செம்பருத்தி 11 -1

இப்போது என்ன செய்வதென்றே செம்பருத்திக்கு ஒன்றும் புரியவில்லை. கெட் அவுட் என்றால் இப்போதைக்கு அறையை விட்டு கெட் அவுட்டா? இல்லை நிரந்தரமாக வீட்டை விட்டே கெட் அவுட்டா? 

யாரிடம் கேட்கலாம்? இவளை இந்த வேலைக்குச் சேர்த்த மூவர் குழுவிடமா? சுகுமாரன்… ஒரு நாள் பார்த்ததோடு சரி. அவரது தொடர்பு எண் கூட இல்லை. வக்கில்… நேற்றுத்தான் ரயிலில் ஏற்றி என்னை இங்கு அனுப்பி இருக்கிறார். அதற்குள் சொதப்பிவிட்டேன் என்று அவரை அழைத்து சொல்ல அவளுக்கே வெட்கமாக இருந்தது. காவ்யா… அவளை அழைத்து தனது தோல்வியைச் சொல்லி, அவளது வெற்றிச் சிரிப்பைக் கேட்க வேண்டுமா? அது தேவையே இல்லை. 

பெரிய வீடு என்று சொன்னார்களே… அவர்கள் யார்? அவர்களால்தான் இவள் சேர்க்கப்பட்டாளோ? சே தலைவலியே வந்துடும் போலிருக்கே… இந்த இடத்தில் மேனேஜர் மாதிரி யாரும் இல்லையா? அவள் யோசிக்கும்போதே அங்கு ப்ரசன்னமானாள் காளியம்மா.

அவள்  கையில் இரண்டு ஒரு லிட்டர் பாட்டில்களை எடுத்துக் கொண்டு வந்தாள். அதில் வெள்ளையாய் என்னவோ இருக்கிறதே… ஒரு வேளை இதுதான் கள்ளோ? அய்யா காலை சரக்கில்தான்  வாய் கொப்பளிப்பார் என்று காளியம்மா  சொன்னாளே.

“கால சாப்பாடு நீ சரியா சாப்பிடலையே? ரொட்டி பழக்கமில்லையோ”

“அப்படியெல்லாம் இல்லக்கா… இந்த ப்ரெட்டு ரொம்ப கடினமா இருந்தது. முழுங்கவே முடியல. ஊருல நல்ல சாஃப்டா, இனிப்பா இருக்கும்”

“அது ஊர்ல செய்யுற சுவீட் ப்ரெட்டு. இது சேச்சியே வீட்டுல செய்யும். இனிப்பு இருக்காது, உப்பு கம்மியா போட்டிருப்பாங்க. இந்த ஜாமு கூட இங்க வர்ற வெளிநாட்டு பழத்தை அரைச்சு இவர்களே செய்வாங்க”

“அதுதான் புளிப்பா இருந்ததா?”

“ஆமா… ஜாம் பழத்தை அரைச்சு செய்றதால நாலு நாள்தான் தாங்கும். ப்ரெட்டு ரெண்டு நாள் வந்தா அதிகம். இதாவது பரவால்ல வெளிநாட்டு ப்ரெட்டு ஒன்னு வரும் பாரு… அப்படி மொத்தமா கடினமா இருக்கும். நடுவில் சிக்கன் இல தல எல்லாம் போட்டு அய்யாவுக்கு செய்வாங்க. 

சில சமயம் வெளிநாட்டிலேருந்து ஐயாவைப் பாக்க யாராவது வந்தா பெரியய்யாவோட அஞ்சு நட்சத்திர ஹோட்டல்ல இருந்து சாப்பாடெல்லாம் வரும். எங்களுக்கும் ஒரு டிரே பூரா எடுத்து சமையல் ரூமில் வச்சுடுவாங்க. யாரு வேணும்னாலும் எடுத்துக்கலாம். ஓவியாவுக்கு அதெல்லாம் ரொம்பப் பிடிக்கும். ஒரு சான்டவிச் சாப்பிட்டா கூட பழைய சோறு சாப்பிட்ட மாதிரி வயிறு கம்முன்னு இருக்கும்” காளியம்மாவின் பிரட் அனுபவங்கள் சுவாரசியமாக இருந்தது. 

“உங்களுக்கும் பிடிக்குமாக்கா?”

“நான் இதெல்லாம் சாப்பிடுறதில்லப்பா… பழைய சோறும் பச்சை மிளகாயும்தான். மோர் எடுத்துட்டு வந்திருக்கேன். ஒரு வாய் குடி”

அவளிடம் ஒரு பாட்டிலைத் தந்தாள். 

“மோராக்கா இது? நான் கூட நீங்க கள்ளு எடுத்துட்டு வந்திருக்கிங்கன்னு நினைச்சேன்” சொல்லிவிட்டுச் சிரித்தாள். 

“கள்ளு கிள்ளு இந்த வீட்டுக்குள்ள வந்தது, பெரிய வீட்டில் என் கழுத்தைப் பிடிச்சு வெளிய தள்ளிடுவாங்க. ஆமா… நீ ஐயாவைப் பார்க்கல?” 

“பார்த்தேன்கா… கெட் அவுட்டுன்னு சொல்லிட்டார். இப்ப என்ன செய்றதுன்னே தெரியல” செம்பருத்தியின் முகம் முழுவதும் கவலையின் சாயல். 

“கெட் அவுட் தானே? உடனே பெட்டி படுக்கையெல்லாம் கட்டிக்கிட்டுக் கிளம்பத் தோணியிருக்குமே? இங்கிருக்குற எல்லாரும் அவருக்கு கெட்டவுட்டுதான். நிகிலாவத் தவிர. என்னையெல்லாம் அவரு சொன்ன ஒரு கெட்டவுட்டுக்கு பத்தடி போயிருந்தா கூட இந்நேரம் திருகோண மலைல நின்னிருப்பேன்”

பாட்டிலைக் குலுக்கிவிட்டு மூடியைத் திறந்து ஒரு வாய் முழுவதும் நீர் மோரைக் கவிழ்த்த காளியம்மாவைப் பார்த்து தானும் அவ்வாறே செய்தாள். சில்லென்று, கறிவேப்பிலை, தாளித்த பெருங்காயம், அரைத்த இஞ்சியுடன் மணத்த அந்த நீர்மோர் அப்படியே தொண்டையில் இறங்கி வயிற்றின் அமிலத்தன்மையைக் குறைத்தது. 

“நிகிலா எப்படிக்கா” 

“எப்படின்னா… நீ இப்படி என் கூட நின்னு பேசுறியே.. நிகிலாவா இருந்தா இது தராதரம் இல்லைன்னு சொல்லுவா… நேத்து என்னோட பொண்ணு கூடத் தூங்கினியே நிகிலா ஒரு பெரிய ஆர்ப்பாட்டம் பண்ணி இந்த மாடிலேயே பெரிய ரூமா வாங்கிருப்பா… “

“நிறைய படிச்சு இருக்காங்களோ? நிறைய தகுதி இருக்கும்கா”

அவளைப் பார்த்து சிரித்தவள் “நிறைய படிச்ச தகுதி இருந்தா எதுக்கு இங்க வந்து அவ பார்த்த வேலை எல்லாம் செய்யணும்?” 

அதே வேலைக்கு வந்தவள் தானே அவளும். வருத்தத்தில் முகம் சிறுத்துப் போனது செம்பருத்திக்கு. 

“நானும் கூட டிகிரிதான் படிச்சிருக்கேன்கா”

அவளைப் புரியாமல் பார்த்த காளியம்மா சுருங்கிப் போன அவளது முகத்தைப் பார்த்து “பாப்பா… நீ உன்னை நினைச்சுகிட்டியா? நான் சொன்னது அவ பாத்த வேற வேலை. உனக்கு சுருக்குன்னு பட்டா மன்னிச்சுக்கோ… எனக்கு இப்படித்தான் சில சமயம் பேசவே தெரியாம உளறிடுவேன்”

“பரவால்லக்கா” என்று சொன்னாலும் அப்போதே தனது தகுதியை அதிகரிக்க வேண்டும் என்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டாள். 

“நிகிலா செம்ம அழகு. ஒரு பெட்டி முழுசும் பவுடரும் லிப்ஸ்டிக்கும்தான். வேலைன்னு பார்த்தா இங்க கணக்கு வழக்கு பாக்குறது, அய்யாவோட பேசி என்னவோ ப்ராஜெக்ட் பண்றது இப்படித்தான். நிகிலாவைப் பாக்கணுமே! மூணு வேளையும் தினுசு தினுசா ட்ரெஸ் பண்ணிக்கிட்டு, அய்யாவோட உக்காந்து பேசிட்டு இருப்பா… பாலா செய்யுற வேலை எல்லாம் வலுக்கட்டாயமா பிடிங்கி செய்வா… ஒரு நாள் நாங்க எதிர்பார்த்த மாதிரி..”

error: Alert: Content selection is disabled!!