வாசகர்களுக்கு வணக்கம்!
2014 இன் ஆரம்பத்தில், விளையாட்டு விளையாட்டாக எழுதிய மூன்று சிறுகதைகளுக்குப் பிறகு ‘என்னாலும் நாவல் எழுத முடியுமா?’ எனப் பரீட்சித்துப் பார்த்ததில் உருவான முதல் கதையே இதுவாகும். புத்தகவடிவில் வருகையில், ‘நீயின்றி நானேதம்மா!’ எனும் தலைப்பில் வெளியாகியது.
இக்கதையை வாசித்த முகமறியா இணைய நட்புகள் தந்த ஊக்கம், தொடர்ந்து எழுதும் ஆர்வத்தை விதைத்து இன்றுவரை எழுத வைத்துக்கொண்டிருக்கின்றது.
“கதையின் நாயகி சிந்து, பன்னிரண்டு வயது சிறுமியாக இருக்கையில் எதிர்பாராத கோரவிபத்தொன்றில் தன் உற்ற குடும்பத்தைத் தொலைத்து விடுகின்றாள். அக்கணம், பாதுகாப்பும் அரவணைப்பும் தொலைத்து நின்றவளை அரவணைத்துக் கொள்கிறார், லக்ஷ்மி, அவளின் சிறியதாயார். வளர்ந்து பெரியவளாகி ஆசிரியையாகிய சிந்து என்பவள் கலகலப்புக்கு உற்ற தோழி! இந்நிலையில், அவள் வாழ்வில் காலெடுத்து வைக்கிறான், கணவன் ரகு! கனத்த மனத்தோடு அவள் வாழ்வில் நுழைபவனால் அவள் வாழ்வு கனத்துப் போகின்றதா? ரகுவின் மனநிலைக்கான காரணம் என்னவோ!? அறிந்துகொள்ள, கதையை வாசியுங்களேன்.