புது மங்கள சௌபாக்யம் - 11

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 50

New member
Staff member
May 13, 2026
21
40
3
கண்கள் நீரில் பளபளக்க உதடு துடிக்க கடினப்பட்டு சிரிப்பவளை யோசனையாக பார்த்த நித்திக்,


"உனக்கு கஷ்டமா இருந்தா வேண்டாம் விடு.."

"எனக்கு என்ன கஷ்டம் இருக்கப் போகுது தேவையில்லாம உங்க அம்மாவை சங்கடப்படுத்த போறேன் என்ற வருத்தம் மட்டும்தான்.. "


"அது மட்டும் தானா??" என்றவன் என்னவோ எதிர்பார்த்து அவளை நோக்க,


"எனக்கு தூக்கம் வருது சார் குட் நைட்!!


கட்டிலின் ஓரத்தில் முதுகை காட்டி படுத்திருபவளின் முதுகையே வெறித்துக்கொண்டு நின்றவன் எந்த தயக்கமும் இன்றி கட்டிலின் மறுபுறம் வந்து படுத்துக்கொண்டான்..


மங்கலான நீல வானம் தங்க நிறத்தில் கரைந்து, சூரியன் தனது முதல் கதிர்களை பூமியின் மேல் பரப்பும்போது, ஒவ்வொரு இலைக்கும், ஒவ்வொரு பனித்துளிக்கும் உயிர் ஊற்றப்படும் அந்த இளங்காலை பொழுது, ஜன்னல் வழி ஊடுறுவும் சூரிய கதிற்களில் கண்ணை சுறுக்கி தட்டி முழித்தான் நித்திக்..


தன் காலில் பாரம் உணர்ந்து குனிந்து காலை பார்க்க, ஆடை மேலே ஏறி வாழைத்தண்டு கால்களை அவன் கால் மேல் போட்டு கையை கன்னத்தில் அண்டல் குடுத்து சுகமாக உறங்கிக்கொண்டு இருந்தாள் வெண்ணிலா..


"தொல்ல!! கால எடுடி.." ஓங்கி அவள் காலில் கழுதையாக உதைக்க அவள் முகத்தை சுழித்துக்கொண்டு மீண்டும் திரும்பி படுத்துக்கொண்டாள்..


இவன் எழுந்து தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு வெளியே வர யசோதா எந்த புலம்பலும் இல்லாமல் அடுப்படி வேலையில் இருந்தாள்..


"அம்மா காபி!!"


அன்னை வந்து குடுத்த காபியை குடித்தவன் மொபைலில் ஐக்கியம் ஆகிவிட நேரம் சரியாக எட்டு. அலறும் அலாரத்தில் கவனத்திற்கு வந்தவன் மணியை பார்த்து திடுகிட்டான்.


"அய்யோ!! இவ எந்திரிச்சாளா இல்லையா??"


உள்ளே வந்த நித்திக் கண்டது சாவுக்காசமாக எழுந்து கூந்தலை அள்ளி முடிந்து அலாரம் ஆப் செய்யும் வெண்ணிலாவை தான்..


"குட் மார்னிங் ப்பா.."


'இது என்ன புதுசா?' என்று தோன்றினாலும் இவனுக்கும் அது பிடிக்க அமைதியாக அவள் நடவடிக்கையை பார்த்தான்..


வெண்ணிலா மொபைலை சார்ஜரில் பொறுத்திவிட்டு குளியறைக்குள் சென்றாள்.. பல் துலக்கி முகம் கழுவி இருப்பாள் என்பது அவள் நீர் சொட்டும் முகத்தில் தெரிந்தது..


கண்ணாடி முன் நின்று முகத்தை துடைத்து, "அத்த காபி!!" என்று வெளியே சென்றாள்..


'ஆகா!! நாடகத்த ஆரம்பிச்சுட்டா போலவே..' என்று ஆசையாக இவனும் அவள் பின்னாடியே ஓடி சென்று பார்க்க யசோதா நுரை பொங்க காபியை வெண்ணிலா கையில் குடுக்க இருவரும் சிரித்து ஏதோ கதையடிக்க இவனுக்கு சப்பென்று ஆனது..


மீண்டும் அறைக்குள் வந்தவள் குளித்து குர்த்தியில் வந்து நிற்க, நித்திக் குட்டி போட்ட பூனையாக ஏதாவது சண்டை வருமா என்று வெண்ணிலா பின்னாடியே சுற்றி திரிந்தவன் அப்போது தான் வங்கி கிளம்பும் யோசனை வந்து வேகமாக குளியறைக்குள் ஓடினான்..


சாப்பாட்டு மேஜையில்,


"அத்த! சாம்பார் சூப்பர்.. ஹோட்டல் சாம்பார் மாதிரி செமையா இருக்கு.. அதும் நீங்க சுட்ட குஷ்பூ இட்லிக்கு பேஷ் பேஷ்.."


"ஹாஹா அப்புடியா?? சமையலும் ஒரு கலை தான்டா மனசு சந்தோஷமா நிறைவா சமைக்கும்போது அதோடு ருசி தனியா தெரியும்."


"அத்த அதுக்காக என்ன சமைக்கலாம் சொல்லிடாதீங்க.. வேலைக்கு போறேன் கை நிறையா சம்பாரிச்சு உங்க மகன் கையில குடுக்குறேன்.. அவ்ளோதான் என்னால முடியும்.."


சிரித்துக்கொண்டே தான் பேசினாள் ஆனால் அழுத்தம் அவள் பேச்சில் தெரிந்தது..


" அதுக்கு என்னடா நிலா குட்டி நீ வேலைக்கு போ இன்னும் எண்ணி பத்து மாசத்துல எனக்கு ஒரு பேரனோ, பேத்தியோ பெத்து குடுத்துரு அதையும் நானே வளர்த்துக்கிறேன் நீ சந்தோஷமா உன் புருஷன் கூட ஊர் சுத்து வேலைக்கு போ உன்னை தொந்தரவே பண்ண மாட்டேன். "



இவர்களின் சமையல் உரையாடல் ஆரம்பத்தில், 'ஆஹா சண்டையாக மாறப்போகிறதே!' என்று சுவாரசியமாக இட்லியை பியித்து வாயில் அமுக்கிக் கொண்டிருந்தவன் தாயின் இந்த கூற்றில் புரையேற இருமினான்..



வெண்ணிலாவுக்குமே இந்த பதில் அதிர்ச்சி தான் ஆனால் முகத்தை இயல்பாக காட்டிக்கொண்டாள்..



நேற்று பேசி வைத்தது போலவே இருவரும் ஒன்றாக ஒரே பைக்கில் கிளம்ப அதுவும் நித்திக்கிற்கு காலில் கொஞ்சம் சிரமம் இருப்பதால் அவனால் அவனுடைய வண்டியை தாண்டி யாரோடதும் ஓட்ட முடியாது அதனாலே வெண்ணிலா அவன் பின்னாடி அமர்ந்து கொண்டாள்..



மருமகள் தலையில் பூவை வைத்து அழகு பார்த்த யசோதா அவர்கள் செல்லும் வரை வாசலில் நின்று டாட்டா காட்டிக் கொண்டிருந்தாள்.. இதை யசோதா கண்கள் மட்டும் பார்க்கவில்லை வேறு நான்கு கண்களும் பார்த்துக்கொண்டு தான் இருந்தது..



"என்னங்க எதுவும் பேசாம வரீங்க??"



" இல்ல காலைல நீ பேச ஆரம்பிக்கும் போது பெருசா சண்டையில முடியும் எப்படியும் ஒரு மணி நேரமாவது உங்களை சமாதானப்படுத்தணும் பர்மிஷன் எல்லாம் போடணும் வேலைக்குன்னு நினைச்சிட்டு இருந்தா இப்படி அம்மா சப்புன்னு முடிச்சுட்டாங்களேன்னு தான். "



" அட உங்களுக்கு அம்மா சைக்கலாஜி புரியலங்க. உங்க அம்மா என்ன வார்த்தை சொன்னாங்க நோட் பண்ணிங்களா??"



"அம்மா தாயே உங்க பொண்ணுங்களோட வார்த்தைக்கு டிஷனரையே எனக்கு தெரியாது நீயே எதுவா இருந்தாலும் விளக்கி சொல்லு.. "



"ஹ்க்கும் ரொம்ப தாங்க! உங்க அம்மா பத்து மாசத்துல குழந்தை வேணும்னு கேக்குறாங்க அப்ப அவங்களோட இந்த பொறுமையெல்லாம் மிஞ்சி போனா மூணு மாசத்துக்கு தான் தாங்கும். மூணு மாசம் நான் காலையில எந்திரிக்கிற வரைக்கும் நைட்டு மகனும் மருமகளும் சந்தோஷமா இருந்திருக்காங்கன்னு நினைச்சு காத்திருப்பாங்க.. மூணு மாசம் ஆகியும் நான் நல்ல செய்தி சொல்லாமல் இருந்தேனா அந்த கோபம் வெறுப்பா மாற ஆரம்பிக்கும் வெறுப்பு சண்டையில கொண்டு வரும்.."



என்றதும் நித்திக் வேகமாக பிரேக் பிடிக்க வெண்ணிலா அவன் முதுகில் சென்று முட்டினாள்..



"அவுச்!! பாத்து பிடிக்க மாட்டீங்களா??"



"எத??" என்றவன் குரல் சற்று காரகரப்பாக தான் இருந்தது..



"பிரேக்க தான்.."



வெண்ணிலா இப்போது சரியாக அமர ஏதார்த்தமாக நித்திக் தோளை அழுத்தி பிடிக்க விரகில்லாமல் அடுப்பில்லாமல் ஆண் உள்ளே உலை கொதித்தது..



அதற்கு பிறகு வெண்ணிலா தான் வாய் ஓயாமல் பேசினாள்.. என்னனவோ திட்டம் கூறினாள் ஆனால் அது நித்திக் செவி சேரவில்லை என்பதே நிஜம்.. அவன் முதல் பெண் தொடுக்கையை அல்லவா ரசித்துக்கொண்டு இருக்கிறான்..



தன் மாமன் மகள் சாரு மீது ஈர்ப்பு இருந்திருக்கிறது அதை பருவ வயதில் காதல் என்றும் நினைத்துக் கொண்டிருந்தான். எத்தனையோ முறை அவளைத் தொட்டு பேசி இருக்கிறான். ஆதரவாக அணைத்திருக்கிறான் ஆனால் ஒரு முறை கூட இந்த அளவு உடல் சூட்டில் வெந்ததே இல்லை..



மனைவி விரல் தொட, வீனையாக ராகம் இசைத்தான்..



இங்கு வீட்டில் சாருவோ அழுது கரைந்தாள்..



"இப்போ உங்களுக்கு சந்தோசமா?? என் பொண்ணு அழுறா பாருங்க இதுக்காக தானே நீங்க இதெல்லாம் செஞ்சீங்க??"



" ஏய் அவ எனக்கும் பொண்ணு தாண்டி. "



" ஓ அந்த நினைப்பு இருந்தா இந்த விஷயம் நடக்காதுன்னு தெரிஞ்சும் அவ ஆசைக்கு திரி போட்டு இருக்க மாட்டீங்க. சரி அப்படி ஆசையை தான் வளர்த்து விட்டீங்க அட்லீஸ்ட் அத நிறைவேற்றியாவது வச்சிருக்கணும்."



" இப்ப என்ன கெட்டு போச்சு இவளுக்காகத்தானே இவ்ளோ ரிஸ்க் எடுத்து மாப்பிள்ளை ஒவ்வொண்ணும் பண்ணிக்கிட்டு இருக்காரு?? "



" இத நீங்க வேணா மடத்தனமா நம்புங்க நான் நம்ப விரும்பல. ஏன்னா இதே வயசுல தான் நான் உங்களை காதலிச்சு கரம் பிடிச்சு இருக்கேன். ஒரு பொண்ணோட பார்வையை வச்சே அவ எந்த எண்ணத்துல அந்த பையன பாக்குறாங்குறது எனக்கு நல்லா தெரியும் நீங்க நம்பிகிட்டே இருங்க அந்த பொண்ணு மனசுலயும் கண்டிப்பா உங்க மாப்பிள்ளை தான் இருக்காரு."



"ஏய் அப்படியெல்லாம் ஒன்னும் ஆகாதுடி. நித்திக் பத்தி உனக்கு தெரியாதா??"



"பஞ்சையும் நெருப்பையும் ஒண்ணா வச்சா என்னைக்கா இருந்தாலும் பத்திக்க தான் செய்யும்.. ஒரு பிள்ளையோட அழுகையில கண்ணீர்ல என் புள்ள வாழ்க்கை ஆரம்பிக்க நான் விரும்பலங்க.. "



"அதுக்கு??"



" இப்போதைக்கு என் பொண்ணோட சந்தோஷம்தான் முக்கியம் அவளை வெளியூர்ல வேற ஏதாவது காலேஜ்ல சேர்த்து விடுங்க.."



அமைதியாக சந்திரமோகன் லாவண்யாவை பார்க்க,



" என்ன பாக்கறீங்க நான் மூணு பேருக்குமே நல்லதுக்காக தான் சொல்றேன்.."



என்றவள் உறுதியில் உடனேயே சென்னை கல்லூரியில் தனக்கு வேண்டப்பட்டவர் மூலம் ஆர்ட்ஸ் கல்லூரியில் அதே படிப்பில் சீட் வாங்கினான் இரண்டு நாட்களில்..
நித்திக் இப்போது முழுதாக குழம்பி இருந்தான்.. ' தன் காதல் தன்னுடைய மாமன் மகள் சாருலதா தான் ஆனால் அவளைத் தொட்டும்போது வராத உணர்வு இவளை தொட்டால் ஏன் வருகிறது இவள் என்னை தொட்டால் ஏன் வருகிறது.. இவளை அன்னை வெறுத்து ஓரம் கட்டி சாரு தான் எனக்கு சரியான ஜோடி என்று முடிவெடுக்கத்தான் நாடகத்தை ஆரம்பித்தோம். ஆனால் ஏனோ இவளை அன்னை தவறாக நினைத்து விடக்கூடாது என்று ஒவ்வொரு முறையும் தோன்றுகிறதே ஏன்?? வங்கியில் இவளை இரண்டு வருடமாக தெரியும் என்றாலும் ஒரு வார்த்தை கூட அனாவசியமாக பேசியதில்லை. ஆனால் இத்தகைய பெரிய உதவியை இவளிடம் மட்டும் ஏன் நான் கேட்க துணிந்தேன்.. அது எப்படி ஒரு பெண்ணுடன் ஒரே அறையில் எந்தவித சங்கோஜமும் இன்றி இருக்க முடிகிறது இயல்பாக.. ஏன் அவளும் இப்படி தானே இருக்கிறாள் என்னிடம்.. அப்போ என் காதல் சாருவா?? இவளா??' யோசித்துக்கொண்டே மாடியில் உலாவியவன் வெகு அருகே கொலுசு ஒலி கேட்டது.. அந்த சத்தத்தை வைத்தே அது யாருடையது என்று அவனுக்கு தெரியுமே.
"மாமா!!"
"பப்பூ!!" ஏனோ வெண்ணிலாவிடம் தடுமாறும் தன் மனதை தடுக்க முடியாமல் குற்ற உணர்ச்சியாகவே சாருவை நிமிர்ந்து பார்த்தான்..
" அப்பா சென்னை காலேஜ்ல சீட் வாங்கி இருக்காரு நான் இன்னும் ஒரு வருஷம் அங்க தான் படிக்கப் போறேன். "
"ஏன்?? என்கிட்ட சொல்லவே இல்ல.." என்றவனுக்கு ஏதோ மனதை அழுத்திய பாரம் நீங்கிய உணர்வு..
" இல்ல இங்க இருக்க பிரச்சனை எல்லாம் முடியுற வரைக்கும் தேவையில்லாம மன கஷ்டம் எதுக்குன்னு தான்.. "
"சாரி பப்பூ.." அவன் எதற்கு சொன்னனோ அவள் எதற்கு புரிந்துகொண்டாளோ..
"அய்யோ மாமா!! அதெல்லாம் ஒன்னுல.. எனக்கும் கொஞ்சம் இடம் மாறுனா நல்லாருக்கும்.. நாளைக்கு காலேல ட்ரெயின் அதான் உங்ககிட்ட சொல்ல வந்தேன்.."
என்றவள் தயங்கி, "ஐ மிஸ் யூ மாமா!" என்று கட்டிப்பிடித்து கொண்டாள் நித்திக்கை.. அதே நேரம், "என்னங்க காபி." என்று வெண்ணிலா வர இவர்கள் கோலம் கண்டு ஒரு நிமிடம் உறைந்தவள் கண்ணில் வழியும் நீரை துடைத்துக்கொண்டே, "சா.. சாரி.." என்று கீழே ஓடினாள்..

தொடரும்...
 

Author: STN - 50
Article Title: புது மங்கள சௌபாக்யம் - 11
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
383
83
Chennai
இப்ப இவனுக்கு புரிஞ்சு என்ன செய்ய?????
அச்சோ பார்த்துட்டா பார்த்துட்டா 😂😂😂😂😂😂