அத்தியாயம் 07
நண்பனை சந்தித்து விட்டு, காயத்ரி மீது இருக்கும் உரிமையை வேறு விதமாக நிலைநாட்ட, உற்சாகமாக வீட்டை நோக்கி வந்தான். வரும் வழியில் மல்லிகைப்பூ வேறு வாங்கிக் கொண்டான்.
காயத்ரிக்கு பூ வாங்கி கொடுப்பது ஒன்றும் புதிது இல்லை தான். ஆனால் இதுவரை பத்மினியிடம் தான் குடுத்திருக்கின்றான்.
இன்று தன் கையினால் கொடுக்க வேண்டும் என்ற ஆசையோடு வீட்டினுள் நுழைந்தான்.
எப்போதும் வீட்டிற்குள் வரும்போது அம்மா அல்லது அக்கா என்று அழைத்துக் கொண்டு வருபவன், இன்று “காயூ குட்டி!.. ஓய் சிங்காரி…!” என அவன் பிரியமானவளை அழைத்துக் கொண்டே வந்தான்.
“என்னடா வரும் போதே அவள ஏலம் விட்டுட்டே வார?…” என்று கமலம் கேக்க
“பூ வாங்கிட்டு வந்தேன்.. இத குடுக்கத்தான்…” என்று சொல்ல
பத்மினி “குடு.. நான் தான் அவள புடிச்சு வச்சு, தலையில வச்சு விடணும்…” என்று கேட்க
“இல்ல, நானே குடுக்கேன்…” என்று சொன்னவன்
“காயூ குட்டி!…” என்று சத்தமாக கூப்பிட
தனது அறையில் சோகமாக அமர்ந்து இருந்தவள், மாமனின் பிரத்தியேக அழைப்பில் புள்ளி மானாய் துள்ளி குதித்து ஓடி வந்தாள்.
கள்ளம் கொண்ட மனது என்று தவித்து நின்றவன், இன்று காதலில் கள்ளம் கூட கவித்துவமானது தான் என்று தெரிந்த பின்னர் சும்மா இருப்பானா என்ன.
அவளையே உரிமையாக… ரசனையாக… ஆழ்ந்து பார்த்தான்.
“மாமா!…” என்று மூச்சிரைக்க ஓடி வந்து நின்றவளை பார்த்து அவனுக்கு மூச்சடைத்துப் போனது.
“மாமா!…” காயத்ரியின் கண்களில் மகிழ்ச்சி தாண்வம் ஆடியதும்.
அவள் அழைப்பில் சுயம் பெற்றவன் கையில் இருந்த பூச்சரத்தை அவளிடம் நீட்டி “உனக்கு பூ வாங்கிட்டு வந்தேன் வெச்சிக்க…” என்று சொல்ல
அவன் குரலில் இருந்த கனிவும், கண்களில் வழிந்த அன்பும், அவளின் பழைய மாமனை காட்ட, அவன் குடுத்த பூவை சந்தோஷமாக வாங்கிக் கொண்டவள்,
“சரி மாமா.. நாளைக்கு வச்சுக்குறேன்…” என்று சொல்லி ப்ரீச்ஜில் பூவை வைக்க சமையல் அறை பக்கம் திரும்ப,
“ஏய் அது என்ன நாளைக்கு.. இப்பவே வை.. நாளைக்கு வச்சுக்க நாளைக்கு வாங்கி தாரேன்.. இனி மாமா தினமும் உனக்கு பூ வாங்கி குடுக்குறேன் சரியா…” என்று சொல்ல
அவன் பேச்சுக்கு மறு பேச்சு ஏது, பூவை எடுத்து சரியாக மடித்து, இரு கைகளையும் உயர்த்தி, தன் பட்டுக் கூந்தலில் அவள் சூடிக் கொள்ளும் வரை, ஒவ்வொரு அசைவையும் இமை சிமிட்டாமல் தன் இதய பெட்டகத்தில் சேமித்துக் கொண்டான் கள்வன்.
தானே தன் கையினால் வைத்து விட தான் ஆசை, ஆனால் அவளின் வயது என்று ஒன்று உள்ளதே. அதிலும் அவள் படிப்பு வேறு இருக்கிறது, எனவே இப்போது தன் எண்ணம் என்ன என்பதை அம்மா அக்காவிற்கு புரிய வைத்தால் போதும்.
காயத்ரிக்கும் காதல் என்றால் என்ன என்று புரிந்து கொள்ளும் பக்குவம் வந்த பின்னர் தான் அதிகப்படியான நெருக்கம் என்று முடிவெடுத்துக் கொண்டான்.
தலைக்கு பூவை வைத்துக் கொண்ட காயத்ரி தன்னை கண்ணாடியில் பார்க்கலாம் என்று அறைக்கு செல்லப் போக,
ஹாலில் இருந்த கதிரையில் அமர்ந்த ஸ்ரீதர் “காயூ ஒரு காஃபி போட்டு குடு…” என்று கேட்க
“சரி மாமா!…” என்று அவன் தன்னிடம் கேட்டதில் உற்சாகமா காயத்ரி சமையல் அறை செல்ல,
பத்மினி தம்பியை யோசனையாக பார்த்தார்.
இதுவரை வீட்டினுள் வரும் போது (அக்கா காஃபி) என்றபடி தான் உள்ளே வருவான்.
இன்று காயத்ரியை அழைத்துக் கொண்டு வந்தான், இப்போது அவளிடம் காஃபி கேட்கிறான்.
என்ன தான் காயத்ரி சமையல் கற்றுக் கொண்டாலும், படிக்கும் அவளை வேலை சொல்ல கூடாது என்று அதட்டலாக சொன்னவன் இவன் தானா! அதுவும் என் கையினால் குடிக்கும் காஃபி தான் அருமை என்று எப்போதும் சொல்பவனுக்கு என்ன ஆனது என்ற சிந்தனை, ஆனால் எதையும் வெளிக் காட்டிக் கொள்ளவில்லை.
காயத்ரி காஃபி தயாரித்துக் கொண்டு வந்து கொடுக்க, அதை ஆசையாக வாங்கி ரசித்து குடித்தவன்
“ம்ம்!.. சூப்பர்டி காயூ குட்டி…” என்று சிலாகித்து கூற
“சமையல் கத்து குடுத்தது நீங்களா இருந்தாலும், உங்களுக்கு எப்படி இருந்தா புடிக்கும்னு எனக்கு தானே தெரியும் மாமா…” என்று காயத்ரி கெத்தாக சொல்ல
“சரி தான்டி சிங்காரி…” என்று அவள் கையில் காலி கப்பை வைத்தவன் “படிக்கலாம் வா!…” என்று விட்டு அறைக்கு செல்ல,
அவளும் கப்பை வைத்து விட்டு, பாட புத்தகங்களை எடுத்துக் கொண்டு அவன் அறைக்கு வெகு நாட்கள் கழித்து படிக்க சென்றாள்.
தன் மனம் சலனப்பட்ட பின்னர், இத்தனை நாட்கள் ஹாலில் வைத்து தானே சொல்லி குடுத்தான். ஆனால் இப்போது காதல் என்று அது கோலோச்சிய பின்னர் தனிமை தேவைப்பட்டது போலும்.
அப்போதும் பார்வையைத் தாண்டி வேறு எந்த காதல் பரிபாஷனைகளும் அவனிடம் இல்லை.
*********
அடுத்த நாள் சனிக்கிழமை என்பதால் காயத்ரி வீட்டில் தான் இருந்தாள்.
அன்று காலை நேரத்திற்கே வயலுக்கு சென்று வந்த ஸ்ரீதர், வாசலில் கால், கையை கழுவும் போதே “காயூ குட்டி!…” என்று அவளை அழைத்துக்கொண்டு தான் வீட்டினுள் வந்தான்.
“மாமா!…” என்று அவளும் அவன் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து நிற்க
“தண்ணி எடுத்துட்டு வாடா…” என்று இவன் சொல்ல
அவளும் எடுத்து வந்து கொடுக்க, வாங்கி குடித்தவன், குளித்துவிட்டு வந்து மதிய உணவு உண்ணலாம் என்று தன் அறைக்கு சென்று
குளிப்பதற்காக அலமாரியை திறந்து தனக்கான ஆடையை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, என்ன தோன்றியதோ உடனே “அடியே சிங்காரி!…” என்று அவளை அழைக்க
“மாமா நீங்க இன்னும் குளிக்கலயா?…” என்று காயத்ரியும் வந்து நின்று கேட்க
“இல்ல என்னோட பிளாக் கலர் ஷர்ட் காணோம் தேடி எடுத்து கொடு…” என்று கேட்க
“எது மாமா.. போன பொங்கலுக்கு எடுத்தோமே அதுவா?…” என்று அவனிடம் கேட்டுக் கொண்டே அலமாரியில் இருந்த அவன் துணிகளுக்கு இடையில் அதை தேடினாள்.
“ம்ம், அது தான்…” என்று சொன்னவன், தன் உடைகளை தொட்டு, விலக்கி, கண்களை உருட்டி தேடிக் கொண்டிருக்கும் அவன் மணிக்குயிலை ரசிக்க ஆரம்பித்தான்.
காயத்ரி அவன் கேட்ட சட்டையை தேடி எடுத்தவள் “இந்தா இருக்கு மாமா.. எல்லா துணையையும் கலைச்சி போட்டு, இப்படி அள்ளி அடைச்சு வச்சா எப்படி கண்டுபிடிக்க முடியும்…” என்று அவனிடம் கொடுக்க
அதை வாங்கிக் கொண்டவன் “பாரு ஒரு சட்டைய எடுக்க ரெண்டு பேரும் தேட வேண்டியதா இருக்கு.. அதனால துணி எல்லாத்தையும் வெளியே எடுத்துட்டு, நீயே மடிச்சு வை.. எனக்கு எந்த ட்ரெஸ் போட்டுக்கணுமோ உங்கிட்ட கேட்கிறேன்.. நீ வந்து எடுத்து கொடு…” என்று புதிதாக ஒரு வேலையையும் அவள் தலையில் கட்டி விட
“அதுதான் பாட்டி உங்க துணிய கழுவி, அழகா மடிச்சு கொண்டு வந்து கொடுக்குறாங்க இல்ல.. அத ஒழுங்கா அடுக்கி வைக்கிறதுக்கு என்ன?…” என்று கேட்க
“அதுதான் எனக்கு வரலைன்னு சொல்றேன் இல்ல…”
“சரி இனிமேல் பாட்டிய அலுமாரியிலயே அடுக்கி வைக்க சொல்றேன்…” என்று காயத்ரி சொல்ல
“அதெல்லாம் வேணாம்.. இனிமேல் இதெல்லாம் நீ தான் பண்ணனும்.. உன்ன விட்டுட்டு போக வேணாம்னு சொன்னேல்ல.. இதுக்கு பிறகு நீ தான் என்னக்கானது எல்லாமும் பாத்துக்கணும்…” என்று காதலோடு சொல்ல
“இதுக்குத்தான் கோவிச்சுட்டு வெளியூர் போக இருந்தீங்களா மாமா.. இனிமேல் நான் உங்கள நல்லா பாத்துக்கிறேன்.. என்ன விட்டுட்டு எங்கேயும் போகாதீங்க…” என்று அவளும் அன்போடு சொல்ல
அவளது கையைப் பிடித்து, தன் அருகே இழுத்தவன், அவள் நெற்றியோடு நெற்றி முட்டி “என்ன நீதான் பாத்துக்கணும்.. நீ மட்டும் தான் பாத்துக்க முடியும்…” என்று ஆழ்ந்த குரலில் சொல்ல
சட்டென காயத்ரியினுள் ஏதோ ஒரு மாற்றம். அது என்ன என்று அவள் உணரும் முன்னே
வெளியே இருந்து “ஸ்ரீ சாப்பிட வடா…” என்று பத்மினி அழைக்க
அவளது வாசத்தில்… அவளது ஸ்பரிசத்தில்… அவளது மூச்சுக்காற்றின் உஷ்ணத்தில்… கிறங்கி போய் இருந்த ஸ்ரீதரும் அப்போதுதான் தன்னிலை உணர,
அவளை விட்டு பிரிந்தவன் “அக்கா குளிச்சிட்டு வாரேன்…” என்று குரல் கொடுத்தவன்
“சரி குட்டி நான் குளிச்சிட்டு வாரேன்.. நீ அதுக்குள்ள துணி எல்லாம் மடிச்சு வச்சிடு…” என்று சொல்லிவிட்டு டவலை எடுத்துக் கொண்டு குளியலறை சென்று விட்டான்.
காயத்ரிக்கு தன் மாமன் தன் மீது மேலும் மேலும் அதிக பாசம் வைப்பது புரிந்தது. அந்த பாசம் எத்தகையது என்பதுதான் புரியவில்லை. அதை பற்றி பெரிதாக யோசிக்காமல் அவன் சொன்ன வேலையை செய்ய தொடங்கினாள்.
அன்றிலிருந்து அவளுக்கு என்ன தேவையோ அதை அவன் பார்த்துக் கொண்டான். அவனுக்கு என்ன தேவையோ அதை அவள் பார்த்துக் கொண்டாள்.
கொஞ்சம் கொஞ்சமாக இருவருக்கும் இடையில் உள்ள அன்யோன்யத்தை அதிகப்படுத்தினான் ஸ்ரீதர். அதை பத்மினியும் கமலமும் உணர்ந்துதான் இருந்தனர்.
வயல்வெளி, தோட்டம், வீடு என்று காயத்ரியை தன்னுடனே வைத்துக் கொண்டான்.
ஸ்ரீதர் என்னதான் தன் கைக்குள்ளேயே அவளை வைத்துக் கொண்டு சுத்தினாலும், தன் காதலை தயக்கம் இன்றி வெளிப்படுத்த அவள் வயது தடுக்கும்.
இருந்தும் அவனையும் மீறி அன்பாக குடுக்கும் கன்னத்து முத்தங்கள் இப்போது ஆசை முத்தங்களாக அழுத்தி கொடுக்கப்பட்டது.
சில நேரம் அவளை இழுத்து நெற்றியோடு நெற்றி முட்டி அந்த நொடிகளை ரசிப்பான்.
வண்டியில் செல்லும்போது அவள் கையை எடுத்து தன் இடையை சுற்றி வயிற்றில் வைத்துக் கொள்வான்.
*********
இப்போதும் அவன் அறையில், அவன் அருகில், அவன் அழகு மயில், அவளது கவனம் படிப்பில், இதுவரை அவளுக்கு சொல்லிக் கொண்டு கொடுத்துக் கொண்டிருந்தவன் அன்பான பார்வை இப்போது ஆசை பார்வையாக மாறியது.
அவன் கொடுத்த கணக்கை ஆர்வமாக போட்டுக் கொண்டிருந்தவளின், இடது பக்க கன்னத்தை தன் ஒற்றை கையால் பற்றியவன், அவளின் வலது கன்னத்தில் அழுத்தி, தன் மீசை முடி பதிய முத்தம் வைக்க,
கன்னம் சுளிக்க, புன்னகையுடன் அதை வாங்கிக் கொண்ட காயத்ரி “கணக்கு கரெக்டா போட்டு இருக்கேன்ல மாமா.. அதுக்கு தான் இந்த முத்தாவா?…” என்று கேட்க
எப்படி சொல்வான் கணக்கு பாடத்தின் சன்மானமாக கொடுக்கவில்லை, காதல் பக்கத்தின் அச்சாரமாக கொடுத்தது என்று.
அவளை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்தவன் எதுவும் சொல்லாமல் தலையை திருப்பிக் கொண்டான்.
காயத்ரி பாடப்புத்தகத்தில் கவனமாக,
அவளுக்கு தெரியாமல் தன் பின்தலையில் தட்டிக் கொண்டவன் ‘இன்னும் ரெண்டு வருஷத்துல சொல்றேன்.. எதுக்காக அடிக்கடி முத்த வைக்கிறேன்னு…’ என்று மனதில் நினைத்துக் கொண்டான்.
******
இதோ அவன் காதல் முத்தமாக வழங்க, அவள் கணக்கு முத்தமாக எடுத்துக் கொள்ள, இரண்டு வருடங்கள் ஓடிவிட்டது.
இப்போதும் அவன் அறையில் கணக்கு பாடம் சொல்லிக் குடுக்க, அவளும் கவனமாக கேட்டுக் கொண்டிருந்தாள்.
காயத்ரி இப்போது பள்ளி படிப்பை முடித்து, கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்திருந்தாள். வணிகவியல் படிப்பதால் பாடங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டாள்.
கணக்கு என்றால் அது ஸ்ரீதர் சொல்லி குடுத்தால் தான் அவளுக்கு புரியும் போலும்.
ஆனால் எப்போது அவளின் பதினெட்டாவது பிறந்த நாளை கொண்டாடினாளோ, அப்போதில் இருந்தே அவள் மாமனோ தன் காதலை எப்படி அவளிடம் சொல்வது என்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தான்.
நேசத்தூறல்களாக சிறுக சிறுக அவன் சேர்த்து வைத்த காதல் துளிகள், பெரும்மழையாக அவள் மீது கொட்ட காத்திருந்தது.
எப்போதும் போல் அவனது சித்ததை சிதைத்து, அவள் மீது அவனை பித்தாக்கு அவள் ஒற்றை பொட்டில் ஆரம்பித்து, இன்ச் இன்சாக அவளது இளமை வனப்புக்களை கண்களால் களவாடிக் கொண்டிருந்தான்.
கண்களில் காதல் சொட்ட…
ஆசைகள் நெஞ்சை முட்ட …
தயக்கங்கள் ஓரங் கட்ட ,
தன் ஒற்றை கரத்தால் பெண்ணவள் கன்னம் தாங்கி,
அழுத்தி…
நிறுத்தி… நிதானமாக ஈர முத்தம் ஆடவன் வைக்க,
இப்போதெல்லாம் தோகையின் உள்ளும் தன் மாமனின் முத்தங்கள் வேறு விதமான உணர்வுகளை அறிமுகம் செய்ய,
இமைகள் படபடவென அடித்துக் கொள்ள, அவனை தலை சரித்து பார்த்தவள் “எதுக்கு மாமா இந்த முத்தம்.. நான் இன்னும் கணக்க முடிக்கவே இல்லையே…” என்று கேட்க
அவளை ஆழ்ந்து பார்த்தவன், மற்றைய கையை எடுத்து, அவள் இரண்டு கன்னங்களையும் தாங்கி, தன் அதரங்களை பிரித்து, அவள் இதழ்களை சிறை பிடித்துக் கொண்டான்.
மென்மையாக ஆரம்பித்து… ஆழமான ஊடுருவி…
உயிர் தொட்டு…
இன்பதேன் தீரும் வரை இழுத்து சுவைத்து… திருப்தியே இல்லாமல் அவள் உடலின் நடுக்கத்தை உணர்ந்து விலகினான்.
ஆனால் சுயத்திற்கு வர நேரம் பிடித்தது, கிறக்கத்தில் இருந்தான். அனுக்கோ தேன் ருசித்தது இதழ்கள் தானே பின் எப்படி உயிருக்குள் இனிக்கிறது, இதழ் தேனின் தனித்துவம் இது தான் போலும்.
பெண்ணவளோ மாமன் இதழ் முற்றுகையிட்டதும் அதிர்ந்து, உடல் சிலிர்த்து, முகம் சிவந்து சூடாகி, இதயம் வேகமாக துடிக்க, இமை மூடி சிலை என சமைந்து போய் அமர்ந்திருந்தாள்.
அவன் விலகவும், விழி திறந்தவளிடம் “இந்த முத்தம் நீ ரொம்ப நல்லா படிக்கிறதுக்கு இல்ல.. உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றதால தந்தேன்…” என்று சொல்ல
தன் மாமாவா என்ற ஆச்சர்யம், முதல் முத்தம் என்பதால் வந்த பயம், அதையும் தாண்டி ஹார்மோன் மாற்றத்தால் உண்டான வெட்கம், படபடப்பு, என்று உணர்வு குவியலால் தாங்க பட்டவள் அவனை தள்ளி விட்டு எழுந்து ஓடி விட்டாள்.
“ஓய் சிங்காரி!…” என்று அவளை அழைத்தாலும், அவள் பின் சென்று தொந்தரவு செய்யவில்லை.
ஒன்றும் தெரியாத பெண்ணல்லவே, எனவே அவளாக உணர்ந்து கொள்ள நேரம் குடுத்து காத்திருந்தான்.