மந்தாரைச் செடி ஓரத்தில் – 7

மந்தாரை 7

 

பிம்பிரி:

 

சந்தரின் ஏற்பாடு போல இருவரும் பிம்பிரிக்கு வந்து சேர, நீண்ட மாதங்களுக்குப் பிறகு தனது மாமன் மகளையும் கூடப்பிறந்தவனையும் பார்த்த கயலுக்கு அழுகை வந்தது.

 

இறுகிப் போயிருந்த முகையோ, “நான் கேட்ட விஷயம் என்னாச்சு?” என்கவும், “எல்லாம் தயார்,” என்று கண்ணீரோடு கயலும் சொல்ல, “ஹம்…”

 

“வரும் முகூர்த்தத்தில் உனக்கும் என் அண்ணனுக்கும் கல்யாணம். அதற்கான வேலையை உன் தம்பியைப் பார்க்கச் சொல்,” என்றவாறு அங்கிருந்த ரூமிற்குள் சென்று கதவை அடைத்த முகைக்கு, விக்ரம் பொண்ணு பார்க்கச் சொல்லியதே மனதிற்குள் ஓடியது.

 

“என்னடா ஆச்சு? ஏன் அவள் அப்படி இருக்காள்?”

 

தனது கூடப்பிறந்தவளைப் பார்த்தவன், “நான் வேற கல்யாணம் பண்ணிக்கணுமாம்; அதான் அவளையே பொண்ணு பார்க்கச் சொல்லிருக்கேன், போதுமா?” என்று பல்லைக் கடித்துக் கொண்டு விக்ரம் சொல்லவும், “எதேஏஏ…” என்று அதிர்ந்து போன கயல், தனது தலையில் அடித்துக்கொண்டு கிச்சனிற்குப் போனவளோ, சிறிது நிமிடத்தில் இரண்டு கப் காஃபியோடு வந்தாள்.

 

“இந்தா எருமை,” என்க, விக்ரமும் எதுவும் சொல்லாமல் தனது தங்கையின் கையில் இருந்து வாங்கிக் கொண்டான்.

 

பின்னர், இன்னொரு கப் காஃபியோடு ரூம் கதவைப் போய்த் தட்டிய கயல், “முகை, காஃபி எடுத்துட்டு வந்திருக்கேன்டி,” என்கவும், சிறிது நொடியில் படாரென்று கதவைத் திறந்தவள், கயலிடமிருந்து காஃபியை வாங்கி வேகவேகமாகக் குடிக்க, ‘அட மானங்கெட்டவளே… காஃபின்னு வரும்போது இவளுக்கு இருக்குற சூடு, சொரணை எங்குதான் போகுதுன்னு தெரியல,’ என்று விக்ரம் தனது மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.

 

“ரெண்டு பேருக்கும் டிபன் ரெடியாத்தான் இருக்கு, சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க. எனக்கு காலேஜுக்கு டைம் ஆயிடுச்சு, நான் போயிட்டு வரேன்,” என்று தனது ஹேண்ட் பேகோடு வெளியே வந்தவளோ, அங்கிருந்த ஸ்கூட்டியில் ஏறி அவள் வேலை பார்க்கும் கல்லூரிக்குச் சென்றாள்.

 

விக்ரமோ நேராக அங்கிருக்கும் இன்னொரு அறைக்குள் சென்றவன், போட்டிருந்த சட்டைகளைக் கழட்டி ஆத்திரத்தில் தூக்கி எறிந்துவிட்டு, அங்கிருந்த ரெஸ்ட் ரூமிற்குள் சென்று ஷவரைத் திறந்து கீழே நின்றவனுக்கு, மீண்டும் தன்னவளிடம் தனக்கான காதலை எப்போது பார்க்கப் போகிறோம் என்று கவலையானது.

 

அதேபோல் முகையும் மாற்றுத் துணி எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றவள், குளித்துத் தலையைத் துவட்டிக்கொண்டு வெளியே வரும்போது கதவு வேகமாகத் தட்டப்படவும், வரேன் கதவு ஒடைச்சிடாதீங்க என்றவாறு கதவைத் திறக்க, அகன்ற தோள்களும் உடற்பயிற்சியால் முறுக்கிய தேகத்தில் நீர்த்துளிகள் அங்கங்கே பனித்துளிகள் போல பூத்தபடி நிற்பவனைக் பார்த்தவள், வேகமாகத் திரும்பி நின்றுகொண்டு, “என்னவாம்? எதுக்கு இப்படி வந்து நிற்குறீங்க?” என்றவளோ, அடுத்த வார்த்தை வராமல் அதிர்ந்து நிற்க, விக்ரமின் வலிமையான கரம் அவளின் பின்புறமாக இறுக்கி அணைக்க, “வி… வி…” என்று வார்த்தைகள் வராமல் தடுமாறினாள்.

 

எதுவும் சொல்லாமல் அவளின் கழுத்தோரம் புதைந்தவன், “நான் இல்லாமல் நீ இருந்துடுவியாடி? இந்த விக்ரம் இல்லாமல் உனக்கு வாழ்க்கை இருக்கிறதா?” என்று மேலும் இறுக்க, தன்னவனின் பிடியில் எலும்புகள் நொறுங்கிவிடுவது போல இருந்தது.

 

அவனின் கேள்விக்கு முகையின் மனசாட்சியோ, ‘இல்லை’ என்று சத்தமின்றி அலறியது.

 

“பதில் சொல்லுடி… லா படித்தவள் போல பக்கம் பக்கமா பேசுவியே… எனது கேள்விக்கு பதில் சொல்லுடி!” என்று அவளது தோள்பட்டையில் மெலிதாகக் கடித்து வைக்க, முகைக்கோ தனது மாமனின் தீண்டல்கள் பெரும் அவஸ்தையாக இருந்தது.

 

அடுத்தது அவள் சுதாரிக்கும் முன்னால் அப்படியே அள்ளித் தனது நெஞ்சோடு அணைத்தவன், அங்கிருந்த மெத்தையில் போய்ச் சரிந்து கொண்டு, தனது நெஞ்சின் மேல் அவள் தலையை அழுத்திப் பிடிக்க, இவ்வளவு நேரம் அமைதியாக இருந்தவளோ, அந்த அணைப்பில் பெரும் கேவலோடு சத்தமிட்டுக் கதறினாள்.

 

அவள் அழட்டும் என்று விக்ரமும் அமைதியாக இருந்தாலும், அவனின் கடைக்கண்ணோரம் கண்ணீரும் வடிந்து ஓட மறக்கவில்லை. சிறிது நிமிடங்கள் கடந்திருக்க, அழுது கொண்டிருந்தவளோ தான் பாதுகாப்பாகத் தன்னவனிடம்தான் இருக்கிறோம் என்ற எண்ணத்தில், தன்னை மறந்து தூங்கிவிட்டாள்.

 

முகையிடமிருந்து சீரான சுவாசம் வருவதை உணர்ந்தவன், பொறுமையாகப் பெட்டின் மேல் அவளைப் படுக்க வைக்கும்போது, அவளோ மேலும் அவனை இறுகக் கட்டிக் கொள்ள, ‘மனசுக்குள்ள இவ்வளவு ஆசை இருக்கு; ஆனாலும் அதை வெளிக்காட்டக்கூடாதுன்னு இருக்கியே… நீ இல்லாம எனக்கு வாழ்க்கையில்லை. நான் இல்லாம உன்னால் ஒரு நிமிஷம் கூட வாழ முடியாதுடி. உன் வழிக்கே போயிட்டு, உன் மனசுல இருக்கிறதை வெளியே கொண்டு வரேன்டி.’

 

‘இதுவரைக்கும் போனா போகட்டும்னு உனக்காக அமைதியாக இருந்தேன். இனிமே அப்படி இருக்க மாட்டேன். நீ எனக்கு வேண்டும். நான் இல்லை என்றால் நீ உசுரோடு இருக்க மாட்ட, அது எனக்கு நல்லா தெரியும்.’

 

‘அனேகமாக இந்த முறைதான் நான் உன்னை பார்ப்பது கடைசியாக இருக்கும். அடுத்த முறை நீ என்னை பார்க்கும்போது, உன் மனசுக்குள்ள புதைந்து போன எனக்கான காதல் வெளிவரும்போது தான் உன்னை நான் பார்ப்பேன்டி.’

 

‘அதுவரைக்கும் எந்தச் சூழல் வந்தாலும் நான் உன்னைத் தேடி வர மாட்டேன்; நீயா உன் மனசை மாத்திக்கிட்டு என்னை தேடி வரணும்,’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவன் அவளை அணைத்தபடியே தூங்கினான்.

 

நன்கு தூக்கத்தில் இருந்தவளுக்கு, விக்ரம் யாரோ ஒரு பெண்ணுடன் கல்யாணக் கோலத்தில் இருப்பது போல கனவு வரவும், “இல்லை!” என்று பதறி அடித்து எழுப்பப் போனவளுக்கு, ஏதோ ஒன்று அவளை இறுக்கிப் பிடித்திருப்பது தெரிய, அதிர்ந்து போய்க் கண்களைத் திறந்தவளுக்கு, அவளை அணைத்தபடி விக்ரம் அரைகுறை ஆடையோடு படுத்திருப்பது தெரியவும், “அய்யய்யோ…” என்று அவன் கரத்தை விலக்கிவிட்டு எழுந்தவள், அங்கிருந்த பெட்ஷீட்டை எடுத்து அவன் மேல் போர்த்திவிட்டு, கயலின் ரூமிற்குச் சென்று கதவைப் பூட்டிக்கொண்டாள்.

 

‘ஐயோ கடவுளே… எப்படி இது நடந்தது?’ என்று தலையைப் பிடித்துக் கொண்டு கட்டிலில் உட்கார, விக்ரம் குளித்த தோற்றத்தோடு ரூமிற்குள் வந்தது, அவளை அணைத்து முத்தமிட்டதெல்லாம் ஞாபகம் வரவும், அதனால் வெட்கம் வந்து கண்களை மூடியவளுக்கு ஏதேதோ நிகழ்வுகள் படம் போல் கண் முன்னால் ஓடின. தலையை உலுக்கித் தனது நினைவிலிருந்து வெளியே வந்தவள், ‘வேண்டாம் மாமா… உங்களுக்கு நான் வேண்டாம். உங்களுக்கு ஒரு வாழ்க்கை வேணும்; நீங்க அதை நல்லபடியாக வாழனும். நான் உங்கள் லைஃப்ல இருந்து போனாதான் நீங்க நல்லா இருப்பீங்க,’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள், அடுத்தடுத்து என்ன பண்ண வேண்டும் என்று திட்டங்களைத் தீட்டத் தொடங்கினாள்.

 

ஒரு வழியாகத் தூக்கம் கலைந்து எழுந்த விக்ரமிற்குத் தான் எங்கே இருக்கிறோம் என்று ஒரு நொடி புரியவில்லை. பின்னர் நடந்தது நினைவூர, சிரித்துக் கொண்டே எழுந்தவன் டிரஸ்ஸை மாற்றிக்கொண்டு, கயல் ரூமில்தான் தன்னவள் இருக்கிறாள் என்பது புரிந்து கதவைத் தட்ட, “என்ன?” என்று அங்கிருந்து கேட்டாள்.

 

“பசிக்குது, வாடி,” என்கவும், “எனக்கு பசிக்கல, நீங்க சாப்பிடுங்கள்,” என்றாள்.

 

“உனக்கு எப்படிடி பசிக்கும்? அதான் என் உள்ளுக்குள்ள இருக்கிறதெல்லாம் உறிஞ்சி எடுத்திட்டியே உதட்டு வழியா…” என்க, “நானா?!” என்று அதிர்வோடு கதவைத் திறக்க, “ஆமாம்,” என்றவன் உள்ளே போகாமல் எட்டி அவள் கழுத்தை வளைத்துத் தனது முகத்தின் அருகே கொண்டு வந்தவன், அவள் விலகுவதற்குள் முகையின் உதடுகளைச் சிறை பிடித்தான்.

 

நீண்ட முத்தத்தைச் சிறிது வன்மையாகவே தன்னவளுக்குக் கொடுத்தவன், “இதுக்கு அப்புறம் இன்னொருத்திக்கு புருஷன் ஆயிடுவேன்; அப்ப உன்னைத் தொட முடியாது இல்லையா? அது தப்பு. என் மனைவிக்கு என்னால் துரோகம் பண்ண முடியாது முகை.இப்ப காதலன் போஸ்டிங்ல இருக்கிறேன், அதனால் தான் கடைசியாக ஒரு முத்தம் கொடுத்துக்கிறேன் ஞாபகார்த்தமா,” என்னும்போது, அதைக் கேட்டவளுக்கோ ஆயிரம் அம்புகள் இதயத்தைத் தைத்தது போல கொடும் வலியைக் கொடுத்தன.

 

செடி வளரும்…

error: Alert: Content selection is disabled!!