல்லாமல் தைரியமாக அழைத்தாள். ஆனால், அவள் வர மறுத்தபோதுதான் ஆழினி ஒரு காலத்தில் விரும்பிய விஷயம் மீண்டும் நித்யமயூரியின் மனதில் வந்து போனது.’

இந்த விஷயத்தை எல்லாம் தன்ஷிகாவிடம் நித்யமயூரி சொல்லிக் கொண்டிருந்தபோது திடீரென்று அவர்கள் இருவருக்கும் முன்பாக வந்து நின்றான் செழியன். அவன் முகம் இறுகியிருந்தது.

“அண்ணா!” என்று தயக்கமாக அழைத்தாள் நித்யமயூரி.

இந்த விஷயத்தை நீ நம்ம அக்காகிட்ட சொன்னதுக்குப் பதிலா, என்கிட்ட நீ கேட்டிருக்கலாம். என்னோட விருப்பத்தைக் கேட்காமல், நீ போய் அக்காகிட்ட இதைப் பற்றிச் சொல்லியிருக்க வேண்டிய அவசியமே இல்லையே!” என்று கசந்த குரலில் கூறினான் செழியன்.

“அண்ணா… நம்ம அக்கா இப்படிப் பண்ணுவாங்கன்னு நான் நினைக்கவே இல்லை. ஏன் இப்படி பண்ணாங்கன்னும் எனக்குத் தெரியல. ஆனா, நான் உங்ககிட்ட சொல்லணும் தான் அன்னைக்கு உங்களைத் தேடி வந்தேன்…” என்று நித்யமயூரி அவசரமாக விளக்கினாள்.

அவளுடைய நினைவோ சில வருடங்களுக்கு முன்பு நடந்த அந்த நாளை நோக்கிப் பயணித்தது.

கல்லூரி முடிந்ததும் படபடவென வீட்டை நோக்கி ஓடி வந்தாள் நித்யமயூரி.

“எதுக்கு ரன்னிங் ரேஸ்ல ஓடுற மாதிரி ஓடிட்டு இருக்க?” என்று அவளுடைய பாட்டி கேட்க,

“ஸ்கூல்ல காம்படிஷன். அதான் ப்ராக்டிஸ் பண்ணிட்டு இருக்கேன்.” என்று மூச்சு வாங்க கூறினாள்.

லட்சுமியோ பேத்தியை முறைக்க.

“ சரி! சரி! முறைக்காதே பாட்டி. அண்ணனை பார்க்கணும்.”என்றாள்.

“உங்க அண்ணனை பார்க்கணும்னா நீ கடைக்குத் தான் போகணும். அவ வரத்துக்கு இன்னும் நேரம் இருக்கு.” என்று கூறிவிட்டு பாட்டி எழுந்துச் சென்றார்.

அப்போதுதான் அங்கே சிந்தூரா தன்னை முறைத்துக் கொண்டிருப்பதையே நித்யமயூரி கவனித்தாள்.

“ஹாய் அக்கா…” என்று வழக்கம்போல் புன்னகையுடன் அழைத்தாள்.

ஆனால், சிந்துரா எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதியாகவே இருந்தாள்.

“என்ன ஆச்சு அக்கா? பாட்டி எதுவும் திட்டிட்டாங்களா? சொல்லு நான் ஒரு கைப் பார்த்துடுறேன்.” என்று சண்டைக்கு போவது போல் பாவலா செய்தாள் நித்யமயூரி.

அவள் காதை திருகிய சிந்தூராவோ,” நான் வந்திருக்கேனே. என்னை வானு கூப்பிட்டியா? எப்படி இருக்கேன்னு விசாரிச்சியா” என்றுக் கூற.

“அக்கா திஸ் இஸ் டூ மச்! பக்கத்து வீட்டுலதானே இருக்க? நீ இங்க வரலைன்னா நானே இன்னும் கொஞ்ச நேரத்துல உன்னைத் தேடி அங்க வந்துருப்பேன்.”

“எதுவா இருந்தாலும், நான் இங்கே வந்ததும் என்கிட்ட நீ வந்து பேச வேண்டாமா? என்னை விட்டுட்டு என் தம்பியை மட்டும் விசாரிக்கிற? அப்படி என்ன அவசரம்? என்ன விஷயம்?” என்று சிந்தூரா வினவ.

“அது வந்து…” என்ற
நித்யமயூரிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

“என்னடி? என்ன விஷயம் ? எதுக்கு இப்படி பேய் முழி முழிக்கிற? எதுவும் தப்பு பண்ணியா? ” என்று தோண்டித் துருவினாள் சிந்தூரா.

“அதெல்லாம் இல்லக்கா… இது ரகசியம்!” என்று அவள் காதில் கிசுகிசுத்தாள்.

“என்னடி? லவ் பண்றியா?” என்று கண்கள் விரிய வினவினாள் சிந்தூரா‌.

“லவ் தான்… ஆனால் நான் இல்லை…” என்று நித்யமயூரி மெதுவாகக் கூற.

“என்ன சொல்ற?” என்று புரியாமல் அவளைப் பார்த்தாள் சிந்தூரா.

“புரியலையா அக்கா. இங்க வேணாம். என் ரூமுக்கு வாங்க…” என்று அவளைத் தனியாகத் தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்ற மயூரி, கதவைச் சாத்திவிட்டு,

“ஆழினி…” என்று இழுத்தாள் நித்யமயூரி.

“ அவளுக்கு என்ன?”

“ஆழினி அண்ணனை விரும்புறா. அதான் அண்ணன்கிட்ட என்னன்னு கேட்கலாம்னு தேடிட்டு இருக்கேன்.”

“லூசா மய்யூ. எதுக்கு தேவையில்லாத வேலைப் பார்த்துட்டு இருக்க?”

“என்னக்கா? இப்படி சொல்ற?” என்று சலுகையாக வினவினாள் நித்யமயூரி.

“ பின்னே என்ன? அந்தப் பொண்ணுக்கு செழியனைப் பிடிச்சா போதுமா? செழியனுக்கு பிடிக்க வேணாமா?”

“அதெல்லாம் அண்ணனுக்கும் பிடிக்கும்னுதான் நினைக்கிறேன். அதை கன்பார்ம் பண்ணத் தான் அண்ணன் கிட்ட பேசப் போறேன்.”

“ப்ச்! கொஞ்சம் நீ பொறுமையா இரு. படிக்கிற வயசுல லவ்வைப் பத்தி எல்லாம் பேசுறேன்னு யாருக்காவது தெரிஞ்சா, உன்னையும் சத்தம் போடுவாங்க… உன் பிரண்டையும் சத்தம் போடுவாங்க. அதனால நான் அவன்கிட்ட பேசி என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு சொல்றேன். சரியா?”

சிந்தூரா சொல்வது மயூரிக்கும் சரியென்று பட்டது.

ஆனால் அண்ணன் என்ன சொல்கிறார் என்பதைத் தானும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவளுக்குள் இருந்தது.

“ஆனா அக்கா… அண்ணன் சொல்றதை நான் கேட்கணுமே…”

“என் மேல நம்பிக்கை இல்லையா?”

“அப்படி இல்லக்கா…”

“சரி. அவன் வாயால என்ன சொல்றானோ, அதை அப்படியே ஃபோன்ல ரெகார்ட் பண்ணி உனக்கு அனுப்புறேன் சரியா?”
என்ற சிந்தூரா தம்பிக்காக காத்திருந்தாள்.
************************
செழியன் படிப்பை முடித்துவிட்டு வந்த பிறகு, அவர்களது தொழிலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தான்.

அவனுக்கு அந்தத் தொழில் சம்பந்தப்பட்ட பல விஷயங்களும் புதிதாக இருக்க, ஒவ்வொன்றையும் ஆர்வமாகச் சுற்றிப் பார்த்து தெரிந்து கொண்டான். தினமும் ஏதாவது புதிதாகக் கற்றுக்கொண்டு வருவதும், புதுப்புது விஷயங்களைப் பற்றி பேசுவதும் அவனுக்கு வழக்கமாகிவிட்டது.

அன்றும் அப்படித்தான். செழியன் அவர்களது தறிக்குச் சென்று, இப்போது மார்க்கெட்டில் இருக்கும் லேட்டஸ்ட் மாடல்கள், புதிய டிசைன்கள் என அனைத்தையும் பார்த்து, தேவையானவற்றைத் தேர்வு செய்து முடித்துவிட்டு வருவதற்குள் தாமதமாகிவிட்டது.

அவனுக்காக சிந்தூரா அங்கே காத்துக் கொண்டிருந்தாள்.

“என்னக்கா வீட்டுக்குப் போகலையா?” என்று செழியன் கேட்க.

“உன்னைப் பார்க்கணும்னு தான் இவ்வளவு நேரம் வெயிட் பண்ணிட்டு இருக்கேன். நீ தான் இப்போ பக்கா பிஸினஸ்மேனா மாறிட்டியே! உன்னைப் பார்க்கவே முடியல. ரொம்ப பிஸி போல!” என்று தம்பியை கேலி செய்தாள்.

“ அதெல்லாம் இல்லக்கா.” என்று அவளைப் பார்த்துப் புன்னகைத்தான் செழியன்.

“உன் கிட்ட பேசணும்டா. அதான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.” என்றாள் சிந்தூரா.

” உனக்கு லேட்டாகிடுச்சா? இல்ல டூ மினிட்ஸ் வெயிட் பண்றியா. பிரஷ்ஷாகிட்டு வரேன்,” என்று செழியன் வினவ

“நான் லேட்டா வருவேன்னு சொல்லிட்டேன். நோ இஷ்யூஸ்
நீ பொறுமையா ஃபிரஷ் அப்பாகு.
நான் அங்கேயே வந்து பேசுறேன்.” என்றாள் சிந்தூரா.

“டன்.” என்றவாறே உற்சாகமாக அறைக்குச் சென்றான் வியன்செழியன்.

அவன் சென்ற ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, சிந்தூராவும் அங்கே சென்றாள்.

அவளைப் பார்த்ததும்,”வா அக்கா? என்ன விஷயம்? முஸ்தீபெல்லாம் பலமா இருக்கு.” என்று கிண்டலாக வினவ.

“அது வந்து ஆழினி…” என்று ஆரம்பித்தாள்.

“ஆழினியா? அவளுக்கு என்ன?” என்று செழியன் பதறினான்.

அவன் முகத்தில் எந்த உணர்வும் தெரியவில்லை என்றாலும், குரலில் இருந்த பதற்றத்தை மட்டும் சிந்தூராவால் தெளிவாக உணர முடிந்தது.

error: Alert: Content selection is disabled!!