செம்பருத்தி 22 – 1

ரபரப்பான காலை வேளையில் அந்தப் பள்ளியின் ஒவ்வொரு வகுப்பறையிலும் ஆசிரியர் பாடம் நடத்தும் குரல் மட்டுமே ஒலித்தது. முதல் பீரியட் என்பதால் மாணவர்களின் முழுக்கவனமும் பாடத்திலேயே இருந்தது. 

“ஸ்போர்ட்ஸ் மீட்டுக்கு தயார் பண்ணிட்டிங்களா? பார்ட்டிசிபேட் பண்ணுற ஸ்டுடென்ட்ஸ் எல்லாருக்கும் கடைசி ரெண்டு பீரியட்ஸ் பிராக்டிஸ் பண்ணனும். கிளாஸ் டீச்சர்ஸ் கு ஈமெயில் பண்ணிடுங்க. மீட் முடிஞ்சதும் மிஸ் பண்ண பாடமெல்லாம் இவங்களுக்கு ஸ்பெஷல் க்ளாஸ் வச்சு கவர் பண்ணிடுங்க” மங்கையர்கரசி பேசி முடிப்பதற்காகவே காத்துக்கொண்டிருந்த ப்யூன் அவரைப் பார்க்கஒரு பெண் வெளியில் காத்துக் கொண்டிருப்பதாகச் சொன்னான். 

“வரச்சொல்லு”

உள்ளே நுழைந்த அந்தப் பெண்ணின் கட்டுக்கோப்பான உடல் உடற்பயிற்சியை தவறாமல் செய்து வருபவள் என்று சொன்னது. ஒரு அழகான வெளுப்பு. 

மங்கையர்கரசியின்  கம்பீரத் தோற்றத்தைக் கண்டவுடன் மரியாதை தோன்றியது “வணக்கம் மேம் நான் ராதிகா, அப்பாயிண்ட்மெண்ட் கேட்டிருந்தேனே..” 

“எஸ், சேவாசங்கத்திலிருந்து நீங்க சந்திக்க வருவிங்கன்னு சொல்லிருந்தாங்க. சொல்லுங்க…”

“எங்களோட ஆர்கனைசேஷன் பத்தி உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி கொடுத்து வாழ்க்கைல நல்ல நிலைக்கு கொண்டு வந்திருக்கோம்”

“தெரியும். உங்களுக்கு சப்போர்ட் பண்ணும் விதமாத்தான் உங்க இல்லத்தில் இருந்து எங்க பள்ளியில் படிக்கும் குழந்தைகள் எல்லாருக்கும் இலவசப் படிப்பு, உணவு, சீருடைன்னு தர்றோம்”

“தெரியும் மேம். அது தவிர இன்னொரு உதவியும் கேட்டுதான் நான் இங்க வந்திருக்கேன்”

“சொல்லுங்க”

“நான் மீடியால வொர்க் செஞ்சிருக்கேன். இப்பத்தான் இந்த வாலண்டியரிங் ஜாப் எடுத்திருக்கேன். மீடியால என்னோட ப்ராஜெக்ட் விஷயமா இந்தியா முழுசும் சுத்தினப்ப  குழந்தைகள் எல்லாரும் பள்ளிக்கு வர எவ்வளவு கஷ்டப்படுறாங்கன்னு பார்த்தேன். அவர்களில் சிலருக்கு உதவி செய்ய லிஸ்ட் போட்டிருக்கேன். உங்களோட சப்போர்ட்டும் கிடைச்சா அவங்க வாழ்க்கைக்கு ஒளி ஏத்தின மாதிரி இருக்கும்”

“ஏற்கனவே நாங்க எங்க ட்ரஸ்ட் மூலம் செஞ்சுட்டுதான் வர்றோம் ராதிகா. அவங்களை காண்டாக்ட் பண்ண சொல்லுங்களேன். அவங்களை அப்ளை பண்ண சொல்லுங்க இங்க ஸ்கூலில் சேர்த்துக்குறேன் ”

“உங்களைத் தேடி வர்றவங்களுக்குத் தானே இவ்வளவு நாள் உதவி செஞ்சிருக்கிங்க. இவங்கெல்லாம் அந்த அளவுக்கு வரத் தெம்பில்லாதவங்க மேம்”

“புரியலையே… “

“இதில் ஹிமாலயாஸ்லிருந்து கன்யாகுமரி வரைல இருக்குற குழந்தைகளோட லிஸ்ட் இருக்கு. தமிழ்நாட்டில் அகரம்ல கூட பல குழந்தைகளுக்கு சப்போர்ட் பண்ணிட்டு இருக்காங்க. ஆனால் சவுத் இந்தியால படிப்புக்கு கொடுக்குற முக்கியத்துவமும் சப்போர்ட்டும் கிடைக்காத பல பகுதிகள் இந்தியாவில் இருக்கு. இந்த பையனைப் பாருங்க மேம்”

அழகாக தயாரிக்கப் பட்டிருந்த ஆல்பம் ஒன்றைக் காட்டினாள். 

“ஹிமாலயாஸ்ல இருக்குற  உறைஞ்ச  நதியைத் தாண்டித்தான் இவனோட ஸ்கூல். வீட்டிலிருந்து ஸ்கூலுக்குப் போகவே  நாலு நாள் ஆகும். இவனோட அப்பாவும் இவனும்  கையில் டென்ட், குட்டி அடுப்பு, குட்டி சாக்கில் மாவு எல்லாம் எடுத்துட்டு பள்ளிக்குக் கிளம்புறாங்க. 

வழியில் எங்கயாவது தங்கி ரொட்டி சுட்டு, பனியை உருக்கிக் குடிச்சுட்டு இவங்களோட பயணம் தொடருது. வழியில் காட்டு விலங்கு, பனிப் பொழிவு, காத்து, பனிச்சரிவு, செங்குத்தான மலைத்தொடர்ன்னு இவங்க சந்திக்கிற இன்னல்கள் பத்தி ஒரு படமே எடுக்கலாம். 

ஆபத்தான இந்த ரூட்டில் குழந்தைகளைத் தனியா அனுப்ப முடியாததால் அப்பா நாலு நாள் பயணம் செஞ்சு ஸ்கூலுக்குப் பக்கத்தில் இருக்கும் சொந்தக்காரங்க வீட்டில்  விட்டுட்டு மறுபடியும் நாலு நாள் பயணம் செஞ்சு வீட்டுக்கு வருவார். வருஷத்துக்கு நாலைஞ்சு தரம் இந்தப் பயணம் நடக்குது”

கேட்கவே பயமாக இருந்தது மங்கையர்கரசிக்கு. 

“கேட்கவே பயம்மா இருக்கு. இவ்வளவு ஆபத்து இருந்தாலும் படிச்சே ஆகணும்னு நினைக்கிற அந்தப் பெற்றோர்களோட உறுதி என்னை பிரமிக்க வைக்குது”

“அதுதான் மேடம். அதே தான். எந்த ஒரு வேலையும் கஷ்டமா இருக்கும்போது பாதில கைவிட ஒரு நல்ல சாக்கு மனசுக்குக் கிடைச்சுடுதே. இந்தத் தகப்பன்கள் கூட இயலாமையால் படிப்பைக் கை விட்டவர்தான்.  இருபத்தி வருஷத்துக்கு முன்னாடி இவரைப் பள்ளியில் விட்டுட்டு வர்ற வழியில் இவங்க அப்பாவை ஓநாய்கள் வேட்டை ஆடிடுச்சு. அதுக்கப்பறம் இவருக்கும் இவரோட தோழர்களுக்கும் மொத்தமா படிப்பு நின்னுடுச்சு”

“இருந்தும் தன்  பிள்ளையாவது  படிக்கணும்னு இப்ப இவர் பாடு படுறார். இருபத்தி அஞ்சு வருடமா இவங்களோட நிலை இன்னமும் அப்படியே தான் இருக்குது. இது வெட்கப்படவேண்டிய உண்மை. இவங்களுக்கு எந்த மாதிரி உதவி எதிர்பார்க்குற”

“இன்னதுதான் வேணும்னு ஒரு பொதுவான முடிவுக்கு வராம கேஸ் பை கேஸ் பரிசீலிச்சு முடிவெடுக்கணும்”

“அது பெரிய வேலையாச்சேம்மா… அந்த அளவுக்கு இங்க யாருக்கும் நேரமில்லை”

“அதுக்காக அவங்களை அப்படியே தவிக்க விடமுடியாதே”

“நீ சொல்றது சரிதான். ஏற்கனவே ஒரு லிஸ்ட் வச்சிருக்கேன்னு சொன்னியே. அதைத் தா… நான் முதலில் பார்க்குறேன். எனக்கு திருப்தியா இருந்தால் ரெகமெண்ட் பண்ணி  எங்க ட்ரஸ்ட்ல ஒரு ஆளை உனக்கு சப்போர்ட் பண்ண அசைன் பண்ணுறோம். ஆனால் வெரிஃபை  பண்ணாம எந்த உதவியும் செய்ய முடியாதும்மா”

“ரொம்ப நன்றி மேம். நான் டாகுமெண்டரி எடுத்திருக்கேன். அதைப் பார்த்தால் உங்களுக்கு இன்னமும் தெளிவு கிடைக்கும்”

“கண்டிப்பா பாக்குறேன். ட்ரைவ்ல போட்டிருந்தா லிங்க் அனுப்பி வைம்மா”

“இப்பயே ஷேர் பண்ணிடுறேன் மேம். உங்க ஈமெயில் அட்ரஸ் சொல்லுங்க”

அவர் சொல்லிக் கொண்டிருந்த பொழுதே அலைப்பேசி அழைத்தது. அவினாஷ் வேலை நேரத்தில் அனாவசியமாக அழைக்க மாட்டானே. ஏதாவது முக்கியமான விஷயமாகத்தான் இருக்கும். உடனே எடுத்தார். 

“இந்த முறையும் அபிராமைக் காப்பாத்திட்டோம்மா”

ஒரே சமயத்தில் தீயை மூட்டி அது பரவிய கணமே தண்ணீரை ஊற்றி அணைத்தது போன்ற உணர்வு. ஒரு சில வினாடிகள் என்றாலும் அந்தத் தீயின் காந்தல் இருக்குமே. 

“இந்த தடவை என்னாச்சு”

“ட்ரக்ஸ்னு சொல்லுறாங்க”

“ஓவர் டோஸா… “  போதை மருந்து  அளவுக்கு அதிகமாக எடுக்கும்போது  மூச்சு விட முடியாது ஆக்சிஜனுக்காகத் தவிப்பவர்கள்  தொண்டையைக் கிழித்து… அபிராம் உன்னை எத்தனை தடவைடா காப்பாத்துறது. அச்சமாக இருந்தது மங்கையற்கரசிக்கு. 

“அந்த அளவுக்குப் போகல… நிலை தெரியாம ஸ்விம்மிங் பூலில் விழுந்துட்டான். காப்பாத்தியாச்சு”

error: Alert: Content selection is disabled!!