அத்தியாயம் – 4
இரவு 10:00 மணி அளவில் பேருந்தில் பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்தனர் சுந்தரேசன் குடும்பத்தினர். அனைத்து பொருட்களையும் பேருந்தில் ஏற்றிய பின்னர் அனைவரும் பேருந்தில் அவரவர் இருக்கைகளில் அமர்ந்தனர். முதலில் உள்ள இருக்கைகளில் பெரியவர்களும் இறுதியில் உள்ள இருக்கைகளில் சிறியவர்களும் அமர்ந்தனர். பேருந்தில் வீரா ஏறி அமர்ந்தவுடன் அவன் அருகில் வந்து அமர்ந்தாள் கீர்த்தி. வீரராகவன் அருகில் கீர்த்தி அமர்ந்திருப்பதால் அஷ்வந்த் அருகில் அமர்ந்தான் விஜய்.
பேரூந்து கிளம்ப ஆரம்பித்தவுடன் தன் கையில் வைத்திருந்த ப்ளூடூத்தில் பாட்டை ஆன் செய்திருந்தான் சித்தார்த். அனைவரும் பாட்டு பாடிக்கொண்டே செல்ல இடையில் அஷ்வந்தம் சித்தார்த்தும் ஆட ஆரம்பிக்க பின் அனைவரும் இணைந்து ஆடி பாடிக் கொண்டு சென்றனர் திருப்பரங்குன்றம் கோயில் வந்தவுடன் “என்னம்மா கோயில் இவ்வளவு சீக்கிரம் வந்துடுச்சு தூரமா எங்கயாவது போய் இருக்கலாம்” என மோஹிதா கூற அவளை பார்த்து முறைத்தார் அகல்யா. வீரா அங்கு பக்கத்திலிருந்த ஒரு வீட்டை ஒரு நாள் வாடகைக்கு எடுத்திருந்தான் அனைவரும் அந்த வீட்டில் இரவை கழித்தனர்
காலை 6:00 மணி அளவில் ஜெய் ஆதி இருவரும் திருப்பரங்குன்றம் செல்ல ஆயத்தமாக காரில் ஏறி பயணித்துக் கொண்டிருந்தனர் அவர்கள் அழைத்தும் பர்வதம் வேலையை காரணம் காட்டி வர மறுத்துவிட்டார்
ஜெய் அனைவரிடமும் சகஜமாக பழகுபவன் மிகவும் பொறுமைசாலி அத்துடன் மிகவும் பொறுப்பானவனும் கூட 15 வயதிலேயே பெற்றோரை இழந்து சொந்தங்களின் துரோகத்தால் பாதிக்கப்பட்டு தன் தம்பியையும் தங்கையையும் வளர்க்க அதீத சிரமப்பட்டான். ஜெய்யின் கஷ்டத்தை அருகில் இருந்து பார்த்ததன் காரணமாகவே ஆதி கடுமையாக படித்து டாக்டர் பட்டம் பெற்றார் தன் சொந்தங்களின் துரோகத்தால் இழந்த சொத்துக்களையும் மீள பெற்று இன்று வரை தன் தம்பி தங்கைகளை தன் கைக்குள் பொத்தி வளர்த்து வருகிறான் ஜெய்.
ஆதி பொறுப்பானவன் தான் ஆனால் ஜெய் போல பொறுமைசாலி அல்ல தன் அண்ணன், தங்கை, பர்வதம் இவர்கள் மூவரை தவிர யாரையும் தன்னிடம் நெருங்க விடமாட்டான் எல்லோரையும் ஒரு பார்வையிலே தள்ளி நிறுத்தி விடுவான். ஆதிக்கு தன் அண்ணன் தங்கை மீது அதீத பாசம் உண்டு
ஜெய் எவ்வளவு பொறுமைசாலியாக இருந்தாலும் அவனது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு
அவன் கோபப்படுவதும் சிவன் தன் நெற்றிக்கண்ணை திறப்பதும் ஒன்று என தோன்றும் அளவு அவனது கோபம் இருக்கும் அவனது இந்த கோப முகத்தை கண்டவர்கள் ஒரு சிலரே
திருப்பரங்குன்றம் வந்திறங்கிய ஜெய்யும் ஆதியும் ஒரு ஹோட்டல் அறையில் உடைமாற்றிவிட்டு கோவில் நோக்கி புறப்பட்டனர்
அதிகாலையில் எழுந்து அனைவரும் குளித்து முடித்த பெண்கள் சேலையும் அல்லது தாவணி அணிந்து வர ஆண்கள் அனைவரும் வேஷ்டி சட்டை அணிந்து கோயில் சென்று பொங்கல் வைக்க தேவையானவற்றை செய்ய ஆரம்பித்திருந்தனர் தெய்வானை அகல்யா மீனாட்சி மூவரும் பொங்கல் செய்ய தேவையானவற்றை கவனிக்க ஏனையவர்கள் ஜமுக்காலத்தை விரித்து அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
மோஹிதா, பிரதிக்ஷா, கீர்த்தி, மித்ரா நால்வரும் கோயிலை சுற்றி பார்ப்பதாக கூறி கிளம்பிவிட்டனர்.
வெள்ளை வேஷ்டி சிவப்பு நிற சட்டை சகிதம் கோயிலுக்குள் நுழைந்தான் ஆதி ஆதியும் ஜெய்யும் கடவுளை வணங்கிவிட்டு கோயிலை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர் அப்போது எதர்சையாக திரும்பி கீர்த்தனாவை பார்த்த ஜெய் “ஆதி அந்த பொண்ணு நம் ஆஸ்பிட்டல்ல தானே வொர்க் பண்றா” எனக் கேட்க திரும்பி பார்த்தவன் “ஆமா ஜெய் ஹாஸ்பிடல்ல லீவு போட்டு இங்க வந்திருக்கா பாரு” எனக் கூற அவனை திரும்பி பார்த்து “ஜெய் ஆமா நீ இப்போ ஹாஸ்பிடல்ல தானே இருக்க” எனக் கேட்க அவனை பார்த்தவன் மீண்டும் கீர்த்தனா இருந்த திசையை பார்த்தான்.
மோஹிதாவும் பிரதிக்ஷவும் வேறு பக்கம் சென்று விட மித்ராவுடன் பேசி விளையாடிக் கொண்டிருந்தாள் கீர்த்தனா. அவர்களைப் பார்த்த ஆதி சுற்றுச்சூழல் மறந்து அப்படியே நின்று விட்டான்.
அழகிய சந்தன நிற பட்டில் சிவப்பு நிற பார்டர் வைத்து அழகிய வேலைப்பாடுகளுடனான அழகான பாவாடையும் அதற்கு பொருத்தமான அதே வேலைப்பாடுகள் பொருந்திய சட்டையும் அதற்கு மேல் அழகிய சிவப்பு தாவணியும் அணிந்து தேவதை போல் காட்சியளித்தாள் மித்ரா.
அவன் மெய் மறந்து நிற்பதை பார்த்த ஜெய் “என்ன ஆதி அப்படி பாக்குற” எனக் கேட்க “ஜெய் அவ கியூட்டா இருக்கா இல்ல” என ஆதி கூற
“ஆமா அவ கியூட்டா தான் இருக்கா ஆனால் நீ அவளை டெய்லி ஹாஸ்பிடல்ல பாக்குற இல்ல இப்ப என்ன புதுசா பார்க்கிற மாதிரி பார்க்கிற” என ஆதியிடம் கேட்க
“அவ இல்லை அந்த ரெட் கலர் தாவணி” என ஆதி கூற
“ஆமா கியூட்டா தான் இருக்கா அதுக்கு என்ன இப்ப” என ஜெய் குறும்பாக கேட்க திரும்பி அவனை முறைத்தவன் “வா போய் பேசலாம்” என ஆதி கூற “டேய் இது நீயா” என ஜெய் கேட்க வாடா என இழுத்துச் சென்றான் ஆதி.
அவர்களின் அருகில் சென்ற ஆதி “ஹாய் கீர்த்தனா இங்க என்ன பண்றீங்க” என கேட்க “என்னடா வில்லங்கம் எங்கே போனாலும் நம்மளையே சுத்துது” என கீர்த்தி மைன்ட் வாய்ஸில் யோசித்து கொண்டிருந்தாள். அந்நேரம் “அக்கா இது யாரு” என மித்ரா கேட்க அவளது கேள்வியில் சுயநினைவிற்கு வந்தவள் “குட்மார்னிங் ஆதி சார் குட் மார்னிங் சார்” என வணக்கம் தெரிவிக்க குட்மார்னிங் மிஸ் என இழுத்தவனை பார்த்து கீர்த்தனா என்றாள் அவளைப் பார்த்து சிரித்த “ஜெய் ஓகே கீர்த்தனா இங்க என்ன பண்றீங்க” என கேட்க “கோவிலுக்கு கிரிக்கெட் விளையாடவா வருவாங்க” என மனதில் நினைத்தவள் அதை மூகத்தில் காட்டாமல் “பேமிலியோட family கோயிலுக்கு வந்தோம்” என கூற “இது யாரு உங்க சிஸ்டரா” என ஜெய் கேட்க ஆமா என்றாள் கீர்த்தனா “இன்டர்டியூஸ் பண்ணலாமே” என ஆதி கேட்க அவனை ஒரு மார்க்கமாக பார்த்த படி “இது என் சிஸ்டர் மித்ரா” என அவர்களிடம் அறிமுகப்படுத்தியவள் மித்ராவிடம் “இது ஜெய் சார் நான் வேர்க் பண்ற ஹாஸ்பிடலோட சார்மேன்” என அறிமுகப்படுத்தியவள் ஆதியிடம் திரும்பி இது “ஆதி சார் ஹாஸ்பிடலோட சீஃப் டாக்டர் இப்போ ceo” எனக் கூற “இவரு தான் அந்த சிடுமூஞ்சி சைக்கோவா” என மித்ரா கேட்டு விட ஜெய் சத்தமாக சிரித்தான் கீர்த்தனாவோ “குட்டிச்சாத்தான் எப்படி போட்டு கொடுத்துட்டு இப்ப எங்க போய் ஒழியலாம்” என யோசித்துக் கொண்டிருக்க ஆதி கீர்த்தனாவையும் ஜெய்யையும் மாறி மாறி முறைக்க நம்ம ஏதாவது தப்பு பண்ணிட்டமோ என்ன யோசித்துக் கொண்டிருந்தாள் மித்ரா.
ஆதி முறைப்பதை பார்த்த கீர்த்தனா “சாரி சார் அவ கொஞ்சம் பைத்தியம் அவளுக்கு சீக்கிரம் சரியாகிடடும்னு தான் சாமி கும்பிட இங்க வந்தோம்” என கூற அவளை முறைத்தாள் மித்ரா. அழகிய டெடி பேயர் போல கைகளை இடுப்பில் வைத்து முறைத்தவளை பார்த்து ஆதிக்கு சிரிப்பு வந்து விட அவன் சத்தமாக சிரித்து விட்டான் அவன் சிரித்ததை ஏதோ உலக அதிசயம் போல கீர்த்தி பார்த்தாள் “யூ சோ க்யூட்” என ரசனையுடன் ஆதி சொல்ல அவன் கண்களில் இருந்த ரசனையை கண்டு கொண்டாள் கீர்த்தி.
ஆதியையும் ஜெய்யையும் பார்த்தவள் “சார் வந்து ரொம்ப நேரமாச்சு எங்கள தேடுவாங்க” எனக் கூறி மித்ராவை இழுத்து சென்றாள்
மித்ராவை இழுத்து வருவதை பார்த்த வீரா “என்ன கீர்த்தி ஏன் பாப்பாவ இப்படி இழுத்துட்டுவார” எனக் கேட்க
“சும்மா பாப்பா பாப்பான்னு செல்லம் கொடுக்கிறத நிறுத்துங்க மாமா நீங்க இப்படி செல்லம் குடுக்குறதால தான் எங்க எப்படி நடந்துக்கணும் எப்படி பேசணும்னு எதுவும் தெரியல இவளுக்கு” என கீர்த்தி கோபமாக கூற மித்ரா அவளை பாவமாக பார்த்தாள்.
கீர்த்தி கோபமாக பேசியதை பார்த்த அஸ்வந்த் “என்ன ஆச்சு கீர்த்தி” எனக் கேட்க நடந்ததை கூறினாள் கீர்த்தனா. ஆனால் ஆதி மித்ராவை ரசனையாக பார்த்ததை கூறவில்லை தான் ஏதாவது தவறாக யோசித்து இருக்கிறோம் என நினைத்தாள் அதற்கு காரணம் அது இதுவரை எந்த பெண்ணிடமும் சிரித்து பேசியதோ ரசித்து பார்த்ததோ கிடையாது என்பதனாலே ஆகும்.
கீர்த்தி கூறியதை கேட்ட அஸ்வந்த் “மித்ரா உனக்கு எங்க எப்படி நடந்துக்கணும்னு தெரியாதா” என அவனும் தன் பங்கிற்கு அவளை திட்ட அவள் பாவமாக முழித்துக் கொண்டிருந்தாள். அவளின் இந்த முக பாவத்தை பார்த்தவுடன் அனைவரும் அவளை திட்டுவதை நிறுத்தி விட்டனர்.
“அச்சு சும்மாவே ஆதி சார் நம்மல வச்சு செய்வாரு இதுல இந்த குட்டிச்சாத்தான் வேற ஏத்திவிட்டுட்டு இனி நாம அவ்ளோ தான்” என கீர்த்தி சொல்ல “நாம இல்ல நீ நம்ம ரிலேட்டிவ்ஸ்னு ஆதி சார்க்கு தெரியாது” என அஷ்வந்த் கூற அவனை ஏகத்துக்கும் முறைத்தாள் கீர்த்தி.
கோயிலில் மித்ராவை தேடி செல்ல போனவனை தடுத்து கூட்டிக் கொண்டு வந்திருந்தான்ம “ஜெய் ஏன்டா கூட்டிட்டு வந்துட்ட” என ஆதி கேட்க
“ஏய் அவ கீர்த்தியோட சிஸ்டர்ன்னு தெரியுதுல்ல நாம அப்பறம் கூட அந்த பொண்ண கண்டுபிடிக்கலாம் கீர்த்தி பார்த்த பார்வையை பார்த்தியா கண்டிப்பா அவ தங்கச்சிய நீ சைட் அடிச்சத கண்டுபிடிச்சிட்டா அதனாலதான் அந்த பொண்ண இழுத்துட்டு போனா இதுல நீ மறுபடியும் அந்த பொண்ண பார்க்க போனா அவங்களுக்கு அன்கம்ஃபடபலா uncomfortable இருக்கும் ஆதி” என்றான் ஜெய்.
அவன் கூறியதைக் கேட்ட ஆதியும் அமைதியாக ஊருக்கு கிளம்பினான் கோயிலில் பொங்கல் வைத்து கடவுளை வணங்கி விட்டு பன்னை வீட்டை நோக்கி பயணித்தனர் சுந்தரேசன் குடும்பத்தினர்.
பன்னை வீட்டை அடைந்தவுடன் குதூகலமான மோஹிதாவும் பிரதிக்ஷாவும் தங்களது தொலைபேசியில் ரிலீஸ் செய்ய ஆரம்பித்து இருந்தனர் இதை பார்த்த அஷ்வந்த் “இந்த கொசு தொல்லை தாங்க முடியல” என கூறி அவர்களை தள்ளிவிட்டு கொண்டு சென்றான். தெய்வானை, அகல்யா, மீனாட்சி மூவரும் சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு மதிய உணவு சமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்து இருந்தனர்.
அஷ்வந்த் கற்களை அடிக்கி அடுப்பு போன்ற அமைப்பை உருவாக்க இந்த அடுப்புக்கு தேவையான விறகுகளை விஜய்யும் வீரராகவனும் விறகுகளை வெட்டிக் கொண்டிருந்தனர்.

