சதிராடும் சித்திரமே 18 – 1

அத்தியாயம் – 18

 

“ஹாப்பி பர்த்டே ஆன்ட்டி” என்றவாறே கையில் வைத்திருந்த பரிசுப் பொருளை மீனாட்சியிடம் நீட்டினாள். மீனாட்சியும் புன்னகையுடன் அதை வாங்கிக் கொண்டார்.

 

“பிரிச்சுப் பாருங்க ஆன்ட்டி” என்றதும், அவர் உடனே அதைப் பிரித்துப் பார்த்தார். விலையுயர்ந்த கடிகாரம் அதில் இருந்தது. அந்தக் கடிகாரத்தின் உள்ளே கற்கள் மின்னின. அதைப் பார்த்த திவ்யதர்ஷினிக்கு அது வைரம் என்று தோன்றியது.

 

அந்தக் கைக்கடிகாரம் பல லட்சம் மதிப்பு பெறும் என்று உணர்ந்தாள். அப்போது அவள் அருகில் அமர்ந்திருந்த வத்சன் அவள் காதுக்கருகில் குனிந்து, “வீட்டு மருமகளாக எப்படிச் சோப்பு போடறா பாரு” என முணுமுணுத்தான்.

 

அந்த நிமிடத்தில் தண்ணீரைத் தெளித்து அவளுக்கு மயக்கம் தெளிவித்ததைப் போலிருந்தது. திவ்யதர்ஷினி காலையில் மீனாட்சியின் பிறந்தநாளுக்கு என்று கோவிலுக்குச் சென்று அவர் பெயரில் அர்ச்சனை செய்து பிரசாதம் வாங்கிக் கொண்டு வந்தாள். அவருக்கு வாசிக்கப் பிடிக்கும் என்று சில புத்தகங்களைப் பரிசாகத் தந்தாள்.

 

அவளால் முடிந்தது அவ்வளவே. இப்பொழுது ரதிப்ரியாவின் கையிலிருந்த விலை உயர்ந்த கடிகாரத்தைப் பார்த்ததும், வத்சன் காதில் முணுமுணுக்கவும் அவளுக்கு அவளிருக்கும் இடம் புரிந்தது.

 

மித்ரன் என்னவோ ஒரு வேகத்தில் இயங்கிவிட்டான். அவன் புத்தி கலங்கிப் போயிருக்க வேண்டும். இல்லையென்றால் அவனுக்கு எப்படித் தன்னைப் பிடிக்கும்? அன்று மின்தூக்கியில் மயங்கி விழுந்ததில் இருந்தே இப்படி மாறிவிட்டான்.

 

ஒருவேளை பரிதாபம் கொண்டு இப்படியெல்லாம் நடந்து கொள்கிறானோ என்னவோ. அவன் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளட்டும். அவள் மனம் மயங்கிவிடக் கூடாது.

 

நாளையே வந்து, ‘இல்லையே நான் எந்த அர்த்தத்திலும் பழகவில்லை’ என்று சொன்னால் களவு கொடுத்த மனதை எப்படிக் கையகப்படுத்துவது? உடனே அவனை நோக்கிச் சரியத் தொடங்கிய மனதைத் தன் வைராக்கியம் கொண்டு தன் பக்கம் கட்டி இழுத்து நிறுத்தினாள் திவ்யதர்ஷினி.

 

இனிமேல் இப்படியெல்லாம் மனதை அலைபாய விடக்கூடாது என்று தன் மனதைக் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டாள். நடக்காது என்று தெரிந்திருந்தும் வீணாக ஆசைப்பட்டு மனவலியை ஏன் இழுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

 

எப்படியும் இறுதியில் பணம் பணத்தோடு அல்லவா சேரும். அனைத்திலும் அவளை விட உசத்தியாக இருக்கும் ரதிப்ரியாவை ஏற்றுக் கொள்வார்களா, அல்லது, சற்றும் பொருத்தமில்லாத அவளை ஏற்றுக் கொள்வார்களா?

 

ஏதோ கலகலப்பாக அவளிடம் பேசினால் அவள் தன் நிலையை மறந்து நடந்து கொள்ளக் கூடாது.

சில கணங்கள் அவளும் கிறங்கிப் போய் விட்டாளே. நல்லவேளை உடனே தெளிந்துவிட்டாள்.

 

மித்ரனுக்கும் மயக்கம் தெளிந்ததும் ரதிப்ரியா போன்ற ஒருத்தியை மணந்து வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்வானா, அல்லது, தன்னையா? அவனிடம் கட்டாயம் மறுப்புத் தெரிவிக்க வேண்டும் என முடிவு செய்து கொண்டாள்.

 

ஒருவேளைத் தன்னைப் பழிவாங்க வேண்டுமென்றே இப்படியெல்லாம் சீண்டுகிறானோ எனத் திடீரென்று திவ்யதர்ஷினியின் உள்ளம் தறிகெட்ட குதிரையைப் போல் தாறுமாறாய் ஓட ஆரம்பித்தது. மூச்சு சீர் கெட்டதைப் போலிருந்தது.

 

மீனாட்சியின் கையில் அந்தக் கடிகாரத்தை ரதிப்ரியாவே அணிவித்தாள். கைகள் தாம் பாட்டுக்கு வேலை செய்தாலும் அவளது கவனம் முழுவதும் மித்ரனின் மேலேயே இருந்தது.

 

அவன் பார்வை அவளைத் தீண்டவேயில்லை என்றதும் அவளுக்கு நெஞ்சம் பற்றிக் கொண்டு எரிந்தது. அதுவும் அவன் திவ்யதர்ஷினியை மட்டுமே நோக்கியிருந்தான் என அறிந்ததும் மனம் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது.

 

மித்ரனுக்கு அவளைப் பிடித்திருப்பது அவளின் புத்திக்கு நன்றாக எட்டியது. இந்தப் பிச்சைக்காரியின் முகத்தில் அப்படி என்ன இருக்கிறது என்று இவன் அவளை இப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறான்? இவனும் இவன் இரசனையும்.

 

அழகாக அலங்கரித்து அவன் வசதிக்கும், தகுதிக்கும், அழகுக்கும் ஏற்றவள் அவளிருக்க ஒன்றுக்கும் உதவாதவளை ஏன் இப்படிக் கண்ணிமைக்காமல் பார்க்கின்றான்? இது கண்டிப்பாகப் பிடித்தமாக இருக்காது.

 

இவனுக்குக் கட்டுப்படாமல் அவனிடம் வம்புச் சண்டைக்குப் போய்க் கொண்டிருப்பதால் மித்ரனுக்கு எப்படியாவது திவ்யதர்ஷினியை அடக்கி ஆளவேண்டும், கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற ஆக்ரோஷம் மிகுந்திருக்கிறது. ஆகவே அகந்தையில் இப்படிச் செய்கிறான் என்று எண்ணினாள் ரதிப்ரியா.

 

இவள் இங்கே இருப்பதால் தான் இப்பொழுதெல்லாம் மதியவேளைகளில் வீட்டுக்கு உணவுக்கு வருகிறான் மித்ரன் என விளங்கியது. இதை இப்படியே வளர விடக்கூடாது. திவ்யதர்ஷினியிடம் அவள் தோற்கவே கூடாது.

 

உடனே அதைத் துண்டிக்க வேண்டும் என மனதில் திட்டமிட்டுக் கொண்ட ரதிப்ரியா மீனாட்சியிடமும் மித்ரனிடமும் வலுக்கட்டாயமாக வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

 

ரதிப்ரியாவையும் அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்துமாறு மீனாட்சி சொல்ல, அதற்காகவே காத்துக் கொண்டிருந்தவள் போல் மித்ரனுக்கு அருகிலிருந்த இருக்கையில் சென்றமர்ந்தாள்.

 

அப்போது தான் திவ்யதர்ஷினியைப் பார்ப்பதை போல் பார்த்தவள், “ஏய் நீ எங்க இங்க வந்த?” எனக் கேட்டாள்.

 

அவள் திவ்யதர்ஷினியை பார்த்துக் கேட்டதால் திவ்யதர்ஷினியே வாயைத் திறந்து பதில் சொல்ல வேண்டிய நிலையானது. “ஆன்ட்டிக்கு உதவியாளரா இருக்கேன். வரையறது மட்டும் அவங்க வேலை. மிச்ச வேலையெல்லாம் நானே பார்த்துக்கிறேன்” எனப் பதில் சொன்னவளுக்கு மண்டையில் அடித்ததைப் போல் அவள் நிலை புரிந்தது.

 

“உனக்கு சைகை மொழி தெரியுமா? ரொம்ப நல்லது” என அவளை மெச்சுதலாகப் பேசியவள், “ஆன்ட்டியோட கொஞ்ச நேரம் இருந்தாலே போதும். யாருன்னே தெரியாதவங்களை கூட ஆன்ட்டின்னு சொல்லச் சொல்லிச் சொந்தம் கொண்டாட ஆரம்பிச்சிடுவாங்க. அவ்வளவு நல்லவங்க” என மீனாட்சியையும் விட்டு வைக்கவில்லை.

 

தொடர்ந்து, “ஆன்ட்டி கூட வேலை செய்யறதை விட்டுப் போகவே மனசு வராது. இங்கேயே இருந்தா உனக்கும் நிறைய முன்னேற்றமா இருக்கும்” என ரதிப்ரியா மீனாட்சியைப் புகழ்ந்தாள்.

 

ஆனால் அதில் ‘நீ யாரோ எவரோ… உன் நிலை எப்போதும் தாழ்ந்தே இருக்கிறது’ போன்ற செய்திகள் புதைந்திருந்தன. அது நன்றாகவே திவ்யதர்ஷினிக்குப் புரிந்தது.

 

வத்சன் மீண்டும் திவ்யதர்ஷினியின் காதுக்கருகில் குனிந்து, “எப்படி எல்லாம் சீனைப் போடுறா பாரு? இவ எல்லாம் இந்த வீட்டுக்கு மருமளாகிட்டா என் சித்தி பாவம்” என நக்கலடித்தான்.

 

தொடர்ந்து, “ஆனா இவ பேசறது எதுவுமே சித்திக்குக் கேட்காது. அந்த அறிவு கூட இல்லை அவளுக்கு” என முணுமுணுக்க, அவன் சொன்ன விதத்தில் திவ்யதர்ஷினிக்கு அனைத்தும் மறந்து போக, மெல்லப் பற்கள் தெரியப் புன்னகைத்தாள்.

 

அதைப் பார்த்த ரதிப்ரியா, “பரவாயில்லையே வந்த கொஞ்ச நாள்ல வத்சன் கூடவும் க்ளோஸ் ஆயிட்ட போல. முன்னாடியே வத்சனைத் தெரியுமா? என்கிட்ட மட்டும் தான் வத்சன் மூஞ்சியைத் திருப்பிக்கிறான்” எனக் குறைபட்டுக் கொண்டாள் ரதிப்ரியா.

 

மித்ரனும் அதைக் கவனித்தான். வத்சனுக்கு ஏனோ ரதிப்ரியாவுடன் பேசவே பிடிக்காது. ஆனால் இந்த திவ்யதர்ஷினியுடன் மட்டும் பார்த்த மாத்திரத்தில் கோந்து போல் ஒட்டிக் கொண்டானே.

 

நீயே பதில் சொல்லிக் கொள் என்பதைப் போல் வத்சனைப் பார்த்தாள் திவ்யதர்ஷினி. அவனோ உனக்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும் என்பதைப் போல் அமர்ந்திருந்தான்.

 

“அவரோட சித்திக்கு உதவியா இருக்கிறதால அவருக்கு என் மேலே நல்ல எண்ணம் போல. அவர் தானே எனக்கு இன்டர்வியூ வச்சு வேலைக்கு எடுத்தார்” எனச் சொல்லிவிட்டு தட்டைப் பார்த்துச் சாப்பிட ஆரம்பித்தாள் திவ்யதர்ஷினி.

 

அதற்குமேல் அந்தச் சூழல் அவளுக்கு ரசிக்கவில்லை. உணவு ருசிக்கவுமில்லை. கடனே என்று சாப்பிட்டுவிட்டு விரைவிலேயே அங்கிருந்து எழுந்து தோட்டத்திற்குச் சென்றாள். அவள் அங்கே வேலைக்கு வந்திருக்கிறாள். அவள் தன் நிலைமையை மறக்கக் கூடாது என மனதிற்குள் உருப்போட்டுக் கொண்டாள்.

 

“உங்க லவ்வர்ஸை நான் ஏன் பிரிக்கணும். நீங்க என்ஜாய் பண்ணுங்க” என மித்ரனிடம் சொல்லிவிட்டு, “இரு தர்ஷ், நானும் வர்றேன்” என அவளைப் பின்பற்றி தோட்டத்திற்குச் சென்றான் வத்சன்.

 

அதைக் கேட்ட ரதிப்ரியாவிற்குக் குப்பென உள்ளுக்குள் மலர்ந்தது. ஆனால் மித்ரனின் மனமோ வேப்பங்காயைக் கடித்தது போல் கசந்து வழிந்தது.

 

“நாங்க லவ்வர்ஸ் இல்லைன்னு எத்தனை தடவைச் சொல்லறது” எனப் பட்டென்று அவனிடம் பதில் சொன்ன மித்ரன்,

error: Alert: Content selection is disabled!!