“உங்க வனக்குடிலுக்கு இந்த சிறுதானிய உணவெல்லாம் கொண்டு வரப் போறீங்களா, நைஸ் சார். செய்யுங்க” என்றாள் நித்திலா
“ஆமாம் மிஸ்.நித்திலா, ஒரு இயற்கையான சூழ்நிலையில் முடிந்தவரை உடல் ஆரோக்கியம் பேணும் மாதிரி, சுத்தமான காற்று, குடிநீர், உடற்பயிற்சி இப்டி எல்லாம் பார்த்து பார்த்து தான் செய்திருக்கோம். ஏன் உணவும் ஆரோக்கியம் சார்ந்த விழிப்புணர்வோடு இருக்கக் கூடாதுன்னு ஒரு ஐடியா வந்தது. அப்போ தான் சலீம் உங்க கடை பற்றி சொன்னான். எனக்கு ஒரு மெனு லிஸ்ட் குறைந்தபட்சம் இருபது வகை உணவுகள் அண்ட் அதோட செய்முறை வேணும். பட் உங்க உதவியை நான் இலவசமாக ஏற்றுக் கொள்ள விரும்பல. இப் யூ டோன்ட் மைன்ட் உங்களுக்கு இதுக்கு ஒரு அமௌன்ட் கொடுக்க விரும்பறேன்” கடைசி வரிகளை மிகத் தயக்கத்துடன் சொன்னான் ஆதேஷ்.
“பணம் எதிர்பார்த்து நான் செய்யல சார், சலீமை எனக்கு இரண்டு வருஷமா தெரியும். பணம் மட்டும் பிரதானமான இல்லாம, உங்க வனக்குடில்ல நீங்க பண்ற நல்ல விஷயங்கள் பற்றியும் சொல்லியிருக்கான். ஸோ என்னால் முடிந்த சிறு உதவி அவ்ளோதான். அப்படி பணம் தான் தருவேன்னு நீங்க உறுதியாக இருந்தால், நான் குடியிருக்கும் தெருவில் சின்ன நூலகம் இருக்கு. சிவில் சர்வீஸ் எக்ஸாம் எழுதும் மாணவர்கள் அங்க புத்தகம் இல்லாமல் சிரமப்படுறாங்க. கொஞ்சம் புக்ஸ் வேண்டுமானால் டோனட் பண்ணுங்க” மிக தீர்க்கமாகவும் அமைதியாகவும் இருந்தது அவளது குரலும் முகமும்.
வியந்து பார்த்தான் அவளை, “யூ ஆர் எ வொண்டர்ஃபுல் பெர்சன், கண்டிப்பா செய்றேன்” என்றவனிடம், இரண்டு நாட்களில் ஆதேஷ் கேட்டதை சலீமிடம் கொடுத்து விடுவதாக சொன்னாள்.
பிறகு ஒரு தலையசைப்போடு விடைபெற்றான் ஆதேஷ்.
நித்திலா தன்னுடைய பொருட்களை எல்லாம் ஒரு இரண்டு சக்கர வாகனத்தில் அடுக்கி தன் வீட்டை நோக்கி பயணித்தாள்.
சலீமை வனக்குடிலில் இறக்கி விட்டு வீடு திரும்பிய ஆதேஷ் மாமாவைச் சந்திக்கச் சென்றான்.
“ஆதிம்மா, ஏதாவது குடிக்கிறியா” அறைக்குள் நுழைந்தவனிடம் அத்தை வசுந்தரா கேட்க
“அத்தை ஒரு அருமையான வெள்ளைச் சோள காரக் கொழுக்கட்டை சாப்பிட்டேன் தெரியுமா” என்றவன் மாமா அத்தை இருவரிடமும் நித்திலா பற்றியும் அவளது கடை பற்றியும் அடுத்த அரை மணி நேரத்திற்குப் பேசிக் கொண்டிருந்தான்
“ஹேய் அத்தான், இங்க தான் இருக்கீங்களா, என்னை ஷாப்பிங் கூட்டிட்டு போங்களேன்” உற்சாகமாக உள்ளே நுழைந்தாள் நயனா. அவளைத் தொடர்ந்து லிங்கா, பிருத்வி மற்றும் ஜான்வியும் வந்தார்கள்.
“எப்போ பார் எங்காவது போக வேண்டியது, கையில் நாலு பையைத் தூக்கிட்டு வீட்டு வர வேண்டியது” முறைத்தான் லிங்கா
“உங்களுக்கு என்ன பிரச்சனை? நான் உங்கள்ட கேட்டனா? சம்மன் இல்லாமல் ஏன் ஆஜர் ஆகறீங்க. அடுத்தவங்க விஷயத்தில் தேவையில்லாமல் மூக்கை நுழைச்சா, கட் பண்ண நோஸ் தான் கிப்ட்டா கிடைக்கும். ஞாபகம் இருக்கட்டும் ” சிலிர்த்துக் கொண்டு பாய்ந்தாள் நயனா
“ஏன் கேட்டால் என்ன தப்பு, அப்பா என்ன வாய் பேசற. உன்னை கட்டுறவன் பாடு திண்டாட்டம் தான்” லிங்காவும் மல்லுக்கு நின்றான்
“நீங்க கலவைப் பட தேவையில்லை, அது என் பாடு என் வீட்டுக்காரர் பாடு, உங்களை கட்ட போற பொண்ணு எந்த ஜென்மத்தில் என்ன பாவம் செய்தாளோ. டாமினேட்டிங் டெவில்” அத்தனை கோபம் கிளர்ந்தது நாயனாவில்
“ஷ்ஷ்…இரண்டு பேரும் வாயை மூடப் போறீங்களா இல்லையா. டேய் லிங்கா, நயன் என்ட தானே கேட்டாள். உனக்கு என்ன பிரச்சனை. ஆக்ட் டு யுவர் ஏஜ் (உங்கள் வயதுக்கு ஏற்றவாறு நடந்து கொள்ளுங்கள்) என கடிந்து கொண்டான் ஆதேஷ்.
முறைத்து நின்ற சண்டைக்கோழிகள் தலையைத் திருப்பிக் கொண்டு அமைதியாகியது.
“விடு நயனாக்கா, நான் கூட்டிட்டு போறேன். இப்போ என் கேள்விக்கு பதில் சொல்லு. காந்தி ஏன் ரூபாய் நோட்டில் சிரிச்சுட்டே இருக்கார்?” பிருத்வி கேட்க
“தலையைச் சொறிந்த நயனா, “ம்ம்ம்…அவரு மகாத்மா டா சிரித்தால் தான் அழகு” என்றாள்
“இல்ல… அந்த பழுப்பு நிற பொருளை கொஞ்சம் யூஸ் பண்ணுக்கா” என இளையவன் சொல்ல
“எது மூளையா, க்கும் இருந்தால் தானே” மெல்லிய குரலில் நொடித்தான் லிங்கா
“வேணாம்…அத்தான் பேசாம இருக்கச் சொல்லுங்க உங்க உடன்பிறப்பை” தன் பிரியமான அத்தான் ஆதேஷிடம் நயனா முறையிட
தலையில் கை வைத்துக் கொண்ட அதேஷைப் பார்த்த அனைவரும் சிரித்தனர்
“சொல்லித் தொலைடா இடியட், ஏன் சிரிக்கிறார் காந்தி தாத்தா” ஆர்வமாக ஜான்வி கேட்க
“அவர் அழுதா ரூபாய் நோட்டு நனைஞ்சுடாது?” மிக அமர்த்தலான பார்வையுடன் நக்கலாக கேட்டான் பிருத்வி.
தலை அடித்துக் கொண்ட ஆதேஷ், “இவன் வாயைக் கட்ட இந்த உலகத்தில் யாருமே இல்லையா. ஜோக்ன்ற பேரில் கழுத்தை அறுக்கறானே…..தேவுடா” என்றான்
“உன்னை கொல்லாமல் விடமாட்டேன் டா” என பிருத்வியை விரட்டிக் கொண்டு சென்றாள் ஜான்வி.
இரவு உணவிற்குப் பிறகு தனது படுக்கைக்கு வந்து கால் நீட்டி சாய்ந்து அமர்ந்து கொண்ட ஆதேஷ் அருகிலிருந்த கல்கியின் பார்த்திபன் கனவு புத்தகத்தை எடுத்து முன் தினமும் விட்ட பக்கத்திலிருந்து படிக்கலானான்.
பார்த்திபனுக்கும் அவனது ராணிக்கும் இடையிலான காதல், கண்ணியத்துடனும் உணர்ச்சி வலிமையுடனும் படிப்போரை உருக்கும் ஒரு காவியமாக கல்கியால் சித்தரிக்கப்பட்டிருந்தது.
கல்கியின் கதை சொல்லும் பாணி, காதல் தருணங்களை நாடகத்தன்மையுடன் காட்டாமல், அர்த்தமுள்ளதாக உணர வைத்தது.
புத்தகத்தில் லயித்தருந்தவன் நினைவுகள் நித்திலாவை நோக்கி பயணித்து மெல்ல இவனிடம் திரும்பி வந்தது.
‘நல்ல பொண்ணு, வெரி போல்ட். வெரி ஸ்வீட், சார்மிங்…” அவளை அளவிட்ட நினைவலைகள் அப்படியே நின்றது
“அழகி தான்…ம்ப்ஸ்…தப்புடா சேரா, அவளை நீ அழகின்னு நினைக்கிறது தெரிஞ்சாலே அங்க கொடுத்த அறை அடுத்து உனக்குத் தான் தம்பி” என வாய் விட்டு சொல்லி சிரித்துக் கொண்டவன்
“கொடுத்தால் வாங்கிக்கிறேன் என்ன இப்போ குறைஞ்சிடும்” தன் நாவை இடது பக்க கன்னத்தில் முட்டி சிரித்துக் கொண்டான்.
அடுத்த இரண்டு நாட்களை நெட்டித் தள்ளிக் கொண்டிருந்த ஆதேஷ், இரண்டாம் நாள் முன் மாலையில் சலீமை இன்டர்காமில் அழைத்தான்
“சலீம், கிளம்பு வெளியில் போகணும்”
“எங்க சார், உங்களுக்கு வெளியில் அப்பாயிண்ட்மென்ட் எதுவும் இல்லையே” சலீம் இழுக்க
“டேய்..உன் ஞாபக மறதியும் நீயும், நித்திலா வரச் சொன்னாங்க தானே, போலாம் வா” என்றான்
“சார்..எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. அக்கா என்னை வந்து வாங்கிக்க சொன்னாங்க. நான் போன் பண்ணி கேட்டுட்டு ரெடின்னா அப்புறம் போய் வாங்கிட்டு வந்துடறேன்” சலீம் இவனது எண்ணம் புரியாமல் முட்டுக்கட்டை போட்டான்
சிறு யோசனைக்குப் பிறகு, “டேய் எனக்கு சில டவுட்ஸ் கேட்கணும், ஸோ நானும் வரேன். கார் தானே சுமக்குது உனக்கு என்ன பிரச்சனை?”
“என்ன டவுட் என்ட்ட சொல்லுங்க பாஸ், நான் கேட்டுட்டு வரேன்”
“ம்ம்ம்…கம்பு தோசை பண்ணனும்னா, கம்பின் நீளம் எத்தனை சென்டிமீட்டர் போடணும்ன்னு கேட்டுட்டு வரணும்” ஆதேஷ் இடக்காக சொல்ல
“ஹாஹாஹா, குத்து மதிப்பா ஒரு அளவில் வெட்டி போட வேண்டியது தானே” சலீம் சிரித்தான்
“உன்னை டிஸ்மிஸ் பண்றேன் டா இடியட், அந்த கேசவன் கூட போய் நீயும் தண்ணித் தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டின்னு பாடிட்டு ரோட்டில் உருளு” ஆதேஷ் கடிக்க
“அப்டின்றீங்க, சரி வாங்க சேர்ந்து போய் உருளலாம்” என்றவன் அழைப்பைத் துண்டித்த பாதாவது நிமிடத்தில் தன் பாஸின் கார் முன்னே நின்றான்.
“சலீம்…..நித்திலா தரப்போற மெனுவை நம்ம ரெஸ்டாரண்டுக்குக் கொண்டு வாரத்துக்குப் பதில்…..ம்ம்ம் நித்திலாவையே நம்ம வனக்குடிலுக்கு கொண்டு வந்துட்டா என்ன?” ஒரு கை காரின் ஸ்டீயரிங் சக்கரத்தில் இருக்க, மறு கை கொண்டு தாடையைத் தடவியவாறு கேட்டான் ஆதேஷ்.
“ஆஆஆ….” என வாய் பிளந்தான் சலீம்
“டேய்…என்ன கோல்கேட் விளம்பரமா செய்யறோம், பல்லு எல்லாம் காட்டிட்டு இருக்க. மூடிக்கோ டா இடியட்” இவன் சொல்ல
“இது நம்ம லிஸ்ட்லையே இல்லாத ஆயிட்டமா இருக்கே தல, எப்டி இப்டி…..இரண்டு நாளா ரூமுக்குள்ள குட்டி போட்ட பூனை இல்லல்ல புலி மாதிரி சுத்திட்டு இருந்தீங்களே, இந்த மாஸ்டர் பிளான் போடத் தானா “
“ம்ப்ஸ்..கேட்டதுக்கு பதில் சொல்லுடா, பூனை சிங்கமுன்னு நேஷனல் ஜியோகிராபி பேசிட்டு இருக்கான் இடியட்” ஆதேஷ் சலீமின் தோளில் தட்ட
“சார்..நல்ல ஐடியா தான். பட் அக்கா ஒத்துக்குவாங்களா தெரியலையே” சலீம் யோசனையாக
“அதுக்கு தான் நீ இருக்கியே, உங்க அக்கா நம்ம வனக்குடிலிக்கு வர ஒத்துக்கும் வரை அவங்க கடை முன்னாடி உண்ணாவிரதம் இருப்பேன்ன்னு சொல்லிடமாட்ட” இவன் புன்சிரிப்போடு சொல்ல
“எதே…உண்ணாவிரதமா…எந்த கடையில் விற்கும் பாஸ்ட் புட் தல அது” சலீம் திருப்ப
“ஹாஹாஹா…” சிரித்துக் கொண்டான் ஆதேஷ்.
கார் நித்திலாவின் கடையின் முன்னே சற்று தள்ளி வந்து நின்றது. இறங்கி அவளை நோக்கி நடந்து வந்த ஆதேஷின் கண்களில் அத்தனை ஆர்வம் கொட்டிக்கிடந்தது.
ஒரு அழகிய வெள்ளை நிற சுடிதாரில் கருப்புப் பூக்கள் அள்ளித் தெளித்திருக்க, துப்பட்டாவை தோள்களின் இருபுறமும் பின் செய்திருந்தவளின் தோற்றம் நேர்த்தியும் அழகும் நிறைந்து இருந்தது.
நித்திலாவிடம் எப்போதும் ஒரு நிமிர்வு இருக்கும், இது என் வேலை நான் சரியாகச் செய்கிறேன் அது தெருவோரமாக இருந்தாலும் என்ன? பெரிய தொழில் அதிபர்களின் வாழ்க்கையைப் புரட்டிப் பார்த்தால் அடிமட்ட நிலையில் இருந்து தான் வந்தவர்களாக இருப்பார்கள். அப்படியான பெரு வெற்றிக்கு இது என் சிறு முயற்சி என்ற கொள்கை உடையவள்.
தரமான உணவை நியாயமான விலையில் கொடுக்க வேண்டும், தாங்கள் உண்ணும் உணவின் சிறப்பறிந்து மக்கள் உண்ண வேண்டும். இன்றைய பல்வேறு நோய்களுக்கு நம் உணவுப் பழக்கம் தான் முதன்மைக் காரணமாக இருக்கிறது என்பதை எல்லோரும் உணர வேண்டும் என்பது தான் நித்திலா படிக்கும் காலத்திலிருந்தே அவள் மனதில் இருந்தது. ஒரு உணவகமாக ஆரம்பிக்க வசதி வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் இந்த தள்ளு வண்டியில் ஆரம்பிப்பது என்ற முடிவுக்கு வந்தாள். கடந்த மூன்று வருடங்களாக வெற்றிகரமாக நடத்திக் கொண்டும் இருக்கிறாள். அவளின் ‘தெருவோரம் தேடி உண்’ பலரது கவனத்தை ஈர்த்து தேடி வர வைத்திருக்கிறது என்றால் மிகையில்லை.
சுற்றுப்புறம் மறந்தவள் போல் தனது வேலையில் மும்முரமாக இருந்தாள் நித்திலா.
சற்று கூடுதலான சிவந்த நிறத்தில், ஐந்தடி ஆறங்குல உயரத்தில், விதவையின் உச்சம் (விடோஸ் பீக்) என்று சொல்லக் கூடிய நெற்றி மையத்தின் மயிர்க்கோட்டில் அமைந்துள்ள V-வடிவப் புள்ளி அவளுக்கு இருந்தது. அந்த வடிவமைப்பு அவளின் சுருள் முடிக்கு அத்தனை அழகு சேர்த்தது
நீண்ட கருமையான புருவமும், கூர்மூக்கும் அவளது தீர்க்கம் நிறைந்த முகத்தில் தீட்டிய ஓவியம் போல் இருந்தது.
தன் பேண்ட் பாக்கெட்டில் கைகளை விட்டுக் கொண்டு அவளையே அளவிடும் படி நடந்து முன்னேறியவன் மனதில் பல வண்ண மலர்கள் பூத்து மணம் பரப்பியது.
சேர மன்னன் தன் ராணியைக் கவர்ந்து செல்லும் யுக்திகளை நடைமுறைப்படுத்தும் முதற்கட்ட வேலைகளுக்கான முதல் படியில் கால் அடிகள் எடுத்து வைத்தான்.