ஒரு கூட்டுக் கிளிகளின் கூட்டம் – 5

அத்தியாயம் – 5

தோட்டத்தில் விறகுகளை வெட்டிக் கொண்டிருந்த வீரராகவனை ஆசையாக இரண்டு கண்கள் மொய்த்துக் கொண்டிருந்தன வீரராகவனை ரசித்து பார்த்துக் கொண்டிருந்த கீர்த்தியை பார்த்து அஷ்வந்த் மோஹிதாவிற்கும் பிரதிக்ஷாவுக்கும் சிக்னல் செய்ய அதை புரிந்தவர்கள்

அசந்தாப்புல
அள்ளிப்புட்டானே அடி
மனதில் அண்டிப்புட்டானே
மிளகாப் பூ போல என்னுள்ள
அழகா பூ பூக்க விட்டானே
வெட்கத்துல விக்க வெச்சானே
வெப்பத்துல சிக்க வெச்சானே
பசுப்புறானே மழுப்புறானே
சொதப்புறானே

என சத்தமாக பாட அதில் கலைந்தவள் அவர்களுடன் தானும் இணைந்து கொண்டாள்

லண்டன் நகரத்தில் அமைந்திருந்த அந்த பெரிய அப்பார்ட்மெண்டில் போர்வையை இழுத்துப் போர்த்தி தூங்கிக்கொண்டிருந்தாள் நேகா அவள் தொலைபேசி விடாமல் ஒலிக்க அதை பார்த்து எரிச்சலுற்றவள் அவள் அதை ஆன் செய்து “ஏய் பைத்தியக்கார நாயே ஏன்டா காலங்கத்தால கால் பண்ணி உயிரை எடுக்கிற” என கத்த மறுபக்கம் அழைப்பில் இருந்த ஜெய் “இந்த டைமுக்கு நீ காலேஜ் போகணும் குட்டிமா உனக்கு எக்ஸாம் இருக்குல” என ஜெய்யின் குரலை கேட்டவள் பதறி அடித்து கொண்டு எழுந்தவள்
“சாரி அண்ணா ஆதி அண்ணான்னு நெனச்சிட்டேன்” என்று கூற
“இட்ஸ் ஓகே டா சீக்கிரம் எழுந்து ரெடியாகு” என கூறி சிறிது நேரம் பேசிவிட்டு போனை கட் செய்து இருந்தான் அவன் கட் செய்தவுடன் எழுந்து தயாராகி காலேஜ்ஜிற்கு சென்றாள் நேகா.

பன்னை வீட்டில் பெண்கள் சமைத்துக் கொண்டிருக்க கதிரேசனும் வெங்கடாசலமும் கடைவீதிக்கு சென்று முட்டை, மீன், சிக்கன், மட்டன் என பல மாமிச உணவுகளை சமைப்பதற்கு வாங்கி வந்திருக்க சுந்தரேசன் இளையவர்களுக்கு நொறுக்கு தீனிகளை வாங்கி வந்திருந்தார். அவர் வாங்கி வந்திருந்த நொறுக்கு தீனிக்களை பார்த்த மித்ரா “ஐ ஸ்நாக்ஸ் தாத்தா நா தாத்தா தான்” என கொஞ்ச “சரியான அரிசி மூட்டை சாப்பாட பார்த்தால் போதும் ஓடிருவா” என அஷ்வந்த் கூற அவனை முறைதான் வீரராகவன். அவன் முறைப்பதை பார்த்த அஸ்வந்த் ஐயையோ இவரு என்ன நம்மள முறைக்கிறாரு இந்த அரிசி மூட்டைக்கு சப்போர்ட் பண்ணி நம்மல திட்டினாலும் திட்டுவாரு என எண்ணிய அஷ்வந்த் அவன் திட்ட முன் அந்த இடத்தை விட்டு நழுவி மித்ராவின் அருகில் வந்த அமர்ந்தான். வட்டமாக அமர்ந்த அனைவரும் நொறுக்கு தீனிகளை சாப்பிட்டு கொண்டும் பேசிக்கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்தனர் இளையவர்கள்.

அவர்கள் நொறுக்கு தீனிகளை உண்டு முடித்து கொஞ்ச நேரத்தில் மதிய உணவு தயாராகி விட தோட்டத்திற்கு வாழை இலைகளை வெட்ட வீரராகவனும் விஜய்யும் சென்றனர்.
மீனாட்சி அகல்யா இருவரும் உணவை எடுத்து வரவும் தோட்டத்திலிருந்து வாழை இலைகளை வெட்டி வரவும் நேரம் சரியாக இருந்தது அவர்கள் வெட்டி வந்த வாழை இலையில் உணவு பதார்த்தங்களை பரிமாறி ஒரு குட்டி விருந்தையே ஏற்பாடு செய்திருந்தனர்

அனைவரும் உணவு உண்டு பின் சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு கூடாரம் அமைப்பதற்கு தேவையானவற்றை கவனிக்க ஆரம்பித்தனர்.
ஏழு மணி அளவில் கூடாரம் கட்டி முடித்துவிட்டு இளையவர்கள் சிக்கன் பாபிகியூ செய்து இரவு உணவிற்கு ஆயத்தம் செய்தனர். அனைவரும் இரவு உணவை கலாட்டாக்களுடன் முடித்து விட்டு தோட்டத்தில் ஒரு இடத்தில் நெருப்பை பற்ற வைத்து அதனை சுற்றி அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டும் பாடிக் கொணாடுளம் ஆடிக் கொண்டும் அந்த இரவை கழித்தனர். அடுத்த நாள் மதியம் வரை அங்கு தங்கி விட்டு மதியத்துக்கு பிறகு தங்களின் வீட்டை நோக்கி பயணிக்க ஆரம்பித்தனர்.

திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து வந்ததிலிருந்து மித்ராவை பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான் ஆதி திடீரென ஒரு யோசனை தோன்ற எழுந்து அவனது தொலைபேசியை எடுத்தவன் சமூக வலைத்தளங்களில் தன் தேவதையின் பெயரை தேட ஆரம்பித்தான். தேடலின் முடிவில் instagram பக்கத்தில் தன் தேவதையின் அக்கவுண்டை தேடி கண்டுபிடித்து இருந்தான் ஆதித்யவர்மன்.

அந்நேரம் அவனுக்கு நேகாவிடம் இருந்து அழைப்பு வர அதை உயிர்ப்பித்தவன் “ஹலோ நேகா எப்படி இருக்க எக்ஸாம் எல்லாம் எப்படி இருந்துச்சு” என கேட்க
“எக்ஸாம் எல்லாம் ஓகே தான் பாஸ் ஆயிருவேன்” எனக் கூற “சரி எப்போ இந்தியா வர” என ஆதி கேட்க
“எக்ஸாம் முடிஞ்சுது இல்ல டூ டேஸ்ல வந்துருவேன் அண்ணா என்ன பண்றாரு” என கேட்க
“அவர் லேப்டாப்ல வேர்க் பண்ணிகிட்டு இருக்காரு நேகா உன் கிட்ட ஒன்னு சொல்லனும்” என ஆதி இழுக்க
“ஏ ஆதி இழுக்குற நீ எப்படி இழுக்க மாட்டியே” என நேகா கேட்க “இன்னைக்கு கோயில்ல ஒரு பொண்ண பார்த்தேன்” என ஆரம்பிக்க ஓ என இழுத்தால் நேகா.
“ஏய் சொல்லுறத கேளுடி” என காலையில் நடந்தவற்றை கூறினான் ஆதி.
அதைக் கேட்டவள் “ஒரு வழியா ஆதிக்கு லவ்வு வந்துடுச்சு இனி ஒரே பன்னு fun தான்” என நேகா ஒரு சிரிக்க ஆதியும் சிரித்தான்

மறுநாள் காலை ஹாஸ்பிடலினுள் நுழைந்த கீர்த்தியை பார்த்த நர்ஸ் டாக்டர் நீங்க வந்தவுடனே ஆதி டாக்டர் உங்கள வந்து பார்க்க சொன்னாரு என கூற திரும்பி காவியாவை பார்த்தவள் “லாஸ்ட் ஒரு தடவை என்ன பார்த்துக்கடி” என கூற காவ்யா சிரித்து விட்டாள்
“ஏய் சும்மா போடி எப்பவும் வாங்குறது தானே” எனக்கூறி அனுப்ப கீர்த்தி ஆதியின் அறை நோக்கி சென்றாள் அவள் உள்ளே வந்த உடன் “கீர்த்தி அந்த ராமலிங்கத்தோட மெடிக்கல் ரிப்போர்ட்ஸ் எல்லாம் பாத்துட்டீங்களா” என கேட்க “ஆமா சார் எல்லாத்தையும் பாத்துட்டேன்” என கீர்த்தி சொல்ல ஆதி அந்தக் கேஸை பற்றி பேசிவிட்டு அவளை அனுப்பிவிட்டான். “எமன் ஏதோ நல்ல மூடுல இருக்காரு போல அதான் ஆதி சார் நம்மல உயிரோடு விட்டுருக்காரு ஒருவேளை இந்த மித்து பண்ண கூத்த மறந்திருப்பாரோ” என்னை யோசித்து கொண்டு இருந்தாள் கீர்த்தி.

சுந்தரேசனின் வீட்டில் தரகர் வந்து வீராவுக்கு ஒரு வரன் வந்து உள்ளதாக கூற அதை பற்றி ஆர்வமாக பெரியவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். “அம்மா இந்த பொண்ணு பேரு ஷாலினி இந்த பொண்ணு பிஏ முடிச்சு இருக்கு” என தரகர் சொல்ல “வீரா பெருசா படிக்கலன்னு பொண்ணு வீட்ல சொல்லிட்டீங்களா” என சுந்தரேசன் கேட்டார்
“அதெல்லாம் சொல்லி ஆச்சி ஐயா” என தரகர் கூற “சரி பொண்ண எப்ப பாக்க போகலாம்னு சொல்லுங்க” என அகல்யா கேட்க “நாளைக்கே போய் பாத்துட்டு வந்துருவோம்” என கூறினார் தெய்வானை.

வெங்கடாசலத்தின் வீட்டில் இரவு அனைவரும் உணவு உண்ணும் போது வீராவுக்கு பெண் பார்க்க செல்வதை பற்றி அகல்யா கூற கீர்த்தியோ திகைத்து விட்டாள் அதன் பின் அவளுக்கு உணவு இறங்க மறுத்தது அவள் எழுந்து செல்ல போக “என்னடி சாப்பிடாம எழுந்துட்ட” என அகல்யா கேட்க “சாப்பிட முடியல அம்மா ரொம்ப தலை வலிக்குது நான் போய் தூங்குறேன்” என கூறி அவள் சென்று விட அவளை பாவமாக பார்த்தாள் மோஹிதா

கீர்த்தி கட்டிலில் படுத்து அழுது கொண்டிருக்க அவள் அருகில் வந்து அமர்ந்த மோஹிதா “அக்கா இப்ப எதுக்காக இவ்வளவு பீல் பண்ற பொண்ணு பாக்க தானே போறாங்க விடு அக்கா பாத்துக்கலாம் பர்ட்ஸ்டு first மாமா கிட்ட சொல்லு சொல்லாம இப்படி உக்காந்து ஃபீல் பண்றதுல ஒன்னும் ஆகாது நீ மொத சொல்லு சொன்னதுக்கு அப்பறம் வாரத பார்த்துப்போம் மாமா ஓகே சொல்றாரோ இல்லையோ என் மாமா கிட்ட சொல்லிடு” என மோஹிதா கூற ஒரு முடிவு எடுத்தவளாய் படுக்கைக்கு சென்றாள் கீர்த்தனா

மறுநாள் காலையில் அனைவரும் அவரவர் வேலையை பார்க்க செல்ல போனவர்களை தடுத்து அனைவரையும் அழைத்து வந்து ஒன்றாக அமர வைத்திருந்தாள் கீர்த்தனா “என்ன கீர்த்தி ஏன் எல்லாரையும் உட்கார வச்சி இருக்க மித்ராவ எழுப்பி ஸ்கூலுக்கு அனுப்பனும் சீக்கிரம் சொல்லு” என மீனாட்சி சொல்ல கீர்த்தி பேச ஆரம்பித்திருந்தாள்
“உங்க எல்லார்கிட்டயும் நான் ஒன்னு சொல்லணும் ப்ளீஸ் யாரும் இடை‌யில பேசாதீங்க” எனக் கூறியவள் வீராவை பார்த்துக் கொண்டே “நான் மாமாவ லவ் பண்றேன் மாமாவுக்கு வேற எந்த பொண்ணையும் பார்த்து டைம் வேஸ்ட் பண்ணாதீங்க நான் மாமாவை யாருக்கும் விட்டுத்தாரதா இல்ல” என கூறவும் அனைவரும் அவளை திகைத்துப் பார்த்தனர்.

வீரா அவளைப் பார்த்து “லூசு மாதிரி பேசாத கீர்த்தி உன்னோட வயசு என்ன என்னோட வயசு என்ன உனக்கும் எனக்கும் பத்து வயசு வித்தியாசம் இருக்கு” என வீரா கூற “பத்து வயசு தானே அது அவ்ளோ பெரிய விஷயம் இல்ல மாமா” என கீர்த்தி கூற “அறிவு கெட்ட தனமா பேசாத கீர்த்தி உனக்கும் எனக்கும் ஏணி வச்சா கூட எட்டாது இது எப்படி சரியா வரும்னு நெனக்கிற” என வீரா கேட்க அவனை தீர்க்கமாக பார்த்தவள் “நான் கல்யாணம்னு ஒன்னு பண்ணிக்கிட்டா மாமாவ தான் பண்ணிப்பேன் இல்ல கல்யாணமே பண்ணிக்க மாமாவையும் கல்யாணம் பண்ண விட மாட்டேன்” என்று கூறி வெளியே சென்று விட்டாள். அவள் சென்றவுடன் அனைவரும் அமைதியாக இருக்க தெய்வானை தான் பேச்சை ஆரம்பித்தார்.

“இப்ப என்ன ஆயிடுச்சுன்னு எல்லாரும் இப்படி உக்காந்து இருக்கீங்க அவ கேட்டதுல என்ன தப்பு இருக்கு அவ மாமாவ தான கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லுறா அதுல என்ன தப்பு இருக்கு அகல்யா உனக்கு இந்த கல்யாணத்துல ஏதாவது பிரச்சனை இருக்கா” என தெய்வானை கேட்க “அதெல்லாம் ஒன்னும் இல்ல அம்மா எனக்கு சம்மதம் தான்” என அகல்யா சொல்ல “தம்பி உங்ளுக்கு ஏதாவது பிரச்சனை இருக்கா” என கேட்க வெங்கடாசலமும் “எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல சொல்லப் போனா எனக்கு இதுல ரொம்ப சந்தோஷம்” என கூற “என்ன அம்மா பேசுறீங்க நீங்க இது எப்படி சரியா வரும்” என வீரா ஆரம்பிக்க “நீ சும்மா இரு எல்லா சரியா வரும் எப்படியும் யாராவது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்க தான போற அது நம்ம கீர்த்தியா இருக்கட்டும்” என கூறி அவன் வாயை அடைத்து இருந்தார் தெய்வானை
அதன் பின் யாரும் வீராவை பேசவே விடவில்லை வீரராகவனுக்கும் கீர்த்தனாவுக்கும் திருமணம் என்று முடிவுக்கே வந்திருந்தனர் அவனது குடும்பத்தினர்
சுந்தரேசன் தெய்வானை இருவரும் வீரா கீர்த்தியின் ஜாதகங்களை பொருத்தம் பார்பதற்கு எடுத்துச் சென்றனர்.

error: Alert: Content selection is disabled!!