மையல் 26
மேகவியின் மன மாற்றத்தை அறிந்த சத்தியின் முகம் மலர்ந்தது.
மெலிதாய்ப் புன்னகைத்தவன் தன்னைப் பற்றியிருந்த அவளது கரத்தின் மீது கையை பதித்து, “பொண்டாட்டி, ஆர் யூ ஸுயர்.?” என வினவினான்.
மங்கையின் குரலில் அழுத்தம் கூடிட, “ஏன், என்னைப் பார்த்தா சும்மா டைம் பாஸ் பண்ணுற ஆளு மாதிரி தெரியிதா.?”
“இல்ல இல்ல.” எனச் சிரித்தவன், “இப்ப நீ சொன்னதுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா.?”
“நான் ஒன்னும் ரெண்டு வயசு சின்ன பாப்பா இல்ல.”
“ம்ம்.. ஒத்துக்கத்தான் வேணும். நீ ஒன்னும் பாப்பா இல்ல. அதான் கண்ணை நிறைக்கிற மாதிரி இவ்வளவு பெரிய பொண்ணா இருக்கியே.?” என்றவாறே அவளின் முதுகில் மற்றொரு கரத்தைப் பதித்து தனக்கு நெருக்கமாக்கிட, ஏனோ ஆடவனின் பேச்சில் புதிதாய் மங்கையின் மனம் மையல் கொண்டது.
எனினும் அதனை உடனே ஏற்றுக் கொண்டாலோ அல்லது வெளிக்காட்டினாலோ அவள் மேகவியாய் இருக்க இயலாதே?
தனது உணர்வுகளோடு அவனின் எண்ணங்களிற்கும் தற்காலிகமாய் அணை கட்டுவது போல், “எனக்கு உன்கிட்ட ஒரு ரெக்குவெஸ்ட் இருக்கு கீர்த்தி.” எனப் பேச்சைத் திசை திருப்ப முயன்றாள்.
“சொல்லு, ஐ வில் டூ மை பெஸ்ட்.”
“எப்பவும் என்னை நீயா ஜட்ஜ் பண்ணாத. எதுவா இருந்தாலும் சரி, ஒன் டைம் நாம ரெண்டு பேரும் டிஸ்கஸ் பண்ணதுக்குப் பின்னாடி ஒரு முடிவுக்கு வா. என்ன ஓகேவா.?”
புரியாது விழித்தவன், “ஃபியூச்சர்ல நான் உன்னை எதுக்கும் ஃபோர்ஸ் பண்ணுவேன்னு நினைக்கிறியா.?”
மறுத்துத் தலை அசைத்த மேகவி, “நமக்கு மேரேஜ் ஆனதுனால, நான் உன்னை என்னோட லைஃப்புக்குள்ள அலௌவ் பண்ணல. நீ எனக்குத் தர்ற ரெஸ்பெட் அண்ட் கன்சர்னுக்காகத் தான் அக்செப்ட் செஞ்சிருக்கேன். ஒருவேளை நீ இவ்வளவு கன்சிடரேட்டான ஆளா இல்லேனா, நிச்சயம் டிவோர்ஸ் பண்ணுற முடிவுக்குத்தான் வந்திருப்பேன். புரியிதா நான் சொல்லுறது.?”
“ம்ம்.. வேற எதுவும்.?”
“ம்கூம்ம்.. எனக்குப் பெருசா உன்கிட்ட எதிர்பார்ப்புகள் இல்ல. இப்ப இருக்கிற மாதிரியே எப்பவும் இருந்தா போதும். நான் சொன்னது உன்னோட கேரக்டரை. நீ செய்யிற வீட்டு வேலையை இல்ல. அதை எல்லாம் செய்யணும்னு அவசியமும் இல்ல. சமைக்கிறதையும் சேர்த்து தான் சொல்லுறேன். ஆள் வேணும்னா வச்சுக்கலாம், இந்த வொர்க் எல்லாம் செய்யிறதுக்கு.”
“இப்ப நாம ரெண்டு பேருமா ஃபேமிலியை ரன் பண்ணுறதும் வீட்டை லீட் பண்ணுறதும் ஓகே தான, பொண்டாட்டி.?”
“ம்ம்..”
“உனக்கு அதுல எதுவும் கஷ்டமாவோ பிடிக்காமலோ இருக்கா.?”
“நோ.. குறை சொல்ல ஒன்னும் இல்ல.”
“அப்புறம் என்ன, இப்படியே கண்டின்யூ பண்ணலாம். நம்மளாலயோ இல்ல என்னாலயோ முடியாத டைம்ல, அதுக்கான சொல்யூசனைப் பத்தி யோசிப்போம். எல்லாத்தையும் உடனே பேசணும் என்ன அவசியம்?” என இல்லறம் நடத்துவதைப் பற்றி சத்தி உரைத்திட, “ஓகே, நீ சொல்லுற மாதிரியே ஃபாலோ பண்ணிக்கலாம்.” என்று அவளும் சம்மதித்தாள்.
“பொண்டாட்டி ஒரு விஷயம் சொல்லவா.?”
அவள் என்ன என்பது போல் கேள்வியாய் பார்க்க, “நீ கூட, இப்ப பக்காவான குடும்பத்தலைவியா மாறிட்ட!”
“என்ன நக்கலா.?” என அவனது உடையைப் பற்றியிருந்த கையைச் சற்றே மேலேற்றி சென்று வலிக்காதவாறு கன்னத்தில் லேசாய் அடித்தாள்.
“இதென்ன ஒரு கன்னத்துல கிஸ் பண்ணீட்டு, மறு கன்னத்துல அடிக்கிற? உன்னோட ஃபீலிங்ஸே ஒருமாதிரி டிஃபரெண்டா இருக்கே?”
“அதுக்கு?”
“அடிச்சது லைட்டா வலிக்கிற மாதிரி இருக்கு. சோ, சரிபண்ண மருத்துவ முத்தம் தரலாமே.?”
“கேடி!” என்றவள் விலக முயற்சித்திட, அதற்குத் தடைவிதித்து மனைவியை மேலும் தனக்கு நெருக்கமாக்கினான் சத்தி. கிட்டத்தட்ட அவனின் மீது இருந்தாள். பாதி உடல் படுக்கையிலும் மிச்சம் கணவனின் மீதும், இடையானது ஆடவனது கரங்களிற்குள்ளும் இருந்தது.
அந்த அண்மையில் அவளின் சுவாசத்தின் லயம் தப்பிட, “என்ன செய்யிற, விடு!”
“நீ கிஸ் கொடு விட்டுடுறேன்.”
“இது என்ன பழக்கம்? பிளாக்மெயில் பண்ணுறியா.?”
“இது ஸுவீட்மெயில்மா. பிளாக்மெயில் பண்ணுற மூடுல இல்ல நான்!”
அவனது பேச்சில் சிரிப்பு வர, “புதுசு புதுசா வார்த்தையைக் கண்டுபிடிக்கிற. ஆமா இந்த ஸுவீட் மெயிலுக்கு என்ன அர்த்தமோ.?”
“இனிய அவஸ்தைனு சொல்லிக்கலாமா.? இனிக்கிற மாதிரி உன்னை டிஸ்டர்ப் பண்ணுறது! ம்ம்.. ஓகேவா?”
உண்மையில் மங்கையின் நிலை தற்போது அப்படித்தான் இருந்தது. கணவனின் கரங்களிற்குள் இருப்பதைத் தவிப்பாய் உணர்ந்தாள். மெலிதான இனிய மயக்கம்!
அது அவளின் இயல்பைப் பறித்துக் கொள்ள, “கீர்த்தி ப்ளீஸ்.. மூச்சு விட முடியல. இடுப்புல இருந்து கொஞ்சம் கையை எடு!” என்றாள் தணிந்த குரலில்.
“உன்னால மூச்சுவிட முடியாத அளவுக்கு எல்லாம் நான் இறுக்கிப் பிடிக்கல. நல்லா பாரு நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல நல்லாவே கேப் இருக்கு!” என தனது மற்றொரு கையை இருவருக்கும் இடையே நுழைத்தான்.
அதில் சத்தியின் விரல்கள் மேகவியின் வயிற்றின் மீது லேசாய் உரசி, சிலிர்ப்பை ஏற்படுத்தியது. உடைக்கு மேல்தான் என்ற போதும், இதுவரை அறிந்திடாத புதிதான தொடுகை என்பதால் தேகம் சற்றே இளக்கம் கொண்டது.
அவன் என்னவோ இயல்பாய் தான் நடந்து கொண்டான். ஆனால் அவளிற்குத்தான் கணவனது ஒவ்வொரு செயலும், உணர்வுகளில் கிரக்க இசை மீட்டிச் சென்றது.
“மூச்சை இழுத்துப் பிடிச்சு வச்சிருக்கிறது நீதான் பொண்டாட்டி. நான் எதுவும் செய்யல. நார்மலா இருக்க டிரைப் பண்ணு!”
“டிரைப் பண்ணேன், பட் முடியல.”
“ஒருவேளை ஆக்ஸிஜன் பத்தலயோ?”
அவள் புரியாது விழிக்க, “நான் ஷேர் பண்ணவா?”
“என்ன ஷேரிங்.?”
“என்னோட மூச்சைத் தர்றேன். அப்புறம் உன்னால நார்மலா மூச்சு விட முடியும்ல?” என்றவன் மனைவியின் இதழ்களில் தனது அதரங்களை அரை நொடிக்கும் அதிகமான நேரம் ஒற்றி ருசி பார்த்திட, திகைத்தாள் மங்கை.
அடுத்த நொடியே அவனை தள்ளியவள், “தனா, என்னோட அண்ணனுக்கு ஒன்னுமே தெரியாது. பொண்ணுங்களோட பழகினதே இல்லனு சொன்னா. பாவி! நீ என்னனா ஃபிலர்ட் பண்ணுறதுல பிஹெச்டி முடிச்சிருப்ப போல? பிளிங்க் பண்ணுற டைமிங்ல இப்படி அசால்டா கிஸ் அடிக்கிற?” எனக் கணவனின் மீது குற்றப் பத்திரிக்கை வாசிக்க,
“தனா பொய் எதுவும் சொல்லல. நான் பொண்ணுங்கக்கிட்ட அவ்வளவா பேசுனது இல்ல. பட் நீயும் மத்த பொண்ணுங்களும் ஒன்னு இல்லயே? அதோட.. எல்லா ஆம்பளைக்குமே தன்னோட வொய்ஃப்கிட்ட இப்படி நடந்துக்கணும், இதெல்லாம் செய்யணும்னு ஆசை இருக்கும் தான? இப்ப நீ இருக்கிறதால, அதெல்லாம் செஞ்சுக்கிறேன். தப்பா பொண்டாட்டி?” என்று அப்பாவியாய் வினவினான்.
அவனை வியப்பாய் நோக்கியவள், “அதெப்படி செய்யிறது எல்லாம் செஞ்சிட்டு நல்லவன் மாதிரியே பேசுற?”
“அஃப்கோர்ஸ்! நான் நல்லவன் தான். நீ தாராளமா நம்பலாம்.”
“இப்படிப் பேசுறவனைத் தான் முதல்ல நம்பக் கூடாது!”
அதைக் கேட்டு சிரித்தவன், “சரி சொல்லு. இப்ப உன்னால நார்மலா மூச்சு விட முடியுதா.?”
“அதெல்லாம் முடியிது!”
“அப்ப, என்னோட ட்ரீட்மெண்ட் நல்லா ஒர்க் அவுட் ஆகியிருக்கு போல!”
அவள் முறைத்திட, “சரி, ஃபீஸைக் கொடு.”
“என்ன ஃபீஸ்.?”
“கிஸ் பண்ணி உன்னை நார்மலா மூச்சு விட வச்சிருக்கேன். அதுக்குப் பேமெண்ட்?”
சத்தியை தலை முதல் கால் வரை பார்வையால் அளந்தவள், “நல்லா செய்யிறடா நீ.?”
“கோபம் இல்லேல உனக்கு.?”
“இல்ல.”
“அப்ப ஒன் மோர் டைம் டிரைப் பண்ணலாமா.?”
“ஹேய்..”
“பொண்டாட்டி ப்ளீஸ்..”
“அடி வாங்கப் போற நீ!”
“அடிச்சிட்டு அணைச்சிக்கோ.”
அவள் சின்னதாய்ச் சிரித்தபடி வேறுபுறம் திரும்ப, மனைவியின் தாடையைப் பற்றி தன்னைக் காணச் செய்தான்.
“ஹஸ்பெண்டை இப்படிக் கெஞ்ச விடுறது சரியா? கொஞ்சம் மனசு இறங்கலாம் இல்ல?”
“உன்னை எல்லாம் பேசவே விடக்கூடாது. விட்டோம்னா இப்படித்தான்.”
“ஏன்?”
“பேசியே மனசைக் கலைச்சிடுவ!”
“அப்ப ஓகேவா உனக்கு.?”
“நோனு சொன்னா என்ன செய்யிவ?”
“நீ எஸ் சொல்லுற வரைக்கும் கேட்டுக்கிட்டே இருப்பேன்.”
அவனை இரு நொடிகள் பார்த்தவள், “எஸ்.!”
“ஸுயராவா?”
“ஏன், வேணாமா உனக்கு?”
அவனது பதில் வார்த்தையில் இல்லாமல், செயலிற்கு மாற்றம் அடைந்தது.
இருமுறை மனைவியின் அதரங்களுடன் தன்னுடையதை மென்மையாய் ஒற்றி எடுத்து, ஒத்திகைப் பார்த்தான்.
அடுத்தடுத்த நொடிகளின் நகர்வில் மென்மை மெல்ல மெல்ல குறைந்து வன்மை கூடத் துவங்கியது.
இரண்டு நிமிடங்களைக் கடந்து நீண்டு சென்ற முத்தத்தில் சுவாசிக்க சிரமமாய் இருக்க, மேகவி தொடர இயலாது முதலில் பின்வாங்கிக் கொண்டாள்.
சட்டென்று விலகியவளை எண்ணியும் முத்தச் சுவையின் இடையே வேறுபாடாய் எதையோ உணர்ந்ததிலும் ஒருவித பதற்றம் உருவெடுக்க, “ஹேய் பொண்டாட்டி!” என்று முகம் பார்க்க முயன்றான் சத்தி.
அதற்கு அனுமதியாது, சட்டென்று கரம் கொண்டு அவனின் கண்களை மூடினாள் பாவை.
அவர்கள் இருந்த நெருக்கத்தில் ஒருவரின் இதயத்துடிப்பை மற்றவரால் நன்றாய் உணர முடிந்தது. உண்மையில் இருவருக்கும் இயல்பை விட இரண்டு மடங்கு வேகத்தில் துடித்தது. முத்தத்தின் வேகமும் அழுத்தமும் எத்தகையது எனக் கட்டியம் சொல்லிக் கொண்டு இருந்தது.
“மேகவி..”
அவன் பெயர் சொல்லி அழைப்பது இது மூன்றாம் முறை. முதல் இரண்டைக் காட்டிலும், இன்றைய குரலில் கணவன் என்ற உரிமை அதீதமாய் தொனித்தது.
தனது பார்வை, சொல், செயல், சுவாசம் என ஒவ்வொன்றிலும் இருவருக்குமான உறவை அவன் பதிய வைக்க முயல்வதாய் தோன்றியது. அத்தோடு கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் முற்றும் முதலுமாய் வசமாக்கிக் கொள்பவனின் சாதுர்யத்தை எண்ணி மெச்சியது மனம்.
தற்போதைய அழைப்பிற்கு அவளிடம் பதில் இல்லாது போக, “என்ன ஆச்சு?” என வினவியபடி தனது கண்களை மறைத்த கரத்தை விலக்க முயன்றான் சத்தி.
“டோண்ட் மூவ் கீர்த்தி.” என்று அதற்கு தடை விதித்தாள்.
மனைவியின் வார்த்தையை ஏற்றவன், “ஓகே ஓகே. நான் எதுவும் செய்யல. உன்னை ஹர்ட் பண்ணிட்டேனா?”
அவள் அமைதியாய் இருக்க, “ஓகே தான நீ? ஐ ஃபீல் சம்திங் இன் யூ. என்னனு பார்க்கலாம்னு நினைச்சா, இப்படி கண்ணை மூடி வச்சிருக்க!”
கணவனின் பற்கள் பட்டு மங்கையின் இதழ்களில் லேசாய் வலி எடுக்க, மற்றொரு கரத்தால் அவ்விடத்தைத் தொட்டுப் பார்த்தாள்.
விரலில் லேசான சிவப்பு நிறம். அவளின் குருதி.
‘ஃபர்ஸ்ட் டைமே பிளட் வர்ற அளவுக்குப் போயிருக்கான், சரியான காட்டான்!’ என மனம் ஆடவனை கடிந்து கொள்ள, ‘நீ பர்மிஷன் தராமலும் உன்னோட ரியாக்ஷன் இல்லாமலும், அவன் அவ்வளவு ஃபோர்ஸா கிஸ் பண்ணி இருக்க முடியாது!’ என்று நிதர்சனத்தை உரைத்தது மூளை.
அதற்கு மேல் நடந்த நிகழ்வைப் பற்றி அவள் சிந்திக்க விரும்பவில்லை.
“இதோட ஸ்டாப் பண்ணிக்கலாம்! அப்படியே தூங்கு!” என்றவள் சட்டென்று மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொள்ள, பின்னிருந்து மனைவியின் இடையில் கையிட்டு அணைத்தான்.
“ஸாரி.. பொண்டாட்டி!” எனக் காதருகே வந்து உரைத்திட, “எதுக்கு இந்த ஸாரி?”
“உன்னை ஹர்ட் பண்ணீட்டேன்னு நினைக்கிறேன். கிஸ் பண்ணுறது, இதுதான் ஃபர்ஸ்ட் டைம். சோ, ஃபீலிங்ஸை ஹேண்டில் பண்ணத் தெரியாம கொஞ்சம் ரூடா நடந்துக்கிட்டேன்!”
“தட்ஸ் நாட் பிராப்ளம். ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட்.”
“தேங்க்ஸ்..” என்றவன் மனைவியின் சொல்படி இமைகளை மூடி தூங்க முயல, கணவனின் அணைப்பில் இருந்த மேகவியும் அதையே செய்திட ஆயத்தமானாள்.

