போதைப்பொருள் பாவனைக்கான, ‘சிகிச்சை’ அல்லது ‘புனர்வாழ்வு’ என்பதில், சுயவிருப்பில் இணைபவர்கள் தவிர்த்து, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்து வருபவர்களில், போதைப்பொருள் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும், அல்லது போதைப்பொருளைச் சார்ந்திருப்பதாகச் சந்தேகிக்கப்படுவோரும் உள்ளடக்கப்படுகிறார்கள்.
அங்குள்ள, ‘சந்தேகம்’ என்பது தீர்க்கப்படாது, ‘சிகிச்சை’ அல்லது ‘புனர்வாழ்வு’ என்ற பெயரில் தடுத்து வைக்கப்படுவதென்பது மிகவும் தீவிரமான பிரச்சனை என்றே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். அது, அக்குறிப்பிட்ட நபர்களுக்கு வழங்கும் உடல் உள ரீதியான பிரச்சினைகள், அழுத்தங்கள், சிக்கல்கள் சொல்லிலடங்காதவை. அத்தனைக்கும் பிறகு, ‘சந்தேகம்’ என்பது இல்லாது போய், நிரபராதி என்றொரு நிலை வருவது மிகப் பெரிய கொடுமையாகும்.
ஆகையால், ‘சிகிச்சை’ அல்லது ‘புனர்வாழ்வு’ என்பதற்குள் செல்ல முன்னரே, அவர்கள் பற்றிய நிலைப்பாட்டில் உறுதியான முடிவுக்கு வருதல் என்பது மிகவும் முக்கியமாகக் கொள்ளப்பட வேண்டும்.
ஏற்கனவே நன்றாக நேரம் சென்றிருந்தது. வரிசை கட்டி நிற்பது ஒன்று ஒன்றும் ஆறப்போட்டுப் பார்க்க வேண்டிய அலுவல்களா? வயிறு வேறு இயற்கை அழைப்பில் வலித்தது. ஒரு ஐந்து நிமிடம் நிம்மதியாக இருப்பம் என்றால்… இவள் வேறு…
நாளை, ஸ்டோல்களுக்கு அனுப்ப வேண்டியவற்றைத் தயார் செய்ய விடியவே வந்திருந்தார்கள். அவர்களோடு நின்றாள், நிலா.
தேவையானவற்றை எடுத்துக் கொடுத்தால் போதும், வந்திருக்கிற அம்மாமார் இருவரும், மளமளவென்று வேலைகளைச் செய்து விடுவார்கள். இன்று, ஒருவரின் இளைய மகளும் சேர்ந்து வந்திருந்தாள். வீட்டில் பைரவி நிற்பதால், அவளோடு பம்பலாக நிற்க நினைத்த இவர்களுக்கும் வாசியாகப் போயிற்று. பஜ்ஜிக்கான காளான்களை எடுத்து வைத்துவிட்டு நிமிர, தமையன் அழைத்த விதம், என்னவோ ஏதோவென்று ஓடி வர வைத்திருந்தது.
அவ்வளவு இலேசில் தங்கைகள், தாயிடம் சீறி விட மாட்டான், ஆரூரன். அவர்களும் பார்த்துத் தான் நடப்பார்கள். இப்போ, “என்ன அண்ணா?” என்று வந்தவளை, வலு கண்டிப்போடு பார்த்தான், ஆரூரன்.
“இங்க பார் நிலா, ஃபிரெண்ட்ஸ் எண்டு வீட்ட கூட்டிக்கொண்டு வாங்க. பம்பலா இருங்க. நான் ஏனெண்டும் கேட்க மாட்டன். ஆனா, தேவையில்லாமல் என்ர வேலைகளில தலையிடுற அலுவல் வச்சிக்கொள்ள வேணாம். எதைச் செய்யலாம் எண்டு சொல்லுறனோ, அதை மட்டும் தான் செய்ய வேணும் எண்டு, உனக்கும் மதிக்குமே சொல்லியிருக்கிறன் தானே? முதல், என்ன தெரியும் எண்டு அவா அதுக்க போய் நிண்டு கொண்டு அலட்டுறா? வேலை செய்யிற ஆளையும் செய்யவிடாமல் படம் போடுறா! இதென்ன, கனடாவில ஸ்டோபெரி தோட்டத்துக்குப் போய், பழம் பறிக்கிறது போல எண்டு நினைச்சிட்டினமோ! அதோட, இதுக்க போட்டிருக்கிற ஒரு ஒரு சதமும் நம்மட கடின உழைப்பில வந்தது. சும்மா காலாட்டிக் கொண்டு குந்தியிருந்து, ஆரும் தந்தத வாங்கவும் இல்லை. உருட்டுப் பிரட்டுச் செய்து வரவும் இல்லை. கூப்பிடு வெளிய! இதான் கடைசி!” உறுமிய வேகத்தில் அகன்றவன், கக்கூஸ் கதவில் கோபத்தைக் காட்டினான்.
அவ்வளவு கோபம் அவனுக்கு. அதுவும் என்ன வாய்? கதைக்கிற விதம்! பார்வையில் ஒரு எள்ளல்! அந்தளவுக்குத் திமிர்! மண்டைக்கனம்! அண்ணே என்றதுக்கு மறுவார்த்தை கதைக்காத செழியன் என்னை என்ன நினைப்பான்? தான் ஏதோ மகாராணி போலவும் நான் இளிச்சவாய் போலவும். எனக்குப் படிப்பிக்கப் போறாவோ!
‘அண்டைக்கு சூப் எத்தினதுக்கு வாயை மூடிக்கொண்டு நிண்டோன்ன…’ மனம் உறும பற்களை நறும்பினான்,ஆரூரன்.
‘டொக்டருக்குப் படிக்கிறது எண்டோன்ன பெரிசா கொம்பு முளைச்ச கணக்கில தான் கதை பேச்சு!’
கையோடு கைபேசியைக் கொண்டு வந்திருந்தான். கொஞ்ச வேலைகள் தொங்கிக் கொண்டு இருக்கு. அவசரமாக மின்னஞ்சல்கள் சிலதுகள் அனுப்ப வேண்டும். ஒன்றும் செய்ய முடியவில்லை.
அவன், நிலாவை அழைத்த விதமே, பைரவிக்கு எச்சரிக்கை கொடுத்திட்டு. அப்படியே நின்றவளுக்கு, அருகில் நின்ற செழியனை ஏறிட முடியவில்லை. அந்தளவுக்கு அவமானப்படுத்தி விட்டானே! அப்படி என்ன பிழை செய்து விட்டாளாம்?
சற்று முன் தான் குளித்திருந்தாள்; சுத்தமான உடைகள்; போதாததுக்கு, காளான் வெட்ட முதல் கைகளை நன்றாகவே சுத்தப்படுத்தினாள். செழியன் சொன்ன மாதிரியே, பார்த்து பார்த்துத் தான் காளான்களை வெட்டியெடுத்தாள்.
“வெட்டிப்போட்டு, முளை விட்டிருக்கிற இந்த வட்டத்தில இப்பிடிக் கீறி விடுங்க தங்கச்சி. அப்பத்தான் திரும்பவும் முளைக்க வசதியாக இருக்கும்.” என்று, அவன் சொன்னதற்கு இணங்க, பக்குவமாகக் கீறியும் விட்டாள். முதல், பழகிப் பயிற்சி எடுத்த பிறகு செய்ய, இது என்ன பெரிய சிதம்பர இரகசியமா?
“எனக்கு நல்லா வேணும்.” மனம் எரிய எரிய முணுமுணுத்துக் கொண்டாள்,பைரவி.
இது, அவன் வீடு என்று அறிந்த மறுநொடி என்ன செய்திருக்க வேண்டும்? வெளியேறாது நின்றாளே! வெட்கம் கெட்டுப் போய்க் கேட்டு வாங்கிச் சாப்பிட்டு, அவர்கள் வீட்டில் ஒருத்தியாய் நினைத்து, இங்கயே தங்கி… பைரவியின் விழிகள் நிறைந்து போயின.
அவன் பற்றிய முதல் எண்ணத்தை அந்தளவு விரைவில் மாற்றிக் கொண்டாளா என்ன? மறந்து விட்டாளா? அன்றைய அவன் செயல், டினோசன் கேட்டு வாங்கியது என்று நன்றாக விளங்கியிருந்தாலும் இவனில் கொண்ட எரிச்சல் மறையாது தானே இருந்தவள்? பிறகென்ன? கண்டறியாத நட்பு!
கையில் இருந்த காளான்களைப் பெட்டிக்குள் போட்டவள், “இதைப் பாவிக்க ஏலாதா?” செழியனிடம் கேட்டாள்.
“அய்யய்யோ! அப்பிடி எல்லாம் இல்லத் தங்கச்சி. ஆரூரன் அண்ணா ஏதோ கோவத்தில கத்திட்டார். பொதுவாவே ஆரும் இந்த அறுவடைப் பகுதிக்க வாறது இல்ல. அதும் இந்தக் கொரோனா வந்த பிறகு, இந்த வேலைகளில சரியான கவனம் தங்கச்சி.” சமாளித்தான்.
“இது பாவிக்கலாம் தானே? இல்லாட்டி நான் காசு குடுத்திட்டுப் போறன். எவ்வளவு இவ்வளவும்?” வேறு கதைகள் எனக்கு ஏன் என்ற தொனியில் திரும்பவும் கேட்டாள், பைரவி .
“என்ன தங்கச்சி நீங்க? அப்பிடியெல்லாம் இல்லை. தாராளமாப் பாவிக்கலாம்.” அவன் முடிக்க முதல் வெளியேறியிருந்தாள்.
வேகமாக வெளியே வந்தவள் கரங்களைப் பற்றி நிறுத்தினாள், நிலா.
“பைரவி… சொறியப்பா! எங்களிட்டக் கேட்டுத்தான் செய்தனீர். அண்ணா ஏதோ… அதையெல்லாம் பெரிசா எடாதேயும் என்ன? நீர் வாரும்.” தவிப்போடு சொன்னாள். பதிலாக, பைரவி பார்த்த பார்வை இருக்கே! தவித்துப் போனாள், நிலா.
பைரவியோ,ஒரு வார்த்தை கதைக்கவில்லை; நிலாவின் பிடியிலிருந்து தன் கரத்தைப் பட்டென்று உதறி விடுவித்துவிட்டு, விறுவிறுவென்று வீட்டினுள் நுழைந்தாள்.