அத்தியாயம் 10
தனியாக காய்ந்த ஒற்றை நிலவு, இரவு முழுவதும் இணைபிரியாமல் பிணைந்திருந்த ஜோடிகளின் மீது பொறாமை கொண்டு, கோபித்துக் கொண்டு சென்றுவிட, எதற்காக நிலவுமகள் கோபத்துடன் சென்றது என்பதை மெதுவாக எட்டி பார்த்தான் கதிரவன்.
பனியோ, குளிரோ, தொட்டுச் செல்லும் தெம்மாங்கு பாடும் தென்றல் காற்றோ எதுவும் எங்களுக்கு ஒரு பொருட்டு இல்லை என்று, நன்கு தூங்கிக் கொண்டிருந்த அன்றில்களில் ஸ்ரீதர் தான் முதலில் கண்விழித்தான்.
நல்ல வேளையாக அது அதிகாலை தான், எனவே உடனே தன் மீது சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தவளை, அப்படியே லாவகமாக தூக்கிக் கொண்டு, படிகளில் இறங்கி, அவள் அறைக்கு வந்தவன், கட்டில் படுக்க வைக்க
“மாமா!…” என்று சிணுங்கி அவன் பனியனை பற்றிக் கொண்டாள் ஸ்ரீதரின் செல்ல ராட்சசி.
“குட்டி விடுடா.. விடிஞ்சுடுச்சு.. நீ தூங்கு, நான் போறேன்…” என்று மெதுவாக சொல்ல
“ம்ஹீம்!.. தூக்கம் வருது மாமா.. நீயும் படுத்துக்க…” என்று அவள் செல்லம் கொஞ்ச
“ஐயோ! சின்ன குட்டி படுத்தாதடி.. அக்கா வந்துட போறா.. விடுடி…” என்று அவன் கெஞ்ச
“ம்ம்!…” என்று தன் நெற்றியை தொட்டு முத்தம் கேட்டாள் அவனை விடுதலை செய்ய,
அழகாக புன்னகைத்தவன் அவள் முகம் பற்றி, நெற்றி, கன்னம், மூக்கு, உதடு என்று முத்த லஞ்சம் குடுக்க,
அதை சுகமாக வாங்கிக் கொண்ட வஞ்சியும் அவனை விட்டு விட, அம்மா அக்காவின் கண்களில் சிக்காமல் தன் அறைக்கு சென்று விட்டான் ஸ்ரீதர்.
அன்றில் இருந்து அது தொடர் கதையாகி போனது, தாயும் தமக்கையும் அறிய, தனி அறையில் அவளிடம் அவசர அவசரமாக அத்து மீறுவதை விட,
யாரும் அறியா வண்ணம், மொட்டை மாடியில், ஒற்றை நிலவை வெறுப்பேற்றிக் கொண்டே, அவளை தீண்டி, சீண்டி, சிவக்க வைத்து, சில்மிஷங்கள் ஓய்ந்த பின், கதைகள் முடிந்த பின், அணைத்துக் கொண்டு சில மணிநேரம் தூங்குவது கூட சுகமாக இருந்தது.
என்னவென்று சரியான தூக்கம் இல்லாததால் காயத்ரி கல்லூரியில் தூங்கி வழிய, ஸ்ரீதரால் களத்து மேட்டில் கூட தூங்க முடியவில்லை. வேலையை யார் கவனிப்பது, இருந்தும் மதிய உணவிற்காக வீட்டிற்கு வராமல் வயலுக்கே வரவழைத்து சாப்பிட்டு விட்டு, ஒரு மணிநேரம் தூங்கி எழுந்து கொள்வான்.
அன்று அப்படி தான் மதிய உணவை உண்ட பின்னர், சற்று தள்ளி இருந்த தென்னந்தோப்பில், மோட்டார் அறையின் பின் இருந்த மஞ்சள் நிறத்தில் குட்டி குட்டி சாண்டிலியர் விளக்குகள் போன்று பூத்து குலுங்கிய கொன்றை மரத்தின் கீழ், கயிற்றுக் கட்டிலை போட்டுக் கொண்டு கவுந்து படுத்துக் கொண்டான்.
கண்ணயரும் முன், இந்த கண்ணை சொக்கும் தூக்கம் எதனால் என இரவில் அவன் சிங்காரியுடன் கழித்த நிமிடங்களை மீட்டுப் பார்த்துக் கொண்டிருக்க,
சல் சல் என கொலுசு சத்தம் அவன் காதுகளை அடைந்த மறுநொடி, இதழ்களில் மந்தாஷ புன்னகை.
அவன் தூங்குவதாக நினைத்து, மெதுவாக பதுங்கி பதுங்கி வந்தவள், அப்படியே அவன் முதுகில் படர்ந்து, இரண்டு கை சந்துகளுக்கு இடையிலும் கையை நுழைத்து, அவனை கட்டிக் கொண்டு படுத்துவிட, இனிமையாக அதிர்ந்து, உடல் சிலிர்த்துப் போனான் ஆறடி ஆண் மகன்.
“அடியே சிங்காரி!.. என்னடி பண்ற?…” என்று சுகத்தில் திளைத்தவனாக கிறங்கிய குரலில் கேட்க
“மாமா நீ தூங்கலையா?…” என்று அவன் காதில் தன் மூச்சு காற்றை மோதவிட்டு மேனகையவள் கேட்க
காதுமடல் சூடாகி சிவந்து விட, “படுத்துறடி சின்ன குட்டி!…” என்று முனகியவன் திரும்ப பார்க்க,
அவன் நோக்கம் புரிந்தவள் கட்டிலில் கையை குற்றி தன் உடலை சற்று உயர்ந்த, அவளை ஒற்றை கையால் பிடித்துக் கொண்டே லாவகமாக திரும்பியவன்
“அடியே! மோட்டார் ரூம் பின்னுக்கு தான் இருக்கோம்.. உள்ள தூக்கிட்டு போய் கண்டம் பண்ணிடுவேன் பாத்துக்க.. கொஞ்சம் கூட பயமில்லாம மேல படுத்திருக்க…” என்று அவளை தன்னோடு இறுக அணைத்துக் கொள்ள
“ராத்திரியில நீ என் மேல படுக்கலாம்.. பகல்ல நான் உன் மேல படுக்க கூடாதா…” என்று அவன் நெற்றி முடியை கோதி விட்டபடி தலையை சாய்த்து கண்ணடித்து கேட்க
“அடியே தப்பா பேசாத.. அது ஏதோ ஆசையில கட்டி புடிச்சு உருண்டு இருப்பேன்…” என்க
“நானும் ஆசையில தான் உன் மேல படுத்திருக்கேன்…” என்று சொல்லிக் கொண்டே யாரேனும் வருகின்றனரா என்று விழிகளை தோப்பை சுற்றி காயத்ரி மேய விட,
“இந்த நேரம் யாரும் இங்க வர மாட்டாங்க.. நீ உன் ஆசைய காட்டு…” என்று அவள் கழுத்தில் முகத்தை புதைத்து, முத்தம் வைத்துக் கொண்டே ஸ்ரீதர் சொல்ல
“ம்ஹூம்!.. மாமா!…” உடல் கூச, சிணுங்கி மாமனின் முகத்தை விலக்கியவள்
“நேரமே வீட்டுக்கு வந்துட்டேன்.. உன்ன பாக்கணும் போல இருந்துச்சு அதான் தேடி வந்தேன்.. உனக்கு ஓயாம முத்தம் குடுக்க ஒன்னும் வரல…” என்று அவன் மீசையை திருகி விட்டு சொல்ல
“ஆமால, என்னாச்சு? நேரத்துக்கே வந்துட்ட?…” என்று ஸ்ரீதர் கேட்க
“அது கல்சுரல் டே வருது.. அதுக்கு எல்லாரும் ஷாப்பிங் போறாங்க.. நான் உன்ன பாக்க ஓடி வந்துட்டேன்…” என்று சொல்ல
“மாமன பாக்காம கொஞ்ச நேரம் கூட இருக்க முடியலயா என் சின்ன குட்டிக்கு…” என்று அவள் மூக்கோடு மூக்கு உரசி கேட்க
“ம்ம், நீ தான் மாமா என்ன கெடுத்துட்ட…” என்று அவன் நெற்றியோடு நெற்றி முட்டினாள் பெண்ணவள்.
“ஏன்டி முத்ததுக்கே மெத்தமா முடிச்ச மாதிரி பழிய போடுற…” என்று தாரகையின் கன்னத்தில் தன் உதடுகளை உலாவ விட்டு ஆடவன் கேட்க
“ஏது முத்தம் மட்டுமா! நீ எவ்வளவு மோசம்னு, இதோ பட்ட பகல்லயே உன் கை எங்க இருக்கு என்றதுலயே தெரியுது…” என்று சொல்ல
தன் கீழ் உதட்டை கடித்துக் கொண்டவன், தலையை சரித்து அவன் கையை பார்க்க, அதுவோ அவளின் சுடிதாரின் இரண்டு பக்க பிளவின் ஊடாக உள்ளே சென்று, மங்கையவளின் வெற்றிடையை அழுத்தமாக பற்றி இருந்தது.
“சும்மா இருந்தவன சூடேத்தி விட்டது நீ தான்.. அதனால ஸ்ட்ராங்கா ஒரு உம்மா குடு.. விட்டுறேன்…” என்று இன்னுமே அவள் இடையை அழுத்தி கேட்க
“ஸ்ட்ராங்காதானே…” என்று ஒரு மார்க்கமாக கேட்டவள், அவன் இதழ்களை கவ்விக் கொள்ள,
இனிமையாக அதிர்ந்து விழி முடியவன், அடுத்த நொடியே “ஆஆ.. ராட்சசி!…” என்று அலறியிருந்தான்.
அவன் உதட்டை கடித்து வைத்தவள் “எப்படி இந்தளவு ஸ்ட்ராங்கா போதுமா?…” என்று கேட்க
“முத்தம் கேட்டா கடிச்சா வைக்குற.. இருடி…” என்றவன்
அவளை அப்படியே கீழே சரித்து, இவன் அவளின் மீது படர்ந்தவன், கடித்து வைத்த இடம், அவர்களுக்கு மேலே தோரணமாக மஞ்சள் நிறத்தில் தொங்கிக் கொண்டிருந்த கொன்றை மலகளுக்கு இணையான கொங்கை மலர்களையாகும்.
பெண்ணவளோ வாய் விட்டு கத்த கூட முடியாத நிலையில், கீழ் உதட்டை அழுந்த கடித்துக் கொண்டாள்.
அவனோ ஆசை தீர கடித்து வைத்தானோ, இல்லை கவ்வி வைத்தானோ, இருக்கும் இடம் உணர்ந்து தன் உதடுகளை சற்று மேலே ஏற்றி, அவளின் பற்களுக்கு அடியில் சிக்கி தவித்த இதழ்களை விடுதலை செய்து, தன் உதடுகளுக்குள் பூட்டி சிறைப்பிடித்துக் கொண்டான்.
மோகம் கூட…
தாபம் தீர…
ஆசை உருக அழகிய முத்தம்.
போதும் போதும் என்னும் வரை தன் பிரியமானவளுடன் இழைந்தவன், பின் அவளுடன் வயலுக்கு சென்று, அங்குள்ள வேலைகளை முடித்து விட்டு வீட்டிற்கு வந்தான்.
அதன் பின் எப்போதும் போல் அவளுக்கு பாடங்களை சொல்லி குடுத்தான்.
காயத்ரியும் அவனை ரசித்துக் கொண்டே பாடங்களை கவனித்தாள்.
இவர்கள் இருவரையும் ஆராய்ச்சி பார்வை பார்த்த பத்மினியை இருவரும் உணரவில்லை.
இரவு உணவையும் சாப்பிட்டு விட்டு அனைவரும் அவரவர் அறைக்கு தூங்க சென்ற பின்னர், இரு காதல் சிட்டுக்களும் மொட்டை மாடியில் ஐக்கியமாகினர்.
முதலில் அங்கு வந்து சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தது காயத்ரி தான். அவளை மயக்கும் புன்னகையுடன் பார்த்துக் கொண்டே நெருங்கி அவள் அருகில் அமர்ந்து கொண்டான் ஸ்ரீதர்.
“என்னடி சிங்காரி! வற வற மாமா மேல ரொம்ப தீவிரமா இருக்க போல.. நேரத்துக்கே வந்துட்ட…” என்று கேட்க
“ரொம்ப சிலுத்துக்காத.. நான் உன்கிட்ட ஒரு விஷயம் காட்டணும்னு ஆர்வமா வந்தேன்…” என்று சொல்ல
“அடி கள்ளி! மாமனுக்கு சர்ப்ரைஸ் விருந்தா.. காட்டணும்னு முடிவு பண்ணி இருந்தா ரூமுக்கு வந்துருக்கலாம்ல.. இங்க இருட்டா இருக்கேடி…” என்று அவள் கன்னத்தில் போலியாக இடிக்க
“ஐயே! ஆசைய பாரு.. ரொம்ப மோசம் மாமா நீ!…” என்று அவனை அடிக்க ஆரம்பிக்க
“ஏய் நிருத்துடி!.. நிருத்து!, வலிக்கும்ல…” என்று அவள் கையை பிடித்து கூற
“எது, நான் அடிச்சு உனக்கு வலிக்குதா?…” என்று அவள் செல்ல முறைப்போடு கேட்க
“எனக்கு வலிக்கும்னு சொல்லல.. உனக்கு வலிக்கும்னு சொன்னேன்…” என்றவன் அவளின் கைய இழுத்து அதில் முத்தம் வைக்க,
உடல் கூசி சிலிர்த்த பெண்ணவள் அவனிடம் இருந்து கையை உருவிக்கொண்டு, தன் பின் மறைத்து வைத்திருந்த பிங் நிற புடவையை எடுத்து “இத தான் காட்டலாம்னு இருந்தேன்…” என்று அவனிடம் காட்ட
“என்னடி இது? ஏது இந்த புடவ? யாருக்கு?…” என்று புருவம் சுருக்கி ஸ்ரீதர் கேட்க
“யாருக்கா?.. எனக்கு தான், கல்சுரல் டே வருது, அதுக்கு எல்லாரும் ஒரே கலர்ல புடவ கட்ட போறோம்.. அமுதினியே எனக்கும் சேத்து எடுத்துட்டா…” என்று சொல்ல
“என்ன விளையாடுறயா?.. நான் இருக்கும் போது யாரோ புடவ எடுத்து குடுக்க நீ கட்டிப்பியா?…” என்று சற்று கோபமாக கேட்க
“என்ன மாமா.. நீ தான் வாங்கி தர மாட்டேன்னு சொன்னயே.. அதான் நான் கூட போகாம எல்லாருக்கும் எடுக்குற போல எனக்கும் எடுக்க சொன்னேன்…” என்று பாவமாக முகத்தை வைத்து தலையை சாய்த்து கூற
அவளின் அந்த பாவனையில் வந்த கோபமும் அவனுக்கு எங்கோ சென்று ஒழிந்து கொள்ள,
அவளை இழுத்து தன் மீது போட்டுக் கொண்டவன் “அடியே அது அப்போ வேணாம்னு தோணுச்சு.. இப்போ கூட படிக்கிற எல்லாரும் கட்டும் போது நீயும் கட்டணும்ல.. சொல்லி இருந்தா நானே எடுத்து தந்திருப்பேன்…” என்று கனிவாக சொல்ல
“சாரி மாமா!.. நான் யோசிக்கல.. அதனால என்ன இப்போ தான் எடுத்தாச்சே, அடுத்த வெள்ளி கட்டிட்டு வந்து உன் முன்னாடி நிக்குறேன்…” என்று காயத்ரி சொல்ல
“என்னது இந்த புடவைய கட்டிக்க போறயா?.. கொன்னுடுவேன் படுவா!.. நீ முதன் முதலா கட்டப் போற புடவ நான் எடுத்து குடுத்ததா தான் இருக்கணும்…” என்று சொல்லி அவள் கையில் இருந்த புடவையை பறித்து எடுக்க
“அப்போ எடுத்தத என்ன பண்றது.. சரி விடுங்க, வேற எதுக்காவது கட்டிக்கிறேன்…” என்று காயத்ரி சொல்ல
“வேறதுக்கும் இத கட்ட கூடாது.. நீ உடுத்தப் போற எந்த புடவையா இருந்தாலும் நான் வாங்கி தந்ததா தான் இருக்கணும்…” என்று அடமாக ஸ்ரீதர் சொல்ல
“என்ன மாமா இது பிடிவாதம்.. என்ன இருந்தாலும் முதல் தடவ எனக்குனு எடுத்த புடவ.. எதுக்காவது உடுத்துனா என்ன?…” என்று அவளும் அவன் கையில் இருந்த புடவையை பிடித்து இழுக்க
“முடியாது.. இத நீ கட்டவே கூடாது…” என்று அவனும் விடாமல் இழுத்துக் கொண்டே எழுந்து கொள்ள, பெண்ணவளும் புடவையை விடாமல் எழுந்து கொண்டவள்
“விளையாடாம புடவைய குடுங்க மாமா!…” என்று அவளிடம் புடவையை இழுக்க
“முடியாது, இத நீ கட்ட கூடாது…” என்று அவனும் விடாமல் புடவையை சுருட்டி கசக்க
“ஐயோ மாமா! புது புடவ…” என்று அவள் அதை கை பற்ற பார்க்க என்று இருவரின் போராட்டத்தில், புடவையை விரித்து, ஆளுக்கு ஒரு புறம் பிடித்துக் கொண்டு கசக்கிக் கொண்டிருந்தனர்.
“விடுடி!.. இப்பவே இத கிழிச்சு போடுறேன்.. பிறகு எப்படி கட்டுறனு நானும் பாக்குறேன்…” என்று ஒரே இழுவையாக ஸ்ரீதர் காயத்ரியை இழுக்க, புடவையோடு சுற்றிக் கொண்டு அவன் மார்பில் வந்து விழுந்தாள் பூவையவள்.
அப்போவும் அவள் விட மாட்டேன் என்று புடவையை தன்னுள் இழுத்து பிடிக்க, அவனோ அவளிடம் இருந்து இழுத்து தன் தோளில் போட்டுக் கொள்ள என்று, இப்போது அந்த பாவப்பட்ட புடவை அவர்கள் இருவரையும் தனக்குள் சிக்க வைத்து சிறை வைத்துக் கொண்டது.
ஒருவரை விட்டு ஒருவர் பிரிய முடியா நிலையால் இருக்க, சண்டையை மறந்து இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு நின்றனர்.
இரு உடல்களும் கட்டிக் கொண்டால் காதல் தீ பற்றிக் கொள்ளுமே…
இருவர் மேனியும் மோகத்தில் தகிக்க ஆரம்பித்தது.
உஷ்ணம் ஏறினால் வியர்க்க வேண்டும், ஆனால் இங்கோ உடல் நடுங்க ஆரம்பித்தது.
நடுக்கத்தை குறைக்க சூடான முத்தம் பறிமாற பட்டது.
ஆடவன் தான் வன்மையாக பெண்ணவளின் இதழ்களை முற்றுகையிட்டு, கீழ் அதரம் மேல் அதரம் என்று பாகுபாடு இல்லாமல் கடித்து சுவைக்க ஆரம்பித்தான்.
பெண்ணவளும் அவன் ஆளுமையில் சொக்கி போய், விழி மூடி முழு ஒத்துழைப்பு வழங்கினாள்.
இதழ்கள் பிணைந்து…
உமிழ் நீர் கலந்து…
மெய் தீண்டி…
உயிர் தொட்டு… இருவரும் ஒன்றாக சரிந்து உறங்க ஆரம்பித்தனர்.
*********
அடுத்த நாள் காலை கண் விழித்த ஸ்ரீதருக்கு இதமாக இருந்தது.
இருவரும் கட்டிக் கொண்டு கிடக்க, அவர்கள் இருவரையும் ஒரு புடவை சுற்றிக் கொண்டிருந்தது.
தன் மீது பூங்கொடியாக படர்ந்து கிடந்தவளை மேலும் தன்னுடன் இறுக்கியவன் “என் சிங்காரி!…” என்று அவள் நெற்றியில் அவனை பித்துக் கொள்ளச் செய்யும் அந்த ஒற்றை பொட்டில் அழுத்தி முத்தம் வைத்து
“காயூ குட்டி!.. குட்டி எந்திரிடி.. விடிச்சிருச்சு…” என்று எழுப்ப
சோம்பலாக எழுந்து கொண்ட காயத்ரி “குட் மார்னிங் மாமா!…” என்று அவன் கன்னத்தில் முத்தம் வைத்து எழுந்து கெள்ள பார்க்க,
அவர்களால் நொந்து போன அந்த புடவை விடுவேனா என்றது.
“இரு!…” என்று காயத்ரியை தடுத்தவன், மெதுவாக பார்த்து பார்த்து புடவையை எடுத்து விட, இருவரும் எழுந்து கொண்டனர்.
அதன் பின் இருவரும் கீழே இறங்கி வர, காதலோடு சிரித்துக் கொண்டே வந்த இருவரும் தங்களின் முன் நின்ற பத்மினியை கண்டு படிகளில் அப்படியே நின்றனர்.
பத்மினி எதுவும் கேட்கவில்லை. இருவரையும் துளைத்து எடுக்கும் பார்வை பார்த்துக் கொண்டு, அழுத்தமாக முகத்தில் இறுக்கத்தை காட்டி நின்றிருந்தார்.
ஸ்ரீதர் தயங்கி நின்றது ஒரு நொடி தான் “அக்கா! தேடுனியா என்ன?.. ரெண்டு பேரும் நேரத்துக்கே எழுந்துட்டோமா அதான் மாடியில கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம்…” என்று சாதாரணமாக கூறியவன்
“காயூ குட்டி! மாமாக்கு காஃபி போட்டு எடுத்துட்டு வாடா…” என்று சொல்லி விட்டு கீழே இறங்கி சென்று விட
காயத்ரி அப்பாடா என்று பெரும் மூச்சு விட்டவள் “அம்மா உனக்கும் சேத்தே காஃபி போடுறேன்…” என்று அவளும் அவன் பின்னே சென்று சமையல் அறைக்குள் நுழைந்து கொள்ள,
இருவரும் சென்று மறையும் வரை பார்த்திருந்த பத்மினி, கைகளை இறுக் பொத்தி, யோத்தவர், தனக்குள் ஒரு முடிவெடுத்துக் கொண்டார்.