மையல் மீளுதே மேகவியே – 25

மையல் 25

கணவன் வெளியில் சென்று விட்டதை அறிந்து நிம்மதி மூச்சு விட்ட மேகவி, முதல் வேலையாய் அறையின் கதவைத் தாழிட்டாள். உடையை மாற்றிக் கொண்டு கூடத்திற்கு வர, சுடுநீரை நீட்டினான் சத்தி.

“தேங்க்ஸ்.” என்று வாங்கிக் கொள்ள, “வேற எதுவும் வேணுமா?”

“நோ.”

“அப்ப, நான் குளிச்சிட்டு வந்திடுறேன்.”

“ம்ம்..” எனத் தலை அசைக்க, உள்ளே சென்றான்.

பதினைந்து நிமிடங்களில் அவன் வந்த பொழுது கூடத்தில் இருந்த இருக்கையில் கால் நீட்டிப் படுத்து, தொலைக்காட்சித் திரையில் கண்களைப் பதித்திருந்தாள் மங்கை.

“வண்டியில குறட்டை விட்டு தூங்கிட்டு வந்த? இப்ப, என்ன முட்டைக் கண்ணை முழிச்சு வச்சு இப்படி டிவி பாத்துட்டு இருக்க.?”

“நீ ரூமுக்குள்ள இருந்த. சோ..”

“ரெஸ்ட் ரூமுக்குத்தான போயிருந்தேன்?”

அவள் எதுவும் பேசாமல் எழுந்து செல்ல, “ஹேய்.. எங்க போற?”

“இந்த நேரத்துல வேற எங்க போவாங்க?”

“ம்ம்.. அப்புறம் பொண்டாட்டி, ஒரு விஷயம்.”

அவள் கேள்வியாய் பார்க்க, “எனக்கு உன்னை மாதிரி டவலோட பாத்ரூமுல இருந்து வெளிய வர்ற பழக்கம் கிடையாது. ஃபுல் டிரஸ்ஸோட தான் உள்ளேயே போவேன். சோ, நீ இது போல ஹாலுக்கு வந்து வெயிட் பண்ண வேண்டிய அவசியம் இல்ல.”

மேகவி அவனை எதிர்கொள்ள இயலாமல் பார்வையைத் திருப்ப, “அண்ட், உன்கிட்ட ஒன்னு கேட்கணும்.”

“ம்ம்..”

“என்னைப் பார்த்துப் பேசு!” என மனைவியின் தாடையைப் பற்றி தன்னைக் காணச் செய்தவன், “ரெஸ்ட் ரூமுல எவ்வளவு நேரம் வெயிட் பண்ண.?”

“நான் ஒன்னும் வெயிட் பண்ணல.” என்றவாறே அவனது கரத்தை விலக்க, “அரைமணி நேரமாவா குளிப்ப, அதுவும் நைட்டு பதினொன்றரை மணிக்கு?”

“ப்ச்ச்.. கீர்த்தி, எதுக்கு இப்படி வரிசையா கொஸ்டின் கேட்டுட்டு இருக்க?”

“அவசியம் இருக்கிறதால தான் கேட்கிறேன். இனி, நாம ஒன்னா இருக்கப் போறோம். ஒவ்வொரு டைமும், நான் வெளிய போற வரைக்கும் நீ இதே மாதிரி உள்ளேயே வெயிட் பண்ணுவியா.?”

“இல்ல, இனி இப்படி நடக்காது. என்னோட பழக்கத்தை மாத்திக்கிறேன்.”

“நீ மாத்த வேண்டியது உன்னோட பழக்கத்தை இல்ல. மைண்ட்செட்டை!”

அவள் புரியாது பார்க்க, “என்கிட்ட ஹெல்ப் கேட்கிறதுல, என்ன அவ்வளவு கஷ்டம்? இதுவே உன்னோட அண்ணாவோ அம்மாவோ இருந்தா, டவல் எடுத்துக் கொடுங்கனு கேட்க மாட்டியா.?”

“கேட்பேன் தான். பட் உன்கிட்ட எப்படி.?’ என மேலும் பேச முடியாமல் தயங்கி நிறுத்த, “நானும் அவங்களை மாதிரி தான். உன்னோட ஃபேமிலியில ஒருத்தன். இதை முதல்ல மனசுல பதிய வை.”

“ம்ம்..” என்று தலை அசைத்தவள் ஏதோ தோன்றிட, “உனக்கு எப்படி என்னோட பழக்கம் எல்லாம் தெரியும்? நான்தான் டோரைக் குளோஸ் பண்ணீடுவேனே? ஏய், திருட்டு வேலை எதுவும் செஞ்சியா.?” எனச் சந்தேகமாய் வினவினாள்.

“பார்த்தியா? நான் உன்னை கம்ஃபர்ட் பண்ண முயற்சி செஞ்சா, நீ என்னை திருடனா பார்க்குற?”

“பேச்சை மாத்தாம, ஒழுங்கா உண்மையைச் சொல்லு!”

“உன்கூட இவ்வளவு நாளா இருக்கேன்? நீ ஒவ்வொரு விஷயத்துலயும் நடந்துக்கிற விதமும் பழக்க வழக்கமும் கண்ணுல படாம போகுமா? இல்ல, நான் தான் எதையும் கவனிக்காமலேயே இருப்பேனா? குளிக்கப் போகும் போதே, ரூம் டோரையும் லாக் பண்ணிடுற. சோ, ஐம் கெஸ்டு.”

“ஓ.. ம்ம், நானும் இங்க தான இருக்கேன்? பட், எனக்கு ஏன் உன்னை பத்தி எதுவும் சரியா தெரியல?”

“சும்மா எப்படித் தெரியும்? அதுக்குப் புருஷன் மேல கொஞ்சமே கொஞ்சமாவது ஆசை இருக்கணும். அவனைப் பத்தித் தெரிஞ்சிக்கணும்னு ஆர்வம் இருக்கணும். இதுக்கு எல்லாம் பெருசா மெனக்கெட வேண்டியது இல்ல. தோணினாலே போதும். தானாவே தெரிஞ்சிக்கலாம். சரி சொல்லு, உனக்கு அது மாதிரி என் மேல இண்ட்ரெஸ்ட் எதுவும் இருக்கா.?”

“எனக்குத் தூக்கம் வருது!” என அவனது பேச்சை கேளாதது போல் நகர, “ஓடப் பார்க்காத பொண்டாட்டி. ஃபேஸ் பண்ணிப் பழகு!” என்றான் அழுத்தமாய்.

“மணி பன்னெண்டு. இந்த நேரத்துக்குக் கிளாஸ் எடுத்துட்டு இருக்க? போய் தூங்குடா!” என உரைத்தவள் அறைக்குச் சென்று படுக்கையில் விழ, ஐந்து நிமிட இடைவெளியில் வந்து சேர்ந்தான் சத்தி.

மேகவி இமை மூடி தூக்கத்தில் இருக்க, ஒருமுறை அவளை கூர்ந்து பார்த்து விட்டு விளக்கை அணைத்தான். அருகே சென்று படுத்தவன் அப்படியே அணைத்தும் கொள்ள, “அதென்ன நான் தூங்கின பின்னாடி வந்து ஹக் பண்ணுற? இதுக்குப் பேரு திருட்டுத்தனம் இல்லையா? அப்புறம் உன்னை திருடனா நினைக்காம, வேற எப்படிப் பார்ப்பாங்களாம்?” என்றாள் விழிகளைத் திறந்து.

“நீ முழிச்சு இருக்கிறது தெரிஞ்சு தான் ஹக் பண்ணேன். சோ, இது திருட்டுத் தனத்துல சேராது.”

“நல்லா பேசு. முதல்ல என்னை விடு.”

“எதுக்கு விடணும்? பீச்ல இருந்து வரும் போது என்னை ஹக் பண்ணிதான் முதுகுல சாய்ஞ்சிட்டு வந்த. நீ செய்யலாம். நான் கூடாதா.? அதென்ன பொண்ணுக்கு ஒரு நியாயம்? பையனுக்கு ஒரு நியாயம்.?”

“அடப்பாவி! என்னடா இப்படிப் பேசுற?”

“என்ன பேசுறாங்க.?”

“அப்பா சாமி! உன்கிட்டப் பேச எனக்குத் தெம்பு இல்ல. எதுவும் செஞ்சுத் தொலை! எனக்குத் தூக்கம் வருது!” என உரைத்தவள் துயில்வதற்கு ஆயத்தமாக, மனைவியின் காதோரம் இதழ்களை ஒற்றினான் சத்தி.

திடுக்கிட்டு விழித்த மேகவி, “ஏய்..” என்று விலக முற்பட, “நீதான எதுவும் செஞ்சுக்கனு பர்மிஷன் கொடுத்த, இப்ப கோபப்பட்டா என்ன அர்த்தம்.?” என அம்பை மனைவியின் பக்கமே திருப்பினான்.

“பாவி பாவி! நான் சாதாரணமா சொன்னதை எப்படி எல்லாம் டிவிஸ்ட் பண்ணுற நீ.?” என்று அவனது தோளில் இரண்டு முறை அடிக்க, சிரிப்புடன் அதை வாங்கிக் கொண்டான்.

“இவ்வளவு தான் லைஃப் பொண்டாட்டி. ஜெஸ்ட் என்ஜாய் இட். ரொம்ப ஆழமா யோசிக்க யோசிக்க, குழப்பமும் வலியும் தான் மிஞ்சும்.”

“எதுக்கு திடீர்னு இதைச் சொல்லுற.?”

“நீ சிஸ்டர்கிட்ட பேசினதைக் கவனிச்சேன். என்ன பேசுனீங்கனு தெரியல. பட், உன்னோட முகத்துல தயக்கமும் குழப்பமும் நிறைய இருந்துச்சு. அதான், பேசிப் பார்ப்போம்னு நினைச்சேன்.

ரொம்ப யோசிக்காதனு சொன்னது, பொதுவான விஷயம். எல்லா சூழ்நிலைக்கும் அப்ளை பண்ணிக்கலாம்.‌

ஏன் இப்படி ஆச்சு? எதுக்காக அப்படி நடந்துச்சுனு யோசிச்சு குழப்பிக்காம நமக்குத் தோணுறதைச் செய்யலாம். அதுல ஒன்னும் தப்பில்ல. அப்படியே தப்பாப் போனா தான், என்ன? சரி செஞ்சுக்கலாம். இல்லேனாலும் பரவாயில்ல, அதை கடந்து போகலாம்.

ஏன்னா அடிபட்ட இடத்துல வலி இருக்கிற வரைக்கும் தான், அது நம்மைக் கஷ்டப்படுத்தும். நாள் ஆச்சுனா.. அந்த வலியும் குறைஞ்சு, நடந்ததையும் மெல்ல மெல்ல மறக்க வச்சிடும் காலம்.

சோ, எப்பவுமே காயங்களைத் தூக்கிச் சுமக்க நினைக்காத. அதை அங்கேயே போட்டுட்டு, நீ மட்டும் மூவ் ஆன் பண்ணப் பாரு! இன்னும் சீக்கிரமே கூட அந்த வலி மறந்து மட்டும் இல்ல, முழுசா மறைஞ்சும் போயிடும்.” என உரைத்தவனின் இதழ்களில் விரல் வைத்து பேச்சை நிறுத்தினாள் மேகவி.

சத்தி என்ன என்பது போல் பார்க்க, “இதெல்லாம் எனக்குத் தெரியாதுனு நினைக்கிறியா?”

மெலிதாய்ப் புன்னகைத்தவன், “நிச்சயம் தெரியும் தான். ஆனா உபதேசம் எல்லாம் ஊருக்கு மட்டுமே. நமக்குனு ஒரு விஷயம் நடக்கும் போது மனசு அதை ஏத்துக்காது. அந்த நேரத்துல வேற ஒருத்தர் வந்து ஆறுதலுங்கிற பேருல இது மாதிரி ஏதாவது பேசும் போது, மூளை கொஞ்சம் கன்சிடர் பண்ணும். அதுக்காகத்தான் சொன்னேன்.”

அவள் சின்னதாய் சிரித்திட, “என்ன பிரச்சனை உனக்கு?”

“ப்ச்ச்.. அதெல்லாம் ஒன்னும் இல்ல.”

“அப்ப, இந்த ஹக் கிஸ் இதுல எதுவும் பிரச்சனை இல்லேல?”

“செம கேடி நீ! உன் தேவைக்கு ஏத்த மாதிரி என்னோட வேர்ட்ஸை யூஸ் பண்ணிக்கிற?”

“அடுத்தவங்க உணர்வுகளைக் காயப்படுத்தாத எதுவும் தப்பு இல்ல பொண்டாட்டி. சொல்லு, நான் உன்னோட மனசைக் கஷ்டப்படுத்துறேனா?”

‘இல்லை’ என்பதாய் அவள் மறுத்துத் தலை அசைத்திட, “அப்ப நான் செய்யிறது எல்லாம் சரிதான?” என்றவாறே மனைவியின் மூக்கோடு தன் மூக்கின் நுனியை உரசினான்.

சத்தியின் சுவாசச் சூடு மங்கையின் மூச்சோடு கலந்து உள்ளும் புறமுமாகப் பரவியது.

இருவருக்குமான தேக இடைவெளி மெல்ல மெல்ல குறைந்து வருவதை உணர்ந்தவள், சட்டென்று அவனைத் தள்ளிவிட்டு மறுபுறம் திரும்பிப் படுத்தாள்.

இடையில் கையிட்டவாறு பின்னிருந்து நெருங்கியவன் மனைவியின் காதருகே வந்து, “என்ன ஆச்சு.?” என்றிட, “நடுராத்திரியில இப்படிப் பக்கம் பக்கமா பேசிக்கிட்டு இருக்க? முடியலடா உன்னோட!” எனச் சலித்துக் கொண்டாள்.

அந்த சலிப்பு பெண்மைக்குள் ஏற்பட்ட உணர்வு அலைகளினால் தேகத்தில் விளையும் இரசாயன மாற்றங்களின் வெளிப்பாடு. அது வெளிப்பார்வைக்கு அலட்சியத்தைத் தந்து, உள்ளே காரணம் புரியா ஒருவித நடுக்கத்தை உண்டாக்கியது.

“ஏது முடியலயா.? பேசுனதுக்கேவா? வேற எதுவும் செஞ்சா தாங்க மாட்ட போல? அவ்வளவு வீக்கான ஆளா நீ.?” என்று சிரிப்புடன் மேலும் சீண்டிட, பட்டென்று திரும்பி கணவனை நோக்கினாள் மேகவி.

அதன் காரணமாய் அவளது கண் இமைகள் ஆடவனது அதரங்களிலும், இடது பக்கத் தோள் மார்பிலும் உரசியது.

இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்தபடி அத்தருணத்தை எதிர்கொள்ள, “தூங்குற ஐடியா இல்லையா உனக்கு? இப்படிப் பேசி பேசி என்னை இம்சை செஞ்சிட்டு இருக்க.?”

இடவலமாய் தலை அசைத்து மெலிதாய் புன்னகைத்தானே தவிர, எதுவும் பேசவில்லை அவன்.

“கீர்த்தி!”

“ம்ம்.”

“இப்படிப் பண்ணாத ப்ளீஸ்..”

“எப்படி.?”

அவனது கை வளைவிற்குள் இருக்கும் தன்னை ஒருமுறை பார்த்தவள், “நான் உன்னை பெட்ல படுக்கிறதுக்குத்தான் அலௌவ் பண்ணேன். ஆனா நீ.?”

“ஆனா நான்?”

“இடத்தைக் கொடுத்தா மடத்தையே பிடிக்கிற ஆளா இருக்க!”

“சரி பிடிக்கல!” என்றவன் தனது கரத்தை விலக்கிக் கொள்ள, அடுத்த நொடி பாவையின் இதழ்கள் சத்தியின் கன்னத்தில் அழுத்தமாய் பதிந்தன.

அவன் அதிர்ந்து நோக்க, “இவ்வளவு நேரம் நீ அட்வாண்டேஜ் எடுத்துக்கிட்ட இல்ல?”

புரியாது விழித்தவன், “அட்வாண்டேஜா, வாட் யூ மீன்?”

“ஐ மீன் இட். நவ் மை டர்ன்!” என்றவள் கணவனின் உடையைப் பற்றி இழுத்து முகத்தைத் தனது பார்வைக்கு நேராய் கொண்டு வந்தாள்.

என்னவென்று புரியாத ஒருவித தயக்கமும் மயக்கமும் அவனுள் போட்டியிட, தவிப்புடன் பார்த்தான் மனைவியை.

“நமக்கு நடந்த கல்யாணத்தை எப்படியும் மாத்த முடியாது. நீ இந்த ரிலேஷன்ஸிப்பை கண்டின்யூ பண்ணத்தான் பார்க்கிற. எனக்கும், இப்ப ஓகே. சோ, கடைசி வரைக்கும் நல்ல புருஷனா என்னை எந்த விதத்துலயும் ஏமாத்தாம இருக்கிறது உனக்கு நல்லது. இல்லேனா, நீ செய்யிற ஒவ்வொரு தப்புக்கும் பனிஷ்மெண்ட் ஹெவியா இருக்கும்.” என்று அவள் எச்சரிக்க, ஆடவனின் முகத்தில் இருந்த தவிப்பு மகிழ்ச்சியாய் மாற்றம் அடைந்தது.

error: Alert: Content selection is disabled!!