மையல் மீளுதே மேகவியே – 27

மையல் 27

சற்றே அசௌகரியமாய் தோன்றிட, திரும்பிப் படுக்க முயன்றாள் மேகவி‌. அதற்கு எதுவோ தடை செய்ய, தூக்கம் லேசாய் கலைந்தது. அதிகப்படியான மூச்சு ஒன்றை வெளியிட்டவள் லேசாய் இமைகளைப் பிரித்துப் பார்க்க, கணவனின் கை அணைப்பில் இருந்தாள்.

“கீர்த்தி.?”

மூடியிருந்த விழிகளைத் திறந்தவன், “என்ன பொண்டாட்டி, முழிச்சிட்டியா?”

“ம்ம்.. நீ எப்ப எழுந்த?”

“ஹாஃப் ஹவர் இருக்கும்?”

“இவ்வளவு நேரமா பெட்ல இருந்து இறங்காம, என்ன செஞ்சிட்டு இருக்க?”

“வொர்க்குனு பெருசா எதுவும் இல்ல. அதுனால சும்மா படுத்திருக்கேன்.”

“நான் அதைச் சொல்லல.”

“அப்புறம் வேற என்ன?”

“என்னை இப்படிப் பிடிச்சு வச்சிருந்தா, நான் எப்படித் தூங்குறது?”

“ஏன், நைட் ஃபுல்லா தூங்கிட்டு தான இருந்த.?”

“நிஜமாவா?”

“செம தூக்கம் போல?‌ அதான் உன்னால ஃபீல் பண்ண முடியலனு நினைக்கிறேன்.”

“சரி, இப்ப விடு. கொஞ்சம் ஃப்ரீயா படுத்துக்கிறேன்‌.”

“நோ!”

“ஏண்டா இப்படிக் காலையிலேயே படுத்துற?”

“சித்திரமும் கைப் பழக்கம். சோ, பொண்டாட்டி.. என்னோட டச்சைப் பழகிக்க டிரைப் பண்ணு! நைட் தெரியாம லைட்டா கை பட்டதுக்கு‍, மூச்சை இழுத்துப் பிடிச்சுக்கிட்டு எவ்வளவு கஷ்டப்பட்ட? எதார்த்தமா டச் ஆனதுக்கே இப்படினா, மத்ததுக்கு எல்லாம்.? அதுனால இனி உன்னை என்னோட தொடுகைக்கு டிரைன் பண்ணலாம்னு இருக்கேன்!”

“உன்னோட முடியல. போடா..” என்றவள் கணவனைத் தள்ளிவிட்டுப் படுக்கையில் இருந்து எழ, “என்ன செய்யப் போற பொண்டாட்டி?”

“என்னவோ செய்யிறேன்‌. உனக்கு என்ன.?”

மெலிதாய்ச் சிரித்தவன், “சரி, டீ..?”

“ம்ம்..”

“ஓகே ஃப்ரெஷ் ஆகு. நான் போட்டுக் கொண்டு வர்றேன்.”

ஓய்வறைக்குச் சென்றவள் அங்கிருந்த கண்ணாடியைப் பார்க்க, துயில் மீளா கண்களுடன் இதழ்களில் லேசான வீக்கத்துடன் காட்சியளித்தாள்.

இரவு பரிமாறிக் கொண்ட முத்தம் நினைவிற்கு வந்தது. இல்லை யுத்தம் என்றால் சரியாய் இருக்கும். சத்தி மனைவியிடத்தில் இதழ் யுத்தம் தான் நடத்தி இருந்தான்.

தொட்டுப் பார்த்தாள், லேசாய் வலித்தது.‌ நியாயமாய் சினம் தோன்றியிருக்க வேண்டும், ஆனால் அதற்கு மாறாய் புன்னகை மலர்ந்தது.

‘அவன் அன்னைக்கு, ‘ஐ திங்க், யூ ஆர் ஃபாலன் ஃபார் மீ’னு சொன்னது உண்மை தான் போல. நிஜமாவே விழுந்துட்டனு நினைக்கிறேன்!’ என மூளை ஆராய்ச்சி செய்து அவளும் உண்டாகி இருக்கும் உணர்வுகளிற்கு விளக்கம் தந்திட, அதனைப் புறம் தள்ளிவிட்டு நீரால் முகத்தைக் கழுவினாள்‌.

பல் துலக்கும் பொழுது, பற்பசையும் தேய்ப்பானும் காயத்தில் பட்டு, வலி எடுத்தது‌. பொறுத்துக் கொண்டாள்.

பத்து நிமிடங்கள் சென்று அவள் வெளியில் வந்த பொழுது, தேநீரை நீட்டினான் சத்தி.

படுக்கையின் ஓரம் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து பாதி அருந்தியவள், அதனை வாங்கிக் கொண்டாள்.

“டைம்.?” என்றவாறே அதைப் பார்ப்பதற்காக கைப்பேசியைத் தேட, “சிக்ஸ் தேர்ட்டி!” என உரைத்தான்.

“ஆறரை தான் ஆகுதா.? அதுக்குள்ள ஏண்டா என்னை எழுப்பி விட்ட?”

“ஒரு சின்ன கரெக்ஷன். நான் உன்னை எழுப்பல. தூங்கத்தான் சொன்னேன்‌. ஆனா, நீ எழுந்திரிச்சிட்ட.”

“செய்யிறதையும் செஞ்சிட்டு பழியை என்மேல போட்டுடு. நீ கொஞ்சம் விலகிப் போயிருந்தா, தூங்கி இருப்பேன்ல நான்.?”

“அதுனால என்ன? டீயைக் குடிச்சிட்டுப் படு!”

“ப்ச்ச்.. இனி எங்க படுக்கிறது.?” என்றவள் சலிப்புடன் தனது மடிக்கணினியை எடுக்க, “என்ன செய்யப் போற?”

“வொர்க் பண்ணப் போறேன்.”

“இம்பார்ட்டெண்டா?”

“இல்ல. சும்மா இருக்கிறதுக்குச் செய்யலாம்னு தான்.”

“ஒரு நாளாவது ஃப்ரீயா இர்றேன். எப்பவும் வேலைப் பார்க்கணுமா என்ன? முதல்ல டீயைக் குடி!” என அவளின் கரத்தில் இருந்த மடிக்கணினியை வாங்கி வைத்தான்.

தேநீரை ஒரு மிடறு அருந்திட, அதன் வெப்பத்திற்கு காயத்தில் எரிச்சல் உருவாக அனிச்சையாய், “ஸ்ஸ்ஸ்..” என்றாள்.

“என்னாச்சு? ரொம்ப சூடா இருக்கா பொண்டாட்டி?”

“ம்ம்..” என வேறு பக்கம் திரும்பி வலியை மறைத்துக் கொள்ள, “கொடு, ஆத்தித் தர்றேன்!” என்றான் சத்தி.

“இல்ல. பரவாயில்ல. இந்த சூடுக்குக் கம்மியா போனா, டீ குடிச்ச ஃபீலே இருக்காது!” என்றவாறே காயத்தில் படாமல் சிறிது சிறிதாய் அருந்தி முடித்தாள்.

காலியான டம்ளரை மனைவியின் கரத்தில் இருந்து வாங்கியவன், “பெயினா இருக்கா?”

புரியாது பார்த்த மங்கை, “என்ன பெயின்?”

அவளின் இதழ்களை வலக்கையின் பெரிய விரலால் வருடியவன், “ஐ நோ!”

கணவனின் கரத்தை விலக்கி விட்ட மேகவி, “ஹேய் நத்திங்!”

“எனக்குத் தெரியும். நீ தூங்கும் போது கவனிச்சேன், லிப்ஸ் வீங்கி இருந்துச்சு.” என்றவன் மனைவியின் அதரங்களைப் பற்றி உட்புற சுவற்றை நோக்கினான்.

மிகச் சிறியதாய், வெட்டுப்பட்ட காயம் போல் சிவந்து இருந்தது.

தூக்கத்தில் தனக்குத் தோன்றிய அசௌகரியம் எது எனத் தற்போது உணர்ந்து கொண்டாள்.

“ஆயின்மெண்ட் வாங்கிட்டு வரவா.?”

“ஹேய்.. ரெண்டு நாள்ல தானா சரியாகிடும். விடு!”

“டூ டேஸா? சரியாகுற வரை உன்னைக் கிஸ் பண்ண முடியாதே?”

கணவனின் மறுமொழியில் திகைத்தவள், “வாட்.?”

“என்னால பொறுமையா எல்லாம் இருக்க முடியாது!”

“அதுக்கு.?”

“ப்ளீஸ் பொண்டாட்டி‌.”

“கீர்த்தி விளையாடாத!”

“நோ.. ஐம் சீரியஸ்!” என்றவன் மனைவியின் இதழ்களில் முத்தமிட்டு நிமிர்ந்தான்.

“ஹேய்.. என்னடா?”

“டிரை பண்ணுவோமா? உனக்கு வலிக்காம பார்த்துக்கிறேன்.”

அவனை வியப்புடன் நோக்கியவள், “யூ ஆர் சச் எ ஸ்மூத் டாக்கர்.”

“ஒரு உண்மையைச் சொல்லவா பொண்டாட்டி?”

“என்ன?”

“கோபப்படக் கூடாது!”

“அப்படி என்ன விவகாரமா சொல்லப் போற?”

“ஒரு ஆம்பளை எவ்வளவு பேசினாலும், அவன் மேல அந்தப் பொண்ணுக்கு இண்ட்ரெஸ்ட் இல்லேனா ஒன்னும் வேலைக்கு ஆகாது. காரியம் சாதிக்க நான் பேசுறேன், சரி. அதை எல்லாம் இவ்வளவு தூரம் நீ கேர் பண்ணுறியே, ஏன்னு யோசிச்சு இருக்கியா.?”

அவள் மெல்லிய புன்னகையைப் பதிலாகத் தர, “உனக்கு என்னைப் பிடிச்சிருக்கு தான?”

“யா.. நான் பொய் சொல்ல விரும்பல. பட்..”

பேச்சை முடிக்கும் முன்னரே மனைவியை அணைத்து இதழ் பகிர்ந்திருந்தான் ஆடவன். இம்முறை அதீத மென்மையாய். இருவரும் தேநீர் அருந்தி இருந்ததால், நாவின் நரம்புகள் அதன் சுவையையே பிரதானமாய் உணர்ந்தன.

நொடிகளின் நகர்வில் சுவை மெல்ல மாற்றம் அடைய, மனைவியினது காயத்தின் ஆழத்தை இதழ்களால் அறிய முயன்றான் சத்தி‌.

மானுடன் கண்டறிந்த முதல் மருந்து உமிழ்நீர். சிறுவயதில் எங்கேனும் காயம் பட்டால், உடனே மருந்தாய் இடப்படுவது எச்சில் தான். பன்னெடும் காலமாய் உணர்வுகளாலும் உயிரணுவாலும் கடத்தப்பட்டு வந்த செயல்பாடு அது என்றால் மிகையாகாது‌.

தான் தந்த காயத்திற்கு, தனது உமிழ்நீராலேயே துணைவிக்கு மருத்துவம் பார்த்தான் ஆடவன்.

முத்தமானது மருந்தாய் மாறி எப்பொழுது அது மயக்கு நிலைக்கு இழுத்துச் சென்றது எனத் தெரியவில்லை. மயக்கம், மையலில் நுழைந்து மோகத்தில் முக்குளிக்கத் துவங்கியது.

இதழ் கடந்து உடலை அறிவதற்காக
கழுத்திற்கு கீழே இறங்கிய தருணத்தில், “கீர்த்தி!” எனக் கணவனது செயலிற்குத் தடை விதித்தாள் மேகவி.

தான் எல்லை கடந்து செல்வதை உணர்ந்தவன், சட்டென்று விலகி மனைவியின் முகம் நோக்கினான்.

“ஸாரிமா.‌.” எனப் பேச முயன்றவனைப் பார்த்துப் புன்னகைத்தவள், “ஐ ஹேவ் நோ பிராப்ளம், ஓகே தான். பட், உன்கிட்ட ஒன்னு சொல்லணும்!”

அவளின் முந்தைய சொற்களில் முகம் மலர்ந்தவன், “சொல்லு.”

“நான் உன்னை யூஸ் பண்ணிக்கல. புரியிதா.?”

அச்சொற்களின் பொருள் பிடிபடாமல் போக, “என்ன சொல்லுற.?”

“நீ முன்னாடி சொன்ன இல்ல? என்னை ஹஸ்பெண்டா யூஸ் பண்ணிக்கோனு‌.”

மெலிதாய்ச் சிரித்தவன், “சோ‌?”

“நீயும் நானும் லைஃபை ஷேர் பண்ணிக்கிறோம். என்னை நீயோ உன்னை நானோ யூஸ் பண்ணிக்க வேண்டாம்‌. அப்படி நடந்துக்கிட்டா, அது ஒரு ஹெல்தியான ரிலேஷன்ஸிப்பா இருக்காது.”

“ம்ம்.. ஐ அண்டர்ஸ்டாண்ட். பட், எனக்கு ஏன் நீ எப்பவும் உன்னைப் பத்தின கிளியரன்ஸ் கொடுக்க டிரைப் பண்ணுறதாவே தோணுது?”

“என்னைப் பத்தி நீயா ஒரு அனுமானத்துக்கு வர்றதுக்கு முன்னாடி, இதுதான் நான்னு தெளிவா சொல்லிடுறது.. நமக்கு இடையில எந்த தப்பான புரிதலும் வராம தடுக்கும்னு நினைக்கிறேன்.”

அவளைக் காதலுடன் நோக்கியவன், “உனக்கு ஃபீலிங்ஸை சரியான வார்த்தையில சொல்லத் தெரியலயா? இல்லேனா அது தெரிஞ்சும், வேணும்னே கொஞ்சம் ஹார்ஸான வேர்ட்ஸை யூஸ் பண்ணுறியானு தெரியல.‌ பட்.. ரிலேஷன்ஸிப்பை ரொம்ப அழகா ஹேண்டில் பண்ணுற தெரியுமா.? இது வேணும், இது வேணாம்னு நல்லா கிளியர் மைண்டோட இருக்க. ஐ லைக், திஸ் வெர்ஷன் ஆஃப் யூ!”

“என்ன திடீர்னு?”

“சொல்லணும்னு தோணிச்சு, சொன்னேன்.”

“ம்ம்..” என்று விழிகளைத் திருப்பிக் கொள்ள, மனைவியின் இடக்கை நடுவிரலின் நுனியில் முத்தமிட்டு தன்பக்கம் பார்க்க வைத்தான் சத்தி.

இருவரது கண்களும் சந்தித்துக் கொள்ள, அடுத்ததாய் மோதிர விரலில் இதழ் ஒற்றினான். அடுத்தடுத்து ஒவ்வொரு விரலாய் இடம் பெயர்ந்து, உள்ளங்கையின் வழியே மணிக்கட்டைத் தொடர்ந்து, இடம் பொருள் ஏவல் பாராது அதரங்களால் தேகம் முழுவதும் ஊர்வலம் நடத்திட, அவனின் தீண்டல்களை மறுக்காமல் ஏற்றுக் கொண்டாள் மங்கை.

அன்றைய விடுமுறை தினம் இருவருக்கு இடையேயான இடைவெளிக்கு நிரந்தர விடுமுறை அளித்து, உடலோடு சேர்த்து மனதாலும் அவர்களைக் கணவன் மனைவியாய் மாற்றி இருந்தது.

காலை உணவு மறந்து போனது. மதிய உணவு தயாரிப்பதற்கு ஏனோ மனமோ உடலோ விரும்பவில்லை. வெளியில் வாங்கி வயிற்றை நிறைத்தனர்.

அடைபட்ட அறைக்குள் அடக்கலமாகினர் நாள் முழுவதும்.

பேசிட, பகிர்ந்திட, ஒருவரின் தேகத்தையும் உணர்வுகளையும் தேவை மற்றும் விருப்பங்களையும் மற்றவர் அறிய எனப் புரிந்து கொள்ள நிறையவே இருந்தன. மெல்ல மெல்ல அவற்றைத் தெரிந்து கொள்ள முயன்றனர்.

அன்றைய நாளின் முடிவில் ஆடவனிடம் இருந்த மையலானது மேகவியிடமும் தோன்றி, அதுவரை கொண்டிருந்த கட்டுப்பாட்டை மீளச் செய்து, காதலின் தடத்தில் பயணிக்க முயன்றது.

error: Alert: Content selection is disabled!!