அத்தியாயம்- 3
உன்ன நெனச்சேன்
பாட்டு படிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
என்ன நெனச்சேன்
நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
என சித்தார்த்தின் நண்பர்கள் அனைவரும் அவனை சுற்றி அமர்ந்து பாடிக்கொண்டிருக்க அவர்களின் நடுவே சோகமே உருவாய் அமர்ந்திருந்தான் சித்தார்த்.
அவனைப் பார்த்து மித்ரா விழுந்து விழுந்து சிரிக்க அவளை முறைத்துக் கொண்டிருந்தான் சித்தார்த்.
“என்ன ஏன் முறைக்கிற நான் என்ன பண்ண” என அவள் கேட்க
“ஏய் டைனோசர் முட்ட நான் பல்பு வாங்குனத விட நீ சிரிக்கிறது தான் டி எனக்கு காண்டா இருக்கு” என்றான் சித்தார்த். “இப்ப எதுக்கு டென்ஷன் ஆகுற திரிஷா இல்லனா திவ்யா” என வடிவேல் பாணியின் ரவி கூற “ஆமாடா நம்ம பக்கத்து கிளாஸ் டாப்பர் பொண்ணு பேர் என்ன” சித்தார்த் கேட்க அனைவரும் கோரசாக துப்பினார்கள்.
சுந்தரேசன் வீட்டில் தெய்வானை, அகல்யா, கதிரேசனின் மனைவி மீனாட்சி மூவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். சுந்தரேசனின் வீடு மிகவும் விசாலமானது சுந்தரேசனின் வீட்டின் வலது பக்கத்தில் அதேபோல ஒரு விசாலமான வீடு காணப்பட்டது அது அகல்யா வெங்கடாசலம் தம்பதிகளின் வீடு சுந்தரேசன் வீட்டின் இடது புறத்தில் சற்று தள்ளி அதே போன்று ஒரு வீடு அமைந்து இருந்தது அது கதிரேசன் மீனாட்சி தம்பதிகளின் வீடு. அனைவரும் எப்பொழுதும் ஒன்றாகவும் ஒற்றுமையாகவும் இருக்கவே இந்த ஏற்பாடு. பக்கத்து பக்கத்து வீடு என்பதால் தங்களுடைய வேலைகளை முடித்த பின் இவர்கள் மூவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள்.
தெய்வானை அகல்யா மீனாட்சி இருவரையும் ஒரே மாதிரியாவே நடத்துவார் அவர் மீனாட்சியை அவருடைய மருமகளாக பார்த்ததே கிடையாது அகல்யாவை போல தன்னுடைய இன்னொரு மகளாகவே மீனாட்சியை பார்த்தார் அதனால் மீனாட்சிக்கு தெய்வானை மீது அதிக அன்பும் மரியாதையும் உண்டு.
அவர்கள் அவ்வாறு பேசிக் கொண்டிருக்கையில் “அகல்யா கோயில் போக எல்லா ரெடியா” என தெய்வானை கேட்க “எல்லா ரெடிம்மா கீர்த்தியும் அஷ்வந்த்தும் கூட லீவு சொல்லிட்டாங்க கீர்த்தியும் மோஹியும் டிரஸ் எல்லாம் ரெடி பண்ணிட்டு தான் போனாங்க சித்து வந்ததும் அவனும் ரெடி பண்ணிடுவான்” என அகல்யா கூற தெய்வானை மீனாட்சியிடம் திரும்பி “கதிரேசன் எல்லாம் ரெடி பண்ணிட்டானா” என கேட்க “கோயில் பூஜைக்கு தேவையான திங்ஸ் பொங்கல் வைக்க தேவையான திங்ஸ் எல்லாத்தையும் நேத்தே வாங்கிட்டு வந்துட்டாரு பசங்களும் ரெடி ஆயிட்டாங்க” எனக் கூறினார் மீனாட்சி “அப்ப சரி வீரா கால் பண்ணா சரியா 10:00 மணிக்கு பஸ் வந்துருமா அதனால எல்லாரையும் நேரத்தோட ரெடியாகி இருக்க சொன்னான்” என தெய்வானை கூற “சரிமா” என்றனர் பெண்கள் இருவரும். அப்பொழுது அகல்யா “அம்மா போயிட்டு வர வழியில நம்ம பண்ண வீட்டுக்கு போய் சமைச்சு சாப்பிட்டு வருவோமா” என கேட்டாள். “சரி அதுக்கு என்ன வார வழியில ஒரு நாள் அங்க தங்கிட்டு வருவோம்” என்றார் தெய்வானை.
சுந்தரேசன் குடும்பத்தினருக்கு ஒரு வழக்கம் இருந்தது மாதத்தில் ஒரு முறையாவது மதுரைக்கு அருகில் இருக்கும் அவர்களின் பண்ணை வீட்டிற்கு சென்று அங்கு சமைத்து சாப்பிட்டுவிட்டு சில சமயங்களில் அங்கு இரவு தங்கி மறுநாள் காலையில் வருவார்கள். அவர்களது பன்னை வீடு அவ்வளவூ பெரியது அல்ல ஆனால் அதன் வடிவமைப்பு அதன் சுற்றுச்சூழல் என்பன பார்ப்பதற்கே ரம்மியமாக காட்சியளிக்கும்.
இவர்கள் அனைவருக்கும் அங்கு தங்க இடம் போதாது அதனால் சிறியவர்கள் வாசலில் குடில் அல்லது கூடாரம் அமைத்து தங்குவார்கள் அதில் அவர்களுக்கு அலாதி இன்பம்
திருபரங்குன்றம் கோவிலுக்கு சென்று வரும் வழியில் அவர்களுடைய பன்னை வீட்டிற்கு சென்று வர இவர்கள் மூவரும் திட்டமிட்டுக் கொண்டிருந்தனர்.
வர்மா ஹாஸ்பிடலில் அனைத்து வைத்தியர்களும் வைத்தியசாலையில் வேலை செய்யும் ஊழியர்களும் அந்த பரந்த விசாலமான அறையில் அமர்ந்து இருக்க அந்த அறையினுள் கம்பீரமாக நுழைந்தான் அந்த வைத்தியசாலையின் சேர்மன் ஜெயசிம்மவர்மன். அறைக்குள் வந்தவனை பார்த்த அனைவரும் மரியாதை நிமித்தம் எழுந்து நிற்க அவர்களை பார்த்து தலையை அசைத்தவன் அனைவரையும் அமரும்மாறு செய்கை செய்தான்.
“குட் ஆப்டர்நூன் (afternoon) காய்ஸ் நா சுத்தி வளைச்சு பேச விரும்பல உங்கள வர சொன்னதுக்கு ரீசன் இந்த ஹாஸ்பிடலோட நியூ சிஓ (ceo) இன்டர்டியூஸ் பண்ண தான் இந்த ஹாஸ்பிடலோட நியூ சிஓ ceo” எனக்கூறி வலது பக்கம் இருந்த இருக்கையில் அமர்ந்து இருந்த ஆதியை கை காட்டினான்.
“மிஸ்டர் ஆதி தான் நம்ம அடுத்த ceo இதுல யாருக்காவது அப்ஜக்ஷன் இருக்கா” என கேட்டான். அனைவரும் இல்லை என பதிலளிக்க “ஓகே அப்போ ஆதி தான் இந்த ஹாஸ்பிடல் நியூ ceo
நெக்ஸ்ட் மண்டேல Monday இருந்து ஆபீஸியலா official சார்ஜ் எடுத்துப்பாரு” எனக் கூற அனைவரும் ஆதியை வாழ்த்தினர். “ஓகே காய்ஸ் நம்ம நியூ ceo ஆதி சோ அதனால அவருடைய சீப் டாக்டர் போஸ்ட்க்கு நான் சீனியர் டாக்டர் பாஸ்கர ரெகமெண்ட் பண்றேன். உங்களுக்கு வேற எதுவும் சாய்ஸ் இருக்கா” என கேட்க கூட்டத்தில் இருந்த ஒருவன் எழுந்து “அது எல்லாம் ஒன்னுமில்ல சார் நீங்க ஒரு முடிவு எடுத்தா அது எப்பவும் சரியா தான் இருக்கும்” என கூறினார் அனைவரும் அதை ஆமோதிக்க சிறிது நேரம் ஹாஸ்பிடல் பற்றி பேசிவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். மீட்டிங் ரூமில் இருந்து வெளியே வந்த அஷ்வந்த், கீர்த்தி அவர்களது நண்பர்கள் அவர்களுடைய அறைக்குள் வந்து அமர்ந்தனர்.
“ஏய் என்னடி ஆதிய நியூ ceoன்னு சொல்றாங்க சும்மாவே அவரு நம்மள வச்சு செய்வாரு இப்ப ceo வேற இனி நம்ம கதி அதோ கதி தான்” என்றாள் கீர்த்தி.
“என்னடி புது விஷயம் மாதிரி ஃபீல் பண்ற ஆல்ரெடி தெரிஞ்சதுதானே” என காவ்யா கேட்க “என்னடி சொல்ற” என்றான் அஷ்வந்த்.
“ஏய் இது உங்க ரெண்டு பேருக்கும் தெரியாதா நம்ம ஹாஸ்பிடல் சேர்மன் ஜெய் சாரோட தம்பி தான் ஆதி சார் அவரோட புல் நேம் ஆதித்யா வர்மா” என்றான் கௌதம். அவன் கூறியதை கேட்ட அஷ்வந்தும கீர்த்தியும் திகைத்தனர்.
தெய்வானையும் மீனாட்சியும் பேசிக் கொண்டிருக்க வாயிலில் ஒரு ஜீப் சத்தம் கேட்டது. அதனை கேட்ட மீனாட்சி “விஜய் பாசங்கள கூட்டிட்டு வந்துட்டான் போல” என்றார் அவர் கூறியது போல் சித்தார்த்தையும் மித்ராவையும் பாடசாலையில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான் விஜய். முதலில் உள்ளே வந்த மித்ரா “பாட்டி என்ன பண்ற” என கேட்ட படி வந்து தெய்வானையை கட்டிக்கொண்டாள் மித்ரா. தெய்வானை தன் பக்கத்திலிருந்து தட்டில் இருந்து லட்டு ஒன்றை எடுத்து மித்ராவுக்கு ஊட்டி விட்டார்.
இதைப் பார்த்த சித்தார்த் “நான் வந்தது யாருக்காவது தெரியுமா” என கேட்க “உனக்கு லட்டு தானே வேணும் வந்து எடுத்து சாப்பிடு” என்றார் அகல்யா “அத்தை அவனுக்கு லட்டு வேணாமா அவனே சோகமா இருக்கான் நீங்க வேற” என அவனை வம்பு இழுக்க
“ஏய் பூசணிக்காய் எனக்கும் ஒரு நாள் வரும் அன்னைக்கு இருக்குடி உனக்கு” எனக்கு கூறிக்கொண்டிருக்க தெய்வானை இன்னும் ஒரு லட்டு எடுத்து வந்து சித்தார்த்திற்கு ஊட்டிவிட்டார்.
சித்தார்த் மித்ரா இருவரையும் வீட்டில் விட்ட பின் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த வீரராகவனிடம் சென்ற விஜய் “பசங்கள வீட்ல விட்டுட்டேன் அண்ணா” என கூற “சரிடா நைட் போறதுக்கு டிரஸ் எல்லாம் ரெடி பண்ணிடியா” என வீரா கேட்க “அண்ணா நா கண்டிப்பா வரணுமா நீங்க எல்லாரும் போயிட்டு வாங்க நான் இங்க இருக்க வேலை எல்லாத்தையும் பாத்துக்குறேன்” என்றான் விஜய்
“நீ எங்களே உன்னோட குடும்பமா நினைச்சா வா இல்ல இப்படியே இரு வராத ஆனா நீ வராட்டி நான் யாரோ நீ யாரோ இனி அண்ணா நொண்ணான்னு கூப்பிடாத” என கூறினான் வீரராகவன். “அண்ணா இரு நா எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டு வரேன்” என மறுவார்த்தை பேசாமல் சென்று விட்டான் விஜய். அவனை பார்த்து சிரித்த வீரராகவன் அவனது வேலைகளை தொடர்ந்தான் அந்த நேரம் தொலைபேசி அழைப்பு வர அதை உயிர்ப்பித்து “ஹலோ” என்க “ஹலோ மாமா எனக்கு ஷிப்ட் முடிஞ்சுது வந்து கூப்பிட்டு போறியா” என்றாள் கீர்த்தி.
நேரத்தை பார்த்தவன் “அதுக்குள்ள முடிஞ்சிடுச்சா” எனக் கேட்க “அம்மா தான் சீக்கிரமா வர சொன்னாங்க” என்றாள் கீர்த்தனா “வெயிட் பண்ணுடா நான் வாரேன்” எனக் கூறி போனை கட் செய்தான் வீரராகவன்
கட்டான போனை பார்த்து சிரித்து கொண்டிருந்தாள் கீர்த்தனா “என்னடி போனை பார்த்து சிரிக்கிற லவ்வா” என காவ்யா கேட்க “இப்ப இருந்து இல்ல அது ஒரு பத்து பதினஞ்சு வருஷமா ஓடுது” என்றான் அஷ்வந்த். “யாருடி அது” என்று கேட்டாள் காவ்யா.
“அது வேற யாரும் இல்லடி என் மாமா தான்” என்று அவள் சொல்ல
“எது உன்ன டெய்லி விட்டுட்டு போவாரே அவரா” என்றாள் காவ்யா
“ஆமா அவரு தான்” என்றாள் கீர்த்தனா.
“ஏய் கீர்த்தி உன் மாமனா ஏஜ் ஜாஸ்தியா இருக்குமே” என கெளதம் கேட்க
“அவ்வளவு வித்தியாசம் எல்லாம் இல்ல ஜஸ்டு டென் இயர்ஸ் தான்” என்றாள் கீர்த்தனா.
“பத்து வருஷம் கேப்னு சொல்றதை விட ஜஸ்ட்டு னு சொல்ற இல்ல அங்க இருக்க நீ” என்றான் நிவின்
ஹி ஹி ஹி என இளித்தாள் கீர்த்தனா. “கீர்த்தி ஆர் யு ஸுவர் உனக்கும் அவருக்கும் பத்து வயசு வித்தியாசம் இருக்கு அவர் ஸ்டடிஸ்கும் உன் ஸ்டடிஸ்க்கும் சம்பந்தமே இல்ல அவரு அவ்ளோ கலரும் இல்ல அப்பறம் ஏன் உனக்கு அவர புடிச்சிருக்கு” என கேட்டாள் காவ்யா
“லூசு மாதிரி பேசாத காவ்யா லவ்வுக்கு நீ சொல்ற எதுவுமே தேவையில்லை அது ஒரு ஃபீல் அது எனக்கு என் மாமாவ தாண்டி யார்கிட்டயும் வரல வரவும் வராது” என கூறினாள் கீர்த்தனா. “நிஜமாவே உன் மாமாவை தான் நீ லவ் பண்றியா அவரை தான் கல்யாணம் பண்ணிக்க போறியா” என கௌதம் கேட்க “ஆமா” என்றாள் கீர்த்தனா.
“டேய் அஷ்வந்த் அப்ப இவ உனக்கு அத்தையாடா” என நிவின் கேட்க அதற்கு அஷ்வந்த் “ஏய் அவர் எனக்கு சித்தப்பாடா அப்ப இவ எனக்கு சித்தி” என கூற அனைவரும் சிரித்தனர்.
அந்நேரம் அங்கு வந்த நர்ஸ் “கீர்த்தனா உங்க மாமா வந்திருக்காரு” என கூற அவள் அவளுடைய பையை எடுத்துக்கொண்டு சென்றாள்
ஆதித்யவர்மனின் வீட்டில் ஆதி ஜெய் இருவரும் உணவு அருந்திக்கொண்டு இருக்கும் போது அங்கு வந்த அவர்களின் வீட்டில் வேலை செய்யும் பர்வதம் “ஜெய் தம்பி நம்ம ஆதி தம்பி தான் அடுத்த ceo ன்னு எல்லார்கிட்டயும் சொல்லிட்டீங்களா” என கேட்க
“ஆமா நெக்ஸ்ட் மன்டே சார்ஜ் எடுத்துப்பான்” என கூற
“தம்பி அதுக்கு முன்னாடி கொஞ்சம் திருபரங்குன்றம் கோயிலுக்கு போயிட்டு வந்தா நல்லா இருக்கும்” என்றார் பர்வதம்
“ஆதி உனக்கு ஏதும் இம்பார்டன்ட் வொர்க் இருக்கா” என ஜெய் கேட்க “இல்லை ஜெய்” என்றான் ஆதி.
“அப்போ ஓகே நம்ம நாளைக்கு போயிட்டு வரலாம்” என ஜெய் கூற ஆதியும் சரி என்றான். இருவரும் திருபரங்குன்றம் செல்ல ஆயத்தமானார்கள்.

